roa1ஆமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ். குடாநாட்டின் பிரதான வீதிகளை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் எதிர்வரும் மே மாதம் சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்பொருட்டு நேற்றையதினம் யாழ்ப்பாண செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொது அமைப்புக்கள் திணைக்களத் தலைவர்கள் பொருளியலாளர்கள் மற்றும் பிரதேச செயலக தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் முதல் பணியாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.