தமது தேவைகள் கோரிக்கைகளுடன் வட்டுக்கோட்டை அந்திரான் கிராம மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்தனர்
தமது தேவைகள் கோரிக்கைகளுடன் வட்டுக்கோட்டை அந்திரான் கிராம மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்தனர். வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணி அந்திரான் கிராம மக்கள் தமது தேவைகள் கோரிக்கைகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார்கள். இன்று நண்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பிற்கு அந்திரான் கிராம மக்கள் அதன் தலைவர் வெ.தேவராசா தலைமையில் வருகைதந்து அமைச்சருடன் சந்திப்பினை ... Read More
யாழ். கலட்டியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு மற்றும் மரம்நாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு.
யாழ். சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி சமுதாயத்தினரும் ஈபிடிபியினரும் இணைந்து யாழ். மாநகரசபை எல்லைக்குள் பத்தாயிரம் நிழல் தரும் மரங்களை நாட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிகழ்வின் அங்குராப்பண வைபவம் யாழ். கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று மாலை ஆரம்பமானது. நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து கலட்டி மெதடிஸ்த மிஷன் ... Read More
ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
பொப் இசை உலகின் மன்னன் மைக்கல் ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.மைக்கல் ஜாக்சனின் உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின் போது அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன. கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக ‘விக்’ பயன்படுத்தி வந்துள்ளார். அவரது இடுப்பு, தொடை மற்றும் தோள் பகுதிகளில் ஊசி ... Read More
மொனராகலை, மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக மின்சாரம் வழங்கல்
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக மொனராகலை, கல்கமுவ தேர்தல் தொகுதியில் உள்ள மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக இன்று (30) மின்சார வசதி அளிக்கப்பட உள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 24 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் 300 வீடுகளுக்கு இவ்வாறு மின்சார வசதி அளிக்கப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இதன்படி மடுல்ல கிராமத்தில் உள்ள 300 வீடுகளுக்கும் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சூரிய சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி ... Read More
கனகரட்ணம் எம்.பியை பிரதமநீதிவான் பார்வையிட்டார்
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தை நேற்று கொழும்பு, பிரதம நீதிவான் நிஸாந்தஹப்பு ஆராய்ச்சி சென்று பார்வையிட்டார். கனகரட்ணம் எம்.பியைத் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யக் கோரும் குற்றத்தடுப்புப் பிரிவின் விண்ணப்பத்துக்கு நீதிவான் அனுமதியளித்தார் வன்னி மக்களுடன் இடம்பெயர்ந்து வவுனியா முகாமில் தங்கியிருந்த வேளை, கனகரட்ணம் எம்.பி. விசாரணைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து ... Read More
த.ம.வி.பு. கட்சி சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்துகொள்வோரின் விபரம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் புதிய பிரதிநிதிகளின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரான யூடி தேவதாசன் ,மற்றும் அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான மொகமட் மிஹிலார் மொகமட் ஹன்தஷிர் (ஆசாத் மௌலானா) ஆகியோர் சர்வ கட்சி மகாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர். ஏற்கனவே சர்வ கட்சி குழுவில் மட்டக்களப்பு ... Read More
135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு
சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல ... Read More
முகாம்களில் இருந்த ஆதரவற்ற சிறுவர்கள் வவுனியா
இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள ஆதரவற்ற சிறுவர்கள் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் 129 சிறுமிகள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் சிறுவர் நன்நடத்தைப் பிரிவினரின் பொறுப்பில் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சிறுவர் இல்லத்தில் ஏற்கனவே 100 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் என தனித்தனியான இடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் ... Read More
பொலிஸ், இராணுவத்தில் இணைவதற்கு எமது உறுப்பினர்கள் ஆர்வம் காட்டவில்லை- முதலமைச்சர் சந்திரகாந்தன்!
தமது அமைப்பு ஆயுதப் பிரிவை கலைத்துள்ள போதிலும் அமைப்பில் இருந்தவர்கள் அரசாங்கப் படைகளிலோ, பொலிசிலோ சேர்ந்து கொள்வதற்கு ஆர்வம்காட்டவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த சிலர் இலங்கை இராணுவத்தில் சேசந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கேட்ட போது,10 இற்கும் குறைவானவர்களே தான் அறிந்தவரை இராணுவத்தில் சேர்ந்துள்ளதாக பதிலளித்த அவர் தொடர்ந்து ... Read More
யாழில் இருந்து தென்னிலங்கைக்கு 25 லொறிகளில் பொருட்கள் விநியோகம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை
யாழ் உணவுற்பத்தியாளர்களுக்கு திறந்த சந்தை வாய்ப்பை தென்னிலங்கையில் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஒரு லட்சத்து 87 500 கிலோக்கிறாம் பொருட்கள் நேற்று யாழில் இருந்து கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து தனியார் வர்த்தகர்களினால் வடபகுதிக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற லொறிகள் தென்னிலங்கை;கு தேவையான ஒரு லட்சத்து 87 500 கிலோகிராம் பொருட்களுடன் கொழும்புக்கு திரும்பியுள்ளன. யாழில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களுக்கான ஆரம்ப முயற்சியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இப்பொருட்கள் 25 ... Read More
ஏ 9 வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிடும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி குழுவினர் வவுனியா விஐயம்.
