முள்ளியவளைக்கு வடக்கே காட்டுப் பகுதியில் கடும் மோதல்கள்
முல்லைத்தீவில் முள்ளியவளைக்கு வடக்கே காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் கடும் சமர் நடைபெற்று வரு வதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் முள்ளியவளைக்கு வடக்கே, முள்ளியவளைக்கும் புதுக்குடியிருப்புக்குமிடையிலான காட்டுப் பகுதியிலே பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளும் 593ஆவது படையணியினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலேயே தற்போது கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. திங்கட்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை கடும் சமரை யடுத்து படையினர் தங்கள் ... Read More
3 கட்சிகள், 5 சுயேச்சைக் குழுக்கள் மாத்தளை மாவட்டத்தில் வேட்பு மனு
மத்திய மாகாண சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 3 அரசியல் கட்சிகளும் 5 சுயேச்சைக் குழுக்களும் நேற்று செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்களை மாத்தளை மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் கையளித்துள்ளதுடன், மேலும் 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. ஐ.ம.சு.மு., ம.வி.மு. (ஜே.வி.பி.) ஆகிய இரு அரசியல் கட்சிகளும், சுஜித் பிரியந்த ஹெட்டியாராச்சி தலைமையிலான சுயேச்சைக் குழுக்களுமே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. சண்முகம் ஸ்ரீனிவாசன், எச்.எம். நவ்ஷாட் ... Read More
அடுத்த வருடம் வடக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் திட்டம்’
வன்னியைக் கைப்பற்றி இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு அளித்த பின் அடுத்த வருடம் வடபகுதியில் தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்திய பின்னர் 2009 இல் வட இலங்கையில் (வன்னி) தேர்தல் நடத்த விரும்புகிறோம் என்று இந்திய பத்திரிகையாளர் குழுவிடம் திங்கட்கிழமை இரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் (2009) பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ... Read More
உயர்தரப் பரீட்சை முடிவு இந்த வாரம் வெளியாகும்’
க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியாகுமென பரீட்சைகள்ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளே இவ்வாரம் வெளியாகவிருக்கின்றன. இந்த வாரத்தில் பெறுபேறுகளை வெளியிடக் கூடியதாக இருக்கும் என அநுர எதிரிசிங்க தெரிவித்தார். ஏற்கனவே, ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான போராட்டங்கள் காரணமாக க.பொ.த.பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் தாமதம் ஏற்பட்டிருந்தமையினால் பெறுபேறுகள் வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
... Read More
பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கூட்டணி அமோக வெற்றி
பங்களாதேஷில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. 299 ஆசனங்களில் 255 ஆசனங்கள் அவாமி லீக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அவாமி லீக்கிற்கு மட்டும் 230 ஆசனங்கள் கிடைத்துள்ளன. தோழமைக் கட்சிகள் 25 ஆசனங்களைப் பெற்றுள்ளன. அதேவேளை, ஷேக் ஹசீனாவின் பிரதான அரசியல் எதிரியான பேகம் காலிதாஸியாவின் ... Read More
இலங்கை அகதிகளுக்கு தொடர்ந்தும் உதவுமாறு யாழ். ஆயர் கோரிக்கை
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றினை முன்வைக்கும் வரையில், உள்ளக இடப் பெயர்வுகளுக்கு உள்ளானவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு அரசை வலியுறுத்த வேண்டும் என இந்திய மத்திய அரசாங்கத்தை யாழ். ஆயர் கோரியுள்ளார். இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு ஆயர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே யாழ். ஆயர் அதி. வந்.தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய மத்திய, தமிழக அரசுகள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் ... Read More
உணவு விஷமாகியதால் பாதிக்கப்பட்ட 50 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
கடவத்தை, ரண்முத்துகல பகுதியில் உணவு விஷமடைந்ததால் பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் றாகம மற்றும் கம்பஹா ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவத்தை ரண்முத்துகல பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் உணவருந்தியவர்களே திடீர் சுகவீனமுற்ற நிலையில் நேற்றுக் காலை றாகம ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த திருமண வீட்டில் உணவருந்திய இவர்களுக்கு அதிகாலை முதல் உடல் உபாதை ஏற்பட்ட நிலையில், பலர் தலைச்சுற்றும் மயக்கமும் ஏற்பட்டு வாந்தி எடுத்துமுள்ளனர். இதையடுத்து ... Read More
