காலியில் குண்டுப் புரளி நகரப் பகுதியில் பரபரப்பு
காலி கொழும்பு வீதியில் கச்சேரிக்கும், ரயில் நிலையத்துக்கும் அருகில் ஏற்பட்ட குண்டுப் புரளியால் காலி நகரப்பகுதி எங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தால் இந்த வீதியூடான போக்குவரத்துகள் இரு மணி நேரம் தடைப்பட்டது. பழைய கலண்டரைப் பொதி செய்து யாரோ வீதியோரமாக வைத்துவிட்டு சென்றுவிட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர். நீண்ட நேரமாக இப்பொதி இங்கு காணப்பட்டதால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் ... Read More
துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி
துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டி ( www.quran.gov.ae ) செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை துபாய் அல் மம்சார் பூங்கா அருகில் அமையப்பெற்றுள்ள கலாச்சார மற்றும் அறிவியல் கழகத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிகள் 1997 ஆம் வருடம் துவங்கப்பட்டு 12வது வருடமாக அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களது ஆதரவில் நடைபெற்று வருகிறது. ... Read More
அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக எம்.ரி.வி. அலைவரிசையும் அதன் ஊடகவியலாளர் ஜே.கே.ஏ.வர்ணசம்பத் என்பவரும் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணை செப்டெம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனுவில் அமைச்சர் மேர்வின் சில்வா, பேலியகொடை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.டீ.சோமபால, பொலிஸ் மா அதிபர், பேலியகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெகத் றொகான் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அந்த ... Read More
அமைச்சர் கிஸ்புல்லாவினால் ஓழங்கு செய்யப் பட்டிருந்த கிழக்கு மாகாண நடமாடும் சேவையில் அழையா விருந்தாளியாக நுழைந்திருந்த பிள்ளையான் பாதிக்கப்பட்ட மக்களினால் விரட்டியடிக்கப் பட்டார்..
நேற்று 30.08.2008 சனிக்கிழமை வாகரை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சர் திரு. கிஸ்புல்லா தலைமையில் இடம் பெற்ற நடமாடும் சேவையில் அழையா வருந்தினராக இணைந்து கொண்ட மாகாண முதலமைச்சர் பிள்ளையான் பிரதேச மக்களினால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.. நேற்று ... Read More
உக்குளாங்குளத்தில் இளைஞன் வெட்டியும் சுட்டும் படுகொலை
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இளைஞனொருவர் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் உக்குளாங்குளம் சிவன் கோவில் வீதி 3 ஆம் ஒழுங்கையில் வான் ஒன்றில் கொண்டு வரப்பட்ட இந்த இளைஞன் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார். வானொன்று அப்பகுதியில் வந்து நின்ற சிறிது நேரத்தில் இரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி அறிந்த பொலிஸார் ... Read More
புலிகளின் தற்கொலை குண்டுதாரிப் பெண் கைது
விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவரை மொறட்டுவ பொலிஸாரின் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியிலிருந்து கொழும்புக்கு வந்திருந்த இப்பெண் சார்க் மாநாடு காலப்பகுதியில் கொழும்பு நகரில் நடமாடியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
... Read More
பொலிஸாரால் படகில் அழைத்துச்செல்லப்பட்ட புலி உறுப்பினர் ஆற்றில் குதித்துத் தற்கொலை
விஷேட அதிரடிப் படையினரால் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரெனக் கூறப்படும் கண்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை அடையாளம் காட்டுவதற்காக அதிரடிப் படையினருடன் படகில் சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு ஆற்றில் குதித்து மரணமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது கிளைமோர் குண்டுகள் இரண்டு ரி56 ரக துப்பாக்கி, ரி56 ரக ... Read More
கோதாபய ராஜபக்ஷ மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணை டிசம்பர் 17க்கு ஒத்திவைப்பு
