மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த அனைவருக்கும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின்கீழ் நேற்று மன்னார் சென்றிருந்த அமைச்சர் வாக்களித்த அனைத்து மக்களிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதன்போது நேற்றுக்காலை 10 மணிமுதல் இரவு 11மணிவரை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. உப்புக்குளம், பள்ளிமுனை, பனங்கட்டிக்கோட்டு, மூர்வீதி, தோட்ட வெளி, புதுக்குடியிருப்பு, காட்டாஸ்பத்திரி , பேசாலை முருகன்கோவில், துள்ளுக்குடியிருப்பு, தலைமன்னார் ஆகிய கிரமங்களுக்குச் சென்று மக்களுக்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.