காணி அதிகாரி இலஞ்சம் வாங்கிக் கைது
அம்பாறை மாவட்ட காணி திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஐந்து விவசாயிகளுக்கு காணி பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு 5 இலட்சம் ரூபாவைக் கேட்டு ஒரு இலட்சம் ரூபாவை வாங்கும் போது இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிடம் அகப்பட்டுக் கொண்டார். இந்த விவசாயிகளில் ஒருவர் ஆணைக்குழுவுக்கு செய்த புகாரையடுத்து ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இவர் ... Read More
மீள்குடியேற்ற அமைச்சில் புதிய இணையத்தளம்
மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் தீதீதீ.ண்டூடிஞீணீணூ.டூடு என்ற புதிய இணையத்தளமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இதனை புதன்கிழமை ஆரம்பித்து வைத்தார். இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த பின் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்; இடம்பெயர்ந்த மக்கள் தாம் தங்கியிருக்கும் இடங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு உடனுக்குடன் அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க ... Read More
வன்னிக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பான உயர்மட்ட சந்திப்பு
வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பது மற்றும் எடுத்துச் செல்வது தொடர்பாக அப்பகுதி மாவட்ட அரச அதிபர்களுடனான சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு இம்மாநாடு இடம்பெறவுள்ளது. இதில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் கலந்து கொள்ளவுள்ளாரென அவ்வமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.ராசிக் தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு, ... Read More
அகதிகளாக தமிழகம் சென்ற 5 இளைஞர்கள் “க்யூ’ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
இலங்கையில் இருந்து அகதிகளாக படகில் வந்த 5 தமிழ் வாலிபர்கள் கடலோர காவல் படையினரால் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு புலிகளுடன் தொடர்புள்ளதா என "க்யூ' பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கடலோர காவல் படையினர் ராமநாதபுரத்தை அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த ஒரு படகை வழிமறித்தனர். அதிலிருந்த 5 வாலிபர்களையும் மண்டபம் கடலோரக் காவல் படை முகாமிற்குக் கொண்டுவந்தனர். ... Read More
சீமான், அமீர் பிணையில் விடுதலை
இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக திரையுலகினர் நடத்திய கூட்டத்தில் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்து வந்த இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தங்களைப் பிணையில் விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் அமர்வு நீதிமன்றத்தில் சீமான், அமீர் சார்பாக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். புதன்கிழமை இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மாயாண்டி சில நிபந்தனைகள் விதித்து இயக்குநர்கள் சீமான், ... Read More
பசிலின் டில்லி பேச்சு பெறுபேறுகளில் பெருமகிழ்ச்சி இலங்கை இந்திய இருதரப்பு உறவுகள் பிரமாதம்’
புதுடில்லிக்கு தனது விசேட தூதுவரை அனுப்பி அங்கு இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் பெறுபேறுகள் குறித்து அதிகளவுக்கு மகிழ்ச்சியடைந்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
"இந்து' பத்திரிகை ஆசிரியர் என்.ராமுக்கு திங்கட்கிழமை மாலை அலரிமாளிகையில் அளித்த பேட்டியின் போது அரசியல் நடவடிக்கைகள், அதிகாரப் பகிர்வின் தன்மை, வன்னி இராணுவ நடவடிக்கைகள், மனிதாபிமான நிலைவரம், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள், இலங்கையின் இன சௌஜன்யம் தொடர்பான தனது தொலைநோக்கு என்பன போன்ற முக்கிய விடயங்கள் ... Read More
கருணாநிதியை இலங்கைக்கு வரவழைக்க விரும்புகிறார் ஜனாதிபதி இந்தியாவின் அதிசிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரென கலைஞருக்கு பாராட்டு
தமிழக முதலமைச்சர் கருணாநிதியை இந்தியாவின் அதிசிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவர் என்று தனது மரியாதையை வெளிப்படுத்தியிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கை பிரச்சினை தொடர்பான கருணாநிதியின் சிந்தனைகளையும் யோசனைகளையும் ஜனாதிபதி ராஜபக்ஷ பாராட்டியுள்ளார். அத்துடன், பிளவுபடாத இலங்கைக்குள் தமது தமிழ் சகோதரர்களின் ஜனநாயக, அரசியல், மொழி உரிமைகள் உட்பட சகல உரிமைகளையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதும் அதிகாரப் பகிர்வை ... Read More
