சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் விசேட அழைப்பின் பேரில் பங்குகொண்டு ஈபிடிபி செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை. சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவும் இந்த நாட்டை வழிநடத்திச்செல்பவருமாக இந்த மாநாட்டு நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குகின்ற கௌரவ ஐனாதிபதி அவர்களே!.... சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களே!…. உறுப்பினர்களே! அமைச்சர்களே!.... பாராளுமன்ற உறுப்பினர்களே!… சக கட்சிகளின் பிரதிநிதிகளே!.... உங்களுக்கு வணக்கம்! எமது இலங்கைத்தீவில் பாரம்பரியமாகவும், பெருவிருட்சமாகவும் ... Read More
ஆட்கடத்தல், இரவுக் கொள்ளைகளை தடுக்க சகல தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்
வவுனியாவில் அண்மைக் காலமாக தொடரும் இரவுநேரக் கொள்ளைகள், ஆட்களைக்கடத்தும் சம்பவங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றபோது இவற்றைத் தடுப்பதற்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும் சகல தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட பிரதி கட்டளைத் தளபதி, 21 ஆவது பிரிகேட் தளபதி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், பிரதேச செயலாளர்கள், வர்த்தகர்கள், ... Read More
இந்திய வம்சாவளி வர்த்தகர்களிடையேயான ஒத்துழைப்பை பலப்படுத்த துரித நடவடிக்கை
உலகளாவிய ரீதியில் வாழும் இந்திய வம்சாவளியினரின் மத்தியிலுள்ள வர்த்தகர்களுக்கிடையில் வர்த்தக ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய வம்சாவளி உலக வர்த்தக சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவரும் மொரிசியஸுக்கான இலங்கை தூதுவருமான தெ.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியினரின் உலக மகாசபையின் மூன்று நாள் மத்திய குழுக் கூட்டம் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. அதன் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; ... Read More
வன்னி படைத் தளத்திற்கு இராணுவத் தளபதி திடீர் விஜயம்
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படைத்தளத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமை குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் சனிக்கிழமை கலந்துரையாடியுள்ளார். வன்னிபடைத்தளத்திற்கு அவர் விஜயம் செய்தபோது இராணுவத்தளபதியை வன்னி பிரதேச கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய வரவேற்றார். இவருடன் சிரேஷ்ட இராணுவ குழுவொன்றும் அங்கு சென்றது. இதன் போது வன்னியின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராய்ந்ததுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதென ... Read More
வவுனியா மாவட்ட அரச அதிகாரிகளின் வாகனங்கள் மதவாச்சி ஊடாக நேரடியாக செல்ல ஏற்பாடு
வவுனியா மாவட்டத்தில் பணிபுரியும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மதவாச்சி சோதனைச் சாவடியூடாக நேரடியாகவே வாகனங்களில் சென்றுவர உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பேர்னாட் சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா கச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மதவாச்சி ஊடாக வடபகுதி வாகனங்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாவதாக இக் கூட்டத்தில் ... Read More
வவுனியா தேக்கம் காட்டில் குடும்பப்பெண் சுட்டுக்கொலை
வவுனியா தேக்கம்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குடும்பப் பெண்னொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வவுனியா கண்டி வீதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பெண்ணின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர் அல்பிரட் புஸ்பா (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
... Read More
கொழும்பு- புத்தளம் வீதி வாகன விபத்தில் 3 கொள்ளையர்கள் பலி; 4 பேர் படுகாயம்
கொழும்பு- புத்தளம் வீதியிலுள்ள மங்களவெளி என்ற இடத்தில் நேற்றுக் காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் 3 கொள்ளையர்கள் பலியாகியதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலியான 3 கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியெனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; கற்பிட்டி பிரதேசத்தில் கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளைக் கோஷ்டியொன்று ரோசா மினி பஸ்ஸில் தப்பி வந்து கொண்டிருந்தபோது கொழும்பு- புத்தளம் வீதியிலுள்ள மங்களவெளி என்ற இடத்தில் அவர்கள் வந்த மினிபஸ் ... Read More
