சோனியாவின் உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்
மதுரையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உருவப்படம் எரிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸார் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வழக்கறிஞர்களுடன் கடும் மோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இரண்டு தரப்பினரையும் பொலிஸார் சமாதானப்படுத்தினர். இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், உடனே போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் வழக்கறிஞர்கள் சங்க செயலர் சுரேஷ்பாபு தலைமையில் போராட்டம் செய்தனர். அப்போது காங்கிரஸ் ... Read More
இராணுவம் கூறும் “டபிள் கப்’ எமக்குச் சொந்தமானதல்ல -யுனிசெப் அமைப்பு
விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதாகக் கூறும், "டொயோட்டா டபிள் கப்' வாகனம் தமக்கு சொந்தமானதல்ல என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வாகனம், யுனிசெப்புக்குச் சொந்தமானதென இராணுவம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளதாகவும் யுனிசெப் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறான டபிள் கப் வாகனம் எதனையும் யுனிசெப் தனது நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவில்லை. ஆயினும், கடந்த காலங்களில் அரச நிறுவனங்களான சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய நீர்விநியோக வடிகாலமைப்புச் சபை, சமூக ... Read More
தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில்: புளொட் தோழர் சிவநேசன் (பவன்)
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 31.01.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு புளொட் மத்தியகுழு உறுப்பினர் தோழர் சிவநேசன் (பவன்) அவர்கள் வவுனியாவிருந்து கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக ... Read More
தெற்காசிய பிராந்திய நாடுகளின் சக்திவலு அமைச்சர்களின் மாநாட்டின்போது முக்கிய பல விடயங்களில் அவதானம்
அமைச்சர் டீ.ஜே.செனிவிரட்ண- தெற்காசிய பிராந்திய நாடுகளின் சக்திவலு அமைச்சர்களின் இருநாள் மாநாட்டின்போது முக்கிய பல விடயங்களில் அவதானம் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் டபிள்யூ. டீ.ஜே. செனிவிரட்ண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் ஆரம்பமான ஆசிய பிராந்திய நாடுகளின் சக்திவலு அமைச்சர்களின் மாநாடு நேற்று நிறைவடைந்தது. தெற்காசிய பிராந்தியத்திற்கு சக்திவலு பரிமாற்றம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் செனிவிரட்ண தெரிவித்துள்ளார். ... Read More
தேர்தல் ஆணையாளர் கட்சி செயலாளர்கள் சந்திப்பு
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவுக்கும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்குமிடையிலான விசேடமானதும் மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல் தொடர்பிலான இறுதியானதுமான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பானது எதிர்வரும் 06ம் திகதி இடம்பெறவுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலானது எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ளது. ஏற்கனவே தேர்தல்கள் தொடர்பிலான இரண்டு சந்திப்புக்கள் தேர்தல் ஆணையாளருக்கும் கட்சி செயலாளர்களுக்குமிடையில் இடம்பெற்றுள்ளன. ... Read More
பயாகலைப் பகுதியில் ரயிலுடன் லொறி மோதியதில் விபத்து
களுத்துறை மாவட்டம் பயாகலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற ரயில் விபத்து காரணமாக லொறியொன்று நொறுங்கியுள்ளது. பயாகலைப் பிரதேசத்தில் கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிய ரயில் சென்று கொண்டிருந்த நிலையில் ரயில்வே கடவையிலுள்ள சமிக்ஞையை பொருட்படுத்தாமல் சென்ற லொறியே இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு 8.30அளவில் இடம்பெற்றுள்ளது. ... Read More
வன்னியில் தமிழ் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசுகக்கு ஐ.நா வேண்டுகோள்..
