தற்கொலை குண்டுதாரிக்கு உதவியதாக கைதான பெண் சி.ஐ.டி. விசாரணைக்குட்பட்டவேளையில் மரணம்
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் (சி.ஐ.டி.)விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த பெண்ணொருவர் திங்கட்கிழமை காலை மரணமடைந்துள்ளார். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவருக்கு உதவியதாகக் கூறி ராணி என்ற பெண் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். இந்தப் பெண் சி.ஐ.டி.யினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றுக்காலை திடீரென மரணமானார். இவரது மரணம் குறித்து ... Read More
ஐ.நா.வின் அமைதிப்படை கொங்கோ போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஐ.நா.வின் அமைதிப் படையினர் அங்குள்ள போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை ஐ.நா. மூடி மறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தங்கம் மற்றும் யானைத் தந்தங்களை கடத்தும் நடவடிக்கையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானிய மற்றும் இந்திய துருப்புகள் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நம்பத்தகுந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டியே இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2007 இல் இவற்றில் சில குற்றச்சாட்டுக்களை ஐ.நா.விசாரித்த ... Read More
உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
உரும்பிராய் கிழக்கில் திங்கட் கிழமை காலை குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பலாலி வீதியிலுள்ள இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகளே அவரை வீட்டிற்கு வெளியே அழைத்து சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர். தர்மலிங்கம் சிவநேசன் (33 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
... Read More
உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்தில் 19 பேர் பலி
உக்ரைனின் ஹெலிகொப்டரொன்று கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 19 பேர்பலியாகியுள்ளனர். கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மேடைப்பகுதியொன்றில் ஹெலிகொப்டரின் வால்பகுதி மோதியமையினாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. நப்ரோகாஸ் கம்பனிக்குச் சொந்தமான மி-8 என்னும் இக் ஹெலிகொப்டரில் விபத்து இடம்பெற்ற சமயம் 20 பேர் இருந்ததாகவும் இதில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் இக் கம்பனியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் உக்ரேனின் எல்லைக் காவற்படையினரின் ஹெலிகொப்டரொன்று இப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது. ... Read More
புலிகள், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் லண்டன் மேயர்
பிரிட்டஷ் அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிட்டு புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளையும் அதற்கு ஆதரவான அமைப்புகளின் செயற்பாடுகளையும் பிரிட்டனில் சட்டபூர்வமாகத் தடைசெய்துள்ளபோதும் புலிகள் இயக்கத்துக்குச் சார்பான கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள் போன்ற பகிரங்க நிகழ்வுகள் தொடர்ந்தும் பிரிட்டனில் நடைபெற்றே வருகின்றன. மேலும், இந்த நிகழ்வுகளில் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு பிரிட்டிஷ் அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு பிரிட்டனில் தடை செய்யப்பட்ட ... Read More
இரணைமடுவில் விமானத் தாக்குதல்
கிளிநொச்சி இரணைமடு பகுதியில் திங்கட்கிழமை காலை விமானப்படைவிமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன. இரணைமடு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் விமான ஓடு பாதையை அண்டியிருந்த கட்டிடத்தின் மீதே குண்டுவீச்சு விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கொமாண்டர் அன்றூ விஜேசூரிய தெரிவித்தார். விமானப் படையினரின் இந்தத் தாக்குதலில் கட்டிடத்திற்கு பலத்த சேதமேற்பட்டதை விமானிகள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இரணைமடு ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட புலிகளின் இலகுரக விமானங்களே அதிகாலை ... Read More
சர்வதேச பயங்கரவாதப்பட்டியலில் நான்காவது இடத்தில் தாவூத் இப்ராஹிம்
தலைமறைவாக உள்ள பயங்கரவாதிகள் 10 பேர் அடங்கிய பட்டியலை அமெரிக்காவின் போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் மும்பை தாதா தாவுத் இப்ராஹிமின் பெயர் 4வது இடத்தில் உள்ளது உலிகிலேயே மிகப்பபெரிய கோடீஸ்வரர்களின் பெயர்களைத்தான் அந்த பத்திரிகை வெளியிடுவது வழக்கம் தற்போது தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகளின் பெயர்களை அந்தப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் முதலில் இருப்பவர் அல்குவைதா தலைவர் ஒசாமாபின் லேடன் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் தாவூத் ... Read More
