திருமலை மொறவேவ பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை
திருகோணமலை மொறவேவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உப்புவெளிப் பகுதியில் இவர் சென்று கொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிளொன்றில் வந்தவர்கள் இவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர். தலையிலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இவர் அந்த இடத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மொறவேவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான கோணேஸ்வரன் ராஜா (30 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் திருகோணமலை ... Read More
இலங்கைக்கு ஐ.நா. படையை கொண்டுவர திட்டமிட்ட அரச சார்பற்ற நிறுவனத் தலைவி
தலைநகர் கொழும்பில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு இயங்கும் பிரபலமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவியாகச் செயற்பட்டு வரும், தற்போது குறித்த நிறுவனம் சார்பிலும் ஷ்ரீலங்கா அரசாங்கத் தரப்பிலும் சர்ச்சைக்குரிய பெண்மணியாகக் கருதப்படுபவருமான ராமாமானியை ஷ்ரீலங்காவிலேயே தொடர்ந்து தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்காவைச் சேர்ந்த சோடி பவுண்டேஷன் அமைப்பு, கொழும்பிலுள்ள கனடா தூதரகமும் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி அரச சார்பற்ற நிறுவனத்தில் தலைவியாக பணியாற்றும் ராமாமனியின் செயற்பாடுகள் ... Read More
இலங்கை செல்லும் தனது பிரஜைகளுக்கு பிரிட்டன் `எச்சரிக்கை’ அறிவுறுத்தல்
இலங்கை செல்லும் பிரிட்டன் பிரஜைகள் அங்கு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் எந்நேரமும் தாக்குதல்கள் நடைபெறலாம். அத்தகைய தாக்குதல்களில் பிரிட்டிஷ் பிரஜைகள் சிக்கலாமெனவும் அந்நாடு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்; இலங்கையில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அங்கு எங்கும், எந்த நேரத்திலும், தாக்குதல்கள் இடம்பெறலாம். எனவே, அங்கு செல்லும் பிரிட்டிஷ் மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள ... Read More
சர்வகட்சி பிரதிநிதிகள் குழு திட்டமிட்டபடி தீர்வுக்கான இறுதியோசனைகளை தயாரிக்கும்
பேராசிரியர் திஸ்ஸ விதாரண உறுதியான நம்பிக்கை இனநெக்கடிக்கு தீர்வுகாண, அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்று. இறுதித் தீர்வு யோசனை வெற்றிகரமாக வெளியிடப்படுமென அமைச்சரும், பேராசிரியருமான திஸ்ஸ விதாரண `தினக்குரல்'க்கு நம்பிக்கை வெளியிட்டார். இதேவேளை சிங்கள தீவிரவாதிகள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தனது இறுதி யோசனையை வெளியிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறுபான்மை கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆராயும் ... Read More
பிரதமர் பதவியை அடையும் நோக்குடன் நவாஸ் ஷெரீப் இடைத் தேர்தலில் போட்டி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளாரென பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் செய்தித் தொடர்பாளர் சிந்திக்குல் பாரூக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், புதிதாக அமையவிருக்கும் அரசில் பிரதமர் பதவிக்கு நவாஸ் ஷெரீப் போட்டியிட முடியுமென்றார் அவர். நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீபும் தேர்தலில் போட்டியிடுவார். கடந்த 18 ஆம் திகதி நடந்த பாராளுமன்றத் ... Read More
சார்க் உச்சி மாநாட்டை முன்னிட்டு கண்டி பிரதான வீதிகளைப் புனரமைக்க ஜனாதிபதி பணிப்புரை!
கண்டியில் இவ்வருடம் நடைபெறவுள்ள சார்க்| உச்சி மாநாட்டையொட்டி மாநகரின் அனைத்து வீதிகளையும் புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருப்பதாக தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்றது. கண்டி மாநகரின் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஒப்பந்தக் காரர்களுக்கு ஒப்படைப்பது குறித்து பெருந் ... Read More
கலை வணிகத்துறைப் பாடங்கள் இவ்வருடம் முதல் ஆங்கில மொழியில்!