3 தமிழ்க்கட்சி கூட்டணியுடன் அரசாங்கத்திலுள்ள இடதுசாரி கட்சிகள் இணைந்து போட்டியிட இணக்கம்
தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி என்ற பொது அமைப்பின் கீழ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள மூன்று தமிழ் அரசியல் கட்சிகளுடன் இடதுசாரிக் கட்சிகள் பலவும் இணைந்து போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி என்ற பொது அமைப்பின் கீழ் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்- பத்மநாபா) ஆகிய மூன்று தமிழ்க்கட்சிகளும் கூட்டமைத்துப் போட்டியிடுவதற்கு இணக்கம் ... Read More
மொனராகல மாவட்ட பிரதேச சபையின் உபதலைவர் சுட்டுக்கொலை
மொனராகல மாவட்ட பிரதேச சபையின் உப தலைவர் நாராயணன் முத்துலிங்கம் (வயது 41) நேற்று சனிக்கிழமை மாலை வெள்ளை வானில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மருத்துவரான இவர், தனது மருந்தகத்தை விட்டு வெளியேறுவதற்கு தயாரான போது வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகள் சனிக்கிழமை மாலை 6.05 மணியளவில் இவர்மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட இவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐக்கிய மக்கள் ... Read More
குடாநாட்டின் யுத்த முனைக்கு கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள்
யாழ்.குடாநாட்டின் யுத்த முனைப்பகுதிக்கு கனரக ஆயுதங்களும் பெருமளவு வெடி பொருட்களும் அனுப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக `தமிழ் நெற்' இணையத்தளம் கூறுகையில்; கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிக்கும் தீவுப் பகுதிக்கும் காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக பெருமளவு கனரக போர்த்தளபாடங்களும் வெடிபொருட்களும் கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் போர்த் தளபாடங்களும் வெடி பொருட்களும் இராணுவ வாகனத் தொடரணிகளில் மேற்படி இரு நாட்களும் பலாலி வீதி மற்றும் பருத்தித்துறை வீதியூடாக ... Read More
பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக்குழு இலங்கைக்கு வருகை
பிரித்தானிய அனைத்து கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு இலங்கைக்கு நாளை திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்துக் கட்சிகளின் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தூதுக் குழுவினர் திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனைத்து கட்சிகளின் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான இந்த விசேட சந்திப்பு நாளை திங்கட்கிழமை நண்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ... Read More
கடற்படை உயர்மட்டக் குழு இன்று இந்தியா பயணம்
இலங்கை கடற்படையின் உயர்மட்டக் குழுவொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்லவுள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் டோரா படகுகள் மீதான தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் இருநாட்டு கடற்படையினருக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயவே கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இன்று இந்தியா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இந்திய கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினருடனும் சந்திப்புகளை ... Read More
ஈராக் மோதல்களால் எண்ணெய் விலை அதிகரிப்பு
ஈராக்கின் பிரதான எண்ணெய்க் குழாய் ஒன்று வெடித்துள்ளதால் ஒரு பரல் எண்ணெய்யின் விலை 108.22 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ஈராக்கின் பஸ்றா பகுதியிலுள்ள இக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டிருக்கும் அதேநேரம், எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுவதுடன், இப்பிரதேசத்தின் ஸ்திரத்தன்மையிலும் நிச்சயமற்ற தன்மை காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் களஞ்சியப்படுத்தலில் கையிருப்பு குறைவடைந்ததனைத் தொடர்ந்து அங்கு ஒரு பரல் எண்ணெய்யின் விலை நான்கு டொலரினால் ... Read More
அமெரிக்காவின் அரேகான் நகரில் ஐந்துமாத கர்ப்பமாக இருக்கும் ஆண்
அமெரிக்காவைச் சேர்ந்த தோமஸ் பீட்டில் என்ற ஆண் இப்போது ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தனது மனைவிக்காகக் கர்ப்பமாகவுள்ளாரென்றும் கூறப்பட்டுள்ளது.
