யாழ்தேவி ரயில் சேவையை தாண்டிக்குளம் வரை நீடிக்க நடவடிக்கை
மதவாச்சிக்கம் கொழும்புக்குமிடையில் இடம்பெற்றுவரும் யாழ்தேவி ரயில் சேவையை வவுனியாவுக்கு வடக்கே சுமார் 3கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தாண்டிக்குளம் வரையில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட விருப்பதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதையைச் சீர்செய்வதிலும் தாண்டிக்குளம் ரயில் நிலைத்தைப் புனர்நிர்மாணம் செய்வதிலும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியா வரை நடைபெற்று வந்த யாழ்தேவி ரயில்சேவை மார்ச்மாத முதற்பகுதியில் இருந்து ... Read More
ஊடகவியலாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது
ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவது மற்றும் அதற்காக அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது போன்ற ஊடகவியலாளர்களின் உரிமைகள் சில அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சட்டத்தரணியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மனோரி முதேதுவேகம தெரிவித்தார். ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகத்துக்கு எதிரான வழங்கு விசாரணைகள் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கும்போதே முதேதுவேகம இவ்வாறு கூறினார். எழுத்தாளர் ஒருவர் பொதுமக்களுக்கு வெளியிடும் கருத்தானது எந்தவித மோதல்களையோ அல்லது இனங்களுக்கிடையிலான முரண்பாட்டையோ ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே பொதுவான ... Read More
இராணுவ கட்டப்பாட்டுப் பகுதிக்கு 925பேர் வருகை
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நேற்றமுன்தினம் 925பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததாக படையினர் தெரிவிக்கின்றனர். இவர்களில் 507பேர் படகொன்றின் மூலம் புல்மோட்டைப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் மேலும் 160 பொதுமக்கள் மற்றுமொரு படகின் மூலம் முனைப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் 258பேர் புதுகுடியிருப்பு பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களை பாதுகாப்பன முறையில் நலன்புரி முகாம்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் படையினர் மேலும் தெரிவித்தனர். ... Read More
கொழும்பு ஹற்றன் பிரதான வீதியில் நேற்று மூன்று இடங்களில் பொலீசாரின் விசேட சோதனை நடவடிக்கைகள்
கொழும்பு ஹற்றன் பிரதான வீதியில் நேற்று மூன்று இடங்களில் பொலீசாரின் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹற்றன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, தலவாக்கலை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களிலிருந்து பயணித்தவர்களே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பு ஹற்றன் பிரதான பாதையில் செனன், தியகல மற்றும் கித்துல்கல ஆகிய மூன்று இடங்களிலேயே பொலீசார் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அவ்வீதியின் ஊடாக வாகனங்களில் பயணித்தோர் மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் இறக்கப்பட்டு ஆள் அடையாள ... Read More
போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசு நிபந்தனை
சண்டை நடக்கும் பகுதியிலிருந்து பொது மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் ஒப்பு கொண்டால் தாற்காலிக போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதை இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதி எச்.எம்.ஜி. பாலிகக்காரா நியூயார்க்கில் தெரிவித்துள்ளார். தங்கள் பகுதியில் உள்ள பொது மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதித்தால் குறிப்பிட்ட காலத்துக்கு சண்டையை நிறுத்தவும் இலங்கை அரசு தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். சண்டை நடக்கும் பகுதியிலிருந்து ... Read More
வவுனியா முகாம்களிலிருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் வெளியேற்றப்பட வேண்டும்: குமரகுருபரன்
வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க உத்தியோகத்தர்களை முகாம்களில் தடுத்து வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் கூறினார். இந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் 3 மாத சம்பளமின்றி இருப்பதாக அவர்களின் உறவினர்கள் கூறியதாகத் தெரிவித்திருந்த குமரகுருபரன், இந்த நிலையில், இவர்கள் பணியாற்ற கடமை நிலையமொன்று வழங்கப்பட வேண்டும் அல்லது, ... Read More
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பூநகர்ப் பகுதியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றதாக ஈச்சிலம்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 23 வயதுடைய செல்லையா பிரபாகரன் என்பவரே உயிரிழந்திருப்பதாகக் கூறிய பொலிஸார், குறித்த இளைஞர் உணவு விடுதியொன்றின் அருகிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ... Read More
மாத்தறை வழிப்பறி கொள்ளையர் கைது
பெண்களின் தங்கச்சங்கிலிகளைப் பறிக்கும் வழிப்பறிக் கொள்ளைக்காரர் ஒருவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாத்தளை நகரம் உட்பட இன்னும் பல இடங்களில் பெண்களின் நகை தங்கச்சங்கிலிகள் போன்றவற்றை கொள்ளையிட்டு வரும் இச்சந்தேக நபர் பற்றிக் கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர். திருடிய நகைகளை வங்கியில் இவர் அடகு வைத்துள்ளதாகவும் மேற்குறித்த நபர் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ... Read More
முல்லைக் கடற்பரப்பில் கடுஞ்சமர் 24புலிகள் பலி
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே கடும் சமர் இடம்பெற்றுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த கடற்சமரில் 24விடுதலைப்புலிகள் உயிரிழந்ததாகவும் கடற்படை வீரர் பலியாகியுள்ளதாகவும் கடற்படைப்பேச்சாளர் டி.கே.பி தஸாநாயக்க தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்திச்சேவை தெரிவிக்கின்றது அத்துடன் கடற்படையினரின் இச்சமரின்போது விடுதலைப்புலிகளின் 4படகுகளை தாக்கியழித்துள்ளதாகவும் ஒரு கடற்படைவீரர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். ... Read More
இலங்கை-இந்தோனேசியா புலனாய்வுத் தகவல்கள் பரிமாற்றம்