கொழும்பு மாநகரசபை நிர்வாகம் இடைநிறுத்தம் பொறுப்புகள் விசேட ஆணையாளர் வசம்
கொழும்பு மாநகரசபையின் அதிகாரங்கள் புதன்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டு நிர்வாகம் விஷேட ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1573/10 ஆம் இலக்க விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேயர் இம்தியாஸ் உவைஸ் தலைமையிலான மாநகரசபை நிருவாகம் இடைநிறுத்தப்பட்டதாக மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே அறிவித்துள்ளார். இதுதவிர மாநகர முதல்வர் இம்தியாஸ் உவைஸின் பதவிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடி முறைகேடுகளை விசாரிப்பதற்காக முதலமைச்சர் தனிநபர் ஆணைக்குழுவொன்றையும் நியமித்துள்ளார். மேல் மாகாண ஆளுநர் அலவிமௌலானா, முதலமைச்சர் ... Read More
விமான நிலையத்திலும் பரபரப்பு
செவ்வாய்க்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளும் அதிகாரிகளும் ஊழியர்களும் அல்லோலகல்லோலப்பட்டனர். விமானப்பயணம் மேற்கொள்ள வந்தவர்கள், விமானங்களில் ஏறுவதற்கு தயாரான பயணிகள் முன் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டனர். சில வெளிநாட்டவர்கள் இருக்கைவசதி போதாமையால் தரையில் படுத்தனர். விமானநிலையத்துக்கு வந்த வாகனங்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பயணிகளை வழியனுப்ப வந்திருந்தவர்களும் தத்தமது இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது அவதிப்பட்டனர். விமானநிலையத்தின் எல்லைக்குள் பிரவேசித்த வாகனங்களும் அந்த அந்த இடங்களில் நிறுத்தப்பட்டன படையினரின் ... Read More
தமிழ் நாட்டில் கன்னியாகுமரியிலிருந்து வந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய கரும்புலிப்படகுகள்
காங்கேசன்துறை , பலாலி மற்றும் அதனையண்டியிருக்கும் கடற்பிராந்தியத்தில் கடந்த 21 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பகல் இரவாகக் கொட்டிக்கொண்டிருந்த கடும் மழை தொடர்ந்தும் 22 ஆம் திகதி விடியற்காலையிலும் கடுமையாகப் பொழிந்துகொண்டிருந்தது. இந்தக் கடும் மழையின் மத்தியில் தான் 22 ஆம் திகதி புதன்கிழமை விடியற்காலை புலிகள் இயக்கத்தின் கடற் கரும்புலிகள் இரகசியமாக பலாலி கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளனர். இவ்வாறு கரும்புலிகள் பிரிவின் தற்கொலை படையினர் மூவர் வெடிகுண்டுப்பொருள்கள் நிரப்பி ... Read More
காரைதீவு சந்தியில் குண்டுப்புரளி
காரைதீவு சந்தியில் அநாதரவாக கிடந்த அலுவலக பையினால் செவ்வாய்க்கிழமை காலை குண்டுப்புரளியொன்று ஏற்பட்டது. காலை 7.30 மணியளவில் காரைதீவு சந்தியில் அம்பாறை நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமைபுரியும் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது அலுவலக பையினை தான் நின்ற பஸ்தரிப்பிடத்தில் வைத்துவிட்டு அம்பாறை பஸ்ஸில் ஏறி பயணித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு அநாதரவான நிலையில் காணப்பட்ட பை தொடர்பாக காரைதீவு விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்து குண்டு செயலிழக்கும் படையினர் வருகை தரும் வேளையில் ... Read More
வவுனியாவில் 16 கிராம அபிவிருத்தி அமைப்புகளுக்கு 32 இலட்சம் ரூபா நிதி
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக 16 கிராம அபிவிருத்தி அமைப்புகளுக்கு சுமார் 32 இலட்சம் ரூபாய் நிதி வழங்கும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியதீன் செய்மதிமூலம் கொழும்பிலிருந்தவாறு நிகழ்வில் கலந்து கொண்டவர்களுடன் உரையாற்றினார். மூவின மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ... Read More
துப்பாக்கி வெடித்து கொள்ளையர் பலி
நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்த நபரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் நகைக்கடைக்கு வெளியே அவர் உயிரிழந்த சம்பவம் எம்பிலிப்பிட்டிய நகரில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களைப் போல அக்கடைக்குள் வந்த இருவர் திடீரென ரி56 ரக துப்பாக்கியை காட்டி ஊழியர்களையும் முகாமையாளர்களையும் பயமுறுத்தி விட்டு விற்பனைக்கிருந்த நகைகளை ஒரு பையில் போட்டுக் கொண்டு தப்பியோடினார்கள். ஆனால் ஊழியர்கள் இருவரையும் பிடிக்க முயன்றபோது ஒரு கொள்ளையரின் துப்பாக்கி திடீரென வெடித்ததால் அவர் மீது ... Read More
கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்தவர் மரணம்
