இடைத்தங்கல் முகாம்களில் உள்ளோர் விடையங்களில் இடைத்தரகர்களை நாடவேண்டாம்: வவுனியா பிரதேச செயலாளர்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களை வெளியே எடுப்பது அவர்களுக்கான அடையாள அட்டைகளைப் பெறுவது கிராம சேவகர்களிடம் பதிவு செய்வதுடன் அவர்களுக்கான கடவுச் சீட்டைப் பெறுவது பொன்ற நடவடிக்கைகளில் இடம் பெயர்ந்தவர்களோ அவர்களின் உறவினர்களோ தரகர்களின் உதவியை நாடவேண்டாமென வவுனியா பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். இத்தகைய தேவைகளுக்காக பொதுமக்கள் தரகர்களின் உதவியை நாடிவருவது தொடர்பாக வவுனியா பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதேச செயலாளர் இடம் பெயர்ந்துள்ள ... Read More
மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த இரவு தபால் ரயில் வவுனியாவரை நீடிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வவுனியா மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இரவு தபால் ரயில் வவுனியா ரயில் நிலையம் வரை நீடிக்குமாறு போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க நேற்று தொடக்கம் வவுனியாவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரவுத்தபால் ரயில் சேவை மதவாச்சிவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பல் வேறு பொது அமைப்புகளும் கல்விச் சமூகத்தினரும் ... Read More
நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு விமானக் கட்டணம் குறைப்பு
நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப்படையினரின் விமானசேவைக் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விமானப் படையினரின் விமானத்தில் பயணிக்கும் பொதுமக்களிடமிருந்து, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 17 ஆயிரம் ரூபா கட்டணம் அறிவிடப்படவிருப்பதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அத்துடன், தினமும் 5 தடவைகள் விமானப்படையினரின் விமானசேவை நடத்தப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான விமானப் படையினரின் ... Read More
கிழக்கு மாகாணத்தில் தனிநபர்கள் ஆயுதம் வைத்திருக்கத் தடை:எடிசன் குணத்திலக்க
"மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதலாம் திகதி முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்." என கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ரி.எம்.வி.பி. ஆகிய அமைப்புக்களின் ... Read More
மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடனுதவி வழங்கியது -ஜனாதிபதி
மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடனுதவி வழங்கியதெனவும் எந்தவொரு நிபந்தனைக்கும் அரசாங்கம் அடிபணியவில்லையெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடகாலத்தில் 35,ஆயிரம் புதிய ஆசிரிய நியமனங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நாட்டில் வருமானவரி செலுத்துவோரின் வீதம் வெகுவாகக் குறைந்து காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, 04இலட்சம் பேர் மட்டுமே வருமானவரியைச் செலுத்தியுள்ளதாக வருமானவரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ... Read More
நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு யாழ். குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் 1மணித்தியாலத்தால் குறைவு
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு படையினர் யாழ். குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை 1மணித்தியாலத்தால் குறைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இரவு 11.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை இதுவரை அமுலில் இருந்த ஊரடங்குச்சட்டம் புதிய நடைமுறைக்கமைய நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்குமென்று தெரிவித்த பிரிகேடியர், கோவில் உற்சவம் முடியும்வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்றும் ... Read More
கோண்டாவில் பிரதேசத்தில் இளம் தம்பதியர் படுகொலை
யாழ்பாணம் கோண்டாவில் பிரதேசத்தில் செவ்வாயன்று இனந் தெரியாதோரால் இளம் தம்பதியர் படுகொலை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது கோண்டாவில் கிழக்கு ஞான வைரவர் ஆலய வீதியில் 36 வயதான வீரசிங்கம் சுரேஸ்குமார் அவரது மனைவி சுபதீபா (வயது 25) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து நான்கு மாதங்களே ஆகின்றன என்பது விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது இவர்களின் வீட்டைக் கொள்ளையிட வந்த இனந்தெரியாத நபர்களே ... Read More
மடுத் திருவிழாவுக்கு செல்லவிருப்போருக்கு அனுமதி வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
மன்னார், மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6ஆம் முதல் 15ஆம் திகதிவரை மடுமாதாத் தேவாலயத்திற்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட விருப்பதுடன்,, இதற்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்;த நிலையில், மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரியிருக்கும் பொலிஸார், இதற்கான விண்ணப்பப்படிவங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் ... Read More
ஏ-9 வீதியூடாக பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: உதய நாணயக்கார
ஏ-9 வீதியூடாக பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமென இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஏ-9 வீதியூடான பயணத்தின்போது, அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் நடைமுறைப் படுத்தப்படுமெனவும் அவர் கூறினார். ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துசேவையானது, திட்டமிட்டபடி பேரூந்துசேவை மூலமே மேற்கொள்ளப் படுமெனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். பொதுமக்களின் நன்மை ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் ... Read More
போராட்ட அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
இலங்கையில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பி, தமிழர்களின் இழந்த வாழ்க்கையை மீட்பதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அரைநூற்றாண்டுக்கு மேலாகத் தொடர்ந்த ஈழத் தமிழர்களின் போராட்ட வழிமுறைகள் நிலைமாறும் கட்டத்துக்குள் பிரவேசித்திருக்கும் நிலையில், கடந்த காலப் போராட்ட அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு புதிய அரசியல் வழிமுறையை மேற்கொள்ள வேண்டிய தேவை தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்டிருப்பதாக மாணவர் ஒன்றியம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. ... Read More
நல்லூர் திருவிழா: யாழ்ப்பாணத்தில் உயர்மட்டக் கலந்துரையாடல்
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த திருவிழா தொடர்பிலான வசதி மேம்பாடுகள், பக்தர்களுக்கான வசதிகள், அப்பகுதியின் இயல்புநிலை, பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று செவ்வாயன்று இடம்பெற்றது. நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இக்கலந்துரை யாடலில் நல்லை ஆதீன குரு முதல்வர், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலதிக அரச அதிபர், மாநகர சபை ஆளு நர், பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் ... Read More
ஜனாதிபதி மஹிந்த -பஹ்ரேய்ன் பிரதமர் சந்திப்பு: இருதரப்பு பேச்சு: மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து; மீள் குடியேற்றத்திற்கு உதவுவதாக பஹ்ரேய்ன் உறுதி
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பஹ்ரேய்ன் பிரதமர் கலீபா பின் ஷல்மான் அலி கலீபா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன் மூன்று முக்கிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன. வடக்கில் இடம்பெயர்ந்தோரின் புனர் வாழவு மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான ... Read More
யாழ், வவுனியா தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு 90 வீதம் பூர்த்தி
யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகரசபை தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 90% நிறைவடைந்துள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் தெரிவித்தனர். யாழ். மாநகர சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென 335 பேர் தகுதிபெற்றிருந்தனர். இதில் நேற்று முன்தினம் மாலை வரை 299 பேர் வாக்களித்து ள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் வீ. குகநாதன் தினகரனுக்குத் தெரிவித்தார். நேற்றைய தினமும் வாக்குகள் எதிர்பார்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். வவுனியா ... Read More
முகாம்களில் பொதுமக்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படவில்லை -சட்டமா அதிபர்!