விடுதலைப் புலிகளுக்கு இந்தோனேசியாவிலிருந்து கூடுதலான ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், பாதுகாப்புத் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைத் தம்முடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென இலங்கை இந்தோனேசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. “இந்தோனேசியாவிடமிருந்து பாதுகாப்பு விடயத்தில் குறிப்பாக புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளோம்” எனத் தற்பொழுது இலங்கை வந்திருக்கும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.ஹசன் விராயுடுவிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் புனாய்வுத் தகவல்களைப் ... Read More
Wanni Operation -ITN (VIDEO)
Wanni Operation -ITN (VIDEO) ... Read More
புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும்: ஜனாதிபதி
விடுதலைப் புலிகள் ஆயதங்களைக் கைவிட்டால் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிடவேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருப்பதாகவும், பாதுகாப்பு வலயங்களில் பணயக்கைதிகளாக புலிகளால் வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி விடுத்திருப்பதாகவும் அவருடைய செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்புகள், காயங்கள், தமிழ் பொதுமக்கள் சிக்கியுள்ளமை தொடர்பாக, புலிகளின் பொறுப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் ... Read More
ரத்மல்யாய இடம்பெயர்ந்தோர் கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து அங்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு
புத்தளம் மாவட்டம் ரத்மல்யாய இடம்பெயர்ந்தோர் கிராமத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து அங்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்ளுர் பொலீசாருக்கும் இடம்பெயர்ந்தோர் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களுக்குமிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியையடுத்தே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், ஆட்டோ ஒன்றும் சேதமாக்கப் பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாதிருக்க பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ... Read More
அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் மனிதாபிமான நடவடிக்கைகளை உச்சக்கட்டத்தில் பேணி வருகின்றன -ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் மனிதாபிமான நடவடிக்கைகளை உச்சக்கட்டத்தில் பேணி வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 35வது வருடாந்த மாநாட்டில் செய்மதி ஊடாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ... Read More
கொழும்பில் கப்பம் கேட்டுகொலை அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது
கொழும்பில் வர்த்தகர் ஒருவரிடம் 50லட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த தமிழர் ஒருவரிடம் 50லட்சம் ரூபா கப்பம்கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த தமிழர் இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர் இதுபற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள வர்த்தகர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டி 50லட்சம் ரூபாவை கப்பமாக தமது வங்கி கணக்கில் வைப்பிலிடவேண்டுமெனன்றும் இல்லையெனில் அவரை குடும்பத்துடன் கொல்லப்போவதாக இருவர் மிரட்டியுள்ளனர். தனக்கு விடுவிக்கப்பட்ட கொலை ... Read More
வாரிக்குட்டியூரில் புலி உறுப்பினர் ஒருவர் குண்டினை வெடிக்க வைத்து தற்கொலை
வவுனியா பூவசரன்குளம் வாரிக்குட்டியூரில் புலி உறுப்பினர் ஒருவர் குண்டினை வெடிக்கவைத்து தற்கொலை செய்துள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். வாரிக்குட்டியூரில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரைக் கண்ட இளைஞர் ஒருவர் தப்பியோட முயன்றுள்ளார். இந்நிலையில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து குறித்த இளைஞர் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை இராணுவத்தினர் நெருங்கியபோது குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் ... Read More
ஜூன் மாதம் முதல் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான ரயில் பஸ்சேவை
திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி பஸ்சேவை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண சபையின் கடந்தகால வேலைத்திட்டங்கள் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ... Read More
மூதூர் பிரதேசத்தில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள நங்கநகரில் நேற்றிரவு குடும்பஸ்தரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். செல்லத்துரை நல்லதம்பி வயது52 என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவரது வீட்டிற்கு முன்பாக நின்றிருந்தவேளை அங்கு வந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகள் இவர்மீது துப்பாப்பிக்கிரயோகம் நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More
மனிதாபிமான மோதல் இடைநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா கோரிக்கை
வன்னியில் தொடரும் இருதரப்பு மோதல்களுக்கு மத்தியில் சிவிலியன்கள் சிக்குண்டிருப்பதால் மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஐ.நா மற்றம் பிரிட்டன் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளதுடன் இடையில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலைகுறித்து புலிகளையும் குற்றம் சாட்டியுள்ளனர். இதேவேளை மோதல் இடம்பெறும் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களை புலிகள் வெளியேற அனுமதிக்காமை மிகுந்;த கவலையளிக்கிறது என்றும் குறித்த பிரதேசங்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நாவின் மனிதாபிமான ... Read More
தமிழகத்தில் கைதான இலங்கை மீனவர்கள் 24பேர் விடுவிப்பு
இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்த ஒரு தொகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை மீனவர்கள் 24பேர் கடந்த ஜனவரி மாதம் 30ம்திகதியளவில் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்;டனர். இவர்களிடம் சென்னை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இந்திய மத்திய அரசாங்கத்தின் பணிப்புரையின் கீழ் இவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர் இவர்களை இந்திய கடலோரப்படையினர் ... Read More

