கொழும்பில் பிரிட்டன் தூதரகத்துக்கு முன்பாக ஜாதிக ஹெல உறுமய ஆர்பாட்டம்
பிரிட்டன் மற்றம் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாதிக ஹெலஉறுமய நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது கொழும்பிலுள்ள பிரிட்டனுக்கான இலங்கை தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் கலந்துக்கொண்டனர் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு எந்த நாட்டுக்கும் அனுமதியில்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டன் பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளை காப்பாற்றுவதற்காகவே இலங்கை வந்துள்ளனர் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர் இவர்கள் ... Read More
வடக்கில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றும் திட்டத்தின் முதற்கட்டம் முசலியில் ஆரம்பம்
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் முசலி பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முசலி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 600ற்கும் மேற்பட்ட மக்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வடமாகாணத்தின் முதலாவது மீள்குடியேற்றமாக இது கருதப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக, சிலாவத்துறை, கூழாங்குளம், வேப்பங்குளம் ஆகிய பகுதி மக்கள் நாளை அப்பகுதியில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். முதற்கட்ட மக்கள் நாளையும், அதே பிரதேச செயலர் பிரிவில் எதிர்வரும் 11ம் ... Read More
இடம்பெயர்ந்த ஒருவரை உயிருடன் வைத்திருப்பதற்கு ஒரு நாளைக்கு 1.30 டொலர் தேவை- ஹரித்தாஸ்
இலங்கையின் வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு ஒரு நாள் உணவு வழங்குவதற்கு 250,000 அமெரிக்க டொலர் நிதியுதவி தேவைப்படுவதாக ஹரித்தாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. “இடம்பெயர்ந்தவர்களை உயிருடன் வாழவைப்பதற்கு ஒரு நாளைக்கு 1.30 அமெரிக்க டொலர் தேவையென ஹரித்தாஸ் கணக்கிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகாம்களில் 32,000 ஆகவிருந்த இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 190,000 ஆக அதிகரித்திருப்பதால் முகாம்களில் கடுமையான இடப்பற்றாக்குறை காணப்படுகிறது” என ஹரித்தாஸ்-அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜக் ... Read More
நிவாரணக் கிராமங்களில் சொந்தங்களை இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
வவுனியா நலன்புரி நிலையங்கள், இடைத்தங்கல் முகாம்கள், நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் ஆங்காங்கே சிதறி இருக்கும் குடும்ப உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் இரண்டாவது பகுதியில் நேற்றுக் காலை அமைச்சர் ரிஷாத் விசேட கூட்டமொன்றை நடத்தினார். புலிகளின் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்த மக்களுள் அரச உத்தியோகத்தர்கள், ... Read More
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் வருகையைக் கண்டித்து ஹெலஉறுமய ஆர்ப்பாட்டம்
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் வருகையைக் கண்டித்து ஜாதிக ஹெஉறுமய இன்று பிரிட்டன் து}தரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது. இவர்களின் வருகைக்கு ஜாதிக ஹெலஉறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பன எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. யுத்தத்தில் தோல்வி கண்டுள்ள புலிகளைக் காப்பாற்றும் நோக்குடனேயே வெளிநாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருவதாக ஹெலஉறுமயவின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ... Read More
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும்- இந்திய உள்துறையமைச்சர்
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டுமென இந்திய உள்துறையமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் அறிவித்த கனரக ஆயுதப்பாவனை இடைநிறுத்தத்தினை தாம் வரவேற்பதாகவும், இது இந்தப் பிரச்சினைக்கான முதற்கட்ட தீர்வாக அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பின்னர் யோசிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றுக்கு முன்னர் பிரபாகரன் சரணடைய வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.. இந்நிலையில் ... Read More
