இடம்பெயர்ந்த சகல மக்களும் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் -பெப்ரல்
இடம்பெயர்ந்துள்ள சகல மக்களும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான சூழலை தேர்தல் ஆணையாளர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று தாம் வலியுறுத்திக் கோரவுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில், இத்தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் திட்டமிட்டு வருகின்றோம். 10,500 தேர்தல் தொகுதிகளில் ஒருவர் வீதம் நியமித்து கண்காணிக்கவுள்ளோம்.எமது கண்காணிப்புக்கு சக கண்காணிப்பு ... Read More
இலங்கை இராணுவம் அரசியல் மயப்படுத்தப்படவில்லை
இலங்கை இராணுவம் அரசியல் மயப்படுத்தப்படவில்லையென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இராணுவ அதிகாரிகளும் உறுப்பினர்களும் அவர்களின் சீருடையின்கீழ் அரசியலில் ஈடுபட முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் எந்தக் காலகட்டத்திலும் அரசியலில் ஈடுபட்டதில்லை. ஈடுபடுவதற்கான தன்மைகளும் இல்லையென உறுதி செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ... Read More
தமிழ்க்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி செல்வராஜா கஜேந்திரன் நாடு திரும்பினார்
தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார். இவர் கடந்த 3வருடங்களுக்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார். இப்போது தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயானந்தமூர்த்தி மாத்திரம் தொடர்ந்தும் லண்டனில் தங்கியிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பா.உ பதவியேற்பின்போது யுத்தம் ஒன்றை அரசு திணித்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து 40இ000க்கு ... Read More
பலந்தற பகுதியில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதமொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
கொழும்பு அத்துறுக்கிரிய பலந்தற பகுதியில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதமொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த நபர் ஆயுதத்துடன் நேற்று கைதுசெய்யப்பட்டதாகவும், இரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன
... Read More
நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட்டதால் நிவாரண கிராம மக்கள் மகிழ்ச்சி -அரச அதிபர்
வவுனியா நிவாரண கிராமங்களில் உள்ள மக்கள் டிசம்பர் 1ம் திகதியிலிருந்து தமது விருப்பப்படி எங்கும் சென்று வருவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். நிவாரண கிராமங்களிலுள்ள மக்கள் எங்கும் வெளியேறிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு செல்லாதவர்கள் டிசம்பர் 1ம் திகதிக்குப் பின்னர் வெளியேறிச்செல்ல காத்திருக்கிறார்கள். வெளியேற விரும்புவோர் எந்தவிதமான பதிவையும் மேற்கொள்ளத் தேவையில்லை. பெயரைக் ... Read More
புலிகளின் “புதிய” சுவிஸ் கிளையினரால் நடத்தப்பட்ட மாவீரர்தின நிகழ்வில் கண்ணீர்புகை பிரயோகம், இளைஞர்மீது கண்மூடித்தனமான தாக்குதல்..
சுவிஸ்லாந்தின் ப்ரீபேர்க் என்னுமிடத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27.11.2009) அன்று புலிகள் இயக்கத்தின் “புதிய” சுவிஸ் கிளையினரால் நடத்தப்பட்ட மாவீரர்தின நிகழ்வுகளில் பாம்பு குறூப் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் தெருச்சண்டியர் குழுவிற்கும், இளைஞர் குழுவொன்றுக்குமிடையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு கண்ணீர்ப்புகை ஒன்று பிரயோகம் செய்யப்பட்டதுடன், இதன்காரணமாக அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது. இதன்போது ஏற்பட்ட கைகலப்பு மற்றும் மோதல்களின் போது புலிகளினாலும், மற்றும் ... Read More
நிவாரண கிராமங்களில் உள்ள மக்கள் மேலும் 400 குடும்பங்களை அடுத்தவாரம் வவுனியா வடக்குப் பிரதேசங்களில் மீள்குடியர்த்த ஏற்பாடு
நிவாரண கிராமங்களில் உள்ள மக்கள் மேலும் 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்தவாரம் வவுனியா வடக்குப் பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர். புளியங்குளம் வடக்கு மற்றும் தெற்கு, மன்னக்குளம், கனகராயன்குளம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட எட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசஅதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கில் இன்னும் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இங்கு எட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் ... Read More
சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தொடர்பில் ஆஸி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை
சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இராணுவரீதியான யுத்தத்தை வெற்றிகொண்டால் மட்டும் போதாது எனவும், சமாதானத்தையும் வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமக்கு சிறந்த எதிர்காலம் காணப்படுகின்றதென சகலஇன சமூகமக்களும் ... Read More
மீளக்குடியமர்த்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கென இரு விசேட பரீட்சை நிலையங்கள்
மீளக்குடியமர்த்தப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கென இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3ம் திகதிக்கு முன்னதாக இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் விபரங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ... Read More
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னாரில் கலந்துரையாடல்..
சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று மன்னார்நகர மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தொண்டர் ஆசிரியர்களுடைய பிரச்சினை குறித்து ஆராய்ந்துள்ளார். இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து கல்வி அமைச்சருடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. சமாதான சூழலில் நீண்டகால இடைவெளிக்கு பின்னர் முதல்தடவையாக மன்னார் மாவட்டத்திற்கு நேற்று அமைச்சர் அதிகாரிகளுடன் விஜயம் மேற்கொண்டிருந்தார். மன்னார் மாவட்டத்திலுள்ள 7 பாடசாலைகளுககு சுமார் 17லட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த கணனி ... Read More
வடமாகாண முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது -ஜனாதிபதி
வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் துரித மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் காரணமாக வடமாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி சமாதானம், சுபீட்சம் நிறைந்த புதிய வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தையிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை உட்பட உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய சமூகத்தவர்களால் கொண்டாடப்படும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ஹஜ் ... Read More
வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், ஏனைய இடங்களிலுள்ளவர்களை ஜனவரி இறுதிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கை
வவுனியா நிவாரண கிராமங்களிலும், ஏனைய இடங்களிலும் தங்கியுள்ள மக்கள் அனைவரையும் எதிர்வரும் ஜனவரிமாதம் 31ம் திகதிக்கு முன்னதாக அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து செயற்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மீள்குடியேற்றம் முற்றாக நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பதியுதீன், எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் 3600பேரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண ... Read More
ஜெனரல் பொன்சேகா தனது அறியாமையால் அரசியல் பொறிக்குள் சிக்கி விட்டார் -அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு போன்ற கட்சிகள் முடிவுசெய்திருக்கும் நிலையில், ஜெனரல் பொன்சேகா தனது அறியாமையால் அரசியல் பொறிக்குள் சிக்கி விட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக ஜெனரல் பொன்சேகாவை ஆதரிப்பதாக ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. இதில் ... Read More
குருநாகல், இரத்தினபுரி, மகரகம விபத்துகளில் தலா ஒருவர் உயிரிழப்பு
குருநாகல் தாரகம பகுதியில் நேற்று மாலை பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கள் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த நபர் உயிரிந்துள்ளார். விபத்தின்போது காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இரத்தினபுரி பெல்மதுளையில் தனியார் பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த நபர்மீது நேற்றிரவு மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை மகரகம பன்னிப்பட்டி ... Read More
தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கு 04 சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு -தேர்தல்கள் ஆணையாளர்
தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுநலவாய கண்காணிப்பாளர்கள், ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள், ஆசிய கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் 12 வீதமானோர் தேசிய அடையாள அட்டை இன்றி காணப்படுவதாகவும், அவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல்களை சுதந்திரமானதும், நியாயமானதுமான முறையில் ... Read More
மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமணங்கள் வழங்கக்கோரி ஜனாதிபதிக்கு மகஜர்!
மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமணங்கள் வழங்கக்கோரி மாவட்ட செயலகத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நாடளாவியரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரசதுறைகளில் நியமணங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலேயே மன்னாரிலும் மற்றுமொரு கவனயீர்ப்பு நடவடிக்கை நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்திசெய்து சுமார் 5வருடங்களுக்கு மேலாக அரசதுறைகளில் எதுவித வேலைவாய்ப்புக்களும் இல்லாது அவதிப்படுவதாக தெரிவித்து தமக்கான வேலைவாய்ப்பபை உடன் வழங்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ... Read More
தமிழ்க் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும்?
வடக்கு கிழக்குத் தமிழர்தரப்பு குறிப்பாக, தமிழ்க்கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இன்னமும் விடைகிடைக்காத நிலையில், தமிழர்தரப்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் சில வட்டாரங்களில் ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையும் வேறுசில தமிழ்த் தரப்புகளும் இணைந்து இது தொடர்பாகப் பரிசீலித்து வருகின்றன என்று தெரியவந்தது. எனினும், இது தொடர்பாக நேற்று மாலைவரை தமிழர் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. வரும் ஜனாதிபதித் ... Read More
இந்துசமய கலாசார திணைக்களத்தினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருதுக்கு யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 17பேர் தெரிவு
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வாண்டுக்கான கலாபூஷணம் விருதுக்கு யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 17பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இக்கலைஞர்களுக்கான விருதுவழங்கும் வைபவம் எதிர்வரும் டிசெம்பர் 15ம் திகதி பிற்பகல் 1மணிக்கு கொழும்பு 7, ஆனந்தகுமாரசாமி மாவத்தையிலலுள்ள ஜோன் டீ.சில்வா ஞாபகார்த்த கலையரங்கில் நடைபெறவுள்ளது. கலாபூஷணம் விருது பெறவுள்ளோரின் பெயர்கள், கந்தையா குணராசா (நீராவியடி, யாழ்ப்பாணம்), வேலுப்பிள்ளை குமாரசாமி (பெரியஅரசடி, சாவகச்சேரி), செல்லப்பா நடராசா (அளவெட்டி வடக்கு, அளவெட்டி), முடியப்பு அருள்பிரகாசம் (நல்லூர், யாழ்ப்பாணம்), ... Read More
கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்பலிகளை விடுவிக்க எதிர்கட்சிகள் முயற்சி -விமல் வீரவன்ச
கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் எதிர்கட்சிகள் சில ஈடுபட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை சட்டத்தின் முன் நிறுத்தும்போது அவர்கள் அனைவரும் குற்றமிழைத்தார்கள் என்பதற்கான சாட்சியங்களை உறுதிசெய்ய முடியாமல் இருக்கும் இந்நிலையில் அவர்களை விடுதலை செய்துகொள்ளலாம் என்பதெ எதிர்கட்சிகளின் ஏற்பாடு என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது சர்வதேசத்தின் சூழ்ச்சியெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இதற்காக அரசாங்கத்திற்கு ... Read More
யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவுக்குமிடையிலான பயணிகள் சேவையை நடத்துவதற்கு மினி பஸ்களுக்கு அனுமதி
யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவுக்கும் இடையிலான பயணிகள் சேவையை நடத்துவதற்கு மினி பஸ்களுக்குப் பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதி களை வழங்கியுள்ளதாக தனியார் சிற்றூர்திச் சேவைகள் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அச்சங்கம் மேலும் தெரிவித்ததாவது: ஏ9 பாதை ஊடாக தனியார் மினிபஸ்களையும் பயணிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறு தனியார் சிற்றூர்திச் சேவைச்சங்கம் அரசஅதிபர் ஊடாகப் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதியைக் கோரியிருந்தது. இதனடிப்படையில் தனியார் பஸ்களைப் பயணிகள் ... Read More

