நிரந்தர நிம்மதியான வாழ்க்கைக்கும் பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களைப் பலப்படுத்த வேண்டும். ஏனெனில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நாம் மக்கள் மத்தியிலேயே இருக்கின்றோம். இனியும் இருப்போம். இவ்வாறு ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ் தெரிவித்தார்.
தென்மராட்சி கச்சாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகளில் பிரதம விருந்தினராக பங்குகொண்டு அங்கு உரையாற்றுகையிலேயே ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான சாள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் இணக்க அரசியலின் மூலம் எமது மண்ணில் நாம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு எமது மக்களின் நிரந்தரமானதும் நிலையானதுமான வாழ்க்கையை உறுதிபடுத்திக் கொள்வது மட்டுமன்றி பாடசாலை கல்வி மற்றும் விளையாட்டுத்துறையினை முன்னேற்றவும் எமது செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களைப் பலப்படுத்த அனைவரும் ஓரணி திரண்டு முன்வர வேண்டும்.
எக்காலத்தில் ஆகட்டும் நாம் எமது மக்களை கைவிட்டு விட்டு எங்குமே ஓடிச் சென்றது கிடையாது. யாழில் குறிப்பாக தென்மராட்சியில் பாரிய உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து பல உயிர்த்தியாகங்களுக்கு மத்தியில் நாம் எமது மக்களின் நலன்கருதி மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்காக எமது மக்களுடனேயே தொடர்ந்து தங்கி இருந்து செயற்படுகின்றோம். எமது செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைத் தவிர இப்பகுதியின் அபிவிருத்தி குறித்தோ இப்பகுதி மக்களின் நலன்கள் குறித்தோ தூர நோக்குடன் சிந்தித்து செயற்படுகின்றவர் வேறு எவருமே கிடையாது. இந்த நிலையில் எமது மக்களது நலன்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அயராது உழைத்துவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி பாடசாலை கல்வி உள்ளிட்ட அன்றாடத் தேவைகள் முதல் அரசியல் உரிமைப் பிரச்சினை வரை அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு எமது மக்கள் ஓரணி திரண்டு முன்வர வேண்டும் இவ்வாறு ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான சாள்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
You are here : Home » செய்திகள் » அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நாம் மக்கள் மத்தியிலேயே இருக்கின்றோம். இனியும் இருப்போம். ஈபிடிபியின் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ் தெரிவிப்பு..!
Leave a Reply
Related Articles From This Category
அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை..!
Posted On Thursday, September 9th 2010நேற்று 18வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கிய தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எச்சரித்துள்ளார். குறித்த 18வது ... Read More
வவுனியாவில் தொழிற் கண்காட்சி..!
Posted On Thursday, September 9th 2010யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் நலனைக் கருத்திற் கொண்டு வவுனியாவில் தொழிற் கண்காட்சியொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 25 26 மற்றும் 27ம் திகதிகளில் வவுனியாவில் இந்த தொழிற் கண்காட்சி நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. முன்னாள் ... Read More
வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் – இராணுவத் தளபதி..!
Posted On Thursday, September 9th 2010வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும். அதன் பின்னர் வடக்கின் சிவில் நிர்வாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுமென இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ... Read More
நல்லூர் திருவிழாவில் கொள்ளையில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கைது..!
Posted On Thursday, September 9th 2010நல்லூர் திருவிழாவின் போது பக்தர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட புத்தளத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நல்லூர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் குறிப்பாக பெண்களின் தங்க ஆபரணங்கள் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. பொலிஸார் ... Read More
சன்சி கப்பலில் சென்றவர்களில் ஒருவர் கனடாவில் தடுத்து வைப்பு..!
Posted On Thursday, September 9th 2010எம்.வி. சன்சி கப்பலின் ஊடாக கனடாவுக்குள் சென்றவர்களில் ஒருவர் புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புலிகளுக்கு நிதி சேகரித்தவர் என்ற பெயரில் இவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. எம்.வி சன்சி கப்பலின் மூலம் ... Read More
Blogroll
-
-
Recent Comments
-
யாழ் தமிழ் மக்கள் Says: அன்று யாழ் மண்ணுக்...
-
VELNAYAGAM மகிந்தன் கொக்கட்டிச்சோலை Says: இலங்கையின் கிழக்க...
-
VELNAYAGAM மகிந்தன் கொக்கட்டிச்சோலை Says: கொக்கட்டிச்சோலை_ VEL...
-
saran Says: new news...
-
K.Kanagasundaram, Jaffna,SriLanka Says: I am a Srilankan tamil congratulate Honarable Pres...
-
-
Hot Topics
- பிரபாகரன் உயிருடன் இல்லை புலிகளின் சர்வதேச பேச்சாளர் தெரிவிப்பு
5 comments received - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் கொண்ட குழுவினர் இலங்கை வருகை
4 comments received - இராணுவத்தினரால் பிரபாகரன் சுற்றி வளைப்பு: கரையோரப் பகுதி முற்றாக விடுவிப்பு
4 comments received - பாதுகாப்பு வலயத்துக்கான சேவையை இடைநிறுத்தியது ஐ.சி.ஆர்.சி.
4 comments received - புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி பிள்ளைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கடற்படையினரிடம் சரண்
4 comments received
- பிரபாகரன் உயிருடன் இல்லை புலிகளின் சர்வதேச பேச்சாளர் தெரிவிப்பு
-
Popular Tags
-
Blogroll
-
Meta