இவர் பிறக்கும் போது பெண்ணாக இருந்தார். பிறகு மார்பு மறுகட்டுமானம் செய்து கொண்டு ஆணாக மாறினார். அப்படி மாறியபோதும் கருப்பையையும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான உறுப்புகளையும் அகற்றவில்லை. அவற்றைத் தொடர்ந்து தன் உடலில் வைத்துக் கொண்டார். இவர் மனைவி நான்சி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 ... Read More
ஈராக்கில் தொடரும் மோதல்களில் 130 பேர் பலி பாக்தாத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்
ஈராக் பாதுகாப்புப் படையினருக்கும் ஸியா ஆயுதக் குழுக்களுக்குமிடையிலான மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், தலைநகர் பாக்தாத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமையிலிருந்து நாளை மாலை 5 மணிவரை அமுலில் இருக்குமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் தென்பகுதியிலுள்ள பஸ்ரா நகரில் ஆரம்பித்த மோதல்களில் இதுவரை 130 பேர் பலியாகியுள்ளதுடன், இம் மோதல்கள் பாக்தாத்திற்கும் பரவியுள்ளன. ஸியா மதகுரு மொஹ்டாடா ... Read More
பிரிட்டன், பிரான்ஸுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் அறிவிப்பு
பிரிட்டன் மற்றும் பிரான்ஸுக்கிடையிலான நட்புறவை ஆழமாக வலுப்படுத்துவதற்கான திட்டங்களை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் அறிவித்துள்ளார். தொடர்ந்து உச்சி மாநாடுகளை நடத்தவும் குடிவரவு, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரு நாடுகளும் இணங்கியுள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் புதிய சகாப்தமொன்று உருவாகப் போவதை வரவேற்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி, ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது முழுமையான பங்களிப்பை பிரிட்டன் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். லண்டனில் ... Read More
மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க ஏற்பாடு
அண்மையில் பெய்த அடை மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் விவசாய அழிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சகவாழ்வு மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ச்சியாகப் பெய்த இந்த மழையினால் நெற்செய்கை, மேட்டு நிலப்பயிர்ச்செய்கை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் வெள்ளத்தால் இவை அழிந்துள்ளன. இது தொடர்பாக மன்னார் சகவாழ்வு மன்றம் விவசாய அமைச்சர், விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது. இதேவேளை, இந்த விவசாயிகளுக்கு நட்டஈடு ... Read More
மாத்தறை பஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்
மாத்தறை பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை மாலை சீருடையுடன் நின்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஐவர் கொண்ட குழு மிக மோசமாகத் தாக்கியதால் அவர் படுகாயமடைந்து மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் முன்பு தியகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி மாத்தறைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார். தியகமவில் இவருடன் கருத்து வேறுபாடு கொண்ட சிலர் இவரைத் தாக்கியிருக்கலாம் என ... Read More
கிருஷாந்தி பாலியல் வல்லுறவு கொலை வழக்கு மரண தண்டனை; உயர் நீதிமன்றத்தால் ஊர்ஜிதம்
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை, கிருஷாந்தியின் தாயார் இராசம்மா குமாரசுவாமி மற்றும் இருவரை கொலை செய்தமை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்ட இராணுவ கோப்ரல் ஆர்.டி.சோமரட்ன மற்றும் இராணுவ பொலிஸைச் சேர்ந்த ஜி.பி.பிரியதர்சன, எஸ்.பிரியசாந்த பெரேரா, பீ.ஜி.முத்துபண்டா, ஐ.எம்.ஜயசிங்க ஆகியோரின் மரண தண்டனையை உயர்நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்துள்ளது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் - ... Read More
ஆலையடிவேம்பில் குண்டு வெடிப்பில் இளைஞன் பலி
ஆலையடிவேம்பு முருகன் கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இளைஞனொருவன் உயிரிழந்துள்ளான். சைக்கிளொன்றில் வெடிகுண்டுடன் வந்த இளைஞனே அந்தக் குண்டு வெடித்து உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவரது உடல் மிக மோசமாகச் சிதைவடைந்த நிலையில், அப் பகுதியில் கிடந்ததாகவும் பின்னர் அந்த உடலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
... Read More
