பிரபாகரனின் பெற்றோர் உறவினர்களுடன் சேரத் தடை!!
பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தெரிவித்த ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் உதய நாணயக்கார, அவர்களுடைய பாதுகாப்பு கருதியே இப்படி தனியாக பிரித்து வைக்கப்படுகின்றனர் என்று கொழும்பில் சனிக்கிழமை தெரிவித்தார். ஆனால் அதை அவர் மேற்கொண்டு ... Read More
ஈழம் என்ற எண்ணமே நீக்கப்பட வேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி
இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் தாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே எண்ண வேண்டும், ஈழம் என்ற சொல்லும் கருத்தும் அவர்களிடமிருந்து மறைய வேண்டும்; அரசு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) வலியுறுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் தயசிறி ஜெயசேகர தெரிவித்த கருத்துகள் வருமாறு: ”ராணுவரீதியாக விடுதலைப் புலிகளை வென்று விட்டோம், ... Read More
பிரித்தானிய தமிழ்ப் பெண் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்துவைப்பு
பிரித்தானிய மருத்துவ பெண்மனி ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. தமிழ்வாணி என்றழைக்கப்படும் மருத்துவப் பெண்மணியான, இவர் கிளிநொச்சிப் பகுதியில் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்தவர் என்றும், இவர் ஒரு பிரித்தானிய குடியுரிமையுள்ள பிரஜை எனவும் அவர் பெற்றோர் கூறியுள்ளனர். மேற்படி இலங்கை இராணுவம் இவரை தொடர்ந்தும் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைத்திருப்பதாக பிரித்தானியாவில் இருந்துவெளிவரும் பிரபல நாளேடான கார்டியனுக்கு அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வாணி என்றழைக்கப்படும் இந்தப் ... Read More
எங்களால் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளை வென்றார்கள் -பாகிஸ்தான் இராணுவம் தெரிவிப்பு
நாங்கள் உதவியதால் தான் இலங்கை இராணுவத்தினால் விடுதலைப் புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி வந்தது சமீபத்தில் போரில் விடுதலைப்புலிகளை முற்றுலுமாக அழித்துவிட்டதாக இலங்கை இராணுவத்தினர் அறிவித்தனர் விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை தீவிர தாக்குதலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நாடுகள் ஆயுதமற்றும் ஆட்கள் உதவி செய்து வந்ததாக பேசப்பட்டது. மேலும் 2008ம் ... Read More
வடக்கு தேர்தலில் ஜ.ம.சு. கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தமிழ்கட்சிகள் மறுப்பு!
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறுவிடுத்த கோரிக்கையை அரசுக்கு அதரவு வழங்கும் ஈ.பி.டி.பி. உட்பட ஏனைய மூன்று தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன.ஈ.பி.டி.பி., புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய நான்கு கட்சிகளையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அரசாங்கத்தின் கோரிக்கையை அக்கட்சிகள் நிராகரித்துள்ளன.யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான ... Read More
தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்! வைகாசி மாதத்தில் உயிர் நீத்த தோழர்கள் நினைவு கூரப்பட்டனர்.
உங்கள் நினைவுகள் மறப்பதற்கல்ல!! இலட்சியக் கனவுகளாய் சுமப்பதற்கே!!! சித்திரை மாதத்தில் உயிர் நீத்த தோழர்கள் நினைவு கூரப்பட்டனர். வாழ்வின் கனவுகள் யாவும் தனிமனித நலன்களுக்காகவல்ல. அவைகள் அனைத்து மக்களின் நலன்களுக்காகவேயாகும். இவ்வாறு எண்ணித் துணிந்து தமது இன்னுயிர்களை மக்களுக்காக அர்ப்பணம் செய்த சூரியக் குஞ்சுகளின் அக்கினி நினைவுகளை அடையாளப்படுத்தும் தினங்களில் ஒன்று இன்றைய தினம்..! தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப் போராட்ட வரலாற்றில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய ... Read More
கொழும்பு மத்தியில் புதிய போக்குவரத்து வலயம்.
கோட்டை புகையிரத நிலையம் புறக்கோட்டை மக்கள் மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் பஸ்டியன் வீதி தனியார் பேருந்து நிலையம் ஆகிய பிரதேசங்களை புதிய போக்குவரத்து வலயமக பிரகடனப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.இதன் படி இதுவரை புகையிரத திணைக்களத்திற்கு உரித்தான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பஸ்டியன் வீதி பேருந்து தரிப்பிடத்தின் நிர்வாகம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கான போக்குவரத்து சேவைகள் இந்த பேருந்து தரிப்பிடத்தில் இருந்தே ... Read More
நலன்புரி நிலையங்களில் தொற்றுநோய் பரவலைத் தடுக்க நடவடிக்கை.
