கண்டி பள்ளேகலயில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்றுவரை சுமார் 20லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனரென நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி சுதந்திர தினத்தன்று (4ம் திகதி) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 60 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை விளக்கும் சுமார் 1000 காட்சிக்கூடங்கள் அமைக் கப்பட்டுள்ளன. மக்கள் முண்டியடித்து கண்காட்சியைப் பார்வையிடுகின்றனர். பாதுகாப்பு தொடர்பான காட்சிக்கூடங்களில் மக்களின் ஆர்வம் கூடுதலாக இருப்பதைக் காணமுடிகிறது. இதனையிட்டு கண்டி நகரிலிருந்து விசேட பஸ்சேவைகள் (24மணி நேரமும்) நடத்தப்பட்டு வருகின்றன. இக்கண்காட்சி காலை 9மணியிலிருந்து நள்ளிரவு 12மணி வரை திறந்திருக்கும்.