thomas-savundaranayagam-inபிரதேசத்தில் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பொதுமக்களின் சொத்துக்கள், வாகனங்கள் என்பன எங்கும் சிதறிக்கிடந்ததைத் தாங்கள் கண்டதாக அண்மையில் அப்பகுதிகளுக்கு யுத்தத்தின் பிறகு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் தெரிவித்துள்ளார். படையினரின் அனுமதியோடு, அவர்களது வழித்துணையுடன் சென்று இந்த இடங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்த ஆயர் அவர்கள், முள்ளியவளை, தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை நேரில் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வாகனங்கள் தற்போது அப்பகுதி அரசஅதிபரின் பொறுப்பில் இருப்பதாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியுமென படையினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.