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிப்பு கல்விப் பொதுத்தராதர உயர்தர கலை மற்றும் வணிகத் துறையுடன் தொடர்பான பாடங்களை இவ்வருடம் முதல் ஆங்கில மொழியில் கற்பிக்கும் கல்வி அமைச்சின் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இது குறித்த பிரேரணையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் ... Read More
கற்பிட்டியில் ஏரிக்குள்ளிருந்து 30 கிலோ கிளைமோர் மீட்பு!
ஏரி ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோகிராம் எடையுள்ள 3 கிளைமோர் குண்டுகளையும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயண்படுத்தும் சில கருவிகளையும் கற்பிட்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பொதுமகன் ஒருவர் வழங்கிய இரகசியத் தகவலையடுத்து அப்பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட கற்பிட்டிப் பொலிஸார் நச்சிக்கல்லி எனும் பிரதேசத்திலுள்ள ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்ரிக் பெரல் ஒன்றினுள் இருந்தே இவற்றைக் கண்டு பிடித்துள்ளனர்.பொலிஸாரால் கைப்பற்ற ஆயுதங்களின் ... Read More
அரசியலமைப்புச் சபையை நியமிக்க தெரிவூக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது!- அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவிப்பு
அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் அரசியலமைப்புச் சபையை நியமிப்பது தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் குறைபாடுகள் உள்ளன என்பதனை பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தக் குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்கே பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு இது குறித்து ஆராய்ந்து வருகின்றது. ... Read More
இலங்கை – பாகிஸ்தான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கைக்கு அதிக நன்மை!
பாகிஸ்தான் வர்த்தக சம்மேளனத் தலைவர் கருத்து இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கு சாதகமான வர்த்தக நிலுவையொன்றைக் கொண்டுவந்திருப்பதாக பாகிஸ்தான் வர்த்தக சம்மேளனத் தலைவர் இஜாஸ் அப்பாசி தெரிவித்திருக்கிறார். 2002 ஆகஸ்ட் முதலாம் திகதியன்று இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை 2005 ஜூன் 12 ஆம் திகதியன்று அமுலுக்குவந்தது. அன்றிலிருந்தே இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகள் சூடுபிடித்தன. சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமுலுக்கு வந்த ... Read More
முதலாம் தரத்தில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான இறுதித் தினம் இன்று! – கல்வியமைச்சு அறிவிப்பு
அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும் எனவும் இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை மார்ச் 1 ஆம் திகதிக்குப் பின்னர் கல்வியமைச்சுக்கு அறிவிக்குமாறும் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. முதலாம் தரத்திற்கு இது வரை தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்குமாறும் இவ்வாறு அனுமதிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் பற்றி முறையான விசாரணைகள் நடாத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய ... Read More
அமைச்சர் ரிரோனின் இறுதிச் சடங்குகள் இன்று!
ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான ரிரோன் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் இன்று பொரளை பொது மயானத்தில் நடைபெறும். நோய்வாய்ப்பட்ட நிலையில் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த இவர் கடந்த 26 ஆம் திகதி காலமானார். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரகப் பணியாற்றினார். பின்னர் 2004 முதல் 2006 வரையில் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1941 ஆம் ... Read More
தமது உறுப்பினர்களின் சடலங்களைப் பொறுப்பேற்பதில் புலிகள் தயக்கம்!
படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் வடக்கில் நடைபெற்றுவரும் மோதல்களில் தினமும் பெருந்தொகையான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுவருவதாகவும் அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பொறுப்பேற்க புலிகள் இப்போது பின்வாங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது: வன்னியில் நடைபெற்றுவரும் ... Read More
ஈராக் பிரஜையின் சடலத்தை தமிழ் சிவிலியனாக உலகுக்குக் காட்ட புலிச் சார்பு இணையத்தளம் முயற்சி…!
