mr_051408_01கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பெலிஅத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு அடிப்படை தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நாட்டு மக்களுக்கு தேவையான அபிவிருத்தியினை வழங்கும் பொருட்டு கடந்த பல வருடங்களாக தமது அரசாங்கம் அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களின் வாக்குகளை கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு பாதகத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை தமது அரசாங்கம் மேற்கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியதுடன் நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்லும் இந்த பயணத்திற்கு சகல மக்களும் உதாரணமாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.