கம்பஹாவில் தேடுதல் 11 பேர் கைது
கம்பஹாவில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, தமது ஆள் அடையாளத்தையும் வதிவிடத்தையும் சரியாக உறுதிப்படுத்தத் தவறியதால் இரு தமிழ் இளைஞர்களும் எட்டு சிங்கள இளைஞர்களும் ஒரு முஸ்லிம் இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையும் இந்த நடவடிக்கை இடம் பெற்றது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இவர்கள் கம்பஹாவில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது ... Read More
இலங்கையின் வடக்கு பகுதிக்கு பாதுகாப்பு செயலர் விஜயம்
இலங்கையின் வடக்கே வன்னிக் களமுனைகளில் வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற இராணுவ தளபதிகளையும் சிப்பாய்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் பாராட்டி ஊக்குவித்ததாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது. மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் விமானப்படைத் தளபதி மார்ஷல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட்ட மூத்த இராணுவ அதிகாரிகள் உடன்சென்றுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ... Read More
அஞ்சல் வாக்களிப்பு ஆகஸ்ட் 7, 8 இல்
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலுக்கான அஞ்சல் வாக்காளராக ஏற்றுக்கொள்ளப்படும் அனைத்து வாக்குச்சீட்டுக்களையும் குறிப்பிட்ட அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் அந்தந்த மாவட்ட செயலாளர்களின் அலுவலகங்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களும் அத்தாட்சிப்படுத்தும் விண்ணப்பப்பத்திரங்களை ஏற்பதற்கு எதிர்வரும் நாட்களில் மேற்படி அலுவலகம் திறந்திருக்குமெனவும் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் 7, 8 ஆம் திகதிகளில் அஞ்சல் ... Read More
தேவன்பிட்டி பகுதி மீது ஷெல் வீச்சு ஒருவர் பலி; இருவர் படுகாயம்
மன்னார் தேவன்பிட்டி பகுதி நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை படையினர் நடத்திய கடும் ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மன்னார் பூநகரி வீதியில் வெள்ளாங்குளம், தேவன்பிட்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை நோக்கி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. காலை 11 மணியளவில் தேவன்பிட்டியில் வீழ்ந்து வெடித்த ஷெல்களால் அப்பகுதியைச் சேர்ந்த விநாயகர் செல்வகுமார் (26 வயது) என்பவர் கொல்லப்பட்டதுடன் இ.கோமஸ் ... Read More
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை முதல் கொழும்புக்கு வருகைதரவுள்ளனர். 15 ஆவது சார்க் உச்சிமாநாடு எதிர்வரும் 2 ஆம், 3 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சார்க்கில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் தலைவர்களும் பங்குபற்றவுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சார்க் தலைவர்கள் இன்றும் நாளையும் கொழும்பு வரவுள்ளனர். இந்திய, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்த்தான் தலைவர்கள் நாளை வெள்ளிக்கிழமை விசேட விமானங்கள் ... Read More
இலங்கைக்கான இராணுவ தளபாட விநியோகத்தை நிறுத்தியது இஸ்ரேல்
இலங்கைக்கான இராணுவ தளபாட விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானுடன் இலங்கை அரசு மிக நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதையடுத்தே இலங்கைக்கான ஆயுத விநியோகத்தையும் இராணுவ தொழில் நுட்ப உதவியையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக இலங்கையில் பெருமளவு முதலீடுகளைச் செய்துவரும் ஈரான் இலங்கைக்கான ஆயுத உதவிகளையும் இராணுவ தொழில்நுட்ப உதவிகளையும் அதிகளவில் வழங்கி வருகிறது. அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், ஈரான் ஜனாதிபதி அகமது நிஜாத்துடனான தனது நெருங்கிய ... Read More
கடும் மோதல் தொடரும் நிலையில் வன்னியில் உயர்தரப்பரீட்சை இடம்பெறுமா?
