வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதியில் வளங்களைக் கைவிட்டுவந்த மக்களுக்கு அவர்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாள ரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். மக்களின் சொத்துகளை மீளப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வன்னி கட்டளைத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறிய கிஷோர் எம்.பீ. வாகனங்களின் உரிமையாளர்கள் வன்னி கட்டளைத் தளபதியிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விபரங்கள் பதிவுசெய்யப்பட்டதும், குறித்த உரிமையாளர்களுடன் சென்று உரிய ஆதாரங்களைக் காண்பித்து வாகனங்களைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் கிஷோர் எம்.பீ. தெரிவித்தார்.வன்னி மக்களின் வாழ்க்கையை பழைய நிலைக்குக்கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர், அரசியல் கொள்கையில் உறுதியாக இருப்பதுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதே பொருத்தமான நடவடிக்கையாகுமென்றும் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கு மூன்றரை இலட்சம் ரூபா வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்குவதுடன், முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை கட்டங்கட்டமாக மீளக்குடியமர்த்துவது அரசியல் கைதிகள் அனைவரையும் மூன்று கட்டங்களாக விடுவித்தல். அதாவது பிணையில் விடுவிப்பது, விடுதலை செய்வது, வழக்குத் தொடர்வது என இந்தக் கைதிகளை விடுவித்தல் புனர்வாழ்வளி க்கப்பட்டு வரும் பதினோராயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களை சமூகமயப்படுத்துதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படு த்துவது தொடர்பில் அரச உயர்மட்டத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகக் கூறினார். வன்னி பல்கலைக்கழகம் மேலும் வன்னிக்கெனத் தனியான ஒரு பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்ப டுகின்றது. நெலுக்குளத்தில் 150 ஏக்கர் காணியில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் முழுமையான ஒரு தனியான பல்கலைக்கழகமாகும். துபோல் தாதியர் பயிற்சிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என்பவற்றை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிவநாதன் கிஷோர் எம்.பீ, கடந்த 33 வருட காலமாக சொல்லொணாத் துக்கங்களை அனுபவித்த மக்கள் இன்று தெளிவை அடைந்துள்ளார்கள். எனவே, இனியும் வீராவேசம் பேசினால் மக்களின் நிலைமை மேலும் அதளபாதாளத்தைச் சென்றடைந்துவிடும். எமக்குக் கொள்கை உண்டு.வடக்கு, கிழக்கிற்கு ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் உறுதியாக உள்ளோம். அதற்கான முழு ஆதரவையும் பெற்றுக் கொடுப்பேன். போராட்டம் நடந்த காலத்தில் அதற்கு வலுச்சேர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தோம். இன்று நிலைமை மாறிவிட்டது. பசியில் வாடிக் கொண்டிருப்பவர்களுடன் தமிப்ழத்தைப் பற்றிப் பேச முடியாது என்றும் கிஷோர் மேலும் தெரிவித்தார்.
You are here : Home » செய்திகள் » வன்னியில் கைவிட்டு வந்த சொத்துகளை மீள பெற்றுக் கொடுக்க நடவடிக்கை: சிவநாதன் கிஷோர்..!
Leave a Reply
Related Articles From This Category
அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை..!
Posted On Thursday, September 9th 2010நேற்று 18வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எச்சரித்துள்ளார். குறித்த 18வது ... Read More
வவுனியாவில் தொழிற் கண்காட்சி..!
Posted On Thursday, September 9th 2010யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் நலனைக் கருத்திற் கொண்டு வவுனியாவில் தொழிற் கண்காட்சியொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 25 26 மற்றும் 27ம் திகதிகளில் வவுனியாவில் இந்த தொழிற் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் ... Read More
வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் – இராணுவத் தளபதி..!
Posted On Thursday, September 9th 2010வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். அதன் பின்னர் வடக்கின் சிவில் நிர்வாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுமென இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ... Read More
நல்லூர் திருவிழாவில் கொள்ளையில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கைது..!
Posted On Thursday, September 9th 2010நல்லூர் திருவிழாவின் போது பக்தர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட புத்தளத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நல்லூர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் குறிப்பாக பெண்களின் தங்க ஆபரணங்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. பொலிஸார் ... Read More
சன்சி கப்பலில் சென்றவர்களில் ஒருவர் கனடாவில் தடுத்து வைப்பு..!
Posted On Thursday, September 9th 2010எம்.வி. சன்சி கப்பலின் ஊடாக கனடாவுக்குள் சென்றவர்களில் ஒருவர் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புலிகளுக்கு நிதி சேகரித்தவர் என்ற பெயரில் இவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. எம்.வி சன்சி கப்பலின் மூலம் ... Read More
Blogroll
-
-
Recent Comments
-
யாழ் தமிழ் மக்கள் Says: அன்று யாழ் மண்ணுக்...
-
VELNAYAGAM மகிந்தன் கொக்கட்டிச்சோலை Says: இலங்கையின் கிழக்க...
-
VELNAYAGAM மகிந்தன் கொக்கட்டிச்சோலை Says: கொக்கட்டிச்சோலை_ VEL...
-
saran Says: new news...
-
K.Kanagasundaram, Jaffna,SriLanka Says: I am a Srilankan tamil congratulate Honarable Pres...
-
-
Hot Topics
- பிரபாகரன் உயிருடன் இல்லை புலிகளின் சர்வதேச பேச்சாளர் தெரிவிப்பு
5 comments received - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கொண்ட குழுவினர் இலங்கை வருகை
4 comments received - இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு
4 comments received - பாதுகாப்பு வலயத்துக்கான சேவையை இடைநிறுத்தியது ஐ.சி.ஆர்.சி.
4 comments received - புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி பிள்ளைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கடற்படையினரிடம் சரண்
4 comments received
- பிரபாகரன் உயிருடன் இல்லை புலிகளின் சர்வதேச பேச்சாளர் தெரிவிப்பு
-
Popular Tags
-
Blogroll
-
Meta




