யாழ். திருநெல்வேலியில் தற்கொலைத் தாக்குதல்!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையருகே இன்று காலை இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 4 சிவிலியன்கள் பலியானதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. படையினருக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சைக்கிளொன்றில் குண்டொன்றைப் பொருத்திச் சென்ற தற்கொலையளி அதனை இன்று முற்பகல் 11.20 மணியளவில் வெடிக்கச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து இரண்டு சடலங்கள் மீட்க்கபட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு ... Read More
இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஒத்துழைப்பின்றி தீர்வு காண முடியாது – ஐ.தேக..!
இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஒத்துழைப்பின்றி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பிளவுபடுத்தாமல் ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வொன்றைக் காணும் முயற்சியையே ஐக்கிய தேசியக் கட்சி என்றும் ... Read More
பதினைந்தாவது சார்க் உச்சிமாநாடு கண்டியில்…!
பதினைந்தாவது சார்க் உச்சிமாநாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் கண்டியில் நடாத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாடு தொடர்பான கலந்துரையாடலொன்று கண்டியிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்றதுடன், அதில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியில் நடைபெறவுள்ள 15ஆவது உச்சிமாநாட்டை முன்னிட்டு, கண்டி நகர் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவேண்டுமென, ... Read More
புலிகளது ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து மேலும் ஒரு குடும்பம் தப்பிவந்தது.
அரச கட்டுப்பாடற்ற புலிகளது பகுதியான விடத்தல் தீவிலிருந்து வந்த ஏழு பேரடங்கிய ஒரு குடும்பம் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மன்னார், பள்ளிமுனைக் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதியான மன்னார், பள்ளிமுனைக் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ள ஏழு பேரைக் கொண்ட குடும்பத்தவர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் அவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. புலிகளது கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் தினமும் புலிகளுக்கு ... Read More
புலி ஊடுருவல் குறித்து தமிழகம் உஷார் நிலையில்.
இலங்கை அரச படைகளுக்கும், புலிகளுக்குமிடையே தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்றுவருவதால், புலிகள் எந்த நேரத்திலும் தமிழகத்திற்குள் ஊடுருவக்கூடுமென்பதால், அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகக் கடலோரப் பகுதி முழுவதும் கடற்படை, கடற்படை, கடலோரக் காவற்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பொருட்டு ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிப்பதுடன், இலங்கை அரசுக்கும், புலிகளுக்குமிடையேயான போர் ... Read More
பொலிஸ் காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
வவுனியா குடியிருப்புச் சந்திக்கு அருகிலுள்ள பொலிஸ் காவலரண் மீது செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைக்குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குடியிருப்புச் சந்தியில் நாவலர் சிலைக்கு அருகிலுள்ள காவலரண் மீதே பிற்பகல் 1.30 மணியளவில் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் அதனருகிலுள்ள கடைக்கும் சிறு தேசமேற்பட்டது. இக் கைக்குண்டு வெடித்ததால் ஏற்பட்ட பாரிய சத்தத்தையடுத்து நகரில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறியோடினர். இதையடுத்து இராணுவத்தினரும் பொலிஸாரும் அப்பகுதியில் தேடுதல்களை நடத்தினர்.
... Read More
மாத்தளை வஸ்கமுவ தேசிய வன சுற்றுலா விடுதியில் 2 பேர் கொலை…!
மாத்தளை மாவட்டத்திலுள்ள வஸ் கமுவ தேசிய வனப் பகுதியில் இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரான கிங்ஸ்லி ஏக்கநாயக்கவும் இதை உறுதிப்படுத்தினார். வஸ்கமுவ, வவுல்அம்பே எனும் பிரதேசத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. அப் பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலேயே இருவர் கொலை செய்யப்பட்டிருக்கின்றரென வில்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதியின் பொறுப்பாளர் என்றும் மற்றையவர் வன இலாகா வழிகாட்டி என்றும் தெரிவிக்கப்பட்டது. ... Read More
மணலாறு பகுதியில் நான்காவது நாளாக படையினர், புலிகள் கடும் மோதல்
மணலாறு பகுதியில் நான்காவது நாளாக படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கு மிடையே திங்கட்கிழமை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. திங்கட்கிழமை நண்பகல் தொடங்கிய இந்த மோதல் மாலை 6 மணிவரை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் மற்றும் மண்கிண்டி மலையின் முன்னரங்க காவல் நிலையப் பகுதியிலேயே இரு தரப்பும் கடும் மோதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் புலிகளின் பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டதுடன் புலிகளுக்கு பலத்த இழப்புகளேற்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், இவ்விரு பகுதிகளிலும் ... Read More
மன்னாரில் சேவாலங்கா நிறுவன ஊழியர் துவக்குச் சூட்டில் பலி…!