முக்கிய தலைவர்களை இலக்குவைத்து புலிகள் விமானத் தாக்குதல் நடத்தும் சாத்தியம்
புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கடந்த நவம்பரில் தமிழ் நாடு சஞ்சிகை ஒன்றுக்குத் தெரிவித்திருந்த அறிக்கையில் கிளிநொச்சியை அரசபடையினர் கைப்பற்றுவதற்கு எந்தவகையிலும் இடமளிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால் இந்தவாரம் அவருடைய சகாவான புலிகள் இயக்க அரசியல் பிரிவுத்தலைவர் நடேசன் தெரிவித்திருந்த அறிக்கையில் அரசபடையினர் கிளிநொச்சியைக் கைப்பற்றினாலும் யுத்தத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறியிருந்தார். இவ்வாறு அவர் பேசிய 48 மணிநேரத்திற்குள் கிளிநொச்சி நகரை அடுத்துள்ள சின்னப்பரந்தன், முல்லைத்தீவு அம்பாதமம் ஆகிய பிரதேசங்களை அரச ... Read More
வத்தளைப் பகுதியை சுற்றிவளைத்து அதிகாலை முதல் சல்லடை போட்டு தேடுதல்
வத்தளைப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சிவில் பாதுகாப்பு படை (ஊர்காவல் படை) முகாமில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து நேற்று அதிகாலை முதல் வத்தளையின் அனைத்துப் பகுதிகளிலும் பாரிய தேடுதல்கள் நடைபெற்றன. வத்தளை புனித அன்னம்மாள் தேவாலயத்திற்கு அருகிலுள்ள சிவில் பாதுகாப்பு படை முகாமினுள் நடைபெற்ற இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஏழு படையினர் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அன்றைய தினம் ... Read More
தந்தையை ஜனாதிபதியாக்கிவிட்டு தான் பிரதமராக சர்தாரி திட்டம்
பாகிஸ்தானில் பாரிய அரசியல் மாற்றங்களை மேற்கொள்ள ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி திட்டமிட்டிருப்பதாகவும் பிரதமர் யூசுப்ரசா கிலானியை பதவியிலிருந்து அகற்றிவிட்டு தான் பிரதமராக பதவியேற்கவிருக்கும் அதேசமயம், தனது தந்தையான ஹக்கீம் அலி சர்தாரியை ஜனாதிபதியாக நியமிக்கவுள்ளதாகவும் ஆளும் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினரை மேற்கோள் காட்டி ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் நேற்று தெரிவித்தன. ஜனாதிபதிக்குரிய சகல அதிகாரங்களையும் பிரதமருக்கு மாற்றிவிட்டே சர்தாரி தான் பிரதமராகவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி முஷாரப் அரசியலமைப்பு ரீதியாக ... Read More
மத்திய, வடமேல் மாகாணசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு
மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர். வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான காலம் நாளை புதன்கிழமை 11 மணியுடன் முடிவடைகின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தயாரிப்புப் பணிகள் முற்றுப்பெற்றிருப்பதாகவும், நேற்று மாலை வேட்புமனுக்கள் கையொப்பமிடப்பட்டு பூர்த்தி செய்திருப்பதாகவும், தெரிவித்த சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் ... Read More
காரைதீவில் ரி.எம்.வி.பி. உறுப்பினர் சுட்டுக்கொலை
அம்பாறை காரைதீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ரி.எம்.வி.பி.யைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார். காரைதீவு விபுலானந்தா பாடசாலைச் சந்திக்கு அருகே நேற்றுக் காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரைதீவு கடற்கரையில் மீன்வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் இவர்கள் வந்து கொண்டிருந்தபோதே, பாடசாலைச் சந்தியில் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் அவ்விடத்திலேயேகொல்லப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்துள்ளார். ... Read More
புனித மாதா சொரூபத்தை புலிகளே உடைத்தனர்
அரச படையினரின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் பிரதேசங்களை இழந்து படுதோல்வியடைந்துவரும் புலிகள் இயக்கத்தினர் தற்போது அவர்களின் இந்திய ஆதரவாளர்களையும் சர்வதேச ஆதரவாளர்களையும் தூண்டிவிட்டு ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான பிரசாரங்களைச் செய்தும் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மூலம் யுத்தத்தை நிறுத்துவதற்காகப் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் கிளிநொச்சி நகர் அரசு படையினரின் கைகளில் இன்றோ நாளையோ விழப்போகும் சந்தர்ப்பத்தில் புலிகள் இயக்கத்தினதும் அதன் ஆதரவாளர்களினதும் சர்வதேசப் ... Read More
