மெரக் துறைமுகத்திலுள்ள இலங்கை அகதிகள் விடயத்தில் எமது பொறுப்பை தட்டிக் கழிக்கப் போவதில்லை -ஆஸி
இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்திலுள்ள இலங்கை அகதிகள் விடயத்தில் தமது பொறுப்பை தட்டிக்கழிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. குறித்த இலங்கை அகதிகள் கடந்த 11 வாரங்களாக இந்தோனேசியாவில் தரையிறங்க மறுப்பு தெரிவித்து மெராக துறைமுகத்திலுள்ள படகில் தங்கியுள்ளனர். அங்கு நோய்பரவல் அதிகம் ஏற்பட்டுள்ளநிலையில், உடனடியாக தரையறங்க வேண்டி கட்டாயநிலை காணப்படுகிறது. இந்நிலையில் குறித்த 254பேரில் சிலரையேனும் அவுஸ்திரேலியா மீள்குடியேற்றத்துக்கான பொறுப்பேற்றுக் கொள்ள முன்வருமாறு இந்தோனேசியா கோரியிருந்தது. ஓசியானிக் வைக்கிங் கப்பலிலிருந்த ... Read More
நுவரெலியா உடப்புசல்லாவை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
நுவரெலியா உடப்புசல்லாவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30அளவில் இடம்பெற்றதாக புசல்லாவைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். புசல்லாவையிலிருந்து உடபுசல்லாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று பாதையைவிட்டு விலகியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 78வயதுடைய மூதாட்டி ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்த விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் புசல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... Read More
யாழ். குடாநாட்டில் நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கம்
யாழ். குடாநாட்டில் நள்ளிரவுமுதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.. இதுவரை காலமும் நள்ளிரவு 12.00மணிமுதல் அதிகாலை 4.00மணிவரை யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ... Read More
தேர்தல் நெருங்கியநிலையில் இறுதியாக ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் 27நாட்களேயுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு இந்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் ... Read More
வடக்கில் மீள்குடியேறியவருக்கு நீரிறைக்கும் இயந்திரங்கள் கையளிப்பு
வடக்கில் மீ;ள்குடியேறிய மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு நீரிறைக்கும் இயந்திரங்களை வழங்கும் வைபவம் திருநெல்வேலியிலுள்ள விவசாய திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது விவசாய திணைக்கள உதவிப்பணிப்பாளர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னிரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 25 மீள்குடியேறியோருக்கு நீரிரைக்கம் இயந்திரங்கள் வழங்கப்பட்டன இவ்வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்குகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் மீள்குடியேறியோருக்கு நீரிறைக்கும் இயந்திரங்களை ... Read More
இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பது தொடர்பில் ஆராயவென தேர்தல் ஆணையாளரின் பிரதிநிதிகள் வடக்கு விஜயம்
இடம்பெயர்ந்தோர் மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் விதத்தில் வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து ஆராயவென தேர்தல் ஆணையாளரின் பிரதிநிதிகள் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்.சென்றுள்ள மேலதிக தேர்தல் ஆணையாளர் பீ.எம்.சிறிவர்தன, யாழ். அரசஅதிபர் கே.கணேஸ், யாழ்.மாவட்ட உதவிதேர்தல் ஆணையாளர் பீ. குகநாதன், இடம்பெயர்ந்தோருக்கென தேர்தல் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட விசேட பிரதிநிதி திரு.சண்முகம் ஆகியோர் நேற்றுமுன்தினம் யாழ். கச்சேரியில் விசேட கூட்டமொன்றையும் நடத்தினர். அத்துடன், யாழ்.மாவட்ட உதவிதேர்தல் ஆணையாளர் ... Read More
கிளிநொச்சி, றொட்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் 68கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள்
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வசதியாக, கிளிநொச்சி, றொட்றிக்கோ விளையாட்டு மைதானத்தில் 68கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்றுக் கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற உயரதிகாரிகளின் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக தேர்தல் ஆணையாளர் எஸ். சிறிவர்த்தன, இடம்பெயர்ந்தவர்களின் வாக்களிப்பு தொடர்பான பிரதி ஆணையாளர் எஸ்.சண்முகம், யாழ். அரசஅதிபர் கே.கணேஷ், யாழ். பிரதித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் ஆகியோர் கலந்து ... Read More
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவது குறித்து காலக்கெடு விதிக்க முடியாது -மனித உரிமைகள் அமைச்சர்