வன்னியில் கடும் போர் நடைபெற்று வருகையில் இம் முறை அங்கு க.பொ.த. (உயர்தரப்) பரீட்சை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்வரும் ஆறாம் திகதி க.பொ.த. (உயர்தரப்) பரீட்சை நாடு முழுவதிலும் ஆரம்பமாகிறது. இதில் 2,43,816 மாணவர்கள் தோற்றுகின்றனர். இந்த நிலையில், வன்னியில் மன்னார், வவுனியா,கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிருந்து ஒருலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ... Read More
துவக்குச்சூட்டில் இளைஞன் காயம்
பருத்தித்துறை மீன் சந்தை அருகே செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார். மீன் சந்தை அருகே 1 ஆம் குறுக்குத்தெருவையும் 2 ஆம் குறுக்குத்தெருவையும் இணைக்கும் தும்பளை வீதியிலுள்ள கடையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மேற்படி கடையில் இந்த இளைஞன் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்களே இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த இந்த ... Read More
உப்புவெளி பகுதியில் இளைஞன் சுட்டுக்கொலை
திருகோணமலை, உப்புவெளிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உப்புவெளி அன்புவழிபுரத்தைச் சேர்ந்த மரியதாஸ் சயதாஸ் (18 வயது) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது
... Read More
இருதரப்பிடமிருந்தும் இதுவரை கோரிக்கை விடுக்கப்படவில்லை
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டிற்கு கொழும்புக்கு வருகைதரும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானிக்குமிடையிலான இருதரப்பு சந்திப்புக்கான சாத்தியத்தை நிராகரிக்காத போதும் இதுவரை இருதரப்பும் இது தொடர்பாக உத்தியோகபூர்வமான கோரிக்கையை பரஸ்பரம் விடுக்கவில்லையென செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். உச்சி மாநாட்டுக்கு புறம்பாக பிராந்தியத் தலைவர்கள் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வது வழமையாக இருந்து வருகிறது. அத்தகைய சந்திப்புகள் ... Read More
விசாப்பெற ஆங்கிலமொழிப் பரீட்சை திட்டத்தை கைவிட்டது பிரிட்டன்
குடியேற்றவாசிகளுக்கு ஆறுதலளிக்கும் செய்தியொன்றை பிரிட்டன் அறிவித்துள்ளது. தமது நாட்டில் குடியேற விரும்புவோர் ஆங்கிலமொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனவும் அதன் பின்னரே விசா வழங்கப்படுமெனவும் அறிவித்திருந்த திட்டத்தை இப்போது பிரிட்டன் கைவிட்டுள்ளது. அதற்குப் பதிலாக பிரிட்டனுக்கு அவர்கள் வருகைதந்த பின் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வேண்டுமென கோரப்படுவார்களெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், திருமண விசா பெற்று பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்கள் 21 வயதை பூர்த்தி செய்திருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்யும் நோக்கத்துடன் வெளிநாட்டுக்கு ... Read More
நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்ற சிங்கள இளைஞரிடம் புலிகளின் அடையாளஅட்டை
நீதிமன்ற வளவுக்குள் பிரவேசிக்க முயன்ற சிங்கள இளைஞர் ஒருவரை நீதிமன்ற பகுதியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டபோது அவரிடம் புலிகள் இயக்கத்தால் அவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 21 ஆம் திகதி அநுராதபுரம் நீதிமன்ற வளவுப் பகுதியில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பற்றி அனுராதபுரம் பொலிஸ் தலைமையக விசேட குற்ற விசாரணைப் பிரிவு தரப்பில் தெரியவந்துள்ள தகவல் ... Read More
பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்குப் பாகிஸ்தான் உதவும்
பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூன் ஷா குரெஷி தெரிவித்துள்ளார் லண்டனில் உள்ள உபாய கற்கைகளுக்கான சர்வதேச நிறுவகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அத்துடன் பாகிஸ்தான் இலங்கையுடன் தொடர்ந்தும் சிறந்த உறவைப் பேணி வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதேவேளை இதே ஸ்தாபனத்தில் நடைபெற்ற மற்றுமொரு கலந்துரையாடலில் இந்திய இராஜதந்திரியான ... Read More
விமல் வீரவன்சவின் நூலுக்கு இடைக்கால தடை
ஜே.என்.பி கட்சியின் தலைவரும் முன்னாள் ஜே.வி.பியின் பிரச்சார செயலாளருமான வீரவன்சவின் பொய்க்கு பதிலாக உண்மை என்ற நூலுக்கு வர்த்தக நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது குறித்த புத்தக வெளியீடு மற்றும் விநியோகம் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக்கூடாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோர் வர்த்தக நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ... Read More