கோட்டைமுனை சிறுவர் பாடசாலையில் பயிலும் சிறுமி கடத்தல், பெற்றோர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கோட்டைமுனைப் பிரதேச பாடசாலையில் பயிலும் 08வயது சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து அந்தப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியின் கடத்தலுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர் கோரியுள்ளனர். சதீஸ்குமார் வினுஷிகா என்கிற குறித்த சிறுமி மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள சிறுவர் பாடசாலையில் வைத்து நேற்று நண்பகல் கடத்தப்பட்டுள்ளார். எனினும் ... Read More
முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சி கப்பல் மூலம் மேலும் 527 பேர் வருகை
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு 527பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நோயாளர்கள் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உதவியாளர்கள் என 357பேர் அழைத்துவரப்பட்டுள்ளதாக புல்மோட்டைதள வைத்தியசாலை தகவல்கள் தெரிpவிக்கின்றன அதேவேளை இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று புல்மோட்டைப்பு விஜயம் செய்தார் இந்திய மருத்துவர் குழுவைக் கொண்ட வைத்தியசாலைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் அவர் நேரில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ... Read More
நியுஸிலாந்து பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணை தடுப்பு
நியுஸிலாந்தில் கொண்டு வந்த இலங்கை விவகாரம் தொடர்பான பிரேரணை ஒன்றை அந்நாட்டின் மோரிக் கட்சி உறுப்பினர் ஒருவர் தடுத்துள்ளார் குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது நியுஸிலாந்து பாராளுமன்றில் கொண்டு வரப்படும் இவ்வாறான பிரேரணைகளை தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தடுக்க முடியும் என்றார். ... Read More
பிரபாகரனைக் காப்பாற்றுவது சர்வதேசத்தின் நோக்கமல்ல மக்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறார் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட்
பிரபாகரனை காப்பாற்றுவது சர்வதேச சமூகத்தின் நோக்கமில்லை. அங்கு சிக்கியுள்ள பொதுமக்கள் மீது அக்கறை கொண்டே செயற்படுவதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடனான சந்திப்பைத் தொடர்ந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். இங்கு கருத்துத்தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: 25 வருடமாக தொடரும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் காலம் ... Read More
ஐ.நா மனித உரிமை பிரதிநிதி ஜனாதிபதி சந்திப்பு
நேற்றுமாலை அலரிமாளிகையில் ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஜோன் ஹோம்ஸ்சுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதன்போது இவ்விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக ஜோன் ஹோம்ஸ் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார் ... Read More
இடம்பெயர்ந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கென சுயாதீனமாக அந்தப் பகுதிகளில் சேவையில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
வடக்கில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கென சுயாதீனமாக அந்தப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் 232உறுப்பினர்கள் அந்தப் பகுதிகளில் சேவையாற்றத் தீர்மாhனித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், செட்டிகுளம் மற்றும் பதவிய ஆகிய வைத்தியசாலைகள் தற்போது இடம்பெயர்ந்த நோயாளர்களால் நிரம்பியுள்ளதால் நோயாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவது கடினமாக உள்ளதாக அரசாங்க வைத்திய ... Read More
இணைத்தலைமை நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சக்திகளுக்கு எதிராக போராடும் நடவடிக்கை எடுக்கப்படும் -எல்லாவல மேதானந்த தேரர்
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யம் இணைத்தலைமை நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படும் சர்வதேச நாடுகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்ற இணைத்தலைமை நாடுகளின் கோரிக்கை கண்டிக்கதக்கதென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற ... Read More
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள மாவட்டக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள சிறுவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள மாவட்டக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்பொருட்டு இடைத்தங்கல் முகாம்களை அண்டிய பகுதிகளில் தற்காலிக வகுப்பறைத் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமை கைதடி, மிருசுவில் மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் தற்காலிக பாடசாலைகளை அமைக்கும் பணிகள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி மற்றும் தென்மராட்சி ஆகிய ... Read More
