உறவினர் விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தால் 14 வருட சிறை
பிரிட்டனில் வசிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவராவது குறுகியகால விசாபெற்று அங்கு சென்றுவிட்டு விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தால் அங்கு வசிப்பவர்களே பொறுப்பென பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது. 2009 இலிருந்து இந்த நடைமுறை அமுலுக்கு வரும். குடும்ப உறுப்பினர்கள் பிரிட்டனுக்கு சென்று விசாகாலம் முடிந்த பின்னர் தங்கியிருந்தாலோ அல்லது சட்ட விதிகளை மீறினாலோ அவர்களுக்கு உத்தரவாத அனுசரணை வழங்கிய பிரிட்டிஷ் பிராஜாவுரிமை பெற்றவரோ அல்லது வதிவிட உரிமை பெற்றவரோ பொறுப்பாளிகளாகும். இது ... Read More
“கிழக்கான் என்னும் பிரதேசவாதம் விடிவிற்கு வழிவகுக்காது” -அரசியல் அவதானிகள்
ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டு ரிஎம்விபியினரைச் சந்தித்தோர்.. 'கிழக்கான் என்னும் பிரதேசவாதம் விடிவிற்கு வழிவகுக்காது" -அரசியல் அவதானிகள்... கிழக்கான் என்கிற கோஷத்துடமான ஐந்திற்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடந்தவாரம் மட்டக்களப்புக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துi ரயாடியுள்ளனர். இதன்போது கிழக்கின் அபிவிருத்தி, கிழக்கு தொடர்ந்தும் ... Read More
இ.போ.சபையைச் சேர்ந்த 20000 தொழிலாளர்கள் பாரிய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இறங்க தீர்மானம்
இலங்கை போக்குவரத்துச் சபையைச்சேர்ந்த ஊழியர்கள் பாரிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளதாக லக்பிம நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது 16 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனப் போக்குவரத்து அமைச்சருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ள போதிலும் இதுவரையிலும் உரிய பதில் கிடைக்கவில்லை என அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் செயலாளர் சேபாலலியனகே தெரிவித்துள்ளார் உரிய தினத்தில் சம்பளத்தை வழங்காமை வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக் கொடுப்பனவு வழங்கப்படாமை ஊழல் மோசடி என்பவை ... Read More
மாகாணசபைத் தேர்தல்கள் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் திகதி நீடிப்பு
வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணசபைத்தேர்தல்களில் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலஎல்லை ஜூலைமாதம் 10ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது தபால் மூலம் வாக்களிப்பவர்கள் விண்ணப்பப்படிவங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு குறித்த திகதிக்குமுன்னர் அனுப்பிவைக்கப்படவேண்டும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு கடந்;த மாதம் 23ம் திகதியிலிருந்து விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது வேட்பாளர் பெயர்பட்டியல் அறிவிக்கப்பட்டு 10நாட்களுக்குள் இந்த விண்ணப்பங்கள் ஒப்படைக்கப்பட வேண்டிய போதிலும் வாக்காளர் அட்டைகளைத் தயார்படுத்தும் பணிசற்று தாமதமாகி ... Read More
காதல் ஜோடிக்கு நீதிமன்ற தண்டனை
அநுராதபுரம் நுவரவௌ பகுதியில் காதல் ஜோடி ஒன்றை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்து அநுராதபுரம் நீதவான் ருச்சிர வெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தினர் இவர்கள் இருவருக்கும் தலா ஆயிரத்து ஐநூறு ரூபா தண்டம் விதித்த நீதவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாதகால சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் இவர்கள் இருவரும் அநுராதபுரம் ஹேனவத்த மற்றும் இராஜாங்கனைப் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனக் கூறப்பட்டது. ... Read More
மரண தண்டனை கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
மரண தண்டனைக் கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மரண தண்டனைக் கைதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் . இதற்கான திட்டத்தை அதிபர் முஷாரப்புக்கு அரசு அனுப்பும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஜா கிலானி பாராளுமன்றத்தில் அறிவித்தார். கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பெனாசிர் பூட்டோவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இத்திட்டத்தை ... Read More
25 சடலங்களை ஐ.சி.ஆர்.சி.யூடாக புலிகளிடம் ஒப்படைக்க வவுனியா நீதிவான் பணிப்பு