ஏ 9 வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் கியாயின் கிவோவ் தலமையிலான குழுவினர் வியாழனன்று வவுனியாவுக்கு விஐயம் செய்துள்ளனர். இதன் முதற்கட்டமாக வவுனியாவிலிருந்து நொச்சிமோட்டை வரையான வீதியைப் புனரமைப்பதற்கு 700 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரிற்கு வடக்கேயுள்ள ஏ 9 வீதியை இக்குழுவினர் பார்வையிட்டதுடன் தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வவுனியா நகர்ப் பகுதியின் ... Read More
கிளிநொச்சி முல்லைத்தீவுப் பிராந்தியங்களிலும் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு ஏற்பாடு
இந்த வருடம் நடைபெறும் உயர் தரப் பரீட்சைக்கு கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்ட மாணவர்களுக்காக அங்கு பரீட்சை நிலையங்களை திறப்பதற்கு பரீட்சை தினைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக இந்த வருடம் கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களிலும் பரீட்சை நிலையங்களை அமைக்கவுள்ளதாக பரீட்சைத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு இந்த ஆண்டு நாடு ... Read More
7 வது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியன்
ஏழாவது ஆசிய பெண்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவாகியுள்ளது. இலங்கை பெண்கள் வலைப்பந்தாட்ட அணிக்கும் நடப்புச் சம்பியனான சிங்கப்பூர் அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற மேற்படி போட்டியில் இலங்கை அணி 77-48 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது. ஆசிய வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 9 நாடுகள் பங்கேற்றன. இலங்கை அணி தான் பங்கேற்ற 6 ... Read More
காசாவில் ஐ.நா மனித உரிமைக் குழு விசாரணை
கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பு காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலின் போது சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் குழு பொது விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், நிபுணர்களை விசாரிக்க விசாரணையாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதன் பின்னர் ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தில் இஸ்ரேல் சாட்சிகள் கருத்து கூறுவார்கள். ஐ.நா ... Read More
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை வரும் டிசம்பர் மாதம் நடத்த அரசு தீர்மானம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் பொதுத் தேர்தலை நடாத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னர் வரும் ஒக்ரோபர் மாதம் தென் மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதியே உத்தியோகபூர்வமாக நிறைவடைகின்றது. 2011ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப் பிரமாணத்தை மேற் கொள்வார் என ... Read More
விடுதலைப் புலி சந்தேகநபர்கள், ஆதரவாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்
தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான சட்ட ஒழுங்குகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய தாழ்ந்த மட்டத்திலான புலி உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்தத் தண்டனை விலக்கு ஏற்பாடுகள் பிரயோகிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனெனில், விடுதலைப் புலிகளின் பெரும்பாலான உயர்மட்ட உறுப்பினர்கள் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர் இலங்கையின் குற்றவியல் நீதிமன்றத்தில் ... Read More
டெங்கு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இராணுவத்தினர் சிரமதானம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டதை முன்னிட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு நகர இராணுவத்தினர் ஈடுபட்டனர். சுமார் அறுபதுக்கு மேற்ப்பட்ட இரானுவத்தினர் ஈடுபட்ட சிரமதான வேலைத்திட்டத்திக்கு மட்டக்களப்பு நகர இராணுவ முகாமுக்கு பொறுப்பான அதிகாரி மேஜர் கமல் அவர்கள் தலமை தாங்கியதோடு மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் முருகானந்தம் மற்றும் மட்டக்களப்பு சிறீலங்கா சுதந்திரகட்சியின் சார்பில் அமைச்சர் முரளிதரன் அவர்களின் ... Read More
தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: யாழ் பல்கலைக்கழகம்
தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கவனத்திற்கொண்டு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையவேண்டுமென யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. பேதங்கள் மற்றும் வேறுபாடுகளைக் களைந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அனைவரும் ஒன்றிணந்து செயற்படுமாறும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டது. தமிழ் மக்களுக்கான ஜனநாயக வழியில் நேர்மையாகக் குரல் கொடுத்து அந்த மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணையவேண்டுமென்பதுடன், தமிழ் மக்களுக்கான ஒன்றியத்தை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டுமெனவும் யாழ் பல்கலைக்கழக ... Read More
யாழ் கடற்றொழிலாளர் சங்கங்கள் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு
குடாநாட்டின் தெற்கு மேற்கு கரையோரப்பகுதி கடற்தொழிலாளர் தாம் மேற்கொள்ளும் கடற்றொழிலில் நிலவும் இடர்களுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறியுள்ளனர். கடல் பாதுகாப்பு வலய தடை காரணமாக கடற்றொழிலில்; ஈடுபட முடியாது தவிக்கும் குடாநாட்டின் மேற்கு கரையோரப்பகுதி கடற்தொழிலாளர்களின் பிரச்சினை இன்று முக்கியமாக ஆராயப்பட்டது. குருநகர் பாசையூர் கொட்டடி நாவாந்துறை கொழும்புத்துறை ஆகிய இடங்களில் இருந்து சுமார் ... Read More
அரசியலமைப்புக்கு உட்பட்டதாக சகல செயற்பாடுகளும் அமையும் – ஜனாதிபதி
அரசிய லமைப்புக்கமையவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையும் அத்துடன் எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசியலமைப்பில் மாற்றம் செய்யப் போவதாகப் பலரும் அஞ்சுகின்றனர். அவ்வாறு எதுவும் இடம்பெறாது. அரசியலமைப்புக் குட்பட்டதாகவே சகல செயற்பாடுகளும் அமையுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. இனி பாதாள உலகத்தை ஒழிக்க வேண்டியுள்ளது. அத்துடன் போதையற்ற இலங்கையை உருவாக்கும் நடவடிக்கை தொடருமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். தெற்கில் வலஸ்முல்ல பிரதேச செயலாளர் ... Read More















