புலமைப்பரிசிலில் வெளிநாடு சென்று நாடு திரும்பாத மருத்துவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் -சுகாதார அமைச்சு!
புலமைப்பரிசில் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பாத மருத்துவர்களுக்கு எதிராக வழக்குதொடரப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலதிக பயிற்சிகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடு சென்று நாடு திரும்பாத 215 மருத்துவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது. விஷேட நிபுணத்துவ பயிற்சிக்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட பணத்தை மீளச்செலுத்த 150 மருத்துவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் மேலதிக பயிற்சிகளுக்காக 1915 மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் இதில் 1700பேரே நாடு திரும்பியுள்ளதாகவும் ... Read More
இந்தியக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 46பேர் கைது
இந்தியக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் குற்றம்சாட்டப்படும் இலங்கையைச் சேர்ந்த 46 கடற்தொழிலாளர்களைக் கைதுசெய்துள்ள இந்திய கரையோரக் காவல்படையினர், அவர்களின் ஆறு படகுகளையும் கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், அந்தவேளையில் இவர்கள் அனைத்துலக கடல் எல்லையைத் தாண்டிச் சென்றிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இலங்கை கடற்தொழிலாளர்கள் அனைவரும் நேற்று சென்னை, காசிமேடு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதேவேளை, நாகபட்டினம் கடற்பகுதியில் இலங்கைக் கடற்படையினர் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் ... Read More
பருத்தித்துறை டிப்போவில் ஆசனப்பதிவு மேற்கொள்ளாமையால் வடமராட்சி மக்கள் அசௌகரியம்..
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு பஸ் வண்டிகளில் பயணம் செய்வோர்களுக்கான ஆசனப்பதிவு செய்தல் கடந்த சில வாரங்களுக்கு மேலாக பருத்தித்துறை இ.போ.ச. டிப்போவில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பயணிகள் பெருஞ்சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். வவுனியாவுக்கான இ.போ.ச. பஸ்சேவை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து பருத்தித்துறை இ.போ.ச.டிப்போவிலிருந்து பயணிகளுக்கான ஆசனப்பதிவுகள் மேற்கொள்ளப் பட்டுவந்தன. ஆசனப்பதிவு மேற்கொண்ட பயணிகள் தினமும் இரண்டு பஸ்வண்டிகளில் அதிகாலை 5மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு அங்கிருந்து சௌகரியமாக பயணத்தை மேற்கொண்டுவந்தனர். ... Read More
தீவுப்பகுதியை வதிவிடமாகக் கொண்ட மொத்தம் ஆறாயிரம் பேரை அழைத்து வந்து மீளக்குடியமர்த்த ஏற்பாடு
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் தீவுப்பகுதியை வதிவிடமாகக் கொண்ட மொத்தம் ஆறாயிரம் பேரை அழைத்து வந்து மீளக்குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அப்பகுதியைச் சேர்ந்த மூவாயிரம் பேர் அழைத்து வரப்பட்டு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். யாழ். அரசஅதிபர் கே.கணேஷ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். தீவுப் பகுதியைச் சேர்ந்த மேலும் 800பேரை இன்று அழைத்துவர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அத்தோடு தீவுப்பகுதியை சேர்ந்தவர்களை அழைத்து வருவதை நிறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுத்தமுறை குடாநாட்டில் ஏனைய ... Read More
பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஈரான் ஜனாதிபதி சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 64வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அங்கு ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாத்தைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பு கடந்த 25ம் திகதி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் பாதுகாப்பு நிலைவரங்கள், வன்னி நடவடிக்கைகள், இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களின் விவகாரங்கள், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல் என்பனவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More
ஆனந்தகுமாரசுவாமி முகாமில் கைதான 19பேரும் நீதிமன்றத்தினூடாக விடுதலை
ஆனந்தகுமாரசுவாமி இடைதங்கல் முகாமில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட 19பேரும் ஞாயிறன்று வவுனியா மாவட்ட நீதிபதியின் இல்லத்தில் அவரது முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது சில தினங்களுக்கு முன்னர் ஆனந்தகுமாரசுவாமி முகாமைச் சேர்ந்தவர்கள் இராமநாதன் முகாமுக்கு சென்றபோது இராணுவத்தினரால் மறிக்கப்பட்டனர் இதனால் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்ட 19பேருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத்தெரிவிக்கப்படுகிறது. ... Read More
