ரஸ்யாவுக்கான மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்றுமுற்பகல் மொஸ்கோ சென்றடைந்துள்ள நிலையில் அந்நாட்டு இராஜதந்திர அதிகாரிகள் அமோகமாக வரவேற்றுள்ளனர். அங்கு ரஸ்ய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தவாரென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் அமைச்சர்களான சுசில் பிறேம்ஜயந்த, ஜீ.எல்.பீரிஸ், ரோகித்த போகொல்லாகம, மகிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ரஸ்யாவுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.