இரத்தினபுரியில் திடீர் தேடுதல், சுற்றிவளைப்பு
இரத்தினபுரி நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் திடீர் தேடுதலில் ஈடுபட்டதுடன் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்த சிறியவர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரும் தீவிரமாக சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அனைவரினதும் பெயர் பட்டியலையும் எடுத்துச் சென்றனர். ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் காவலிலீடுபட்டிருந்த போது பொலிஸார் சிவில் பாதுகாப்புக் குழுக்களுடன் வீடு வீடாக சென்று ... Read More
பசறையில் கப்பம் பெற்ற இரு மாணவர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை
பசறை தேசியப் பாடசாலையின் உயர் வகுப்பு மாணவர்கள் இருவர் கப்பம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடந்த 24 ஆம் திகதி பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும் நீதிபதி சமன் காரிய வசம் அவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததுடன், பசறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டார். கடந்த வாரம் இவ்விரு உயர் வகுப்பு மாணவர்களும் மேலும் மூன்று மாணவர்களின் உதவியுடன் ஏழாம் தரத்தில் ... Read More
ஊவா மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் 26 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
ஊவா மாகாண சபையின் 2009 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதி அறிக்கை 26 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஊவா மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த 18 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டு 24 ஆம் திகதி வரை விவாதங்கள் இடம்பெற்றன. அமைச்சுகள் மட்டத்தில் தொடர்ந்து வாக்கெடுப்புகள் இடம்பெற்று இறுதிவாக்கெடுப்பு 24 ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. இவ்வாக்கெடுப்பில் ஆளும் கட்சியுடன் இணைந்து ... Read More
கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் ஹோட்டல்களின் பாதுகாப்பு அதிகரிப்பு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள சுற்றுலாத்துறை ஹோட்டல்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். வியாழக்கிழமை சுற்றுலாத்துறை ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளின் பங்களிப்புடன் அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் மும்பை நகரில் சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் ... Read More
புலிகளின் குரல் மீது விமானத் தாக்குதல்
விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது வியாழக்கிழமை மாலை விமானப்படை விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன. கிளிநொச்சியில் உள்ள புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது வியாழக்கிழமை மாலை 5.15 மணியளவில் மிக்27 ரக வானூர்திகள் இரண்டு குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு கருவிகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கடந்த வருடமும் மாவீரர் நாளன்று புலிகளின் குரல் வானொலி நிலையம் மீது ... Read More
வன்னியில் அடை மழையால் தொடர்ந்து பேரவலம் மூவர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
வன்னிப்பெரு நிலப்பரப்பில் பெய்து வரும் கடும் அடை மழை மற்றும் கடும் காற்றினால் பெரும் அழிவுகளும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், மூவர் உயிரிழந்துமுள்ளனர். கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மழையால் குளங்கள் நிரம்பி வழிகின்ற நிலையில் மக்கள் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர். வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம் என்பன நீர் நிரம்பிய நிலையில் உடைப்பெடுக்கும் அபாயமேற்பட்டுள்ளது. அவற்றின் கீழ் வாழும் மக்கள் ... Read More
மும்பை தாக்குதல்களில் வெளிநாட்டவர் உட்பட 125 பேர் பலி; 327 க்கும் அதிகமானோர் காயம்
இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நகரமான மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோரால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் 125 பேர் கொல்லப்பட்டும் வெளிநாட்டவர் பலர் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டும் பெரும் பதற்றமான நிலைமை பல மணிநேரம் நீடித்திருந்த போதும் தாஜ்ஹோட்டலில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தோர் விடுவிக்கப்பட்டதாக நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மகாராஷ்டிர மாநில பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்தார். இஸ்லாமிய தீவிரவாதிகள் புதன்கிழமை இரவு ஆரம்பித்த கண்மூடித்தனமான துவக்குச் ... Read More
மட்டக்களப்பில் இந்து மதகுரு உட்பட 4 பொதுமக்கள் சுட்டுக் கொலை
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. புதன்கிழமையும் இந்து மதகுரு ஒருவர் உட்பட நான்கு அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் மட்டக்களப்பில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்த நால்வரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு மூவரும் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, வெல்லாவெளி பாலமுனை ஒட்டியாத்துறை பகுதியில் புதன்கிழமை இரவு 7 மணியளவில் இளைஞனொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது வீட்டுக்குச் சென்ற ஆயுதக் ... Read More
கிளிநொச்சி மீட்கப்பட்ட செய்திக்காக காத்திருப்பு இந்திய நிவாரணத்தை ஐ.சி.ஆர்.சி.யே விநியோகிக்கும்
கிளிநொச்சிப் பிரதேசம் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு விட்டதென்ற செய்திக்காக அரசு காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா,இலங்கைத் தமிழர்களின் நிவாரணப் பணிகளிற்காக தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமே மக்களிடம் நேரடியாகக் கையளிக்கப்படுமெனவும் கூறியுள்ளார். வியாழக்கிழமை தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் இதனை கூறிய அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேலும் கூறுகையில்; யுத்தப் பிரதேசங்களில் ... Read More
கஞ்சா கடத்த முற்பட்ட இராணுவீரர் ஒருவர் கைது
கஞ்சா கடத்த முற்பட்ட இராணுவீரர் ஒருவரை இங்கினியாகலை பொலீசார் கைதுசெய்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் பிபிலையிலிருந்து அம்பாறை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசோதனை செய்த போதே இரண்டு கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் கைது செய்துள்ளனர். இங்கினியாகல பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே பிபிலை அம்பாறை வீதியில் உள்ள ரத்மல்கஹல்ல பொலீஸ் சோதனைச் சாவடியில் வைத்து ... Read More
