மேவின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரச்சார மேடையில்.
களனிய பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மேடையொன்றில் தோன்றிய ஆழும் கட்சியின் அமைச்சர் மேவின் சில்வா எதிர்கட்சி மற்றும் ஆழும் கட்சியினராகிய நாம் எவ்விதத்திலும் வன்முறைகளில் ஈடுபடாது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதே நேரம் நாம் இருவரும் சேர்ந்து அன்னப்பறவையினருக்கு எம்பிரதேசத்தில் இடமளிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். அன்னப்பறவை என அவர் ஜெனரல் பொன்சேகா , ஜேவிபி கூட்டை குறிப்பிட்டுள்ளார்.
... Read More
2ம் ஆண்டு நினைவஞ்சலி… மயிலப்பன் லட்சுமி
அமரர் மயிலப்பன் லட்சுமி பிறப்பு : 18. 11. 1935 — இறப்பு : 01.03.2008கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மயிலப்பன் லட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. சுடர்விட்ட பொன்னாளாய் அன்பின் திருவிளக்காய்பாசத்தின் ஒளிவிளக்காய் எங்கள் உள்ளங்களில் பிரியாத அனைவிளக்காய் உயிரினுள் உயிரானதுணையை இழந்த எங்கள் அம்மாவின் சிராத்ததினமாகிய மாசிமாதம் 01.03.2010 திங்கள்கிழமை அன்றயதினம் என்று என்றும் எங்கள்உயிரினுள் நிழல் ஆகும் அம்மாவின் ஆத்மாசாந்திக்காக பிராத்திக்கி்றோம் ... Read More
கோப்பாயில் ஈ.பி.டி.பி.யின் புதிய அரசியல் காரியாலயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் போது மக்கள் பசி பட்டினியால் வாடிய போது அந்த மக்களின் பசியைப் போக்குவதற்காக உணவுப் பொருட்களைப் பெற்;றுத் தந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தான் என கோப்பாயில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய காரியாலயத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்திய வலிகாமம் கிழக்கு தென்பகுதி ப.கூ.சங்கத் தலைவர் என்.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
இன்று (28) மாலை நடைபெற்ற இவ் விழாவில் தொடர்ந்தும் ... Read More
வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது – ஹெகலிய ரம்புக்வெல அறிவிப்பு
வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கையை இன்னமும் காலனித்துவ நாடாக கருதி பிரித்தானியா செயற்பட்டு வருகிறது. எனினும் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட் இலங்கை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு முயற்சிக்கின்றார். பிரித்தானியா நோர்வே உள்ளிட்ட சில நாடுகள் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ... Read More
கிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்
கிளிநொச்சி, மாங்குளம், பூநகரி ஆகிய பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் தலைமை அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதி அடிக்கல் நடப்படவுள்ளது.பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் அடிக்கல் நடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். இதற்கமைய மாங்குளம் நகரத்தில் புதிய பொலிஸ் கட்டடத் தொகுதியும், கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி பொலிஸ் தலைமை அலுவலகமும், ... Read More
104வது வடக்கின் போர் கிரிக்கெட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி!
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். சென்றல் மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று பிற்பகல் 12.00 மணியளவில் யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களை வழங்கியதுடன் தனது தனிப்பட்ட ... Read More
யாழ். மாவட்டத்தில் 15கட்சிகளும் 12சுயேட்சைகளுமாக 324வேட்பாளர்கள் மோதுகின்றனர்..!
நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் முன்னொருபோதும் இல்லாதவகையில் 15 அரசியல்கட்சிகளும், 12 சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 27 அணிகள் போட்டியில் குதித்துள்ளன. 9ஆசனங்களுக்காக இந்த அணிகளின் சார்பில் மொத்தம் 324 வேட்பாளர்கள் மோதுகின்றனர். நேற்றுடன் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான காலஎல்லை முடிவடைந்தது. இதையடுத்து 16 அரசியல்கட்சிகள் மற்றும் 16சுயேட்சைக் குழுக்களின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 32 வேட்புமனுக்களையும் யாழ்.மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி பரிசீலனைக்கு நேற்று எடுத்துக்கொண்டார். இதன்போது 4சுயேட்சைக் குழுக்களினதும் சிறிலங்கா தேசிய முன்னணி ... Read More
கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இன்று ஆரம்பம்!
கச்சத்தீவில் நடக்கும் புனித அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் சுற்றுப்பகுதி தீவு மக்கள் கூட்டம் கூட்டமாக விசைப்படகு மூலம் வந்த வண்ணம் உள்ளனர். புனித அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க ராமேஸ்வர மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால் 1978ல் நிறுத்தப்பட்ட கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் 2001ல் நடந்தது. தொடர்ந்து அரசின் ஒத்துழைப்புடன் 2005 வரை நடந்த அந்தோனியார் திருவிழாவில் மன்னார் ... Read More
தென்னாசியாவிலேயே மிகப்பெரிய சமூக நீர் கருத்திட்டம் அங்குரார்ப்பனம்!
சூரியவௌ விஹாரகலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரியவௌ ஒருங்கிணைக்கப்பட்ட சமூக நீர்வழங்கல் கருத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக்கருத்திட்டம் தென்னாசியாவிலேயே மிகப்பெரிய சமூக நீர்கருத்திட்டம் எனக் கருதப்படுகின்றது. 90 மில்லியன் ரூபா செலவில் நகர அபிவிருத்தி புனித பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் மூலம் சூரியவௌ பகுதியிலுள்ள வெணிவெலார் மஹபெலெஸ்ஸ விஹாரககல பெந்திகந்தொட அலிஓலுவார ஆகிய பகுதிகளில் உள்ள 3000 குடும்பங்களைச் சேர்ந்த 15700 பேர்கள் பயனடையவுள்ளனர்.