ஐ.நா.சிறுவர் நிதியத்தினால் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பிவைப்பு
வடக்கில் இடம்பெயர்ந்திருக்கும் பொதுமக்களுக்கென 50 மெற்றிக்தொன் அத்தியாவசியப் பொருள்களை ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் அனுப்பிவைத்துள்ளது. இந்த அத்தியாவசியப் பொருள்கள் விரைவில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுமென ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் கொழும்புக் காரியாலயம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த அமைப்பின் அத்தியாவசியப் பெர்ருள்களை ஏற்றிய மற்றுமொரு விமானம் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்புக்குச் செல்லவிருப்பதாகவும் அந்தக் காரியாலயம் குறிப்பிட்டது. இது தவிர, சிறுவர் நிதியத்தினால் கடந்த வாரத்தில் ... Read More
வடக்கில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு இலங்கைக்கான நிவாரண உதவிகளை அதிகரிக்குமாறு ஐ.நாவிடம் வேண்டுகோள்
வடக்கில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு இலங்கைக்கான நிவாரண உதவிகளை அதிகரிக்குமாறு ஐ.நாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ள அரசாங்கம் வன்னியில் ஏற்பட்ட பொதுமக்கள் இழப்பு குறித்த ஐ.நாவின் புள்ளி விபரங்களென வெளியான தகவல்கள் தொடர்பாக விசாரணையொன்றையும் கோரியுள்ளது. இலங்கை வந்திருக்கும் ஐ.நா உதவிச் செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான பிரதிநிதிகளை சந்தித்து பேசியபோதே இவ்விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. அமைச்சர் சமரசிங்கவுடன் இடர்முகாமைத்துவ மனித உரிமைகள் ... Read More
பயங்கரவாதிகளை மீட்டெடுக்க எந்த சக்திக்கும் உரிமையில்லை என்பதையே மேல் மாகாணசபைத் தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது -ஜனாதிபதி
இறுதிக் கட்டத்தில் இருக்கும் பயங்கரவாதிகளை அதிலிருந்து மீட்டெடுக்க எந்த சக்திக்கும் உரிமை கிடையாதென்பதையே மேல் மாகாணசபைத் தேர்தல் மூலம் மக்கள் எடுத்துக் காட்டியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் மேல் மாகாணசபைத் தேர்தல் வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனையொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படைத்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபைத் தேர்தல் வெற்றி குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More
வர்த்தகர்களுக்கு தொலைபேசியில் கப்பப்பணம் கேட்டு மிரட்டல்
மன்னார் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்களிடம் தொலைபேசிமூலம் பல லட்சம் ரூபா கப்பமாக கேட்டுவருவதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல இலட்சம் ரூபா கப்பம் கேட்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் தெரிவிக்கையில் நான் மன்னார் பஸார் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்திவருகிறேன் முதலில் எனது கடைக்கு தொலைபேசிமூலம் அழைப்பு ஒன்று வந்தது அதில் குறிப்பிட்ட கப்பக்காரர்கள் வவுனியாவிலிருந்து கதைப்பதாகவும் தங்களுக்கு 10லட்சம் ரூபா கப்பமாக செலுத்தவேண்டும் எனவும் ... Read More
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணத்தை அதிகரிக்க உலக தரிசனம் தீர்மானம்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை அதிகரிக்க உலக தரிசனம் அமைப்பு தீர்மானித்துள்ளது. தற்காலிக முகாம்களுக்கு பதிதாக சென்ற பொதுமக்களுக்கு ஐயாயிரம் பொதி சமைத்த உணவுகளை உலக தரிசனம் அமைப்பு வழங்கி வருகிறது. தற்போது வவுனியாவின் தற்காலிக முகாம்களுக்கு வருகின்ற இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவர்களுக்காக இரண்டு பாரஊர்திகளில் உணவல்லாத அத்தியாவசியப் பொருட்கள் உலக தரிசனம் அமைப்பினால் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ... Read More
தமிழகத்திற்கு பொதுமக்கள் செல்ல ஆரம்பித்துள்ளனர்
இலங்கையின் மோதல்ப் பகுதியிலிருக்கும் பொதுமக்கள் தமிழகத்திற்கு செல்ல ஆரம்பித்திருப்பதாக ரைம்ஸ் ஒவ் இன்டியா தெரிவித்துள்ளது. தினமும் சராசரியாக 3 அல்லது 4 பொதுமக்கள் படகுகள் மூலம் தமிழகத்திற்கு செல்வதாகக் கூறிய ரைம்ஸ் ஒவ் இன்டியா, இவர்கள் முகாம்களுக்கு அழைத்துச்செல்ல முன்னர், அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறதென தமிழகப் பொலிஸார் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டது. 45 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களும், 14 வயதிற்கு குறைவான சிறுவர்களுமே தமிழகத்திற்கு வநதிருப்பதாகவும் ரைம்ஸ் ஒவ் ... Read More
