மீளக்குடியமருவோருக்கு நிதியுதவியுடன் வீடமைக்க கல்வனைஸ்ட் சீற் வழங்கப்படும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நடவடிக்கை காரணமாக வவுனியா நிவாரணக்கிராமங்களில் இருந்தும் அதனைவிட ஏற்கனவே இடம்பெயர்ந்த நிலையிலும் இருந்து மீளக்குடியேறுவோருக்கு நிதியுதவியும் வீடமைக்க உள்ளீடுகளும் வழங்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் வீடமைக்க 25 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்படும் அதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சி காரணமாக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்வனைஸ்ட் கூரைத்தகடுகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. மேற்படி கூரைத்தகடுகள் திட்டமிட்டபடி அமைக்கப்படும் வீடொன்றிற்கு ... Read More
வவுனியாவிலிருந்து இவ்வாரம் மேலும் 2 ஆயிரத்து ஐநூறு குடும்பங்கள் யாழில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர் நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட 2 ஆயிரத்து ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 685 பேர் இவ்வாரம் மீளக்குடியமர்த்தப் படவுள்ளனர். வவுனியா நலன்புரி கிராமங்களில் யாழ். மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட 15 ஆயிரத்து 167 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் யாழ். செயலகம் ஊடாக வதிவிடம் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ... Read More
கிழக்கில் இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு மற்றுமொரு பொதுமன்னிப்பு காலம்!!
கிழக்கில் இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு மற்றுமொரு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக்குழுக்களுக்கு விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பிலான புலனாய்வு விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மாஅதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்துள்ளார். கிழக்கில் இயங்கிவரும் ... Read More
வட பகுதியில் கமநலத்துறை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு கிளிநொச்சியில் ஆராய்ச்சி நிலையத்தை இந்தியா அமைக்கவுள்ளது
வட பகுதியில் கமநலத்துறை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஆராய்ச்சி நிலையம் ஒன்றை கிளிநொச்சியில் அடுத்தமாத நடுப்பகுதியில் இந்தியா அமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயிர்ச்செய்கையில் புதிய இனங்களை அறிமுகம் செய்யவசதியாக ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள 105 மில்லியன் டொலரை இந்தியா வழங்குவதாக அறிவித்திருந்தது. வன்னி மண்ணின் தன்மையை ஆய்வுசெய்து, ஆதற்கேற்ப பயிர்இனங்களை அறிமுகம் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளவென நிபுணர்குழு ஒன்று அடுத்தமாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது. கிளிநொச்சியில் ஆய்வுக்கூட்டம் ஒன்றை அமைத்து ... Read More
தமிழர் என்றும் சிங்களவர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இனவாத அரசியல் என்பது இனிமேல் உகந்தது அல்ல -ஜனாதிபதி
இலங்கையில் தமிழர் என்றும் சிங்களவர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இனவாத அரசியல் என்பது இனிமேல் உகந்தது அல்ல என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் அக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பட்டில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், இந்நாட்டில் சிறுபான்மை மக்கள் என்று ஒருவரும் கிடையாது என்றும், மக்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ... Read More
அரசுமீது யுத்தக்குற்ற வழக்குத் தொடர வேண்டும் என சொல்ஹெய்ம் கூறியிருப்பது, அவரது சமாதான அனுசரணைப் பணியின் பக்கச்சார்புத் தன்மையை பிரதிபலிக்கிறது -வெளிவிவகார அமைச்சு