மன்னார் நகரில் திங்கட்கிழமை இரவு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், `சேவாலங்கா' நிறுவன ஊழியரொருவர் கொல்லப்பட்டுள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது; திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் மன்னார் நகரில் பிரதான வீதியில் தனியார் வங்கியொன்றுக்கு அருகிலுள்ள பொலிஸ் காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இரு பொலிஸார் காயமடைந்தனர். இதையடுத்து படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே `சேவாலங்கா' நிறுவன காவலாளியான உப்புக்குளத்தைச் சேர்ந்த பெனடிக்ற் ... Read More
கிளைமோர் தாக்குதல் நடந்த பின்னர் மடுவை நோக்கி கடும் ஷெல் தாக்குதல்
மடு பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதியை நோக்கி உடனடியாக கடும் ஷெல் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது குறித்து மடுப்பகுதியியைச் சேர்ந்த ஒருவர் பி.பி.ஸிக்கு கூறுகையில்; கிளைமோர் தாக்குதல் நடைபெற்றதாக தகவல் கிடைத்த நேரம் முதல் சம்பவம் நடைபெற்ற பகுதியை நோக்கி தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதல் நடைபெற்றது. இதன்பின் மடுத் தேவாலயத்தை சூழ்ந்த பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல் இடம்பெற்றது. இதனால், ... Read More
பெயரளவில் திறக்கப்பட்டுள்ள தேசிய வனங்கள்…!
வன்னிப் பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் தங்கியிருப்பதாகத் தெரியவரும் இரகசிய நிலையங்கள் மற்றும் முக்கிய முகாம்கள் மீதான விமானத் தாக்குதல்களை விமானப்படையினர் தீவிரப்படுத்தியுள்ள அதேவேளை தெற்குப் பகுதிகளில் உடவளவை, மொனராகல, புத்தள, தனமல்வில, யால ஆகிய பிரதேசங்களை அண்டிய காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கும் புலிகள் குழுவினரின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதால் அப்பிரதேசங்கள் பாதுகாப்பற்ற பகுதிகளாக மாறிவருகின்றன. இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவர் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டோ அல்லது படுகாயப்பட்டோ இருக்கலாம் ... Read More
குவைத்தில் கொடுமைக்குள்ளான 17 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்
குவைத்தில் பல்வேறு கொடுமைகளுக்குள்ளான 17 பணிப்பெண்கள் திங்கட்கிழமை நாடு திரும்பினர். கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. குவைத்தில் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதில் வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தன. இதேவேளை, சவூதி அரேபியா நீதிமன்றம் இலங்கையர் இருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்ததுள்ளது. கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டமைக்காகவே ... Read More
புத்தளத்தில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் பொலிஸாரால் மீட்பு
புத்தளம் - குருநாகல் வீதி 3 ஆவது மைல்கல் பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து 3 ஆவது மைல்கல் பிரதான வீதியிலிருந்து 10 மீற்றர் தூரத்தில் தேக்கு மரக்காட்டுப் பகுதியில் இந்த சடலம் காணப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவரின் சடலமென தெரிவித்துள்ள பொலிஸார், கைகள், கால்கள் என்பன கட்டப்பட்ட நிலையில் தீ வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர். இந்த ... Read More
இலங்கைக்கு கனடா ராடர் விற்பனை
இலங்கைக்கு அதிஉயர் தொழில்நுட்ப ராடரை கனடா விற்பனை செய்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் சிறியரக படகுகளையும் தீவிரவாதிகளின் நடமாட்டங்களையும் கண்டறியக் கூடிய உயர்தொழில்நுட்பம் வாய்ந்த ராடரே விரைவில் இலங்கையில் பொருத்தப்படவுள்ளது. ஒட்டாவா பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் ரேதியோன் லிமிட்டெட்டால் சுமார் 39 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட உயர் அலைவரிசையை கொண்ட இந்த ராடர் கனடாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2001 செப்டெம்பர் 11 இல் அமெரிக்காவில் ... Read More
கிளிநொச்சி ஆஸ்பத்திரி லொரியில் சீ 4 ரக வெடி பொருட்கள் கடத்திய நால்வர் கைது!
கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்குச் சொந்தமான லெரியொன்றில் சீ 4 ரக வெடி பொருட்களைக் கடத்திய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சுகாதார திணைக்களத்தைச் சேர்ந்த ஊழியர்கள் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. லொரியின் "ஜெக்" உபகரணத்திலும் அதில் பயணம் செய்தவர்களின் சப்பாத்துக்களிலும் வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். வவுனியாவிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் குறிப்பிட்ட லொறியைப் பொலிஸார் சோதனையிட்ட போதே அதில் பயணம் ... Read More
பலாலி, பூநகரி இடையே சரமாரியாக ஷெல் தாக்குதல் பல்குழல் ரொக்கட்டுகளால் குடாநாடு அதிர்வு
* நகருக்கு வந்த மக்கள் பதற்றத்துடன் வெளியேற்றம் பலாலி விமானப்படைத்தளம் மீது திங்கட்கிழமை காலை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆட்லறி ஷெல் தாக்குதலையடுத்து, பூநகரி நோக்கி கடும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் விமானத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. பலாலி விமானப்படைத் தளத்திற்கு நேற்றுக் காலை உயர்மட்ட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பிலிருந்து சென்று கொண்டிருந்தபோதே புலிகள் விமானத்தளம் நோக்கி ஷெல் தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. புலிகளின் இந்த ஷெல் தாக்குதலையடுத்து, பலாலிக்கு சென்றுகொண்டிருந்த உயர்மட்ட ... Read More
காடுகளில் மறைந்திருக்கும் புலிகளுக்கு கஞ்சா வியாபாரிகள் உதவி
கிழக்குப் பகுதியிலிருந்து அரச படைகளால் விரட்டியடிக்கப்பட்ட புலிகளின் சில குழுவினர் மெனராகல, தனமல்வில ஆகிய பிரதேசங்களை அண்டிய காட்டுப் பகுதிகளில் மறைந்திருந்து கெரில்லா முறையிலான தாக்குதல்களை மேற்கொண்டு வருவது பாதுகாப்புத்துறை தரப்பில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயமாகும். இவ்வாறு காட்டுப்பகுதிகளில் பரவலாக சிறு சிறு குழுவினராக நடமாடும் புலிகள் இயக்கத்தினர் சந்தர்ப்பம் பார்த்து கிராமங்களை அண்டிய பகுதிகளிலும் காட்டுப்பாதைகளிலும் காத்திருந்து குண்டுத்தாக்குதல்கள் மூலம் படுகொலைகளைச் செய்து வருகின்றனர். கிழக்கில் படுதோல்வியடைந்து பின்வாங்கிவிட்ட நிலையிலும் ... Read More
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருடன் பாகிஸ்தான் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு
பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் கடந்தவாரம் பாரிஸ் ஹோட்டலொன்றில் வைத்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சருடன் இரகசிய சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரானிய அணுசக்தி நிகழ்ச்சித்திட்டம் முக்கிய இடத்தை வகித்ததாக கூறப்படுகிறது. பாரிஸிலுள்ள ரபேயல் ஹோட்டலில் வைத்தே இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எஹூட் பாராக்கை சந்தித்து முஷாரப் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையே தந்திரோபாய இணைப்புகள் ... Read More
பாதுகாப்பு உயர்மட்ட குழுவின் பலாலி விஜயத்தை புலிகள் அறிந்திருந்தனரா? பல கோணங்களில் விசாரணைக்கு உத்தரவு
பலாலி விமானப் படைத்தளத்திற்கு பாதுகாப்பு உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்வது தொடர்பான தகவல்களை புலிகள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனரா? என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலிருந்து விமான மூலமாக சென்ற பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சென்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் புலிகள் பலாலி விமான நிலையத்தை நோல ஆட்லறிஷெல் தாக்குதல்களை மேற்கொண்டமை குறித்தே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலாலி ... Read More
தேர்தலை நீதியான முறையில் நடத்துவதாக பிரித்தானிய பிரதமரிடம் முஷாரப் வாக்குறுதி
தனது 8 நாள் ஐரோப்பிய விஜயத்தின் ஒரு கட்டமாக இங்கிலாந்திற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப், லண்டனில் அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிறவுனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி நடைபெறும் தேர்தல் நீதியானதும், நியாயமானதுமான முறையில் நடைபெறும் எனவும், அது பிணக்குகளில் சிக்கியுள்ள தனது நாட்டிற்கு முக்கிய திருப்பமாக அமையும் எனவும் முஷாரப் வாக்குறுதியளித்துள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதத்தை ... Read More




