புதுமாத்தளனுக்கு மீண்டும் கப்பல் செல்கிறது
திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி நோயாளர்கள்
திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி நோயாளர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து
ஆறாவது தொகுதி நோயாளர்களை மருத்துவ சிகிச்சைக்கென திருகோணமலைக்கு அழைத்து வருவதற்காக கிறீன் ஓசன் கப்பல் இன்று மீண்டும் புதுமாத்தளன் பகுதிக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளது. இந்தக் கப்பல் நாளைக்காலை புதுமாத்தளன் பகுதியை சென்றடையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே வேளை கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இதுவரை நோயாளர்கள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ... Read More
wanni meheuma -full video-
wanni meheuma -full video- ... Read More
வன்னியில் நாள் ஒன்றுக்கு பல பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் ஜோன் ஹோம்ஸ் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கை
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்துறை பிரதிச்செயலாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று தமது விஜயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச்சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் இதன்போது அவர் இலங்கையில் தாம் கவனித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அதுவும் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார் இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்த பின்னர் பொதுமக்கள் ... Read More
புலிகளின் இறுதிக் கட்டம்.. பொட்டம்மானும் களத்தில்!
புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் போர்க் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்புப் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்த புலித் தலைமைத்துவத்தினால் முடியாமல் போயுள்ள நிலையில் பொட்டம்மான் முதல் தடவையாக களத்தில் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக படையினர் நம்புகின்றனர். இவர் கடந்த புதன்கிழமை முதல் களத்தில் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதென படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த 19 வருடங்களாக நடைபெற்று வரும் யுத்த நடவடிக்கைகளில் எந்த ஒரு களமுனைக்கும் ... Read More
ஊரணியில் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு ஊரணி பிரதேசத்தில் வைத்து ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன மட்டக்களப்பு பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார் இவற்றில் 7கிலோகிராம் எடையுடைய குண்டொன்றும் இரண்டு கைகுண்டுகளும் 250 கிராம் எடையுடைய இரண்டு கண்ணிவெடிகளும் உள்ளிட்ட பல உபகரணங்களும் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ... Read More
பயங்கரவாதிகளுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் போராடி வருகிறது -அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர்
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிக விக்ரமசூரிய தெரிவித்துள்ளார் இதனை தேசிய இனப்பிரச்சனை சார்பான ஓர் யுத்தமாக கருதப்படுத்த முடியாதென சுட்டிக் காட்டிய அவர் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இலங்கை அரசாங்கம் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க செனட் சபையில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு சமாந்தரமாக இலங்கைத் தூதுவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார் ... Read More
மனிதாபிமான உதவிகளை வழங்க தயார் -பிரான்ஸ் தெரிவிப்பு
வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரங்கள் குறித்து பிரான்ஸ் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயார் எனவும் பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பேர்னாட் கோச்சுனர் தெரிவித்துள்ளார் யுத்த நிலவரம் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவிடம் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்திய பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் பொதுமக்கள் சிக்குண்டு இருப்பதாகவும் உடனடியாக பொதுமக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட ... Read More
வன்னிமக்கள் பாதுகாப்பை காரணம் காட்டி யுத்தம் முடக்கப்படக் கூடாது -தேசிய சுதந்திர முன்னணி
வன்னியில் உள்ள பொதுமக்களது பாதுகாப்பை காரணம் காட்டி யுத்தநடவடிக்கைகள் முடக்கப்படக்கூடாது என ஆளும் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது பொதுமக்களுக்கு இழப்புகள் நேரிடும் என்ற காரணத்திற்காக விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் பொதுமக்களுடன் ஊடுருவலினால் அதன் மூலம் படையினருக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது யுத்த வெற்றிகளை அடைய வேண்டுமாயின் சில தியாகங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும் ... Read More
உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் பிரபாகரன் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் -கெஹெலிய
உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது சகாக்களும் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இராணுவப் படையினர் வடக்கில் வெற்றிகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தோல்வியிலிருந்து புலிகள் மீள்வதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதங்களை கீழே வைத்து விட்டு பாதுகாப்பு படையினரிடம் சரணடைவதன் மூலம் தம்மையும் தமது சகாக்களையும் பிரபாகரனால் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் ... Read More
சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாடு இன்று ஆரம்பம்..
சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் 31வது மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகிறது சார்க் வலயத்தில் அங்கம் வகிக்கம் இலங்கை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர். சார்வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்றமுன்தினம் இலங்கை வந்தடைந்துள்ளனர். அத்துடன் பூட்டானின் வெளிவிவகார அமைச்சர் நேற்றுமுன்தினம் இலங்கை வந்தடைந்துள்ளனர். அத்துடன் பூட்டானின் ... Read More
புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய சிறுவர்கள் உட்பட பொதுக்கள் இராணுவத்தால் காப்பாற்றப்பட்ட காட்சி..(வீடியோவில்) -Full VIDEO-
புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டு ஆட்டிலெறி போன்ற கனரக ஆயுதங்களால் புலிகளையே தாக்கும் இராணுவத்தினர்.. புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவு ஆயுதங்களும்.. புலிகளின் பிரதேசத்திலிருந்து தப்பி வரும்போது புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய சிறுவர்கள் உட்பட பொதுக்கள் இராணுவத்தால் காப்பாற்றப்பட்ட காட்சி..(வீடியோவில்) ... Read More
திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவந்தவர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு இடமாற்றம்
வன்னிப்பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 152பேர் நேற்று இரவு 8.15மணியளவில் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ... Read More
மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்ய புலிகள் முயற்சி -வெளிவிவகார அமைச்சின் செயலாளர்
மோசமான அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்களை சர்வவேத சந்தையில் கொள்வனவு செய்ய விடுதலைப்புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன தெரிவித்துள்ளார் தெர்மொபெரிக் எனப்படும் மிகமோசமான ஆயுதம் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை கொள்வனவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெர்மோபெரிக் ஆயுதங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் குறித்த பிரதேசத்தில் பாரிய தீப்பிழம்பு ஏற்படுமெனவும் சுற்றுபுறத்தில் காணப்படும் ஒட்சிசனின் அளவு ... Read More
யுத்தத்தை நிறுத்துமாறு கோர அமெரிக்காவிற்கு தகுதியில்லை -ஓமல்பே சோபித தேரர்
பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்தத்தை நிறுத்துமாறு கோர அமெரிக்காவிற்கு எவ்வித தகுதியுமில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா கோருவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டள்ளார். ஈராக்கிலும் ஆப்பானிஸ்தானிலும் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்களை அமெரிக்க இராணுவம் கொன்று குவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார் அப்பாவித் தமிழ் மக்களை விடுதலைப் ... Read More
காரைநகர் வாகன விபத்தில் மாணவி மரணம்
காரைநகர் கடற்கரை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பஸ் மோதிக் கொண்டதில் 8வயது பாடசாலை மாணவி பதிதாபகர மரணமடைந்துள்ளார். நேற்றுக்காலை 7.45மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் சிவநேசன் தியானி என்ற சிறுமியே விபத்து நடந்த இடத்தில் கொல்லப்பட்டதுடன் தந்தையார் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். முரண விசாரணையை நீதிபதி திருமதி ஜோர்ஜ் மகாதேவா மேற்கொண்டதை தொடர்ந்து பஸ்சாரதியை ஊர்காவல்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ... Read More
ஊர்காவற்துறை கரம்பன் மேற்கைச்சேர்ந்த நான்குவயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து மரணம்
ஊர்காவற்துறை கரம்பன் மேற்கைச்சேர்ந்த நான்குவயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து பரிதாபகர மரணம் அடைந்துள்ளார். நகுலேஸ்வரன் சாகித்தியா என்ற சிறுமியே விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தவறுதலாக கிணற்றடிக்கு சென்று தவறி விழுந்து மரணமடைந்தவராவார். பிள்ளையைக் காணாத பெற்றோர்கள் பிள்ளையை தேடியதைத் தொடர்ந்து பிள்ளை இறந்த நிலையில் கிணற்றில் கிடப்பதை கண்டு மீட்டுள்ளனர். இதுதொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ... Read More
போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் மன்னார் பொலிஸாரால் கைது
மன்னார் பள்ளிமுனை பகுதியில் நீண்டநாட்களாக ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 02பெண்கள் உட்பட மூவரை மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புபிரிவினர் கடந்த திங்கட்கிழமை மாலை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களை மன்னார் பொலிஸார் நேற்றுமுன்தினம் மன்னார் மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி எ.யுட்கன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன்போது விசாரணைகள் இடம்பெற்றது. இந்த நிலையில் மேற்படி மூன்று போதைப்பொருள் வியாபாரிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால் மூவருக்கும் ... Read More
சம்பந்தனுக்கு எதிராக உரிய நடவடிக்கை: ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் கம்மன்பில
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக உரியநேரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இதன்போது, இரா.சம்பந்தனின் குடியுரிமை பறிபோகுமென்பதுடன், சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படலாமெனவும் அவர் கூறினார். எனினும், இரா.சம்பந்தன் மீதான இந்த சட்ட நடவடிக்கைக்கு தாம் அவசரப்படவில்லையெனக் கூறிய உதய ... Read More
இலங்கை வருகிறது இந்திய மருத்துவக்குழு
வன்னியிலிருந்து, அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லும் காயமடைந்த பொதுமக்களுக்கு சிகிச்சை யளிப்பதற்கென இந்திய மருத்துவக் குழு இலங்கை வரவுள்ளது. இந்திய மருத்துவக் குழுக்கள் இலங்கை வருவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கும் இடையில் உடன்பாடொன்று எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மருத்துவக் குழுவிலும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களென 10 பேர் முதல் 12 பேர் வரையி;ல் இருப்பார்களென்பதுடன், எத்தனை மருத்துவக் குழுக்களை சேவைக்கு அழைப்பதென்பது, இலங்கையின் வேண்டுகோளைப் பொறுத்தே ... Read More
இடம்பெயர்ந்த மக்களால் வவுனியாவிலுள்ள 20,000 மாணவர்கள் பாதிப்பு
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வவுனியாவிலுள்ள 13 பாடசாலைகளில் தங்கவைத்திருப்பதால் அந்தப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் வி.ஆர்.ஏ.ஒஸ்வேல்ட் கூறினார். இதனால் சுமார் 20,000 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்குச் சிறந்த கல்விகளை வழங்குவதற்காக இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள தனியார் கல்வி நிலையங்கள், பொது மண்டபங்கள், கோவில் மண்டபங்கள் போன்றவற்றைத் தெரிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட ... Read More


