கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தானத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உட்பட எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈ.பி.டி.பி. சார்பில் போட்டியிடும் வேடபாளர்களுக்கு ஆசி வேண்டி நேற்றைய (6) தினம் மாலை விஷேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம். சந்திரகுமார் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வேட்பாளருமான சில்வேஸ்த்ரி அலென்ரின் உதயன் நல்லூர்த் தொகுதி அமைப்பாளர் அ.ரவீந்திரன் உட்பட கட்சியின் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