107 எரிபொருள் நிலையங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ்
திறைசேரி கட்டுப்பாட்டில் இருக்கும் 107 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரவுள்ளதாகவும் அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் பௌசி தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த அமைச்சர் பௌசி, அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, திறைசேரி வசமுள்ள சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேச் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்குகளை பெற்றோலியக் ... Read More
மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் வன்னியில் போக்குவரத்துப் பெரும் பாதிப்பு
பரந்தன் முல்லைத்தீவு நெடுஞ்சாலையான ஏ-35 பிரதான சாலையில் விசுவமடுவுக்கும், உடையார்கட்டுக்குமிடையில் அமைந்துள்ள தேராவில் குளத்து நீர் தொடர்ந்தும் பாதையில் தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பாதையூடாகச் செல்லும் பயணிகள், வாகனங்கள் ஆபத்தான நிலையிலேயே அப்பாதையைக் கடக்க வேண்டியுள்ளது. பாதையை அடையாளப்படுத்தும் விதமாக தடிகள் நடப்பட்டுள்ள போதும் அதிலிருந்து சற்றுப் பிசகினாலும் வாகனங்கள் கவிழும் அபாயமுள்ளது. பயணிகள் பஸ் ஒன்று இப்பாதையில் குடைசாய்ந்து அதில் பிரயாணம் செய்த மக்கள் தெய்வாதீனமாக உ யிர் ... Read More
படையினரின் 17 உடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு
முல்லைத்தீவு நோக்கிய படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின்போது கைப்பற்றப்பட்ட படையினரின் 17 உடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் இக்கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகப் பணிப்பாளர் மு.பாவரசன் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி யூலியனிடம் மேற்படி உடலங்களைக் கையளித்தார். முல்லைத்தீவு நோக்கி கடந்த ... Read More
எம்பிலிப்பிட்டியவில் 700பேர் சிக்கன் குன்னியாவினால் பாதிப்பு
எம்பிலியபிட்டியவில் சிக்கன் குன்னியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை 700ஆக அதிகரித்துள்ளதாக சப்பிரகமுவ மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது இந்த நோய்குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர் இல்லாமையே நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இதனால் சிக்கன் குன்யாநோய்குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரபிரிவு தெரிவித்துள்ளது சிக்கன் குன்னியா நோயால் பாதிக்கப் பட்டவர்களது இரத்தம் பரிசோதனைக்காக கொழும்புக்கு ... Read More
தேர்தல்கள் ஆணையாளர் பெப்ரல் இயக்கம் சந்திப்பு
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவைப் பெப்ரல் இயக்கம் இவ்வார இறுதியில் சந்தித்துக் கலந்ததுரையாடவிருக்கின்றது. இக்கலந்துரையாடலின்போது தேர்தல் கால வன்முறைகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என்று பெப்ரல் இயக்கத்தின் தலைவர் கிங்ஸ்லி றொட்ரிகோ நேற்றுத் தெரிவித்துள்ளார். இவ்விரு மாகாண சபைகளுக்குமான வேட்புமனுக்களை ஏற்கும் இறுதித் தினம் நாளை மறுதினம் 31ம் திகதியாகும். வேட்புமனுக்கள் யாவும் சமர்ப்பிக்கபபட்ட பின்னரே ... Read More
புலிகளின் இலக்குகள் மீது விமானத் தாக்குதல்
முல்லைத்தீவில் புலிகளின் இலக்குகள்மீது நேற்றையதினம் இருதடவைகள் விமானத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புலிகள் பயிற்சிப்பெறும் இடம்மீதே விமானப்படையினரின் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போது புலிகளுக்கு பாரியசேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கிறது. இதேவேளை புத்தளம் சிலாபம் பகுதியில் வர்த்தகர் ஒருவரிடம் கைகுட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத விலைமதிக்க முடியாத யானைத்தந்த முத்துகள் இரண்டை மீட்டுள்ளனர். ... Read More
வெள்ளைவானால் கடத்தப்பட்ட முஸ்லிம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
திருகோணமலை தம்பலகமம் முத்து நகர் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு வெள்ளைவானில் வந்த ஆயுத பாணிகளால் கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவரது சடலம் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கிண்ணியா தம்பலகமம் எல்லையில் சிவத்தபாலம் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. 24ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் முத்துநகரில் பக்கீர் தம்பி கயாத்து முகமத் (45 வயது குஞ்சு லெப்பை)என்பவரது வீட்டுக்கு வெள்ளைவானில் ... Read More
