ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் -திவயின..!
எதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது சுதந்திரத் தினத்திற்கு மறுநாள் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பொதுத்தேர்தல் பணிகளுக்காக 180கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்களத் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது புத்தாண்டு காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதன் மூலம் பல்வேறு பாதிப்புக்கள் எற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு ... Read More
சரத் பொன்சேகாவை கைகழுவும் ஐக்கிய தேசியக் கட்சி..!
நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதன் மூலம் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி கைகழுவி விட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ... Read More
வெலிகந்த முகாமில் இருந்து 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை..!
வெலிகந்த சிறப்பு புனர்வாழ்வு முகாமில் இருந்து 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதாக புனர்வாழ்வுக்கு பொறுப்பான அதிகாரி அறிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் மீளவும் சமூகத்துடன் இணைந்து வாழக்கூடிய வகையில் புனர்வாழ்வுப் பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
56 முன்னாள் புலி உறுப்பினர்களின் பெற்றோர்கள் வெலிகந்தவுக்கு வரவழைக்கப் பட்டு அவர்களிடம் நேரடியாக இவர்கள் ஒப்படைக்கபட்டுள்ளனர். ... Read More
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும் – வாசுதேவ நாணயக்கார..!
ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கி ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு செல்ல வேண்டுமென ஜனாதிபதி ஆலோசகரும் புதிய இடதுசாரி முன்னனியின் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவி வந்த ஐயப்பாடு இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்பட்டுள்ளமையால் அனைத்து இன மக்களிடையேயும் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் அவசியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரசுடன் இணைந்து செயற்படும் வகையில் சிறுபான்மை மக்கள் ... Read More
மஹிந்தவின் சிந்தனை – II உடனடியாக நடைமுறைப்படுத்த பணிப்புரை..!
மஹிந்தவின் சிந்தனை-’எதிர்கால நோக்கு’ இரண்டாம் பாகத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
மஹிந்தவின் சிந்தனையில் முன்வைக் கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகளை முன்வைத்த வளவாளர்களை அலரிமாளிகை யில் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி இந்தப் பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
வளவாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, “எவ்வித தாமதமும் இல் லாமல் மஹிந்த சிந்தனையை நடை முறைப்படுத்துங்கள்” என்றார்.
இலங்கையை ஆசியாவிலேயே வர்த்தக, விமான, கடற்போக்குவரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ... Read More
இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைது செய்யநடவடிக்கை..!
இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைதுசெய்ய விஷேட நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். இவ்வாறு நாட்டிற்குள் பிரவேசித்த நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைவார் என்ற நம்பிக்கையில் குறித்த நபர்கள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது இவ்வாறான நபர்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ... Read More
யாழ் குடாநாட்டில் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாகச் சென்று கலந்துரையாடினார்!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி யாழ் குடாநாட்டு மக்களும் பொது அமைப்புக்களும் இன்றைய தினம் காலை யாழ் குடாநாடு தழுவிய பொது ஹர்த்தால் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.
மேற்படி நடவடிக்கை காரணமாக யாழ் குடாநாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் ... Read More
புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்றப்பட்ட மன்னார் மாவட்ட பிரதேசங்களுக்கு விஜயம்..
நேற்றைய தினம் மன்னார் மாவட்ட முருங்கன் அடம்பன் உயிலங்குளம் மாந்தைகிழக்கு பாப்பாமோட்டை காத்தான்குளம் உட்பட பல பகுதிகளுக்கு புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் குழு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது. மேற்படி பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த புளொட் பிரதிநிதிகள் குழு அங்குள்ள மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன்இ அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். புளொட் ... Read More
அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது-அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன..!
பாராளுமன்றத் தேர்தல்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பினை அரசாங்கம் கோரியுள்ளது. அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளது. அதற்கென ஓரிருவாரங்கள் அவகாசம் வழங்குவோமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் எதிர்க்கட்சியினரின் ஆதரவு கிடைக்காது போனாலும் பொதுத்தேர்தல் மூலம் மக்கள் ஆதரவினைப் பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ... Read More
நாட்டு மக்களின் நன்றியுணர்வை உலகுக்கு எடுத்துக்காட்டிய வெற்றி..!
நாட்டு மக்களின் நன்றி மனப்பான் மையை உலகுக்கு எடுத்துக் காட்டும் வெற்றி இதுவென ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்துள்ளார். மீண்டு மொருமுறை தம்மீது நம்பிக்கை வைத்து மகத்தான வெற்றியைப் பெற்றுத்தந்த நாட்டு மக்களுக்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் தேசிய ரீதியில் நடைபெற்ற முதலாவது தேர்தல் இதுவெனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டு மக்கள் சகலரும் இவ்வெற்றியில் பங்கேற்றுள்ளனர் ... Read More
இராணுவத்தின் பிரதான அதிகாரியாக மேஜர் ஜெனரல் தயா ரத்தநாயக்க.
மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இராணுத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் புலிகளுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டங்களுக்கான இயக்குனர் நாயகமாக செயற்பட்டுவந்த அவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும்படியாக இவ்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் கிழக்கை விடுவிக்க மேற்கொண்ட போரின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட அவர் ஈழம் போர் நான்கு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவப்பேச்சாளரவும் அவர் செயற்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
... Read More
தமிழ் ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதிக்கு வடக்கில் குறைவான வாக்குகள் கிடைத்தன-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..!
தமிழ் ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வடக்கில் குறைவான வாக்குகள் கிடைக்கப்பெற்றதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இயங்கிவரும் தமிழ் ஊடகங்கள் பிரதேசமக்களை பிழையான வழியில் இட்டுச்சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா இந்தத் தேர்தலில் வெற்றியீட்டுவார் என சில ஊடகங்கள் அறுதியிட்டுக் கூறின. மேலும், புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை சரத் பொன்சேகாவிற்கு ... Read More
நாட்டின் நீதிக்கு சவாலாக யாரும் செயற்பட முடியாது, அதனை அனுமதிக்கவும் முடியாது-தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி..!
இந்த நாட்டின் நீதிக்கு சவாலாக யாரும் செயற்பட முடியாதென்றும், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பாரிய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்த வேளையில் அது அரசாங்கத்தினால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஆட்சி கைப்பற்றப்பட்டிருக்குமாக இருந்தால் ஜனநாயகமும் கொல்லப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே இவ்வாறான ஒருவரை நீதியின் முன் நிறுத்தும்படி ஜனாதிபதியை ... Read More
ஜெனரல் சரத்பொன்சேகா இலங்கையை விட்டு வெளியேற முடியாது, அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் -பசில் ராஜபக்ச எம்.பி..!!
தேர்தலில் தோல்வி கண்டிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா, இலங்கையை விட்டு வெளியேற முடியாதெனவும் அவருக்கெதிராகவுள்ள அதிகளவிலான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். பொன்சேகா நாட்டிலேயே இருக்கவேண்டும் என்று தொலைபேசிமூலமான பேட்டியில் பசில் ராஜபக்ஷ ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். அவர் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. அவருக்கெதிரான அதிகளவிலான குற்றச்சாட்டுகளை நாம் வைத்திருக்கின்றோம் என்று ... Read More
வடக்கு கிழக்கு மக்கள் சுயாமாக வாக்களிக்கும் ஜனநாயகம் மீளக்கிடைத்தமை மகிழ்ச்சியை தருகிறது -ஜனாதிபதி தெரிவிப்பு..!!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில் ஜனநாயகம் மீள கிடைக்கப் பெற்றமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று மாலை ஊடகத்துறை பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமது நாற்பது வருட அரசியல் பயணத்தில் கீழ்தரமான இகழ்வான ... Read More
அதிரடி இணையத்தின் அவசர வேண்டுகோள்..
நேற்றைய இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளைப் பார்வையிடும் வாசகர்களால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அதிரடி.கொம் மற்றும் அதிரடி.ஓர்க் ஆகிய இணையங்கள் தற்காலிகமாக செயற்படவில்லை. இதில் மாற்றம் செய்யும் வரை (முடிந்தால் நாளை வரை) வாசகர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அதுவரை அதிரடி இணையத்தின் அனைத்து செய்திகள் ஆக்கங்களை நியுஅதிரடி.கொம் newathirady.com ஊடாகப் பார்வையிடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி..!! -அதிரடி நிர்வாகம். ... Read More
தமது நன்றிகளை தேர்தல் மூலம் மக்கள் வெளிக்காட்டியுள்ளனர் -ஜனாதிபதி தெரிவிப்பு..!
நாட்டு மக்கள் தமது நன்றியை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது தேசிய ரீதிலான தேர்தலில் மக்கள் தமக்கு மாபெரும் ஆணையை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் எவ்வித அச்சமும் இன்றி தேர்தலில் கலந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடத்தக் கிட்டியமை பெரும் மகிழ்ச்சி ... Read More
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் வாழ்த்து..!
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் வாழ்த்துச்செய்தியை அனுப்பிவைத்துள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது தலைமைத்துவத்தின் கீழ் நாடு அமைதியானமுறையில் விரைவாக அபிவிருத்தியடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையில் வரலாற்று ரீதியான நெருங்கிய உறவுள்ளது. இருநாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடிய பல வேலைத்திட்டங்களில் இனிவரும் காலங்களிலும் இணைந்து செயற்பட ... Read More
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்கக் கூடாது-பாதுகாப்பு தரப்பு கடும் உத்தரவு..!
பாதுகாப்பு தரப்பு கடும் உத்தரவு-சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதிக்கப்படக் கூடாது என பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித்தேர்தல் காலத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருகைதந்து சதித்திட்டங்களை சில முன்னாள் படையதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ... Read More
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி: அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு..!
இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கக் கிடைத்த வெற்றி ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படவும் வேண்டும் என அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் எமது அரசாங்கத்திற்கு எவ்வித ... Read More



