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுவது குறித்துக் காலக்கெடு விதிக்கமுடியாது என அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளது. இதுவரை காலமும் எதிர்வரும் வருடம் ஜனவரிமாத இறுதிக்குள் இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற முடியுமென அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட ஒர் தினத்தில் வடக்கு இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற முடியுமென அரசு ஒருபோதும் அறிவிக்கவில்லை எனவும், கூடிய விரைவில் இடம்பெயர் மக்களை மீள்குடியேற்ற முடியும் எனவும் மனிதஉரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு இடம்பெயர் முகாம்களில் ... Read More
பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்தும் நடவடிக்கையில் அமைச்சர் டக்ளஸ் ஈடுபாடு
யாழ். குடாநாட்டில் யுத்தம் காரணமாக பாதுகாப்புக்கருதி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை பொதுமக்களின் பாவனைக்கு வசதியாக படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளை உரிய தரப்பினருடன் கலந்துரையாடி சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. வடமராட்சிப் பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வடமகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும் மேற்படி விடயம் தொடர்பில் வரணிவடக்கு கட்டளை அதிகாரி மேஜர்ஜெனரல் மகேஸ் சேனநாயகாவுடன் கலந்துரையாடினர். யாழ். குடாநாட்டில் மக்கள் ... Read More
இந்தோனேசிய தடுப்புமுகாமில் எஞ்சியுள்ளோர் குறித்த அவுஸ்திரேலிய அரசுக்கு வலியுறுத்தல்
ஓசியானிக் கப்பலிலிருந்து தரையிறங்கி இந்தோனேசியத் தடுப்புமுகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலிலிருந்து தரையிறங்கிய 78பேருள் 15பேர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 02பேர் அவுஸ்திரேலியாவிலும், 13பேர் கனடாவிலும் குடியமர்த்தப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 63பேர் தொடர்பில் அவுஸ்திரேலியா சரியான முன்னெடுப்பை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் செனற்சபை உறுப்பினர் சாரகன்சன் யங் விடுத்துள்ளார். அவர்கள் எங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர், ... Read More
கடவுச்சீட்டு பெறுவதற்காக யாழிலிருந்து கொழும்பு வந்த இளைஞரைக் காணவில்லையென முறைப்பாடு
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த இளைஞர் ஒருவர் யாழ். தேவி புகையிரதத்தில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியைச் சோந்த 21வயதான செல்வகுமார் சத்தியசீலன் எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். கடந்த 14ம் திகதி ஏ9 வ|Pதியூடாக வவுனியா பயணித்த இவர் பின்னர் அங்கிருந்து யாழ்தேவி மூலம் கொழும்பு சென்றுள்ளார். இந்நிலையில் இவர் கொழும்பை சென்றடையவில்லை என குடும்பத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலீசாருக்கு குடும்பத்தவர்கள் ... Read More
கிறிஸ்மஸ் தினமான கடந்த 25ம் திகதி மாலை வெள்ளவத்தையில் மரிய அன்னையின் கைகள் தெரியும் அதிசயம்
கொழும்பு வெள்ளவத்தையிலும் அன்னைமரியின் கைகள் தெரியும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. அன்னை மரியின் உருவப்படத்திலிருந்து கைகள் இரண்டு வெளிப்பட்டுள்ளன. வெள்ளவத்தை, பெர்னாண்டோ வீதியிலுள்ள கனேந்திரன் என்பவரின் வீட்டில் நிகழ்ந்த அதிசயத்தினை நாம் கமராவுக்குள் அடக்கிக் கொண்டோம். கிறிஸ்மஸ் தினமான கடந்த 25ம் திகதி மாலை 3மணியளவில் குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த சமயம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில் இந்த அதிசயம் நிகழ்ந்ததாக வீட்டார் கூறுகின்றனர். 2006ம் ஆண்டளவில் புனித மடுதேவாலயத்தில் இந்தப் பிரார்த்தனை ... Read More
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதற்கான உரியபலன் மக்களுக்கு கிடைப்பதற்கு பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் -பாதுகாப்புச் செயலர்
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் உரியபலன் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டுமாயின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத் தலைவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களினால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் இன்றும் பலவுள்ளன. இவற்றைக் கட்டியெழுப்புவதன் மூலமே சிறந்ததொரு யுத்த வெற்றியைப் பெறமுடியுமென பாதுகாப்புச் ... Read More
புலிகளின் இணையங்களினால் புலித்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக காட்டும் முயற்சி மீண்டும் அம்பலமாகிறது..!