இலங்கையின் மேற்கு கடலில் இந்தியாவின் இரு போர்க்கப்பல்கள்
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியத் தலைவர்களின் பாதுகாப்பு கருதி, இலங்கை கடல் எல்லையில் இந்தியக் கடற்படையின் இரு நாசகாரி போர்க்கப்பல்கள் நிறுத்தப்படவுள்ளன. டெல்கி வகையைச் சேர்ந்த நாசகாரியான ஐ.என்.எஸ். மைசூரும் ராஜ்புட் வகையைச் சேர்ந்த நாசகாரியான ஐ.என்.எஸ். ரன்வீரும் இலங்கைக் கடல் எல்லைக்கு வருவதாயிருந்தன. இவ்விரு கப்பல்களும் இலங்கையின் மேற்கு கரையிலிருந்து சுமார் 12 கடல் மைல் தூரத்தில் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நங்கூர மிடவுள்ளன. கொழும்பில் ... Read More
முல்லைத்தீவில் புலிகளின் மற்றொரு முகாமை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் மற்றொரு முக்கிய முகாமைத் தாங்கள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவிலுள்ள புலிகளின் "வன்போ' தளத்தின் (ணிணஞு ஞூணிதணூ ஞச்ண்ஞு) செய்மதி முகாமையே ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக படையினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவில் அடர்ந்த காட்டினுள் கிரிப்பன்வெவவுக்கு வடக்கேயிருந்த "சுகந்தன் தளமே' பிரிகேடியர் நந்தன உடவத்தவை கட்டளை அதிகாரியாகக் கொண்ட 59 ஆவது படையணியால் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மிகக் கடும் சமரின் பின்னர் இந்த முகாமைவிட்டு ... Read More
மரப்பொந்தில் தற்கொலை தாக்குதல் அங்கி
வவுனியா பட்டைக்காடு பகுதியில் மரப்பொந்து ஒன்றினுள்ளிருந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அங்கியொன்றைக் கைப்பற்றியுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். பட்டைக்காடு பகுதியில் திங்கட்கிழமை காலை வீதியோரத்தில் ஈடுபட்ட அதிரடிப் படையினரே அப் பகுதியிலுள்ள மரப் பொந்து ஒன்றினுள் தயாராக வைக்கப்பட்டிருந்த தற்கொலைத் தாக்குதல் அங்கியை கண்டு பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுமுள்ளன.
... Read More
முதலையிடமிருந்து இளைஞனை போராடிக் காப்பாற்றிய மாடு
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் முதலையிடம் பிடிபட்ட இளைஞனை அவரது வளர்ப்பு மாடு காப்பாற்றிய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. தனது கையொன்றினை முதலையிடம் பறிகொடுத்துவிட்டுத் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரணை மடுவைச் சேர்ந்த நவநீதன் (26 வயது) என்ற இவ்விளைஞன் இச்சம்பவத்தை விபரிக்கையில் கூறியதாவது; கடந்த 18 ஆம் திகதி காலை 8 மணியளவில் நான் எனது மாட்டை இரணைமடுக் குளத்தில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தேன். அப்போது குளத்தில் சிறிது தூரம் ... Read More
நேபாளத் தூதுக்குழுவுக்கு கொய்ராலா தலைமை
சார்க் உச்சி மாநாட்டிற்கான நேபாளத் தூதுக்குழுவுக்கு பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமைதாங்கவுள்ளார். நேபாளத்தில் இன்னமும் புதிய அரசாங்கம் அமைக்கப்படாத நிலையில், பிரதமர் கொய்ராலா தலைமையில் கூடிய அமைச்சர்கள் குழு சார்க் மாநாட்டுக்கு பிரதமர் கொய்ராலாவையே அனுப்புவதென தீர்மானித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு, எண்ணெய் நெருக்கடி, பயங்கரவாதம் தொடர்பாகவே உச்சிமாநாட்டில் இம்முறை கவனம் செலுத்தப்படுமென சமாதான, மீள் கட்டுமானத்துறை அமைச்சர் ராம் சந்திரா பௌடல் கூறியுள்ளார்.
... Read More
புலிகளின் ஆதரவுக்குழு இயங்க பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தனி அறை
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பிரச்சினை சம்பந்தமாக அமைக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராக செயற்படும் பாராளுமன்றப் பிரதிநிதி நெஸ்பி பிரபுவைக் கடந்த வாரம் பிரிட்டனுக்கான ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் நிஹால் ஜயசிங்க சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்ற நிலையத்திலேயே நடைபெற்றுள்ளது. இவ்வாறு நெஸ்பி பிரபுவை ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் நேரடியாகச் சந்தித்து நடத்திய பேச்சுகளின் அடிப்படையான நோக்கம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்காவில் நிகழும் இன மோதல் ... Read More