தொழில்நுட்ப மாணவர் மீதான தாக்குதல் சந்தேக நபர்களின் பிணைமறுப்பு
தொழில்நுட்ப மாணவர் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்தனவின் மனைவி உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மேலும் இந்த தொழில்நுட்ப மாணவன் தாக்கப்பட்ட வழக்கில் இதனுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவரை பற்றிய விசாரணைகளைத் தொடர்ந்து நடத்துமாறும் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
... Read More
மாவட்ட செயலகத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பணி.. அச்சுறுத்தலையடுத்து ஏற்பாடு
புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சி.எம்.நபீலுக்கு மாவட்டத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் விடுத்த அச்சுறுத்தலையடுத்து திங்கட்கிழமை முதல் பிரதேச செயலகத்துக்கு வருவதை தவிர்த்து புத்தளம் மாவட்ட செயலகத்தில் தமது வரவை பதிவுசெய்ய ஆரம்பித்துள்ளனர் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றும் சமுர்தி அபிவிருத்தி அதிகாரி ஒருவரை அதே செயலக் பிரிவில் வேறு கிராம அதிகாரிப் பிரிவுக்கு இடமாற்றம் செய்தமை புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்ற சிரமதான பணியின்போது வடமேல் மாகாணசபை உறுப்பிளர் ... Read More
காலாவதியான இரத்த மாதிரிகளை விநியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தேசிய இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட 38பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அரச வைத்தியசாலைகளுக்கு காலாவதியான இரத்த மாதிரிகளை விநியோகம் செய்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் தேசிய இரத்த வங்கியின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி மங்கலிக்கா பிந்துசார உள்ளிட்ட 38பேர்மீது சுகாதார அமைச்சு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அமைச்சின் செயலாளர் வைத்தியக் கலாநிதி அத்துல கஹந்தலியனகே தெரிவித்துள்ளார். குறித்த 38பேர்மீதும் எதிர்வரும் இரு வாரங்களில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள்மீதான பூர்வாங்க விசாரணை அறிக்கை 2008ம்ஆண்டு ... Read More
உலகத் தமிழ் மாநாடு ஒத்திவைப்பு
உலகத் தமிழ் மாநாடு ஜனவரி மாதம் நடப்பதாக இருந்தது. ஆனால் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த ஆலோசனையின்படி மாநாடு நடக்கும் திகதியை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் எதிர்வரும் வருடம் ஜனவரி 21முதல் 24ம் திகதிவரை நடத்தத் தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்த மாநாடு குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை கூட்டம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் ... Read More
தென் மாகாணசபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறும்..
தென் மாகாணசபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் மாகாணசபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 31,151பேர் தகுதி பெற்றுள்ளனர். வாக்குச்சீட்டுகள் யாவும் அரச நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
... Read More
நாளொன்றுக்கு கோடிக்கணக்கான நிதியைச் செலவழித்து இடம்பெயர்ந்துள்ள அப்பாவி மக்களை பராமரிப்பது வாக்குகளை அபகரிப்பதற்காக அல்ல -ஜனாதிபதி!
நாளொன்றுக்கு கோடிக்கணக்கான நிதியைச் செலவழித்து இடம்பெயர்ந்துள்ள அப்பாவி மக்களை நாங்கள் பராமரிப்பது வாக்குகளை அபகரிப்பதற்காக அல்ல. அங்குலத்திற்கு அங்குலம் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளின் மேல் இந்த மக்களைத் தள்ளிவிட முடியாது. அரசியலைவிட அந்த மக்களின் உயிர்கள் எமக்கு பெறுமதியானவை. அதனால்தான் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முழுஉலகமும் எமக்கு எதிராக நின்ற போதும் நாங்கள் இந்த மக்களை மீட்டெடுத்தோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்றுகாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து ... Read More
யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான பிரிவில் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சி -அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலுள்ள யுத்த குற்றச்செயல்கள் தொடர்பான பிரிவில் இலங்கைக்கு எதிராகத் தற்போது சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியும், சில அரசசார்பற்ற நிறுவனங்களும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள யுத்த குற்றச்செயல்கள் பிரிவுடன் சேர்ந்து இச்சூழ்ச்சியை மேற்கொள்ளுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எமது ஜனாதிபதியையும், பாதுகாப்புத்துறையின் முக்கிய உயரதிகாரிகளையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன்பாகக் கொண்டுசெல்லும் வகையிலேயே இச்சூழ்ச்சி இடம் பெறுவதாகவும் அவர் ... Read More
