நீர்கொழும்பு, சிலாபம் குதிகளில் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுக்கும் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது
நீர்கொழும்பு கொச்சிக்கடை தங்கொட்டுவ வென்னப்புவ மற்றும் சிலாபம் பகுதிகளில் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுக்கும் சம்பவங்களில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் மூவர் கடந்த 27ம் திகதி சிலாபம், மாறவில பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் சென்றவாறே பாதையில் செல்லும் பெண்களின் கழுத்திலுள்ள சங்கிலிகளை சாமர்த்தியமாக அறுத்துக் கொண்டு தப்பிச் செல்கின்றமையை வழக்கமாகக் கொண்டிருந்த இக்கும்பலைசை; சேர்ந்த ஒருவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டார் எனவும் அவரிடம் மேற்கொண்ட ... Read More
புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய மாணிக்கவாசகன் கனடாவில் கைது
புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த மாணிக்கவாசகன் என்பவர் கனேடிய புலனாய்வுப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகன் என அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு ஜீ.ஜீ.எவ் உபகரணங்கைளும், செயற்கைக்கோள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய நூறு தொலைத் தொடர்பு கருவிகளையும் வழங்கியதாக கூறப்படுகின்றது. முன்னதாக இக்கருவிகளை தனது பிரயாணப் பைக்குள் மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ... Read More
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பு
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவினர் இன்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் ஒரேநாளில் இடம்பெறும் பட்சத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெறலாமென கரு ஜெயசூரிய இதன்போது தேர்தல் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளார். இது தவிர தேர்தல்களின்போது எதிர்க்கட்சிகளுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் தேர்தல்களின்போது அரச ஊடகங்கள் ... Read More
இந்திய மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை -கடற்படையினர்
இந்திய மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கடற்படையினர் அறிவித்துள்ளனர். இந்திய ஊடகங்களில் வெளியானது போன்று இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தவில்லை எனக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்கத் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் 40 இந்திய மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களது உபகரணங்கள் சேததப்படுத்தப்பட்டதாகவும் டைம்ஸ் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது. பிடிக்கப்பட்ட ... Read More
நாட்டின் இறைமையைக் காட்டிக்கொடுத்த ஐ.தே.கட்சிக்கு இராணுவ வெற்றியை விமர்சிக்க அருகதை உள்ளதா? -அரசாங்கம் கேள்வி
புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையின்மூலம் அவர்களின் மெய்நடப்பு தமிழீழ அரசை ஏற்றுக்கொண்டு, நாட்டின் இறைமையைக் காட்டிக்கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு, இராணுவ வெற்றியை விமர்சிக்க அருகதை உள்ளதா என அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. புலிகளின் தனி அரசுக்கு அங்கீகாரம் வழங்கியது பற்றியும் அவர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் வானொலி உபகரணங்களைப் பெற்றுக் கொடுத்தது பற்றியும் ஐக்கிய தேசிய கட்சி பதிலளித்தாக வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன ... Read More
மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்கி கண்ணிவெடிகளை அகற்ற புதிய ஐந்து இயந்திரங்கள் வரவழைப்பு
மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்து வதற்கு ஏதுவாக மிதிவெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் மிதிவெடிகள் அகற்றும் மேலும் ஐந்து நவீனரக இயந்திரங்கள் இன்று இலங்கைக்கு விமானம்மூலம் கொண்டுவரப்படுகின்றன. 250 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி 5 இயந்திரங்களும் ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தேசநிர்மாண அமைச்சு அறிவிக்கிறது. இன்றுகாலை 7.30க்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மேற்படி 5 இயந்திரங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும். மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் ... Read More
மிருசுவில், கைதடி நலன்புரி நிலையங்களிலிருந்து 1474பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு
