நேற்று முன்தினம் முல்லைத்தீவில் விமானத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கல்விப் பொதுத் தராதர (உயர் கல்வி) பயிலும் மாணவிகள் என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. புலிகளினால் வலுக்கட்டாயமாக பயிற்சிக்காக கடந்த 10.08.2006 அன்று வியாழக்கிழமை இவர்கள் வாகனங்களில் ஏற்றி வரப்பட்டு முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள வல்லிபுனம் என்னுமிடத்திலுள்ள, முன்பு சிறுவர் காப்பகமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் தங்க வைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்கள் முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான் மற்றும் கிளிநொச்சி கல்வி வலயங்களில் உள்ள 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர் வகுப்பு மாணவிகள் என தற்போது தெளிவாக தெரிய வந்துள்ளது.
புலிகளின் ஊடகங்களும் புலி சார்புப் பத்திரிகைகளும் இவர்கள் யுத்தத்தாலும் சுனாமி ஆழிப் பேரலையாலும், தாய் தந்தையரை இழந்த சிறார்கள் என செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன. ஆனால் அது முற்றிலும் தவறானது என்பதை புலிகளின் கல்விப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது



Thanks…NEWS:-epdpnews.com PHOTOS:-athirady.com