இலங்கை இராணுவத்தினரிடம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் பகுதியில் வைத்து மண்டியிட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு புலிகள் தொடர்ச்சியாக பல பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களின் இந்த முயற்சியானது யதார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ள மக்கள் மத்தியில் எடுபடுவதாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு நேற்றையதினமும் புலிகளின் ஊடகங்களில் ... Read More
சுமார் 20வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் பஸ்சேவை ஆரம்பம்
சுமார் 20வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்குமிடையில் இலங்கைப் போக்குவரத்து பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச.டிப்போக்கள் இணைந்து தினமும் குறித்த பஸ்சேவையை நடத்தி வருகின்றன. ஏற்கனவே திருமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையிலான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதிமுதல் யாழ்ப்பாணத்திற்கும் கல்முனைக்குமிடையிலான பஸ் சேவையும் கல்முனை இ.போ.ச டிப்போவினால் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு பிராந்திய போக்குவரத்து சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ... Read More
ரவூப் ஹக்கீமும் மனோகணேசனும் இன்று அதே யுத்தத் தளபதிக்காக ஓட்டுக்கேட்டு திரிவது இவர்களுக்குக் கிடைத்த இறைதண்டனையாகும் -உலமா கட்சித்தலைவர்
பயங்கரவாதிகளுக்கெதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தை நிறுத்த வேண்டுமென குரல்எழுப்பிய ரவூப் ஹக்கீமும் மனோகணேசனும் இன்று அதே யுத்தத் தளபதிக்காக ஓட்டுக்கேட்டு திரிவது இவர்களுக்குக் கிடைத்த இறை தண்டனையாகும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில இனவாத கட்சிகளுடன் சேர்ந்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸினர் கூறுகின்றனர். அப்படியாயின் அவர்கள் இணைந்திருக்கும் ஜே.வி.பி.யினர் நல்ல பிள்ளைகளா? இந்த நாட்டின் முதலாவது ... Read More
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் கைத்தொழிலின் எதிர்காலம் பற்றி ஆராயும் கலந்துரையாடல்..
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் கைத்தொழிலின் எதிர்காலம் பற்றி ஆராயும் கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் மாலை 5.30மணிக்கு நடைபெறவுள்ளது. வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு, சேமநல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெறும் இக்கலந்துரையாடலில் அங்கீகாரம் பெற்ற சகல வெளிநாட்டுத் தொழில் முகவர்களும் பங்குபற்றவுள்ளனர். மேற்படி நிகழ்வில் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்படவுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க இதனை ஏற்பாடு செய்துள்ளார். ... Read More
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல பிரதான ஆஸ்பத்திரிகள் மீண்டும் திறப்பு
புலிகள் இயக்கத்தினால் சேதமாக்கப்பட்ட கிளிநொச்சி பிரதான ஆஸ்பத்திரி அடங்கலான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல பிரதான ஆஸ்பத்திரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தேவையான மருத்துவர்கள் அடங்கலான ஆளணி மற்றும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் சந்ரசிறி தெரிவித்தள்ளார். 100 படுக்கையறை வசதிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு ள்ளதோடு எக்ஸ்ரே வசதி, இரத்த வங்கி வசதி என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முழங்காவில் ஆதார ... Read More
புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய ரவூப் ஹக்கீமுக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க கூடாது -பசில் ராஜபக்ச எம்.பி
அனைத்து அரசாங்கங்களிலும் அமைச்சராகவிருந்து பிரபாகரனுடன் உண்டு குடித்து உறவாடி சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்ட ரவூப் ஹக்கீமிற்கு வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாமற் போனதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். புத்தளம் ஆலங்குடாவில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு ... Read More
வயோதிபர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு 2000ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் -சரத்பொன்சேகா உறுதி
பட்டதாரிகள் தொழிலுக்கு செல்லும் வரையில் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றியீட்டினால் தேர்தலில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் சுமார் 30000ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி அல்லலுறுவதாகவும் அவர்களுக்கு துரிதகதியில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் இவ்வாறு தொழில்கள் வழங்கப்படும் வரையில் கொடுப்பனவாக ரூபா 2000 சகல ... Read More