இலங்கை வன்னியில் போர் நடைபெறும் இடங்களில் மரண பயத்தில் சிக்கி தவிக்கும் இரண்டரை லட்சம் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஐ.நா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்னியில் போர் நடைபெறும் இடங்களில் மரணபயத்தில் சிக்கி தவிக்கும் இரண்டரை லட்சம் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு மிகவும் முன்னிரிமை அளிக்கப்பட வேண்டும் போரில் காயமடைந்து நோயால் அவதிப்படும் மக்களை விரைவாக ... Read More
நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலும் கடும் முயற்சி -ஜனாதிபதி
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை நாட்டின் அபிவிருத்தி தொடர்பிலும் செலுத்தவிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதும், நாட்டின் அபிவிருத்தியைக் கட்டியெழுப்புவதுமே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். ... Read More
மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்..
மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் தொடர்பிலான 46 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றிருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபெ தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்திலேயே கூடுதல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மாகாணத்தில் இதுவரையில் 29 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. ... Read More
ஈ.பி.டி.பி யினரால் வெளியிடப்பட்டிருக்கும் துண்டுப்பிரசுரம்! வன்னி மக்களின் அவலங்களுக்கு யார் காரணம்???
எம் இனிய மக்களே!….. நாம் சமாதான தேசத்தையே விரும்புகின்றோம்! அமைதியையும் யுத்தமற்ற சூழலையும, அச்சமற்ற உயிர்வாழ்வையும, அரசியலுரிமை சுதந்திரத்தையும் நேசிக்கின்றோம்! ஆனாலும் சமாதானத்திற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தமது அடங்காத அருவருப்பான யுத்த வெறியினால் சரிவரப்பயன்படுத்த தவறிய புலித்தலமை எமது மக்களாகிய உங்கள் மீது அச்சம் தரும் வாழ்வையும, அவலம் தரும் சூழலையும் மட்டுமே சுமையாக சுமத்தியிருக்கின்றது. இதனால் இன்று எமது வன்னி வாழ் உறவுகள் போரவலங்களை சந்திக்க வேண்டிய துயரங்களை ... Read More
சார்க் எரிசக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு கொழும்பில்..
சார்க் எரிசக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு கொழும்பில் ஆரம்பமானது இதில் சார்க் அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். சார்க் எரிசக்தி மாநாட்டின் அமர்வுக்கு அமைச்சர் டபிள்யு.டி.ஜே செனவிரத்ன தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது
... Read More
தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட 25பேர் பொலிஸாரால் கைது
வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத்தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 25பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தேர்தல் வன்முறை குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டவிதிகளை மீறல் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 60முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள அதேவேளை முறைப்பாடுகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. ... Read More
ஹேஜிங் ஒப்பந்தம் மீண்டும் செயற்படுத்தப்பட மாட்டாது -இலங்கை வங்கி மத்திய ஆளுநர்
ஹேஜிங் ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்ற இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ள போதிலும் அவ்ஒப்பந்தம் மீண்டும் செயற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றம் தற்போது விதித்துள்ள தீர்ப்பிற்கமைய ஹேஜிங் ஒப்பந்தம் மீண்டும் அமுல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இருப்பதாக அவர் கூறினார். இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் வெளிநாட்டு வங்கிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஹேஜிங் ஒப்பந்தம் சட்டவிரோதமானது என ஏற்கனவே தீர்ப்பளித்திருந்த ... Read More
வட்டி இல்லாமல் வீட்டுக்கடன் தருவதாக கூறிமோசடி.. சந்தேக நபர் 10கோடி ரூபாவுடன் தலைமறைவு
