மல்லாவி நோக்கி 45 கிலோமீற்றர் தூரத்திற்கு பின்வாங்கியுள்ள புலிகள்
கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வன்னிமீட்புப்போர் நடவடிக்கைகளில் அரச படையினரின் 57 ஆவது படையணி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்துக்குள் மொத்தம் 42 கிலோமீற்றர் தூரம்வரை முன்னேறிவிட்டதாகவும் இதன் மூலம் புலிகளிடமிருந்து அரசபடையினர் 600 சதுரகிலோமீற்றர் பரப்புடைய பெரும் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட பெரும் பிரதேசப் பரப்பிலும் இராணுவத்தின் 57 ஆவது படையணி நிலைகொண்டு ... Read More
பாதுகாப்பு செயலாளர் அம்பாறை விஜயம்
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்ட பாதுகாப்புக் குழுவொன்று வியாழக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்து தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளது. பாதுகாப்புச் செயலாளருடன் கூட்டுப்படைத்தளபதியான டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண தேர்தலின் பின்னர் முதன் முறையாக அங்கு சென்ற இக் குழுவினர் அப்பிரதேசத்தின் புதிய பாதுகாப்பு நிலைமைகளை கண்காணித்து, மதிப்பீடுகளைச் செய்து ... Read More
காலியில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் பௌத்த விகார?திபதி பொலிஸாரால் கைது
காலி பத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பௌத்த விகாரையொன்றின் விகாராதிபதி பெருந்தொகை வெடி பொருட்களுடன் வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர, கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு தற்போது விசாரணைக்காக காலி பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் கூறினார். சுமார் 60 கிலோ எடையுடைய வெடி பொருட்களை விகாரையில் மறைத்து வைத்திருந்த போதே அவை ... Read More
வவுனியாவில் முன்னாள் ரெலோ உறுப்பினரின் மனைவி சுட்டுக்கொலை
வவுனியா செக்கடிப்புலவு பகுதியில் முன்னாள் ரெலோ உறுப்பினர் ஒருவரது மனைவி புதன்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வவுனியா மன்னார் வீதியில் செல்வ?நகர் பகுதியிலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது வீட்டினுள் நுழைந்த ஆயுதபாணிகள் இவரை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேரி ஜோசப்பின் பாஸ்கர் (50 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது கணவர் பாஸ்கர் முன்னாள் ... Read More
ரஷ்யாவின் சரக்கு விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 9 பேர் பலி
ரஷ்யாவின் சரக்கு விமானமொன்று விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 9 சிப்பந்திகளும் பலியாகியுள்ளனர். ஊரல் மாநிலத்தில் உள்ள செலியாபின்ஸ்க் நகரில் இருந்து பெர்ம் என்ற நகருக்கு இச்சரக்கு விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டதும் விமான சிப்பந்திகளிடம் இருந்து விமான போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிக்கு ஒரு செய்தி வந்தது. அதில் விமானியின் அறைக்குள் புகை புகுந்து விட்டது. இதனால், விமான நிலையம் திரும்பப்போவதாகவும் அவசரமாக விமானத்தைத் தரை இறக்கப்போவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ... Read More
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் பகுதிகளில் புலிகளின் நிலைகள் மீது கடும் விமானத்தாக்குதல்
வடக்கே வியாழக் கிழமை காலை மூன்று மாவட்டங்களில் விமானப் படை விமானங்கள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது அதிகாலை முதல் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக விமானப் படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; மன்னார் புளியங்குளம் பகுதியில் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டர்களே ... Read More
அமெரிக்க மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் எழுந்தார்
அமெரிக்காவில் மருத்துவர் ஒருவரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர் 17 மணித்தியாலங்களின் பின்னர் உயிருடன் எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கார்ல்ஸ்டன் பகுதியை சேர்ந்த விலா தோமஸிற்கு இரண்டு முறை மாரடைப்பு வந்து உயிர் மீண்டவர். சமீபத்தில் அவருக்கு மூளை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அவருக்கு ""சுவாச சாதனத்தின்' மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. ... Read More