கொலை மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான சினைப்பர் சுதா கைது
கொலை மற்றும் கொள்ளைகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான சினைப்பர் சுதா என்பவர் நேற்று கொழும்பில் கைதுசெய்யப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். ஆயுதங்கள், போதைப்பொருள், பணம் மற்றும் நகை என்பன இவரிடமிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக பொலீசாரினால் தேடப்பட்டு வந்த இந்த நபரை தென் மாகாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் சரத் மெண்டிஸ் தலைமையிலான குழுவினரே நேற்றிரவு கைதுசெய்துள்ளனர். புதியரக ... Read More
கதிர்காமம் காட்டுப்பகுதியில் மறைந்துள்ள புலிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை
அம்பாந்தோட்டை மாவட்டம் கதிர்காமத்தை அண்டிய யால காட்டுப் பகுதியில் மறைந்திருப்பதாக கருதப்படும் புலி பொறுப்பாளர்களை தேடி பெரும் தேடுதல்வேட்டை ஒன்றை படையினரும் பொலீசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். மூகமூடியணிந்த சிலர் ரி56 ரக துப்பாக்கிகளுடன் இந்தக் காட்டுப்பகுதியில் நடமாடுவதைக் கண்டி பிரதேச விவசாயிகள் வழங்கிய தகவலுக்கமையவே இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் நடமாட்டத்தால் அச்சமடைந்திருப்பதாக விவசாயிகளும் பிரதேச மக்களும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேடுதல்களின்போது ... Read More
காலி துறைமுக தாக்குதல் முக்கிய சூத்திரதாரியான கடற்புலி முக்கியஸ்தர் செட்டிகுளத்தில் கைது
2007ம் ஆண்டு காலிதுறைமுகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான கடற்புலி முக்கியஸ்தர் வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இவர் கடல் என்றழைக்கப்படுபவரென்றும், யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்தவரென்றும் கடற்புலிகளின் பிரிவில் பொறியியலாளராக செயற்பட்டு வந்தவரென்றும் தெரியவந்துள்ளது. இவர் காலிதுறைமுகத் தாக்குதலுக்காக தயார் செய்யப்பட்ட எட்டுப் படகுகளில் குண்டுதாரிப் பெண்களை வாகரையிலிருந்து அம்பாந்தோட்டை வழியாக தாக்குதலுக்கு அழைத்து வந்துள்ளார். படகுகள் குறித்த இலக்கை ... Read More
வவுனியா தடுப்பு முகாம்களிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் அனுப்பி வைப்பு
வவுனியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன இதன்படி பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தைச் சேர்ந்த ஒன்பது பட்டதாரி மாணவர்களும்; மிருக வைத்தியர் பீட மாணவர் ஒருவருமாக பத்துபேர் நேற்று பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார் இதேவேளை யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மாணவர்கள் இன்று அனுப்பிவைக்கப்படுவர் எனவும் அவர் கூறினார் வவுனியா தடுப்பு ... Read More
யாழ்பயணிகள் பஸ்பதிவு அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டள்ளது
யாழ்பயணிகள் பஸ் பதிவு அலுவலகம் வவுனியா தேக்கம்காடு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது வவுனியா ரம்பியா ஹவுஸிலிருந்து இந்த அலுவலகம் ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமிற்கு அருகில் மாற்றப்பட்டிருந்தது இதன் காரணமாகவே வவுனியாவிலிருந்து ஈரப்பெரியங்குளம் செல்ல ஒரு பயணிக்கு முச்சக்கரவண்;டிக்கு 400 முதல் 500 ரூபா வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது இது குறித்து த.தே.கூட்டமைப்பு எம்பிக்கள் சிலர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில்ராஜபக்ஷ எம்.பியை சந்தித்து விளங்கியள்ளமை குறிப்பிடத்தக்கது. ... Read More
பொலிஸ் சேவைக்கு வட மாகாணத்திலிருந்து 500பேரை இணைத்துக் கொள்ள நடவடிக்கை
பொலிஸ் சேவைக்கு வட மாகாணத்திலிருந்து 500 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து 500பேரை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று நடைபெற்றுள்ளன. நாளையும் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுமென யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச். மாரப்பன தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்த நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றுள்ளன. இந்த நேர்முகப் பரீட்சைக்கு இப்பிரதேசங்களிலிருந்து இதுவரை மொத்தமாக 6,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். ... Read More
உப்புக்குளம் பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல், ஒருவர் காயம்!
மன்னார் உப்புக்குளம் பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக மன்னார் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக இரு குழுக்களிடையே காணப்பட்ட முறுகல் நிலையையடுத்தே இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இது ... Read More