வட்டியில்லாமல் வீட்டுக்கடன் பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களின் பணத்தை சூரையாடிய நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். நாத்தாண்டிய பகுதியைச்சேர்ந்த இந்த நபர் சுமார் 10கோடி ரூபா பணத்துடன் தலைமறைவாகியுள்ளார். என தெரிவிக்கப்படுகிறது இவருக்கு எதிராக மாராவில பொலிஸில் மட்டும் 40 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது வட்டி இல்லாமல் வீட்டுக்கடன் வழங்கப்படும் எனக்கூறி பொதுமக்களிடமிருந்து 18ஆயிரம் தொடக்கம் 10லட்சம் ரூபா வரையிலான பணத்தை இவர் பெற்றுள்ளார். என விசாரணையிலிருந்து தெரியவருகிறது சந்தேக நபரை கைது ... Read More
உடையார்கட்டில் புலிகளின் நீர்மூழ்கி, தற்கொலை படகுகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உடையார்கட்டுப் பிரதேசத்தில் இன்றுகாலை படையினர் நடத்திய தேடுதலின் போது போது விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான நீர்மூழ்கி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் இராணுவத்தின் இரண்டாவது படையணியே இந்த நீர்மூழ்கியை கண்டு பிடித்துள்ளனர் எனவும் மேலும் புலிகளின் தற்கொலைப் பிரிவுக்கு சொந்தமான 3படகுகளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ... Read More
புதிய சாரதி அட்டையால் 4200 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற வாய்ப்பு இருக்கிறது -மோசடி தடுப்பு பிரிவு
புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தினால் 4200 மில்லியன் ரூபா மோசடி இடம்பெறும் என மோசடி தடுப்பு பிரிவு தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது புதிய சாரதி அனுமதி அட்டைக்காக ஒவ்வொருவரும் இரண்டாயிரம் ரூபா பணத்தை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது ஆனால் இதைவிட குறைந்த விலைக்கு சாரதி அனுமதிபத்திரத்தை தயாரிக்கும் முறை இருக்கிறது அரசாங்கத்தின் சுயலாபத்திற்காக அதிகவிலை கொடுத்து சாரதி அட்டைகளை தயாரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என ... Read More
ஆட்டோசாரதிக்கு 9ஆயிரம் ரூபா அபராதம்
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிக்கு 9000ரூபா அபராதம் விதிக்கப்பட்டது பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிஸாரின் உத்தரவை கவனத்திற் கொள்ளாது வாகனம் செலுத்திய வேளையிலேயே பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது இதன்போது சாரதி மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி மீது கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கண்டி பிரதம மஜிஸ்ரேட் சுமுது பிரேமசந்திர சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமல் மதுபோதையில் கவனயீனமாக ... Read More
கல்முனையில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்
இனந்தெரியாத சிலரினால் தமிழ் இளைஞர் ஒருவர் கடந்த 9ம் திகதி இரவு 8.30மணியளவில் கல்முனையில் வைத்து தமது தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தப்பட்டவர் 22வயதுடைய சுந்தரராஜா சிரிகரன் என்று தெரிவிக்கப்படுகிறது. இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இந்த கடத்தல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் சிரிதரனின் கடத்தல் தொடர்பிலும் கல்முனையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
விசுவமடு நகரைக் கைப்பற்றியதாக அறிவிப்பு
விடுதலைப்புலிகளுடன் நிகழ்ந்த கடும் சண்டைக்குப் பின் விசுவமடு பகுதிக்குள் ராணுவத்தின் 58வது படைப்பிரிவு சென்றடைந்ததாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. விசுவமடு நகர் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவத்தினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையின் போது பேருந்து ஒன்றும், ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசுவமடு நகரைக் கைப்பற்றும் ராணுவத்தின் நடவடிக்கையின் போது எதிர்த்துப் போரிட்ட ஏராளமான விடுதலைப்புலிகள் ... Read More
விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் இல்லை தமிழர்களை பாதுகாக்க முயற்சி செய்வோம் -பிரணாப் முகர்ஜி
விடுதலைப்புலிகள் மீது கருணை காட்ட மாட்டோம் அதேநேரத்தில் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க முயற்சி செய்வோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 2நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி நேற்று இலங்கைக்கு வந்தார் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்தி வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும் தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்ததையடுத்து அவர் இலங்கை வந்ததாக தெரிகிறது பிரணாப் ... Read More