முகாம்களில் பொதுமக்கள் தடுத்து வைக்கப்படவில்லை என சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார் இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்கள் சுதந்திரமாக இடம்நகர்தல் தடுக்கப்பட்டுள்ளதாக மாற்றுக் கொள்கைக்களுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250000 பேரில் 8000விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார் முகாமில் உள்ள மக்களை ... Read More
ஆகஸ்ட் 18ல் கிழக்கு மாகாணசபை அமைச்சர் மீதான வழக்கு
கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சரும் அவரது உதவியாளர்கள் இருவரும் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர். மாகாணசபையின் விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா மற்றும் இருவரும் நீதிமன்றில் சரணடைந்து பிணைகோரிய போது தலா 1000 ரூபா பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 13ம் திகதி மருதமுனை கல்முனை வீதியில் முஸ்லிம் பொதுமகன் ஒருவரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கல்முனை நீதிபதி அப்துல்லாவினால் இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி ... Read More
தென்மாகாணசபை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலைக்கப்படும் -அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
தென்மாகாணசபை ஆகஸ்ட் முதல்வாரத்தில் கலைக்கப்படும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் ஊவா மற்றும் வடக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலும் வவுனியா நகரசபைக்கான தேர்தலும் சுமூகமான முறையில் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் அரசு வெற்றி பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அரசாங்கத்திற்கு போதியளவு மக்கள் ஆதரவு இருக்கிறது அதேவேளை ... Read More
பிரபாகரனின் 347 கடிதக் கோப்புகள் அடங்கிய இரகசியப் பெட்டி கண்டுபிடிப்பு
புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த அனைத்துப் பிரதேசங்களையும் அரச படையினர் மீட்ட பின்னர் இயக்கத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முல்லைத்தீவு பிரதேசத்தில் அரச படையினர் மேற்கொண்ட இறுதித் தாக்குதல் நடவடிக்கைகளின் கடைசிக் கட்டமாக பிரபாகரனும் ஏனைய தலைவர்களும் பதுங்கியிருந்த நந்திக் காப்பு பகுதியில் அரச படையின் விசேட படையணியினர் மேற்கொண்ட தீவிர தாக்குதலில் அவர்கள் அனைவருமே ... Read More
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வன்னி மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
எங்களிடமிருந்த வன்முறை அரசியலாலும் விட்டுக் கொடுப்பின்மையாலும் முரண்பாடுகளாலும் எமது மக்கள் அனுபவிக்கமுடியாதளவு துயரங்களை அனுபவித்துள்ளதுடன் நிவாரணக்கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுமுள்ளனர் என்றும் எமது மக்களை கவனிக்காது அவர்களைப் பார்வையிடாது மீட்பதற்கு எந்த சிறு நடவடிக்ககையும் எடுக்காது வாக்குகளைக் கேட்க வருகின்ற கட்சிகள் மீது தமக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னிமக்களின் உடனடிப் பிரச்சினைகளில் ... Read More
நலன்புரி நிலையங்களில் உள்ள முதியவர்கள் விடுவிக்கப்பட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
நலன்புரி நிலையங்களில் உள்ள முதியவர்கள் விடுவிக்கப்படவும் பிரிந்தவர்கள் இணைத்து வைக்கப்படவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார் யாழ் குடாநாட்டிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட 215 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து இந்த முதியவர்கள் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். இன்று முதல் மேற்படி முதியவர்கள் விடுவிக்கப்படவுள்ளதால் ஏற்கனவே ... Read More
நல்லூர் கந்தசுவாமி ஆலையத்தின் கொடியேற்றத் திருவிழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்
நல்லை ஆதினத்திற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா ஆதீன குரு முதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார சுவாமிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன் நல்லூக் கந்தசுவாமி ஆலையத்தின் கொடியேற்றத் திருவிழா நடைபெற்ற சமயம் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார். கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு என்றும் இல்லாதவாறு பக்கதர்கள் கூட்டம் ஆலையத்தில் கூடியிருந்ததை காணமுடிந்தது. அமைச்சர் டக்ளஸ் ... Read More

.gif)