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கொலை முயற்சி வழக்கு எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொழும்பு பிரதம நீதிவான் நிசந்த ஹப்புஆராச்சி முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றபோது குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் அறிக்கை ஒன்றை மன்றில் சமர்ப்பித்திருந்தனர். சம்பவ நேரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் வாகனத்துக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்து மரணமான விடுதலைப் புலி உறுப்பினர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாக ... Read More
மட்டக்களப்பு அகதி முகாமில் மூளைக்காய்ச்சல் அபாயம்
மட்டக்களப்பிலுள்ள அகதிமுகாமில் தங்கியுள்ள மக்களிடையே மூளைக்காய்ச்சல் நோய் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்துள்ள மஞ்சந்தொடுவாய் மனிதவலு அகதி முகாமில் திருகோணமலையைச் சேர்ந்தவர்களே அதிகமாக தங்கியுள்ளனர். இந்த முகாமைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
... Read More
ராஜகிரியவில் வர்த்தகர் மர்ம மரணம்
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய குரே ஒழுங்கை பகுதியில் வர்த்தகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்த நிலையில் தனது காரின் பின்னிருக்கையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான ஜயதுங்க (வயது 49) என அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர, இவர் எப்படி உயிரிழந்தாரென்ற சரியான தகவல் இன்னும் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்தார். எனினும், ... Read More
காயமடைந்து கல்முனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் தலைமறைவு
ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பகுதியில் வெள்ளிக் கிழமை அதிகாலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கல்முனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாகுழுவைச் சேர்ந்த இருவர் பின்னர் ஆஸ்பத்திரியிலிருந்து தலைமறைவாகி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணா குழுவைச் சேர்ந்த இவ்விருவரும் வியாழக்கிழமை இரவு கண்ணகிபுரம் அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த இவ்விருவரும் பின்னர் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கல்முனை ... Read More
நளினியை விடுதலை செய்யக்கூடாது தமிழக அரசு சென்னை மேல் நீதிமன்றில் மனு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மற்றும் ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ் ஆகியோரை சிறையிலிருந்து விடுதலை செய்யக்கூடாதென தமிழக அரசு சென்னை மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமரை கொலை செய்தமை, திட்டமிட்டு கொடூர சம்பவத்தை நிகழ்த்தியமை, விடுதலைப்புலிகள் மீதான உணர்வு இன்னும் குறையாமல் உள்ளமை போன்ற மூன்று காரணங்களால் இவர்களை விடுதலை செய்யக்கூடாதென தமிழக அரசு தனது மனுவில் ... Read More
மட்டு. சிறைச்சாலையில் குண்டுவெடிப்பு 4 ஈ.பி.டி.பி.யினர் உட்பட 8 பேர் காயம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் வெள்ளிக் கிழமை காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நான்கு ஈ.பி.டி.பி.யினர் உட்பட எண்மர் படுகாயமடைந்துள்ளனர். ஆட்கடத்தல் மற்றும் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் ஈ.பி.டி.பி.யினர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்திற்குள்ளேயே நேற்றுக் காலை 6.15 மணியளவில் கைக்குண்டு ரகத்தைச் சேர்ந்த குண்டொன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பால் அந்தச் சிறைக் கூடத்திற்குள்ளிருந்த நால்வரும் அருகிலுள்ள சிறைக் கூடத்திற்குள்ளிருந்த நால்வரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த எண்மரும் உடனடியாக மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதுடன் ... Read More
முல்லைத்தீவிலிருந்து கடல் வழியாக தப்பிவந்து கடற்படையினரிடம் சரணடைந்த மீனவர் குடும்பம்