சனல்4" வீடியோக் காட்சியை வைத்துக் கொண்டு இலங்கை அரசுமீது யுத்தக்குற்ற வழக்குத் தொடரவேண்டும் என்று நோர்வேயமைச்சர் சொல்ஹெய்ம் கூறியிருப்பது, அவர் முன்னர் ஆற்றிய சமாதான அனுசரணைப்பணியில் அவரது பக்கச்சார்புத் தன்மையை பிரதிபலிப்பதாக வெளிவிவகார அமைச்சு நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் நட்புறவுகொண்ட நோர்வே நாட்டின் அமைச்சர் ஒருவர் அடிப்படையில்லாத ஒரு விடயம் தொடர்பாக, அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டமையையிட்டு ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் என்றும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் ... Read More
வட மாகாணசபையின் தலைமையகம் மாங்குளத்தில் சுமார் 900மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணம்
வட மாகாணசபையின் தலைமையகம் மாங்குளத்தில் சுமார் 900மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக்கில் முழுவதும் மற்றும் பகுதியளவில் சேதங்களுக்குள்ளான கட்டிடங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக சுமார் 625மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதியளித்ததைப்போல அரசாங்கத்தின் செலவீனங்களை 15ஆயிரம் கோடி ரூபாவால் குறைப்பது எவ்வாறென மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ... Read More
அதிக மனிதக் கொலைகளைச் செய்தவர்களே மனித உரிமைகள் பற்றி கதைப்பதாக நுகர்வோர் விவகார அமைச்சர்
அதிக மனிதக் கொலைகளைச் செய்தவர்களே மனித உரிமைகள் பற்றி கதைப்பதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பேராதனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்;துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான விகாரமான அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்து கொண்டிருக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை எதிர்வரும் தென் மாகாணசபைத் தேர்தல்களில் வரலாற்று அட்டவணையில் மக்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ... Read More
ஹபரணை கியந்தானைப் பிரதேசத்தில் பஸ் குடை சாய்ந்து எட்டுப்பேர் காயம்
மாத்தளை மாவட்டம் தம்புள்ளை ஹபரணை கியந்தானைப் பிரதேசத்தில் பஸ் ஒன்று குடை சாய்ந்ததினால் எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றுமாலையில் இடம்பெற்றதாக சிகிரிய பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியானது பாதையை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளமையே இந்த விபத்துக்குக் காரணமென்று சிகிரிய பொலீசார் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த கொழும்புப் பகுதியைச் சேர்ந்த சிலரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது ... Read More
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க கூடாது -பாதுகாப்புச் செயலாளர்
நாட்டில் முறியடிக்கப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்க கூடாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் ரீ623 ஐ சயு ரல என பெயரிடப்பட்ட ரோந்துக்கப்பல் ஒன்றை நேற்று உத்தியோகபூர்வமாக கடற்படையினரிடம் கோத்தபாய ராஜபக்ஷ கையளித்தார் திருகோணமலை கடற்படைத்தளத்தில் இடம்பெற்ற இதுதொடர்பான நிகழ்வில் கடற்படை அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்புச்செயலாளர் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார் பயிற்றப்பட்ட விடுதலைப்புலிகள் நாட்டினுள் ஊடுருவுதல் மற்றும் ஆயுதக்கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பணிகளை கடற்படையினர் முனைப்புடன் ... Read More
மறு அறிவித்தல்வரை மின்சாரசபையின் சகல ஊழியர்களின் லீவு நாட்களும் ரத்து!!
மறு அறிவித்தல்வரை மின்சாரசபையின் சகல ஊழியர்களின் லீவு நாட்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளது. நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம்சபை தலைவர் கே.ரணவீர அறிவித்திருந்தார். நாட்டினது அத்தியாவசிய சேவையாகக் கருதப்படும் மின்சார விநியோக சேவையை தொடர்ச்சியாகவும் மற்றும் முறையாகவும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக மின்சாரசபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது என்றும் மின்சாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். எவ்வித தடையுமின்றி சகல ... Read More
கே.பி.யை விசாரிப்பதற்கும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் கோரி இந்திய மத்திய புலனாய்வுத்துறை அடுத்தமாதம் கொழும்புக்கு வரும்..!
இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென அறிவிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசை கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுவிப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது 1991ம் ஆண்டு வருட ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய சதித்திட்டம் குறித்து அவரை விசாரிப்பதற்காக இந்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதமளவில் கொழும்புக்கு விஜயம் செய்ய இருக்கிறது. மத்திய புலனாய்வு விசாரணை பணியகத்தின் ... Read More
தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து வெற்றிகொண்டதைப் போன்று கடற்பரப்பை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்குரியது -பாதுகாப்பு செயலாளர்
தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து வெற்றிகொண்டதைப் போன்று இலங்கையின் கடற்பரப்பை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்குரியது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படையினர் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்களாக திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடல்வழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை செயலிழக்கச் செய்து கடல்பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு முகாம்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படை நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் கடற்படையின் சகல ... Read More
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் வெற்றிகளைச் சித்திரிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் வெற்றிகளைச் சித்திரிக்கும் வகையில் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க அரச தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆரியரட்ண ஆதுகல ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கு முன்னோடியாக 2ம் இராஜசிங்க மன்னனை ஒத்த கதாபாத்திரத்தில் மஹிந்த ராஜபக்ஷவைச் சித்திரித்து இறுவட்டு தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புத்தி கீர்த்தி சோ இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்திரைப்படத்திற்கு 90 கோடிரூபா செலவிடப்படும் என்றும் மேலும் தெரியவந்துள்ளது. ... Read More
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தை!
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து தூதுவர்களுடன் பேச்சு நடத்திவரும் அதேநேரம் வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்தின் கரங்களுக்கு கிட்டும்படி செய்ய அந்நாடுகளின் அரசாங்கங்கள் உதவ முன்வர வேண்டுமெனக் கோரி ... Read More
பாதுகாப்பமைச்சின் அனுமதி கிடைத்ததும் ஏ9ஊடான தபால்சேவை ஆரம்பிக்கும்..!
பாதுகாப்பமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் ஏ9 பாதையின் ஊடான தபால்சேவை ஆரம்பிக்கப்படுமென தபால் மாஅதிபர் எம்.கே.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடபகுதியில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் தபால்சேவையை விஸ்தரிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கப்பல்மூலமும் விமானம் மூலமுமே தற்போது வடபகுதிக்கான தபால்சேவை நடைபெறுகின்ற நிலையில் ஏ9 வீதியின் ஊடாக தபால் சேவையினை நடத்த முடிந்தால் அது இன்னும் வெற்றிகரமாக அமையுமென அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வவுனியாவரை தொடருந்தில் கொண்டு செல்லப்படும் தபால்பொதிகள் ... Read More
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியா கூரைத்தகடுகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியது!
வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்திய அரசாங்கம் கூரைத்தகடுகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் பொருட்களையும் வழங்கியுள்ளதாக பீ.ரி.ஐ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு தலா பன்னிரண்டு கூரைத் தகடுகளும், விவசாயப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுக்கான 11ஆயிரம் ரூபாய் மானியத்துடன் மீன்பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பீ.ரி.ஐ செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது. மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான ஆரம்ப வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் பொருட்டே இந்தியா இந்த பொருட்களை வழங்கியுள்ளதாக ... Read More
அரசியல் வேண்டாம் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா
தான் எந்த சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் நான் ஒரு இராணு வீரன் அரசியல்வாதி அல்ல நான் இராணுவக்கடமையிலிருந்து ஓய்வுபெற்ற பிற்பாடு ஒரு சாதாரண இலங்கை பிரஜையாக வாழ விரும்புகிறேன் இராணுவத்தில் இருந்த காரணத்தால் வாழ்க்கையில் இழந்த சந்தோஷமான காலங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில் நான் ... Read More
துறைமுக அதிகாரசபைக்கு 6.5மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் “வணங்காமண்” நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் மீண்டும் தாமதம்!
கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக்கிடக்கும் கொலராடோ கப்பலில் எடுத்து வரப்பட்ட வணங்காமண் நிவாரணப் பொருட்களை அங்கிருந்து வெளியகற்றுவதற்காக சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், துறைமுக அதிகாரசபைக்கு 6.5மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் சுரேன்பீரிஸ் தெரிவித்துள்ளார். இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், இன்றைய தினத்திற்குள் ... Read More
ஒக்டோபர் 10ஆம் திகதி தென் மாகாண சபைத் தேர்தல்- தேர்தல் செயலகம் இன்று அறிவிப்பு!!
தென் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால எல்லை இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் தினமும் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இத்தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி, ஐ.தே.கட்சி, ம.வி.முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான கட்சிகள் தென் ... Read More