பிரிகேடியர் உதய நாணாயக்கார குற்றஞ்சாட்டு புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மிகவும் கேவலமான பொய்ப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும். ஈராக் யுத்தத்தில் கொல்லப்பட்ட ஒருவரின் சிதைவுற்ற சடலத்தை மன்னாரில் நடைபெற்ற விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர் ஒருவரின் சடலமாக உலகுக்குக் காட்டும் கீழ்த்தரமான முயற்சியில் அவை ஈடுபட்டுவருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார குற்றஞ்சாட்டினார் நாட்டின் தேசிய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக ... Read More
நேற்று முன்தினம் வட பகுதி மோதல்களில் 13 புலிகள் பலி!
யாழ்ப்பாணம், மன்னார், வெலிஓயா மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 13 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் அறிவித்துள்ளது. யாழ். முகமாலைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இருவேறு மோதல் சம்பவங்களின் போது மூன்று புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இரு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, வவுனியா, கல்லிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினர் நேற்று ... Read More
அக்கரைபற்று பகுதியில் 8 விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது
அக்கரைபற்று அலவேம்படு பகுதியில் நேற்று காலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது விடுதலைப்புலி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பேரை அக்கறைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை பொலநறுவை மன்னாம்பிட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 23 வயது மதிக்கத்தக்க பெண் புலி உறுப்பினர் என சந்திக்கப்படும் பெண் ஒருவரை மன்னாம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் டெய்லி மிரர் இணையம்மேலும் தெரிவித்துள்ளது.
... Read More
சிங்கப்பூரில் வசித்து வந்த புலிகளுக்கு நிதியுதவி வழங்கிய பிரபல தமிழ் வர்த்தகர் கொழும்பில் கைது!
புலிப் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கிய பிரபல வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கதிரேஷன் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நபர் தொடர்பான தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் மிக நீண்ட காலமாக சேகரித்து வந்துள்ளனர். முத்துசாமி இலங்கோவன் என்ற நபர் சிங்கப்பூரில் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்தொகையான நிதியைப் பயங்கரவாதிகளுக்கு ... Read More
விமர்சனங்களுக்கு பதிலளிக்கவே ஜே.வி.பி., ஹெல உறுமயவுடன் சந்திப்பு கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் விளக்கம்
ஜே.வி.பி., ஹெல உறுமயவின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்காகவே அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் உதவிச் செயலாளர் அஞ்சலா கனே அவர்களை சந்தித்து பேசினார் என்று கொழும்பில்ல ஐ.நா.வின் தலைமை அலுவலகம் தெரிவித்தது. இதுதொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த ஐ.நா.வின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ், ஐ.நா.முகவர் அமைப்புக்கள் மீது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஹெல உறுமய ஆகிய தரப்புக்கள் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தன. இந்நிலையிலேயே கடந்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.வின் ... Read More
தெய்வநாயகம்பிள்ளையின் பூதவுடல் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தகனம் ஜனாதிபதி மஹிந்தவும் அனுதாபம்
தொழிலதிபர் வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளையின் பூதவுடல் நேற்று மாலை 4 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பெரும் தொகையான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது. அன்னாரின் இறுதிக்கிரியைகளின் போது அமைச்சர்களான ரோகித்த போகொல்லாகம, பி.இராதாகிருஷ்ணன், ஜனாதிபதி ஆலோசகர்களான ஐ.எச்.எம். அஸ்வர், எஸ்.சதாசிவம், மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா, முன்னாள் இந்து கலாசார அமைச்சர் பி.பி.தேவராஜ் உட்பட பெரும் தொகையான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தொழிலதிபர் விஸ்வப் பிரசாதினி ... Read More
புத்தளத்தில் தேடுதல் 27 தமிழர்கள் கைது
புத்தளம் மன்னார் வீதி வேப்பமடு பிரதேசத்தில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது இரு பெண்கள் உட்பட 27 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 3 மணிமுதல் காலை 8.45 மணிவரை மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புசித்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணரத்ன தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பிரதேசத்தை விசிப்பிடமாகக் ... Read More