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கைகளும் அவற்றுக்கு ஆதரவான விமானப்படையினரின் விமானத் தாக்குதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுவரும் நிலையில் அப்பிரதேசங்களிலுள்ள பல்வேறு பகுதிகளும் அரசபடையினரின் கட்டுப்பாட்டுக்குக்கீழ் வந்தவண்ணமுள்ளன. இதேவேளை, தற்போது புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் எஞ்சியிருக்கும் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களும் இரகசியமாக அங்கிருந்து வெளியேறி அரசபடையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்தவண்ணமுள்ளனர். இவ்வாறு வெளியேறிவரும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தரைவழியாகக் கடினமான காட்டுப் பாதைகள் மூலமே வெளியேறிக் கொண்டிருந்தாலும் முல்லைத்தீவில் ... Read More
சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞனுக்கு அபராதம்
ஒன்பது வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இளைஞனுக்கெதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு பதுளை மேல்நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிபதி அவ் இளைஞனைக் குற்றவாளியாகக் கண்டு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். மகியங்கனை சேருபிட்டிய கிராமத்தில் வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த 9 வயதுச் சிறுமி மீது இளைஞனொருவன் வல்லுறவு மேற்கொண்டமை தொடர்பாக மகியங்கனைப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்து ... Read More
இரு பொலிஸார் மீது தாக்குதல்
ஹிக்கடுவ நாரீகம பகுதியில் வீதிக் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர் பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. திருமண வீட்டுக்கு வந்த சிலரின் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலையடுத்து இந்த இரு பொலிஸாருக்கும், வாகனங்களில் வந்தவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் பொலிஸ் கான்ஸ்டபிள்களை தாக்கிக் காயப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காலி கராப்பிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்களை பொலிஸார் ... Read More
யாழ்.ஆஸ்பத்திரியில் இளைஞன் சடலம்
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நாவற்குழிப் பகுதியில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் யாழ்.பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க இவ் இளைஞரின் சடலம் அரைக்காற்சட்டையும் சேட்டும் அணிந்த நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
... Read More
ஐ.நா.பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் வன்னி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் இருவர் புதன்கிழமை வன்னிப் பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவை சந்தித்து பேசியுள்ளனர். இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்த்து தொடர்பான ஐ.நா.திணைக்களத்தில் முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் க்ரிஸ் டூ ரியொற் மற்றும் மனிதாபிமான அலுவல்களுக்கான ஐ.நா.இணைப்பு அலுவலகத்தின் பிரதி தலைமை அதிகாரியான ஸ்ரீவ் ரேய் ஆகியோரே வன்னி பிராந்திய கட்டளைத் தளபதியை சந்தித்து பேசியிருக்கின்றனர். வன்னி பிரதேசத்தின் ... Read More
முல்லைத்தீவு கடலில் மீனவர்கள் மீது டோர? படகுகள் பீரங்கி தாக்குதல்
வடமராட்சி கிழக்கிலும் தாக்குதல் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா பீரங்கிப்படகுகள் நடத்திய தாக்குதலில் கடற்றொழில் படகு ஒன்று அழிந்துள்ளது. கடற்படையினரின் 16 டோராப் பீரங்கிப் படகுகள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதலை நடத்தின. இதில் படகு ஒன்று தாக்குதலுக்கு இலக்காகி முற்றாக சேதமாகியது. கரையோரத்தில் இருந்த ஆ.ஆரோக்கியநாதன் என்பவரின் வீடு சேதங்களுக்குள்ளாகியது. டோராக்கள் தாக்குதல் நடத்தியதனையடுத்து படகுகள் ... Read More
வன்னியில் பல முனைகளில் மோதல் 6 படையினர், 35 புலிகள் பலி
வன்னியில் பல்வேறு முனைகளிலும் புதன்கிழமை நடைபெற்ற கடும் மோதல்களில் ஆறு படையினர் கொல்லப்பட்டும் 35 படையினர் காயமடைந்துமுள்ளனர். இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 35 பேர் வரை கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் பூநகரி வீதியில் நாச்சிக்குடாவிலுள்ள புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது புதன்கிழமை காலை 58 ஆவது படையணியினர் கடும் தாக்குதலை நடத்தினர். விமானப் படையின் ஜெற் விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்த எம்.ஐ. 24 ... Read More