நலன்புரி நிலையங்களில் தொற்று நோய் பரவுவதனை தடுக்கக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அம்மைநோய் மற்றும் வாந்திபேதி உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் குறித்து விழிப்புடன் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மெனிக்பாம் உள்ளிட்ட ஏனைய இடம்பெர்ந்தோர் நலன்புரி நிலையங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் வவுனியாவில் உள்ள சகல நிவாரண கிராமங்கள் இடைத்தங்கல் நிலையங்களை உள்ளடக்கிய வகையில் 19 மருத்துவ ... Read More
அமைச்சர் அமரசிறி தொடங்கொட மறைவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அனுதாபம்
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொட அவர்களது இழப்பு தென்பகுதி அரசியல் தலைமைத்துவத்திற்கு பாரியதொரு இழப்பாகும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அமைச்சர் அமரசிறி தொடங்கொட அவர்கள் இயற்கை எய்தியதையிட்டு அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அமைச்சர் அமரசிறி தொடங்கொட அவர்கள் மக்களோடு இணைந்து அம்மக்களின் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு தனது அரசியல் ... Read More
நலன்புரி நிலையங்களிலுள்ள முதியவர்களின் பெயர்களைப் பார்வைக்கு வைக்க நடவடிக்கை
வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் பெயர் விபரங்களைப் பார்வைக்கு வைக்கத் தீர்மானித்திருப்பதான வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அவ்வாறு பெயர் விபரங்களைப் பார்வைக்கு வைத்தால் முகாம்களுக்கு வெளியிலிருக்கும் உறவினர்கள் முதியவர்களை அழைத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்குமென அவர் கூறினார். நலன்புரி நிலையங்களிலிருக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களை வெளியேற அனுமதிக்க மாவட்ட செயலகமும், மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சும் தீர்மானித்தன. ... Read More
இடைத்தங்கல் முகாமில் பொன்தியாகம் : மக்கள் தர்ம அடி.
புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராகவும் புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய பங்காற்றி வந்தவருமான பொன் தியாகம் என்பவர் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மக்களோடு மக்களாக அரசகட்டுப்பாட்டுப் பகுதியினுள் வந்துள்ள அவர் தன்னை உருமறைத்துக் கொள்வதற்காக தாடி, மீசை, தலைமுடி என்பவற்றை வளர்த்துக்கொண்டு மக்களினுள் மறைந்திருந்துள்ளார்.அவரை இனம் கண்டு கொண்ட மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். புலிகளியக்கத்தில் இருந்து மரணிப்பவர்களின் உடலங்களை பெற்றோர் உறவினர்கள் உரிமைகோரிச் செல்லும்போது ... Read More
வடபகுதிக்கான யாழ்தேவி புகையிரத சேவை தாண்டிக்குளம் வரை நீடிப்பு!
வடபகுதிக்கான யாழ்தேவி புகையிரதசேவை வவுனியாவுக்கு அப்பால் உள்ள தாண்டிக்குளம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தவாரம் 6ம்திகதி முதல் இந்த புகையிரத சேவை இடம்பெறும் என்றும், இதற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.தாண்டிக்குளம் வரையிலான புகையிரத பாதையின் மீள்கட்டுமான பணிகள் ப+ர்த்தியாவிட்டன. தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தின் வேலைகள் அனைத்தும் இன்னும் ஒர் இரு நாட்களில் நிவர்த்தியாகிவிடும் என்று தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமா அடுத்ததாக மேற்படி புகையிரத சேவையை ... Read More
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் ஆட்சேபமனு தள்ளுபடி.
கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து ஐக்கிய தேசியக்கட்சி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேன்று நிராகரித்துள்ளது. தேர்தலின் போது மோசடிகள் இடம்பெற்றதாக தெரிவித்து மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் உள்ளிட்ட பலர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்தநிலையில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தரப்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தேர்தல் விதிகளுக்கு அமைவாக குறித்த ... Read More
அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர்கள் மீதான அசிட் வீச்சு விசாரணை தொடர்கின்றது.