யாழ்.மிருசுவில், கைதடி நலன்புரி நிலையங்களிலிருந்து 526 குடும்பங்களைச் சேர்ந்த 1,474பேர் நேற்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வன்னியிலிருந்து வந்து இந்நிலையங்களில் தங்கியிருந்தவர்களே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களாவர். மிருசுவிலிலிருந்து 217 குடும்பங்களைச் சேர்ந்த 634பேரும் கைதடியிலிருந்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 840பேரும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்தவர்கள், உள்ளுரில் விடுவிக்கப்பட்டவர்கள் என 4,328பேர் நேற்றையதினம் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை தெல்லிப்பழை, சங்கானை பிரதேசங்ளைச் சேர்ந்த 3ஆயிரம் பேர் இன்று யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
தேர்தல் பற்றிச் சிந்திக்காது, நாட்டைப் பற்றிச் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்வதே அரசின் கொள்கை -ஜனாதிபதி
தேர்தல் பற்றிச் சிந்திக்காது நாட்டைப் பற்றிச் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்வதே அன்றும் இன்றும் எதிர்காலத்திலும் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்குமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதில் தாம் ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாடளாவிய உள்ளூராட்சிச்சபை பிரதிநிதிகள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி;, நாட்டின் நலனை முன்கொண்ட தீர்மானங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் கொள்கையெனவும் குறிப்பிட்டுள்ளார். ... Read More
பஸ்சில் பயணம்செய்த பெண்ணின் கைப்பையிலிருந்த 50ஆயிரம் ரூபா பணத்தை களவாடிய பெண்
மினிபஸ்ஸில் பயணம்செய்த பெண்ணின் கைப்பையிலிருந்த 50ஆயிரம் ரூபா பணம் தந்திரமாகக் களவாடப்பட்ட சம்பவம் யாழ்.அச்சுவேலி சேவையில் ஈடுபடும் மினி பஸ்ஸில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. பிரஸ்தாப பெண் வங்கியிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்து வந்ததாகவும் வீடு திரும்புவதற்காகக் குறித்த பஸ்ஸில் பயணம் செய்தபோது அருகில் இருந்த பெண் பேச்சுக்கொடுத்து நட்புறவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வேளையில் பஸ் நடத்துநர் இருபாலைப் பகுதியில் பஸ் கட்டணத்தைக் கேட்டபோது, பணத்தை எடுப்பதற்காக கைப்பையைப் பார்த்தபோது ... Read More
கோப்பாய் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களில் ஒரு தொகுதியினர் நேற்று விடுவிப்பு
வன்னியிலருந்து இடம்பெயர்ந்து கோப்பாய் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களில் ஒரு தொகுதியினர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 136 குடும்பங்களைச் சேர்ந்த 328பேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இம்மக்களை விடுவிக்கும் நிகழ்வு நேற்றுக்காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் கிராமசேவகர் எஸ்.செல்வச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 405பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் மூவர் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டதுடன் உறவினர்களால் பொறுப்பேற்கப்பட்ட 136 குடும்பங்களைச் சேர்ந்த 328 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். உறவினர்கள் இல்லாத ஏனைய 74 பேரையும் ... Read More
யாழ். மிருசுவில் மற்றும் பனை ஆராய்ச்சிநிலையத்தில் தங்கியுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் சொந்த இடங்களில் மீள்குடியமர்வு
யாழ். மிருசுவில் மற்றும் பனை ஆராய்ச்சிநிலைய இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் ஒரு தொகுதியினர் அவர்களது சொந்த இடங்களில் இன்று மீளக்குடியமர்த்தப் படவுள்ளனர். இதேவேளை இன்று அதிகாலையில் கோப்பாயைச் சேர்ந்த மக்களில் ஒரு தொகுதியினரையும் தெல்லிப்பழையைச் சேர்ந்த மக்களில் ஒரு தொகுதியினரையும் நேற்று மாலையில் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக நேற்றிரவு பிரதித்திட்டப் பணிப்பாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிப் பெண்களில் ஒரு சாராரையும், சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு அனுமதிபெற்ற மாணவர்கள் சுமார் ... Read More
கொழும்பிலிருந்து சென்னைக்குக் கடத்திவரப்பட்ட 67 பவுண் தங்கநகைகள் சுங்க இலாகா அதிகாரிகளால் பறிமுதல்
கொழும்பிலிருந்து சென்னைக்குக் கடத்திவரப்பட்ட 67 பவுண் தங்கநகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கைப்பெண் உட்பட 2பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் பயணித்தோரை விமானநிலைய சுங்கஇலாகா அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 37) என்பவரிடம் சந்கேத்தின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளர். அப்போது சுந்தரம், அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளார். இதையடுத்து அவரிடம் ... Read More
வவுனியாவைச் சூழவுள்ள பகுதியில் மக்களிடமும் வர்த்தகர்களிடமும் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் 6 சந்தேகநபர்கள் கைது