ஆஸ்திரியாவில் மகளை 24 வருடங்கள் அறையில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய தந்தை கைது
ஆஸ்திரியாவில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடொன்றில் தனது மகளை சுமார் 24 வருடங்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்துவந்ததாக சந்தேகிக்கப்படும் தந்தையொருவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 73 வயதான இந்நபர் தனது மகள் மூலமாக மேலும் 6 பெண் குழந்தைகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் இச் சம்பவம் அந்நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இவ் அறை தூங்குவதற்கான, சமைப்பதற்கான வசதிகளுடன் கழிவகற்றல் வசதியினையும் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More
சீனாவில் இரு ரயில்கள் ஒன்றுடனொன்று மோதிய கோர விபத்தில் 70 பேர் பலி; 400 பேர் காயம்
மேலும் அதிகளவானோர் ஆபத்தான நிலை சீனாவின் கிழக்குப் பகுதியில் இரு பயணிகள் ரயில்கள் ஒன்றுடனொன்று மோதியதில் 70 பேர் பலியானதுடன் 400 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து கோடைகால சுற்றுலாத் தளமான கியுங்டாவோவுக்கு பயணித்துக் கொண்டிருந்த ரயில் தடம்புரண்டு யான்ரையிலிருந்து ஷுஸோயுவுக்கு பயணித்துக் கொண்டிருந்த ரயிலுடன் மோதியுள்ளது. பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்ட 10 பெட்டிகளைக் கொண்ட ரயில் உருண்டு கால்வாய்க்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அதிகளவான பயணிகள் ஆபத்தான நிலையிலிருப்பதாக ... Read More
காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மனைவியான சுதர்சினி எம்.பி(?)
காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மனைவியான சுதர்சினி பெர்ணான்டோவுக்கு தேசிய பட்டியல் மூலம் எம்.பி ஆசனமொன்று வழங்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சரின் மறைவை அடுத்து வெற்றிடமாகியுள்ள கட்டானைத் தேர்தல் தொகுதியின் புதிய அமைப்பாளராக அவரது மனைவி சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்படி நேற்று முன்தினம் முதல் சுதர்சனி பெர்ணான்டோ உத்தியோகபூர்வமாக அரசியலில் பிரவேசித்துள்ளார். இவரை தேசிய ... Read More
லண்டனில் புலிகளுக்காக சர்வதேச ரீதியில் பிரசாரம்
லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பிரபல ஒலிபரப்பு நிறுவனமாகிய `இன்ரர்நெஷனல் புரோட்காஸ்ரிங் கோப்பறேஷன்' (International Broadcasting Corporation) விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் பிரபாகரன் மற்றும் அவருடைய பயங்கரவாதக் குழுவினருக்கும் சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் இதன் மூலம் லண்டனிலிருந்து உலகம் முழுவதும் புலிகள் இயக்கத்துக்காகத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் பிரபல வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இதுபற்றி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் குறித்த சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பிரிட்டனில் ... Read More
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு இலங்கைக் கடற்படையில் உப லெப்டினென்ற் பதவி வழங்கப்படவுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. தற்போது பிரித்தானிய றோயல் கடற்படையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு இன்னும் சில மாதகால பயிற்சியின் பின்னர் இலங்கைக் கடற்படையில் இந்தப்பதவி வழங்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகங்களில் கூறப்படுகிறது. ... Read More
மஸ்கெலியாவில் திடீர் சுற்றிவளைப்பு; மூவர் கைது
மஸ்கெலியா நகரில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை திடீரென மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளத் தவறிய மூவர் கைது செய்யப்பட்டனர். அட்டன், சாமிமலை, நோட்டன் ஆகிய பிரதான வீதிகளிலேயே இத்திடீர் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
... Read More
அமைச்சர் ஜெயராஜ் படுகொலைச் சம்பவம் சிங்களவர்களுக்கும் தொடர்புள்ளதாக தெரிவிப்பு