அவுஸ்திரேலியாவில் வைத்து இரண்டு இலங்கை மாணவர்கள் மீது அசிட் வீச்சினை மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ளது.சிட்னியின் அலக்ஸான்றா அவன்யுவில் வைத்து கடந்த 17ம் திகதி நள்ளிரவில் 5 பேர் கொண்ட குழு ஒன்று இரண்டு இலங்கை மாணவர்கள் மீது அசிட் வீச்சினை மேற்கொண்டது. இதன் பின்னர் குறித்து மாணவர்கள் இருவரினதும் நிலமை மிகவும் மோசமாக காணப்பட்டதாக அவுஸ்திரேலிய ... Read More
கேட்டவை கிடைக்காததுடன் இருந்தவற்றையும் இழந்து நிற்கின்றது எமது இனம் – ஈபிடிபி வடமராட்சி அமைப்பாளர்
எமது இனத்தின் அரசியல் உரிமைக்கான போராட்டமும் போரும் தொடங்க எவையெல்லாம் காரணங்களாக இருந்தனவோ அந்தக் காரணங்கள் அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆனால் கேட்டவை கிடைக்காததுடன் இருந்தவற்றையும் இழந்து நிற்கின்றது எமது இனம் என ஈபிடிபி வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்தார்.உடுப்பிட்டி வர்த்தக சங்க புதிய நிர்வாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் ஆண்கள் ... Read More
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ‘இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்’ உதவித்திட்டத்தின் கீழ் பொருட்கள் கையளிப்பு
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது 'இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்' உதவித் திட்டத்திற்கமைய கொழும்பு வர்த்தகப் பெருமக்கள் பொது அமைப்புக்கள் மத மற்றும் சமூக அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களது பங்களிப்புக்களுடன் வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியத்தின் மூலமும் மகேஸ்வரி நிதியத்தின் மூலமும் சேகரிக்கப்பட்ட சுமார் 5 கோடி ரூபா மதிப்புள்ள பொருட்களை கையளிக்கும் நிகழ்வு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா செட்டிக்குளம் இராமநாதன் ... Read More
புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு
புலிகள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவிகளை வழங்கிய புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த சகல தகவல்களும் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவில் புலிகளின் மறைவிடம் ஒன்றில் இருந்து, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இலங்கைக்கான பொறுப்பாளர் கஸ்ரோ என்றழைக்கப்படும் வீரகத்தி மணிவண்ணன் உள்ளிட்ட 18 நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களின் பெயர் விபரங்களை அடங்கிய பட்டியல் ஒன்றை தாம் மீட்டுள்ளதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது. கனடா, சுவிஸர்லாந்து, ஜெர்மனி, ஒல்லாந்து, ... Read More
வவுனியா நிவாரணக்கிராமத்தில் தமிழினி கைது.
புலிகளின் மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி வவுனியா நலன்புரி நிவாரணக்கிராமத்தில் வைத்து நேற்று முன்தினம் மாலை விஷேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலிகள் இயக்கத்தில் பெண் பிள்ளைகள் மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் என்போர் இணைக்கப்படுவதற்கும் ஆயுதபயிற்சிக்காக கடத்தப்படுவதற்கும் பிரதான காரணமாக விளங்கிய சுப்பிரமணியம் சிவத்தாய் எனப்படும் தமிழினி கைது செய்யப்படும் போது அவரது தாயாரான கௌரி விஜயராஜா மற்றும் சகோதரியான சுப்ரமணியம் மகேஸ்வரி ஆகியோரும் கூடவே இருந்துள்ளனர். ... Read More
நேரத்தோடு செய்யாது போனால் காலம் அதன் காரத்தை உறிஞ்சிவிடும் – ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர்.
பெறவேண்டியதையோ கொடுக்க வேண்டியதையோ அல்லது செய்ய வேண்டியதையோ நேரத்தோடு செய்யாது போனால் காலம் அதன் காரத்தை உறிஞ்சிவிடும். எனவே நாம் வன்னியில் துயரப்பட்டு வந்துள்ள மக்களுக்கு செய்ய வேண்டியதை நேரத்தோடு செய்ய வேண்டும் என ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க தலைமையலுவலகத்தில் நெறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் தலைவர் நடராசா கணேசலிங்கம் தலைமையில் கடந்த சனிக்கிழமையன்று ... Read More
டி என் ஏ சோதனையில் பிரபாகரனின் சடலம் ஊர்ஜிதம்
பிரபாகரனும் அவரது மகன் சார்ள்ஸ் அந்தனியும் உயிரிழந்தமை டி என் ஏ பரிசோதனை மூலம் உறுதியாயிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பிரபாகரனினதும் அவருடைய மகனினது சடலங்களிலிருந்து பெறப்பட்ட உடற்பாகங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்டு வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட டி என் ஏ மரபணு சோதனையில் இருவரது டி என் ஏயும் ஒத்துக் காணப்படுவதையடுத்து இவ்விருவரும் உயிரிழந்துள்ளமை விஞ்ஞான ரீதியிலும் மீள ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ... Read More



