அம்மன்நகரில் ஆயுத, உபகரணங்கள் கைப்பற்றல்
திருகோணமலை மூதூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன்நகரில் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத, உபகரணங்களை திருகோணமலைப் பொலீசார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆர்.பி.ஜி குண்டு 01, ரி56 ரக துப்பாக்கி 01, ரி56 ரக மகசின் 03, ரி56 ரவைகள் 46, 60மி.மீற்றர் மோட்டார் குண்டு 05, அமுக்கவெடிகள் 06, அமுக்கவெடி பியூஸ் 06, டெட்னேற்றர் 06, கிரனைட் 02 என்பனவே இதன்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
... Read More
பொலீஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
இலஞ்சக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கம்பளை பொலீஸ் நிலைய விசேட விசாரணை பிரவிpன் பொறுப்பதிகாரியான இன்ஸ்பெக்டர் டிக்கிறி பண்டாரவை எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி வரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நிசாந்த ஹப்ப ஆராய்ச்சி உத்தரவிட்டார். இவர் ஏற்கனவே கம்பஹா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு புதன்வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இலஞ்ச குற்றச்சாட்டு வழக்குகள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்படுவதால் அவர் அங்கு ஆஜர்செய்யப்பட்டார். ... Read More
பனிச்சங்கேணியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி கடற்கரை வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஆயுததாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியாகியுள்ளார். பலியானவர் 32வயதுடைய ஞானகுரு மோகனதாஸ் எனவும், இவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வாகரைப் பொலீசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
சிலாபத்தில் கடலி தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் கடலுக்கு பலி
புத்தளம் மாவட்டம் சிலாபத்தில் கடல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் கடலுக்கு பலியான சம்வமொன்று புதன்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது. இவர் வேறு ஒருவருடன் படகில் சென்றபோது காற்றினால் படகு கவிழவே கடலில் வீழ்ந்து மரணமாகியுள்ளார். இவருடன் சென்றவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார். சிலாபம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிலாபம் கடற்கரை ஓரத்தில் வாழும் மூன்று பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ நிக்கிலஸ் கியூரின் வயது 40 என்பவரே மரணமாகியுள்ளார். இவரது சடலம் ... Read More
பத்தனை தோட்டத்தில் சிறுமிமீது பாலியல் சேட்டை, இரு பிள்ளைகளின் தந்தை கைது
நுவரெலியா ஹற்றன் பத்தனை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் பதினொரு வயது சிறுமி பாலியல் சேஸ்டைக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 28வயது நபரை பத்தனை பொலீசார் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். இந்த சிறுமிக்கு உதவுவதற்கு மனித உரிமை அமைப்புகள் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தோட்டப் பகுதிகளில் அண்மைக் ... Read More
கணவனின் கத்திக்குத்தில் மாமி பலி, மனைவி படுகாயம்
குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியையும் மனைவியின் தாயாரையும் (மாமியார்) கூரிய ஆயுததத்தினால் குத்திய சம்பவம் செவ்வாய்க்கிழமை தியாகொடயில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது படுகாயமடைந்த மாமியார் தியாகொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமானார். மனைவி மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு விசேட சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். மனைவிக்கும் இவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் அவர் மனைவியை தாக்கியதாகவும் அதன்போது மாமியார் அதனைக் ... Read More
மாணவரைத் தாக்கியமை தொடர்பில் ஆசிரியர் பிணையில் விடுதலை
தென்பகுதி எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்கி காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இம்மாணவன் வகுப்பில் எழுந்து நின்று படித்ததாகவும் அதனால் அம்மாணவனை இந்த ஆசிரியர் காரணம் எதுவும் கேட்காமல் கண்டபடி அடித்ததாகவும் ஏனைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். திங்கள் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக எம்பிலிப்பிட்டிய பொலீசில் முறையிடப்பட்டுள்ளது. மாணவன் கண்ணாடி அணிவதால் ஆசிரியர் அடித்த அடியில் கண்காடியும் உடைந்து கண் பகுதியிலும் காயம் ... Read More
குடாநாட்டு கடலேரியில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கம்
யாழ்ப்பாணம் குடா கடலேரியில் கடற்றொழில் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் கடலேரிப் பகுதியில் கடற்றொழில் செய்வதற்கு நேரக் கட்டுப்பாடும், கடல் எல்லையின் தூரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது. இதனால், குருநகர், பாஷையூர், கொழும்புத்துறை, அரியாலை, காக்கைதீவு, மண்டைதீவுப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடந்த சில வருடங்களாக உரிய முறையில் தொழில் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இதனால், இந்த மீனவர்களின் குடும்பங்களும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். ... Read More
தனியார் பஸ் விபத்தில் 9 பேர் காயம்
அட்டன் நகரிலிருந்து டிக்கோயா வழியாக சாஞ்சிமலைக்குச் சென்ற பயணிகள் பஸ் வண்டி ஒன்று செவ்வாய்க்கிழமை காலை பட்டில்கல கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் பாதையை விட்டு விலகி குடைசாய முற்பட்டதில் பயணிகள் சிலர் பாதிப்புக்குள்ளாகினர். இவர்களுள் கடுமையான பாதிப்புக்குள்ளான மூன்று மாணவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு மாணவிகள் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சிறு காயங்களுக்கு உள்ளாகியவர்கள் பட்டில்கல தோட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் ... Read More
கடும் மழையிலும் கிளிநொச்சி நோக்கி முன்னேற படையினர் தீவிர முயற்சி
வன்னியில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகையிலும் கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு முயற்சியை படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு கூறுகையில்; வன்னியில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால் வீதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. நிலங்கள் சேறும் சகதியுமாகியுள்ளன. எனினும், மோசமான கால நிலைக்கு மத்தியிலும் படையினர் முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடுமையான பதில் தாக்குதலை ... Read More