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் சிங்களவர்களும் மறைமுகமாக சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதான 9 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து இது தெரியவந்துள்ளதாகவும் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர். இப்படுகொலை தொடர்பில் இரு குழுக்களாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஒரு குழுவினர், தற்கொலையாளி பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி அமைச்சருக்கு ... Read More
கல்கமுவ பஸ் நிலையத்தில் சக்திமிக்க நேரக்கணிப்புக் குண்டு
பயணிகளின் தகவலால் செயலிழக்க வைப்பு கல்கமுவ பஸ் நிலையத்திலிருந்து திங்கட்கிழமை காலை சக்திமிக்க நேரக்கணிப்புக் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் உட்புறப் பகுதியில் கிடந்த சிறிய பொதியொன்றில் ஏற்பட்ட சந்தேகத்தயைடுத்து அதுகுறித்து பயணிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இந்த சக்திமிக்க மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பரிசுப் பொதிபோல் பொதிசெய்யப்பட்டிருந்த பெட்டியினுள் மண்ணிறக் கடதாசியால் சுற்றப்பட்டு இந்த மோட்டார்க் குண்டு வைக்கப்பட்டிருந்தது. சுமார் 7.30 மணியளவில் ... Read More
புலிகளின் பணத்தில் பிரசாரம் செய்த கனடா பிரதமர்
கனடாவில் கடந்த தேர்தலில் கனடிய கொன்சர்வேட்டிவ் கட்சி பெரும் வெற்றியடைந்து ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த லிபரல் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய போல் மாட்டின் அந்தக்காலகட்டங்களில் கனடாவிலுள்ள புலிகள் இயக்கத்தினர் ஆதரவாளர் தமிழர்களிடமிருந்து சேகரித்த நிதியை தனது கட்சிப் பிரசாரங்களுக்கும் தன்னைப் பிரசாரப்படுத்தவும் பயன்படுத்தி தன்னை உயர்த்திக் கொண்ட நபர் என வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கனடாவின் முன்னாள் பிரதமர் போல் மாட்டின் போலவே லிபரல் கட்சியைச் சேர்ந்த ... Read More
பயணிகள் பஸ் மீதான குண்டுத்தாக்குதலை தடுத்து நிறுத்துவது குறித்து உயர்மட்ட மாநாடு
பொலிஸ்மா அதிபர் தலைமையில் விரிவாக ஆராய்வு பயணிகள் பஸ்கள் மீதான குண்டுத்தாக்குதல்களை தடுப்பது குறித்து சனிக்கிழமை பொலிஸ்மா அதிபர் தலைமையில் உயர்மட்ட மாநாடொன்று நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிலியந்தலை பஸ்நிலையத்தில் இ.போ.ச. பஸ்ஸினுள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டதுடன் 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தநிலையில் பயணிகள் பஸ்களின் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு அவசர பணிப்புரை விடுத்திருந்தது. இதற்கமைய சனிக்கிழமை பொலிஸ் ... Read More
மன்னார் குரு முதல்வர் மடுவுக்கு சென்றார்
மடுத்தேவாலயப்பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் வெள்ளிக்கிழமை வந்ததையடுத்து மன்னார் மறை மாவட்டத்தின் குரு முதல்வர் (விக்கார் ஜெனரல்) வண.பிதா. விக்டர் சோசை அடிகளார் சனிக்கிழமை அங்கு சென்றார். இராணுவ அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட அவர் பூட்டப்பட்டிருந்த மடுக்கோவிலின் கதவைத்திறந்து உள்ளே சென்று பார்வையிட்டதாக சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார். இராணுவ அதிகாரிகளும் தன்னுடன் வந்ததாகவும் கூறினார். மடுத்தேவாலயத்திலோ, ஆலயப்பகுதியிலோ படையினர் காணப்படவில்லை எனவும் அப்பகுதிக்கு வெளியே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ... Read More
கட்டுநாயக்காவில் தேடுதல் 24 பேர் கைது
கட்டுநாயக்கா அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள கல்கஸ்தொட என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிவரையும் தேடுதல் சுற்றிவளைப்பு இடம்பெற்றது. விமானப்படையினரும், பொலிஸாரும் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு தமிழ் இளைஞனும், ஒரு தமிழ் யுவதியும் அடங்குவார்கள். இங்குள்ள விடுதிகள், தொழிலாளர் தங்குமிடங்கள் என்பன தீவிரமாக சோதனையிடப்பட்டன. கட்டுநாயக்காவில் உள்ள தொழிற்சாலைகளில் இவர்கள் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ... Read More
8 இராணுவத்தினர், 35 புலிகள் மணலாறு மோதலில் பலி; 45 பேர் படுகாயம்
படைத்தரப்பு தெரிவிப்பு மணலாறு பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் மற்றும் ஷெல் தாக்குதலில் எட்டுப் படையினர் கொல்லப்பட்டதுடன், 45 படையினர் வரை படுகாயமடைந்துள்ளதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 35 பேர் வரை கொல்லப்பட்டதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர். இதேநேரம் மணலாறு பகுதியில் சனிக்கிழமை காலை படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியொன்றைத் தாங்கள் முறியடித்துள்ளதாகவும் படையினருக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். மணலாறில் எத்தவெட்டுனுவெவ, ஆண்டான்குளம் மற்றும் ... Read More