மக்கள் பலத்தில் ... Read More
புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனை கைகொடுக்கும்..!
சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதி க்கப்பட்ட சகோதரத் துவமும் கைகொடு க்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது :-
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் ... Read More
ஹட்டனுக்கு ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விஜயம்..!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மலையகத்திற்கு விஜயம செய்து பரிசளிப்பு நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஹட்டனுக்கு விஜயம் செய்த ஷிரந்தி ராஜபக்ஷ மலையகத் தமிழ்-சிங்கள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். இளைஞர் வலுவூட்டல் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்படும் பிரஜாசக்தி அமைப்புடன் இணைந்து கடந்த வருடம் நுவரெலியா கல்வி ... Read More
ஈ.என் டி.எல்.எப் என்பன வன்னி மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல்..!
ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (ஈ.என் டி.எல்.எப்.) என்பன வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நேற்று வவுனியா தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தன. இதேவேளை ஈ.என்.டி.எல்.எப். என்ற ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும் இருளன் ஜெயந்தியை முதன்மை வேட்பாளராகக் கொண்டு வன்னி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது. த.வி.கூட்டணி மற்றும் ஈ.என்.டி.எல்.எப். வேட்பாளர் பட்டியலில், வன்னி மாவட்டம்: 1. இருளன் ஜெயந்தி (முதன்மை வேட்பாளர்) 2. கே.விநாயகமூர்த்தி 3. ஆர்.கருப்பையா 4. ஏ.ராமசாமி 5. ... Read More
வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டி!
இம்முறை ஏப்ரல் 8ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் 9 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இன்றைய தினம் 9.00 மணியளவில் வவுனியா கச்சேரியில் உள்ள தேர்தல் செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக சிவன் சிவகுமார் (ரகு) இவருடன் அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ் (கிருபன்) செபமாலை திசைவீரசிங்கம் (லிங்கேஸ்) சுப்பையா சந்துரு சவுந்தரநாயகம் பெனடிக்ற் தயாளன் (நிர்மல்) பொன்னையா ... Read More
குடாநாட்டில் உற்பத்திகளை அதிகரிக்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை!
நாட்டில் தற்போது அமைதி நிலை காணப்படுவதாலும் பனை உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பை அதிகரித்து வருவதாலும் அவற்றின் உற்பத்தி பொருட்களை அதிகரிக்க பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்கள் ஏதாவது ஒரு பனம் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து செல்வதால் இப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆதனால் சந்தைத் தேவைக்கேற்றவாறு உற்பத்திப் பொருட்கள் இல்லை என்றும் தாராளமான மூலப்பொருட்கள் இருந்தும் ... Read More
மட்டக்களப்பில் புளொட் வேட்புமனுத் தாக்கல், யாழ்ப்பாணத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) வேட்புமனுத் தாக்கல்! பெயர் விபரங்கள்..!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கென புளொட்; சார்பில் நங்கூரம் சின்னத்தில் அதன் தலைமை வேட்பாளரான பெனடிக்ட் தனபாலசிங்கம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். பெனடிக்ட் தனபாலசிங்கம், மயில்வாகனம் நிஸ்கானந்தராஜா, பொன்னம்பலம் செல்லத்துரை, நல்லதம்பி சண்முகநாதன், நாகமணி சிவராஜா, செல்லத்துரை கணேசலிங்கம், முருகேசு கிருபானந்தன், செல்லத்துரை தங்கராஜா ஆகியோர் புளொட்; சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தின் இன்று புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் இன்றையதினம் முற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ... Read More
கொழும்பு மாவட்ட தமிழர் அமைப்பு ஐ.ம.சு.முன்னணியை ஆதரிக்கத் தீர்மானம்..!
கொழும்பு மாவட்டத்தில் வாழும் தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதால், கொழும்பு மாவட்டத் தமிழர் அமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் தேசமான்ய ஏ.எஸ்.பூபாலசிங்கம் தெரிவித்துள்ளார். தமது அமைப்பு மஹிந்த சிந்தனையில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அதனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காகப் பாடுபட்டதாகவும் கூறிய பூபாலசிங்கம், ஜனாதிபதியின் அபிவிருத்தித் திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்துத் ... Read More
யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டி..!
எதிர்வரும் சித்திரை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன்; இணைந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.
இதன் பிரகாரம் இன்றைய தினம் (26) காலை 9.30 மணிக்கு மேற்படி கூட்டணியின் வேட்புமனு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் தலைமை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி கூட்டணியில் ... Read More
தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாட்டை தேர்தல் மேடைகளில் அம்பலப்படுத்துவேன்-முன்னாள் எம்.பி க.தங்கேஸ்வரி..!
நொந்துபோயுள்ள தமிழ்மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான க.தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். தேசியம், அரசியல் என்று கூறிக்கொண்டு இனியும் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், மக்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருக்கும் விடயங்களை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல், தேசியம் என்பவற்றுக்கு அப்பால் ... Read More
சிவாஜிலிங்கத்தின் கட்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் வேட்பு மனு தாக்கல்..!
தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ... Read More
கொட்டடி பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திடீர் விஜயம்!
யாழ் கொட்டடி பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (25) மாலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
கொட்டடி பகுதியில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற வீடில்லாப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிகள் தொடர்பிலான பிரச்சினைகள் உட்பட அம்மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் றீகன் இளங்கோ அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளையடுத்தே ... Read More



