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 3 பொலிஸார் காயம்
வவுனியா செக்கடிப்புலவு பகுதியில் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் உதவி இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட மூன்று பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர். செக்கடிப்புலவு செல்வாநகரில் சுட்டுக்கொல்லப்பட்ட, முன்னாள் ரெலொ உறுப்பினரது மனைவியின் சடலத்தை பார்வையிடச் சென்ற பொலிஸார் மீதே இந்தக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா மன்னார் வீதியில் செக்கடிப்புலவு பகுதியில் பொலிஸார் இரு ஜீப்களில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஜீப் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் ... Read More
அணுத்திட்டம் தொடர்பான சகல விடயங்களையும் ஈரான் வெளியிடவில்லையென குற்றச்சாட்டு
அணுசக்தி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து விபரங்களையும் ஈரான் வெளியிடவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; அணு ஆயுதங்களை ஈரான் தயாரிப்பதாக ஒரு தகவல் உள்ளது. அது மிகவும் கவலை அளிக்கிறது. அணு ஆயுதங்கள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டிய கடமை ஈரானுக்கு உள்ளது. யுரேனியத்தை செறிவூட்டும் பணியை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கூறியதை ... Read More
மனித உரிமை பேரவையில் உறுப்புரிமை இழந்த 24 மணி நேரத்திற்குள் உரிமை மீறல்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அங்கத்துவத்தை இழந்ததாக அறிவிக்கப்பட்ட இருபத்துநாலு மணி நேரத்துக்குள்ளேயே ஸ்ரீலங்காவில் துரதிர்ஷ்ட வசமாக மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. இவ்வாறு நேஷன் பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய ஊடகவியலாளர் கீத் நோயார் இனம்தெரியாத ஆயுத பாணிகளால் கடத்தப்பட்ட சம்பவம் ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் பாதுகாப்புக்குச் சவாலாக நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமன்றி ஸ்ரீலங்கா மனித உரிமைகள் சபை உறுப்புரிமை இழந்த 24 மணிநேரத்துக்கு ... Read More
கதிர்காமர் கொலை வழக்கில் விடுதலையானோரில் ஒருவர் சிறைச்சாலையில் இல்லை
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைக் கொலை செய்தது சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் பின்னர் பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தவர்களுமான ஐந்து சந்தேகநபர்களையும் பிரதம நீதியரசரின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு பிரதான நீதிவான் நிசாந்த ஹபுஆராச்சி அவர்கள் கடந்த 26ஆம் திகதி விடுதலை செய்யும் படி கட்டளை வழங்கினார். இவ்வாறு பிரதம நீதியரசரின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு பிரதான நீதிவான் அவர்களால் ... Read More
நேற்று கடத்திச் செல்லப்பட்ட 7வயது சிறுவன் விடுவிப்பு
நேற்று கொட்டாஞ்சேனையில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட பாடசாலைச் சிறுவனான சுபாஸ்ரவீன் ரவீந்திரகுமார் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த சிறுவனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் என்ன நோக்கத்திற்காக மேற்படி சிறுவனைக் கடத்திச் சென்றார்கள் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொலிசார் சிறுவனின் படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ... Read More
புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் 6 பொதுமக்கள் பலி, 12 பேர் காயம்
புலிகள் இன்று அதிகாலை யாழ் நகரப் பகுதி மீது நடத்திய ஆட்லறித் தாக்குதலில் 6 பொது மக்கள் கொல்லப்பட்டு, 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளான கொழும்புத்துறை, குருநகர் ஆகிய பகுதிகளை நோக்கி புலிகள் 20 தடவைகள் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தெழுச்சி நிகழ்வில் ஆயிரக் கணக்கில் மக்கள் புலிகளின் பலத்த எச்சரிக்கை மற்றும் எதிர்ப்பையும் மீறிக் கலந்து ... Read More
குடும்பப் பெண் ஒருவர் வவுனியாவில் சுட்டுக் கொலை; கிளைமோர்த் தாக்குதலில் 3 பொலிசார் காயம்
நேற்றிரவு வவுனியா செல்வ நகரில் வைத்து பெண் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் மேரி ஜோசப் (54 வயது) எனும் மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் கணவர் பாஸ்கரன் கடந்த 22 நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் எனவும், இவர் முன்னாள் ரெலோ இயக்க உறுப்பினர் எனவும் வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிசார் மேற்படி கொலைச் சம்பவம் குறித்த ... Read More
கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி 7 வயது மாணவன் கடத்தப்பட்டார்
கொழும்பு விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த கனிஷ்டபிரிவு மாணவனொருவர் இனந்தெரியாதோரால் நேற்று புதன்கிழமை பிற்பகல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் பாடசாலை முடிந்து இந்த 7 வயது மாணவன் வெளியே வந்த போதே அங்கு ஆட்டோ ஒன்றில் காத்திருந்தவர்கள் இந்தச் சிறுவனை ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர். ஆமர் வீதிச் சந்திக்கு அருகில் மகாவித்தியாலய மாவத்தையைச் சேர்ந்த இந்த மாணவன், வழமையாக பாடசாலை முடிவடைந்து சிறிது நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவார். ... Read More
தொண்டர் ஆசிரியர் சுட்டுக் கொலை
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில நேற்று முற்பகல் 11 மணியளவில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள சிறிய ஒழுங்கையொன்றினூடாக இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சங்கானை சிவப்பிரகாசம் மகாவித்தியாலயத்தில் தொண்டராசிரியராகக் கடமையாற்றி வரும் உடுவில் செபஸ்தியார் வீதியைச் சேர்ந்த சின்னத்துரை வேல்சுதாகரன் (31 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ். மாவட்ட ... Read More
ஊடகவியலாளர் உட்பட மூவர் யாழ்ப்பாணத்தில் படுகொலை
"சக்தி' தொலைக்காட்சி மற்றும் சக்தி வானொலியின் யாழ். மாவட்டச் செய்தியாளரும் அவருடன் சென்ற யாழ். செயலக ஊழியரும் நேற்று புதன் கிழமை மாலை யாழ். கல்லுண்டாய் வீதியில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள அதேநேரம், தொண்டர் ஆசிரியர் ஒருவர் நேற்று முற்பகல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். "சக்தி', எம்.ரி.வி. மற்றும் சிரச ஊடகவியலாளரான பரநிருபசிங்கம் தேவகுமார் (34 வயது) மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் ஒன்றாகப் பயணம் செய்த யாழ். கச்சேரி ... Read More
ஸ்ரீலங்காவுக்கு எதிரான போலிப் பிரசாரத்தை அம்பலப்படுத்துவோர் சில தூதுவர்களே
நடப்பு 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்தே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஸ்ரீலங்காவில் வன்னிப் பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக அரச படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கத்துடன் பல்வேறு தவறான அறிக்கைகளை விடுத்து வந்துள்ளன. அவற்றில் பிரதானமாக ஸ்ரீலங்காவில் தமிழ் மக்கள் தொகையாகக் கொல்லப்படுவதாகவே (கூச்ட்டிடூ எஞுணணிஞிடிஞீஞு) ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலம் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய ... Read More
23 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு,படகில் புதிய வகை போதைப்பொருள் கடத்திவரப்பட்டதாக சந்தேகம்
கச்சதீவு கடற்பரப்பில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு ஒரு நாள் விளக்கமறியலில்; வைக்கப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மீனவர்கள் பயணம் செய்த 4 படகுகளில் ஒரு படகின் கீழ்ப்பகுதியில் ஒட்டப்பட்ட நி;லையில் கண்டு பிடிக்கப்பட்ட பசைத்தன்மையுடைய பொருள் புதியரக ஓப்பியம் வகையிலான போதைப்பொருளாக இருக்கலாமோ என பொலிசார் ... Read More
ஐ.நாவின் பிரதிநிதிகள் குருமுதல்வர் விக்டர் சூசையை சந்திப்பு:மடு நிலவரம் மனிதாபிமானப்பணிகள் குறித்தும் விளக்கம்!
ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான இலங்கை பிரதிநிதிகளுக்கும்,மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை க்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் ஆஜர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது மன்னாரில் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் தொடரும் மோதல்களில் மக்களின் இடம்பெயர்வுகள்,அதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசும்,விடுதலைப்புலிகளும் மடுப்பகுதியில் மக்களை மீளகுடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க செய்வதற்கான முன் முயற்சிகள் குறித்தும்,குரு முதல்வர் விக்டர் சூசை ஐ.நாவின் இலங்கை ... Read More
