பத்திரிகைகள் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன!
அண்மைய நாட்களாக உதயன் சுடரொளி போன்ற நாளிதழ்கள் வெளியிட்டு வரும் செய்திகள் ஈ.பி.டி.பி.க்கும் அதன் தேர்தல் வேட்பாளர்களுக்கும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறுப் பிரச்சாரங்கள் என கோண்டாவில் பாரதிபுரம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மாள் தேவஸ்தான உறுப்பினர் தெரிவித்துள்ளார். கோண்டாவில் பாரதிபுரம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் புதிய தேருக்கான நிரந்தர தரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் ... Read More
கண்ணி வெடிகள் அகற்றும் பணியில் 1100 இராணுவ பொறியியலாளர்கள்!
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் வெகுவிரைவில் மீளக் குடியமர்த்துவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை இராணுவத்தினர் துரிதமாக மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கண்ணிவெடிகளை அகற்றும் துறையில் நிபுணத்துவம் பெற்ற 1100 இராணுவ பொறியியலாளர்களும் 7 அரச சார்பற்ற நிறுவனங்களும் இதில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் ஏ-32 வீதியின் இரண்டு பக்கமும் காரைநகர் ஜெட்டி வரையும் ஏ-9 ... Read More
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கென வியாழக்கிழமை யாழ். செல்கிறார்..!
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வியாழக்கிழமை செல்கின்றார். கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக இறுதிநேரத்தில் தனது விஜயத்தை ஒத்திவைத்திருந்தார். வியாழனன்று யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
பயங்கரவாதத்திற்கு ஆதரவான சக்திகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன -பாதுகாப்புச் செயலாளர்
பயங்கரவாதத்திற்கு ஆதரவான சக்திகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அதனை தடுத்து நிறுத்த முனைப்பு காட்டிய சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் இந்த நிமிடம் வரையில் இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் ... Read More
அனுராதபுரம் விமானப்படை தாக்குதலுக்கு உதவிய சந்தேகநபர் விடுதலை..!!
அனுராதபுரம் விமானப்படைத்தளத்தை புலிகள் தாக்கிய சம்பவத்தில் அவர்களுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் வைத்தியசாலையின் கணக்காளரை அனுராதபுரம் பிரதமநீதவான் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். வடமத்திய மாகாண குற்றத்தடுப்பு பொலீசார் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வழக்கின் எதிரியான கே.ராஜரத்னம் என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லையென சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் எதிராளிகை விடுவிப்பதில் தமக்கு ஆட்சேபனையில்லை ... Read More
கிளிநொச்சி சிறைச்சாலை 30வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது..!
கிளிநொச்சி சிறைச்சாலை 30வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் நீதிமறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறைச்சாலை கட்டிடம் புலிகளின் முகாமாக இயங்கிவந்தது. சேதமடைந்த நிலையில் காணப்படும் கிளிநொச்சி சிறைச்சாலை கட்டிடத்தை சீரமைத்த பின்னர் அடுத்த சிலமாதங்களில் அது திறக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தை இயங்க வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சிறைச்சாலையை ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ... Read More
சாவல்கட்டு மக்களின் எழுச்சி நாளும் மகிழ்ச்சி நாளும் இன்றாகும்.
ஈ.பி.டிபி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் அவரது சக வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் நாம் வரலாற்றில் மாபெரும் தவறிழைத்தவர்கள் ஆகிவிடுவோம் என சாவல்கட்டு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு.பொன்னம்பலம் தெரிவித்தார்.
சுதுமலை சாவல்கட்டில் இன்றைய தினம் (26) இடம்பெற்ற பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரைநிகழ்த்தும் போது கருத்துத் தெரிவித்த திரு.பொன்னப்பலம் சாவல்கட்டு மக்களின் எழுச்சி நாளும் மகிழ்ச்சி நாளுமாக இருக்கும் எனத் தெரிவித்ததுடன் கடற்தொழிலாளர்களுக்கு அமைச்சர் ... Read More
புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதையினை நிர்மாணிக்க நடவடிக்கை..!
புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுபாதையினை சகல வசதிகளையும் கொண்ட விமான ஓடுபாதையாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான சேவைகளைக் கொண்ட தொகுதியாக நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் வடமாகாணத்தின் முக்கிய அபிவிருத்தித் திட்டமாக அமையுமென்று கூறப்படுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் அப்பகுதி இருந்தபோது இரணைமடுகுளத்தை அண்டிய அடர்ந்த காட்டில் இந்த விமான ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. உத்தேச விமான நிலையத் தொகுதியில் விமானசேவைகள் தொடர்பான பயிற்சி மற்றும் ஆய்வுகளை நடத்தக்கூடியதாக நிலையங்கள் அமைக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. ... Read More
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்கள் மல்லாவி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம்..
வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்) ஆகியோர் இன்றுமுற்பகல் மல்லாவி, பாண்டியன்குளம், ஐயன்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களிலும் புளொட் வேட்பாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள், இடம்பெயர்ந்த ... Read More
யாழ்.மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 2ல் போட்டியிடும் திருமதி அன்ரனி அருட்குமார் கிருஸ்ணபகவதி ஈ.பி.டி.பி. வேட்பாளர்களுக்கு ஆதரவு!
பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 2ல் போட்டியிடும் திருமதி அன்ரனி அருட்குமார் கிருஸ்ணபகவதி என்பவர் அக்குழுவில் இருந்து ராஜினாமாச் செய்துள்ளதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குத் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
திருமதி அன்ரனி அருட்குமார் கிருஸ்ணபகவதி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தாம் சுயேட்சைக் குழு 2ல் இருந்து ராஜினாமாச் செய்து ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை ... Read More
விருப்பு வாக்குகளின் மூலம் நிராகரிக்கப்படுவோருக்கு நாடாளுமன்றம் வரமுடியாது -ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்..!
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நிராகரிக்கப்படும் வேட்பாளர்கள் வேறும் வழிகளில் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்களினால் நிராகரிக்கப்படும் வேட்பாளர்கள் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்தினுள் நுழைய காட்டும் முனைப்புகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் ... Read More
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத கோட்பாடுகள் முறியடிக்கப்பட வேண்டும்-ஜாதிக ஹெல உறுமய..!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பிரிவினைவாத கோட்பாடுகள் இந்தத் தேர்தலில் முறியடிக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. டை கோர்ட் அணிந்த பிரிவினைவாத சக்திகள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முனைப்புக்காட்டி வருவதாக கட்சி எச்சரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கைப் பிரகடனங்கள் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய டை கோர்ட் அணிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதிகளுக்கு எதிராக குரல்கொடுக்க திறமைமிக்க தேசப்பற்றுடைய ... Read More
காங்கேசன்துறை துறைமுகம் ரூ. 100 மில். புனரமைப்பு
போர்ச் சூழல் காரணமாக சேதமடைந்து பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாத காங்கேசன்துறை துறைமுகம் நூறு மில்லியன் ரூபா செலவில் மீளமைக்கப்பட்டு வருவதாக துறமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.துறைமுகத்தை மீளமைக்கும் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருவதாகவும் இதனூடாக வடபகுதியில் மேற்கொள்ளப்படும் பாரிய உற்பத்திகளை தெற்கிற்கு அனுப்புவதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் கூறினார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,காங்கேசன்துறை துறைமுகம் மீளமைக்கப்படுவதோடு வடபகுதி ... Read More
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் பல்வேறு அமைப்புகளுக்கு உதவிகள்!
வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு ஒரு மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கினார்.
இன்று (25) காலை யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வின் போது கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் அங்கு கல்வி பயிலும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இந்த நிதி உதவியை அமைச்சர் அவர்கள் வழங்கினார். வறிய மாணவர்கள் பொருளாதார ... Read More
மட்டகளப்பு வவுணதீவு பகுதியில் ஆகாரம் நஞ்சுத் தன்மையால் 112 மாணவர்கள் வைத்தியசாலையில்
மட்டகளப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இருட்டுச்சேலை மடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 112 மாணவர்கள் அருந்திய ஆகாரத்தில் நஞ்சுத்தன்மை கலக்கப்பட்டதால் அவசர வைத்திய சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டனர். இருட்டுச்சேலை மடு விஷ்னு வித்தியாலயத்தை சேர்ந்த இம் மாணவர்கள் பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவினை அருந்திய பின்னர் வயிற்றிழைவு மற்றும் வாந்தி எடுத்து நோய்க்கு உட்பட்ட பின்னர் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக இவ் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் ... Read More
தேசிய மட்டப் போட்டியில் பங்குபெறும் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட அணியினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார்!
கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் தொடர்ந்தும் எமது பிள்ளைகள் முன்னணியில் திகழ வேண்டும் அதுவே எமக்கு பெருமை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூடைப்பந்தாட்ட மகளிர் அணியினரையும் அதிகாரிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ் டில்கா விடுதியில் சந்தித்து ... Read More
நான் வெறும் வாய்ச்சொல் வீரனல்ல; சொன்னதை செய்து காட்டும் செயல் வீரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ..!!
வெறும் வார்த்தைகளுக்குள் மட்டும் அடங்கிவிடும் ஜனாதிபதியாக இருக்க நான் விரும்பவில்லை. நாட்டை ஒன்றிணைப்பதாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதைப் போன்று அபிவிருத்தி அடையும் தேச மொன்றை கட்டியெழுப்பும் திட்ட த்தையும் வெற்றிகரமாக முடிக்கவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கம்பஹா மாவட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையும் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்தோரையும் அலரிமாளிகையில் சந்தித்தார். சுமார் ஆறாயிரம் பேர் வரை இந்த சந்திப்பில் கலந்து ... Read More
தமிழ் மக்களின் இழப்புக்களை குறுகிய காலத்தில் நிவர்த்திசெய்ய முடியும்! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சாந்தை மக்களின் எழுச்சியைக் காணும்போது பெரும் மகிழ்ச்சி அடைவதுடன் இத்தகைய எழுச்சி ஏனைய கிராமங்களிலும் ஏற்படுமாயின் தமிழ் மக்களின் இழப்புக்களை குறுகிய காலத்தில் நிவர்த்திசெய்ய முடியும் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பண்டத்தரிப்பு சாந்தை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரைநிகழ்த்தும்போது தெரிவித்தார்.
நேற்று (24) மாலை சாந்தை விநாயகர் சன சமூக நிலைய வளாகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ... Read More
சமுர்த்திக் கொடுப்பனவை அதிகரிக்க அரசு தீர்மானம் – அமைச்சர் லஷ்மன் யாப்பா
சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகக் குறைந்த கொடுப்பனவை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு வழி செய்யப்படும் என்று தகவல்துறை அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன் சமுர்த்தி அதிகார சபையின் ஊழியர்கள் 23700 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
16 இலட்சம் பேர் சமுர்த்தி வறுமை ஒழிப்பு நிவாரண ... Read More
