மிரனாலங்குளத்தில் வைத்து கடந்த 2007 ஏப்ரல் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் திங்கட்கிழமை மாலை கல்பிட்டி வைத்தியசாலையில் மரணமானார். இவ்வாறு மரணமானவர் பக்கீர் மொஹிதீன் நிஹால் (வயது 33) என கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் பேருந்து சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியின் நடத்துநரான நிஹால், மன்னார் வவுனியா சாலையில் 2007.04.07 ஆம் திகதி கடமையில் இருந்தபோது, நடத்தப்பட்ட ... Read More
இலங்கை அகதிகள் நூறு பேர் மீது தமிழகத்தில் கொலை முயற்சி வழக்கு
மினி பஸ்ஸை வழிமறித்து, அதில் வந்தவர்களை ரீப்பர் கட்டை இரும்புக் கம்பியால் தாக்கிக் காயப்படுத்தியதாக இலங்கை அகதிகள் 100 பேர் மீது ஊத்தங்கரை பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அங்கு பதற்றம் நிலவுவதால் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நாப்பராம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (32) என்ற கூலித் தொழிலாளி. இவர் ஊத்தங்கரை பொலிஸில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது; கடந்த 27ம் திகதி எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ... Read More
ஜெயபுரம் பகுதி படையினர் வசம்
கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியை புதன்கிழமை காலை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பூநகரி வீதியில் நாச்சிக்குடாவுக்கு வடமேற்கேயுள்ள ஜெயபுரம் பகுதியையே கடும் சமரின் பின்னர் கைப்பற்றியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை ஜெயபுரம் நோக்கிய பாரிய முன்நகர்வைப் படையினர் மேற்கொள்ளவே இரு தரப்புக்குமிடையே கடும் சமர் நடைபெற்றது. நாச்சிக்குடாவுக்கு வடக்கிலிருந்து நாச்சிக்குடாவை நோக்கிய முன்நகர்வை மேற்கொண்டு வரும் படையினர் ஜெயபுரத்தைக் கைப்பற்றுவதாக பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். நாச்சிக்குடாவை மையமாக ... Read More
3 பிள்ளைகளை கிணற்றினுள் தள்ளி கொன்றுவிட்டுத் தாயும் தற்கொலை
திருகோணமலை செல்வநாயகபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை தாயாரொருவர் தனது மூன்று பிள்ளைகளை கிணற்றில் தள்ளி விட்டுக் கொன்றுள்ளதுடன் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதன் போது அந்தத்தாய் தனது 5 வயது மகனையும் கிணற்றினுள் தள்ள முற்பட்ட போதும் அவன் தாயின் பிடியிலிருந்து தப்பியோடி விட்டதால் உயிர்தப்பியுள்ளான். இது பற்றி மேலும் தெரியவருவதாவது; குடும்பத்தகராறு காரணமாக இளம் தாயொருவர் தனது நான்கு பிள்ளைகளுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுத்துள்ளார். ... Read More
கொரியாவிலிருந்து திரும்பிய தமிழ் இளைஞன் கடத்தல்
தென்கொரியாவிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பிய இளைஞனொருவர் கட்டு நாயக்க பகுதியில் சீருடை அணிந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர் அங்கிருந்து வெளியேறி தனது சகோதரியுடன் தனியார் வாகனமொன்றில் புறப்பட்டு சில நிமிடங்களில் கடத்தப்பட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து இவர்களது வாகனம் சுமார் 500 மீற்றர் தூரம் வந்த நிலையில் நீர்கொழும்பு பிரதான வீதியில் இவர்களது வாகனத்தை பொலிஸ் சீருடை அணிந்தவர்கள் வழிமறித்துள்ளனர். ... Read More
இலங்கைத் தமிழர் நிவாரண நிதியாக ரூபா 10 இலட்சம் கருணாநிதி வழங்கினார்
இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்கு தமிழக மக்கள் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு முதலமைச்சர் கருணாநிதி திங்கட்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிதி உதவிகள் குவியத் தொடங்கியுள்ளது. கருணாநிதி தனது சொந்தப் பணத்திலிருந்து 10 இலட்சம் ரூபாவை வழங்கி நிதி உதவி சேகரிப்புப் பணியை ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், முதல்வர் அலுவலகப் பணியாளர்கள் நிதி வழங்கினர். நிதி வழங்கியோர் விபரம் வருமாறு; ஆற்காடு வீராசாமி ரூபா 21,750 ... Read More
செங்கலடியில் ரி.எம்.வி.பி. முகாம் மீது நள்ளிரவு விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல்
மட்டக்களப்பு செங்கலடியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் (ரி.எம்.வி.பி.) முகாம் மீது திங்கட்கிழமை நள்ளிரவு விடுதலைப்புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளெனச் சந்தேகிக்கப்படுவோரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். செங்கலடி கறுத்தப் பாலத்திற்குச் சமீபமாகவுள்ள ரி.எம்.வி.பி. முகாம் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலைப்புலிகள் கூறுகையில்; செங்கலடியில் இராணுவ ... Read More