வவுனியா ஆஸ்பத்திரியில் படையினரால் ஒப்படைக்கப்பட்ட 25 சடலங்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட நீதிபதி எம்.வை.எம்.இர்சடீன் பணித்துள்ளார். வன்னியில் சிராட்டிக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறி 25 பேரது சடலங்களை வெள்ளிக்கிழமை மாலை வவுனியா ஆஸ்பத்திரியில் படையினர் ஒப்படைத்தனர். தனித்தனியே பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்ட இந்தச் சடலங்கள் தொடர்பான மரண விசாரணை நேற்றுக் காலை ஆஸ்பத்திரி பிரேத அறையில் நடைபெற்றது. ... Read More
துவக்கு சூட்டில் பிள்ளையான் குழு பொறுப்பாளர் காயம்
அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிள்ளையான் குழுவின் அப்பகுதிப் பொறுப்பாளர் படுகாயமடைந்துள்ளார். ஆலையடிவேம்பில் பிள்ளையான் குழு அலுவலகத்திற்கு அருகிலேயே வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. முகாம் பொறுப்பாளரான கருணாரட்ணம் மனோகரன் (வயது 32, சின்னக் கோவில் வீதி, வீரமுனை) என்பவரே படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அம்பாறை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அந்தப் ... Read More
இறம்பைக்குளத்தில் குடும்பப்பெண் சுட்டுக்கொலை
வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இளம் குடும்பப்பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சூசைப்பிள்ளையார் குளம் மயான வீதியில் இறம்பைக்குளம் தேவாலயத்திற்கு பின்புற வீதியிலேயே வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. புடவைக் கடையொன்றில் கடமையை முடித்துக் கொண்டு தனது கணவனுடன் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே ஆயுதபாணிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்தப் பெண் உயிரிழந்தார். வன்னியில் மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த நாகராசா ... Read More
விமல் வீரவன்சவுடன் பிள்ளையான் சந்திப்பு
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) நேற்று சனிக்கிழமை காலை விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியினரைச் சந்தித்துப் பேச்சுகள் நடத்தியுள்ளார். பத்திரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்திலேயே நேற்றுக் காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது. பிள்ளையானுடனான இந்தச் சந்திப்பில் விமல் வீரவன்சவுடன் கட்சிப் பொதுச் செயலாளர் நந்தன குணதிலகவும் வேறுசிலரும் கலந்துகொண்டனர். இருதரப்பு புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக விமல் வீரவன்ச தெரிவித்தார். இது ... Read More
ஆண்டான்குளம், பரப்புக்கடந்தான் பகுதிகளை கைப்பற்றியதாக படையினர் அறிவிப்பு
மன்னாரில் ஆண்டான் குளம் மற்றும் பரப்புக்கடந்தான் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மன்னாரில் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதலின் தொடர்ச்சியாகவே ஆண்டான்குளத்தையும் பரப்புக்கடந்தானையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆண்டான்குளம் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12 மணிநேர கடும் சமரையடுத்து ஆண்டான்குளம் பகுதியை படையினர் வெள்ளிக்கிழமை மாலை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. இதேநேரம் பரப்புக்கடந்தான் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்ற கடும் சமரையடுத்து நேற்று நண்பகலளவில் கைப்பற்றப்பட்டதாகவும் படையினர் ... Read More
ஊரடங்கு நேரம் அடிக்கடி மாற்றம் குடாநாட்டு மக்கள் பெரும் பாதிப்பு
யாழ். குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தில் அடிக்கடி படைத் தரப்பினர் மாற்றங்களைக் கொண்டு வருவதனால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வருகின்றார்கள். கடந்த வாரத்தில் மட்டும் குடாநாட்டில் நான்கு தடவைகள் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த பல மாதங்களாக இரவு 9.00 மணியில் இருந்து அதிகாலை 4.00 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் கடந்த வாரம் திடீரென படைத் தரப்பினால் இரவு 7.00 மணியில் இருந்து அதிகாலை 5.00 மணி ... Read More
பாதுகாப்பைக் காரணம் காட்டி வவுனியாவில் இரு முக்கிய வீதிகள் போக்குவரத்துக்கு தடை
வவுனியா நகரில் பாதுகாப்புக் காரணங்களைக் கூறி இரு முக்கிய வீதிகளைப் படையினர் மூடியுள்ளனர். குருமண்காடு முதலாம் ஒழுங்கையும், கண்டி வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீதியுமே மூடப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு படையினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்விரு முக்கிய வீதிகளும் மூடப்பட்டதால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பதாகவும் எனவே உடனடியாக இந்த வீதிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் வன்னி பிராந்திய ... Read More