வவுனியாவைச் சூழவுள்ள பகுதியில் மக்களிடமும் வர்த்தகர்களிடமும் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் 6 சந்தேகநபர்களை வவுனியா குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வவுனியாப் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறிக்கொள்ளை மற்றும் இரட்டைக்கொலை உள்ளிட்ட மேலும் ஒரு கொலைச் சம்பவத்துடன் இச்சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென வவுனியா உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள் குறித்து, கடந்த 2006ம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட சுமார் ... Read More
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு துரிதமாக அனுப்பி வைக்கும் அரசின் நடவடிக்கை.. வரவேற்கிறது அமெரிக்கா
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு துரிதமாக அனுப்பிவைக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இடம்பெயர்ந்து அகதிகளாயுள்ள சுமார் 2லட்சத்து 50ஆயிரம் பேரில் அடுத்த சில வாரங்களுக்குள் சுமார் 40ஆயிரம் பேரை இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றவுள்ளதாக தெரிவித்துள்ளதை நாம் வரவேற்கின்றோம். மேலும், ஆயிரக்கணக்கானோர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இந்நிலைமைகளை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அமெரிக்க தூதரகம் நேற்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. மக்களை ... Read More
கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வைத்து பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவர் ஆயுதத்துடன் கைது
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் வைத்து பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றும் அதற்கான ரவைகள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ... Read More
6தமிழ்பேசும் கட்சிகள் பொதுவான கூட்டணியொன்றை அமைக்க திட்டம்
ஆறு தமிழ்பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவான ஓர் கூட்டணி ஒன்றை அமைக்கத்திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தற்போதைய அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழர்விடுதலைகூட்டணி, புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஸ்ரீதரன் பிரிவு ஆகியன பொதுவான கூட்டணி ஒன்றை உருவாக்குவது குறித்து தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ரவுப் ஹக்கீம், இராசம்பந்தன், மனோகணேசன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பிரதிநிதிகள் நேற்றைய தினம் ... Read More
யாழ். மாநகர சபையின் 1வது கூட்டமும், ஆரம்ப வரவேற்பு நிகழ்வும் நேற்று நடைபெற்றன
யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதலாவது கூட்டமும், அதற்கான ஆரம்ப வரவேற்பு நிகழ்வும் நேற்று சிறப்பாக நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. சபையின் முதலாவது அமர்வு மாலை 6.30 மணியளவில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் அவரின் புதிய அலுவலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. ஆரம்ப வரவேற்பு வைபவத்தில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். அரசஅதிபர் கே.கணேஷ், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ... Read More
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென நாம் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது -ஜனாதிபதி
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதென நாம் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாது. தேசிய பாதுகாப்பையும் அரசியல் நிலைப்பாட்டையும் பலப்படுத்துவது மிக முக்கியமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று ஜனாதிபதி தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் ... Read More
கோயிலுக்குச் சென்ற 21வயதுடைய திருமணமாகிய இளம்பெண் ஒருவர் காணாமற் போயுள்ளார்
கோயிலுக்குச் சென்ற 21வயதுடைய திருமணமாகிய இளம்பெண் ஒருவர் காணாமற் போயுள்ளார் என அவரது உறவினர்கள், பிரதியமைச்சர் பெ. இராதாகிருஸ்ணனிடமும், காணாமற் போதல் மற்றும் கடத்தல் தொடர்பான விசாரணைகளைக் கண்காணிக்கும குழுவிடமும், கொட்டாஞ்சேனைப் பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனை, ஜிந்துப்பிட்டி வீதியில் பெற்றோருடன் கடந்த மூன்று வருடங்களாக வசித்து வந்த காண்டீபன் குஜாயினி என்ற பெண்ணே கடந்த 23ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் 9மணிக்கு பின்னர் காணாமற் போயுள்ளதாக ... Read More
எதிர்வரும் வருட காலாண்டுப் பகுதிக்குள் இடம்பெயர் மக்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்படுவர் -மீள்குடியேற்ற அமைச்சர்
எதிர்வரும் ஆண்டின் முதல்காலாண்டுப் பகுதிக்குள் இடம்பெயர் மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முடியும் என அனர்த்த மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவி;த்தார் இந்தமாதம் முடிவடைவதற்குள் சுமார் 60000பொதுமக்களை மீள்குடியேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மேலும் 10இயந்திரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்தமாத ஆரம்பம் முதல் ... Read More