மீள்குடியமர்வை வலியுறுத்தி மூதூர் இடம் பெயர்ந்தோர் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்
தமது வாழ்விடங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படுவதை ஆட்சேபித்து மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. தம்மை சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்துவதற்குப் பதிலாக வேறு இடங்களில் குடியமர்த்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை சுட்டிக்காட்டி வெளியான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த 2006 ஏப்ரல் மாதம் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ... Read More
வவுனியா ஆஸ்பத்திரியில் புலிகளின் 25 சடலங்கள்
வவுனியா ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை மாலை விடுதலைப் புலிகளினுடையதெனக் கூறி 25 சடலங்களை படையினர் ஒப்படைத்துள்ளனர். மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட புலிகளது சடலங்களே இவையென படையினர் தெரிவித்துள்ளனர். தனித்தனியாக பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டே 25 சடலங்களும் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன. இவை தொடர்பான மரணவிசாரணை சனிக்கிழமை நடைபெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
... Read More
களுவன்கேணிப் பகுதியில் காணாமற் போன ஈ.பி.டி.பி. உறுப்பினரின் சடலம் கண்டுபிடிப்பு
வெட்டுக்காயங்களுடன் புதைகுழியிலிருந்து மீட்பு வாழைச்சேனை களுவன்கேணி பகுதியில் கடந்த 20 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன ஈ.பி.டி.பி. உறுப்பினரின் சடலம் வெள்ளிக்கிழமை புதைகுழியொன்றிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் தலையில் பலத்த வெட்டுக் காயத்துடன் இவரது சடலம் கல்குடா விநாயக புரம் 2 ஆம் குறுக்குத்தெருவில் பற்றைக் காட்டினுள் புதைகுழியொன்றிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. குடும்பஸ்தரான குணசீலன் (28 வயது) என்பவரது சடலமே தோண்டியெடுக்கப்பட்டது. கடந்த 20 ஆம் திகதி ... Read More
ஒட்டுசுட்டான் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
வன்னியில் ஒட்டுசுட்டான் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை கடும் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டானுக்கு வடக்கே சுமார் பத்து கிலோமீற்றர் தூரத்தில் பரப்புவெட்டுவான் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீதும் அவர்களது விசேட படையணித் தலைமையகம் மீதுமே இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.
... Read More
வவுனியா ஆஸ்பத்திரியில் புலிகளின் 25 சடலங்கள்
வவுனியா ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை மாலை விடுதலைப் புலிகளினுடையதெனக் கூறி 25 சடலங்களை படையினர் ஒப்படைத்துள்ளனர். மன்னார் சிராட்டிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட புலிகளது சடலங்களே இவையென படையினர் தெரிவித்துள்ளனர். தனித்தனியாக பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டே 25 சடலங்களும் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன. இவை தொடர்பான மரணவிசாரணை இன்று நடைபெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
... Read More
புதிய பொலிஸ்மா அதிபராக ஜயந்த விக்ரமரத்ன
புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன நியமிக்கப்படவுள்ளார். இலங்கையின் 31 ஆவது பொலிஸ் மா அதிபராக எதிர்வரும் 2 ஆம் திகதி இவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேராவின் பதவிக்காலம் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதையடுத்து அவரது இடத்திற்கே ஜயந்த விக்ரமரத்ன நியமிக்கப்படவுள்ளார். 1943 ஆம் ஆண்டு கம்பஹா மெம்முல்ல வீகொட ... Read More
மகேஸ்வரனின் நெருங்கிய ஆதரவாளர் யாழ்ப்பாணத்தில் வெட்டிக்கொலை
யாழ். மாநகர சபை முன்னாள் ஊழியரும் இளம் குடும்பஸ்தருமான ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வைமன் வீதியிலுள்ள இவரது வீட்டிற்குள் அதிகாலை 1.40 மணியளவில் நுழைந்த சிலரே இவரை வெட்டிக் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படுகொலை செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரனின் 6 ஆம் மாத நினைவு தின நிகழ்வுகள் நேற்று யாழ்நகரில் நடைபெற்றன. இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இவர் வீட்டின் வெளிப்புற விறாந்தையில் ... Read More
