பேர்கோப்’ மன்றத்தின் பணிப்பாளரை நாட்டை விட்டு வெளியேற பணிப்பு
இன முரண்பாட்டு கற்கைகளுக்கான பேர் கோப் மன்றத்தின் பணிப்பாளர் நோபேட் ரெபேர்சை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. இவர் இன்று திங்கட்கிழமை நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜேர்மன் நாடுகளின் நிதி உதவியில் இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வந்தன. மன்றத்தின் பணிப்பாளர் நோபேட் மீது ஜே.வி.பி. அண்மைக்காலமாக கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தது. இந்த நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தலையிட்டார் ... Read More
சட்டமூலத்தில் புஷ் கைச்சாத்து
இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்காது தடை செய்யும் அமெரிக்க வரவு செலவுத்திட்ட சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கையொப்பமிட்டுள்ளார். இலங்கைக்கு இராணுவ உதவிகளை அடுத்த வருடம் வழங்குவதில்லை என்று அமெரிக்க செனட் சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதனடிப்படையிலான அடுத்தாண்டு வரவு செலவு திட்ட சட்ட மூலத்திலேயே ஜனாதிபதி புஷ் கையொப்பமிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய ஒரு நிலை ஏற்படும் ... Read More
மயிரிழையில் உயிர் தப்பிய கட்டளை தளபதி
வவுனியா மேற்கு பகுதியில் உள்ள கிடாச்சூரி பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் புதிதாக உருவாக்கப்பட்ட 57ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வாரம் விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு வவுனியாவின் கிடாச்சூரிப் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் புதிதாக உருவாக்கப்பட்ட ... Read More
இலங்கை பாதுகாப்புப்படையினருக்கு வெளிநாட்டு உதவிகள்
இலங்கையின் விமானப்படையினருக்கு தீவிரமான பயிற்சிகளை வழங்குவதற்காக ரஷ்ய மற்றும் உக்ரெய்ன் விமானப்படை மற்றும் அதிகாரிகள் இலங்கைக்கு விரைவில் வரவுள்ளன. இந்த குழுக்கள் விமானப்படையினருக்கும் கடற்படையினருக்கும் தீவிர பயிற்சிகளை வழங்கவுள்ளன. இந்த மாத நடுப்பகுதியில் ரஷ்யாவின் இராணுவக்குழு ஒன்று இலங்கை வந்து ஆயுத வழங்கல் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. அத்துடன் 6 பேரைக்கொண்ட அமரிக்க அதிகாரிகள் குழு ஒன்றும் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தைகளை நடத்தியி;ருந்ததுஇதற்கிடையில் ரஷ்யாவும் உக்ரெய்னும் இலங்கை விமானப்படையினருக்கு சுப்பர் ... Read More
தொடர்ந்தும் சிறார்கள் கடத்தல் – ஐ.நா..!
புலிகளும், புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற குழுவினரும், தொடர்ந்து சிறார்களை கடத்தி அவர்களை சண்டையிட பயன்படுத்துவதாக ஐ.நா கூறியுள்ளது. சிறுவர்களை பலவந்தமாக இயக்கத்தில் சேர்ப்பது தொடர்பில் 20 பக்க அறிக்கையொன்றை ஐ.நா வெளியிட்டுள்ளது. சிறார்களை சண்டையிட பயன்படுத்துவது குறைந்து இருந்தாலும், கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த இரு குழுவினரும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை சேர்த்துள்ளதாக ஐ.நா கூறுகின்றது. ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் சிறார்களை விடுவித்த ஒரு ... Read More
ஈழவேந்தனை அரசியலிலிருந்து ஓரங்கட்டிய புலிகள்
கூட்டமைப்பின் நியமன நாடாளுமன்ற உறுப்பிரான ஈழவேந்தனை புலிகள் ஓரங்கட்டியுள்ளனர். கடந்த 2004 ஏப்ரலில் நடைபெற்ற 13வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது புலிகள் இயக்கத்தின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு அணியினரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி) ஆகியன இணைந்து கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக் கட்சியின் பெயரால் வடகிழக்கு மாகாணங்களில் ... Read More
வன்னியில் இராணுவத் தளபதி..!
வன்னியில் புலிகளின் பகுதிகளை மீட்கும் நடவடிக்கைக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத் தளபதி வன்னிக்கு வஜயம் மேற்கொண்டுள்ளார். இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் வவுனியா சென்றடைந்தார். வன்னிக் கூட்டுப்படைத் தளத்தில் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய தலைமையில் படைத் தளபதிகளின் அதியுயர் மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் கூட்டுப்படைத் தளபதி சீவ் ஏயார் மார்ஷல் டொனால் பெரேரா அவர்களும் கலந்து கொண்டார். இம்மாநாட்டில்; படையினரின் ... Read More
அமைச்சரவையில் மாற்றம் இல்லை
அரசாங்கம் கடந்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது 47 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியதையடுத்து இவ்வாரம் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட மாட்டாது என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமைச்சர்கள் சிலரது பொறுப்பில் உள்ள சில விடயங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் யோசித்துள்ளது. இதேபோன்று வெற்றிடமேற்பட்டுள்ள அமைச்சர்களுக்கான இரு வெற்றிடங்களுக்கு புதிய அமைச்சர்களை நியமிக்க அரசு ... Read More
கிழக்கில் கூட்டணி அமைக்க கொள்கை அளவில் இணக்கம்-ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி,புளோட்,ஈ.பி ஆர்,எல் எப்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி சபைத்தேர்தலில் கூட்டணி அமைத்து செயற்படுவதற்கு ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா அணி) ஆகிய கட்சிகள் கொள்கை அளவில் இணக்கம் கண்டுள்ளன. மட்டக்களப்பு ஈ.பி.டி.பி அலுவலகத்தில் நேற்று முற் பகல் இடம்பெற்ற மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்திலேயே கொள்கை அளவிலான இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் அடுத்துவரும் ஓரிரு நாட்களுக்குள் மேற் படி கட்சிகளின் தலைமைகள் இது குறித்து கலந்துரை யாடிவிட்டு இறுதி முடிவை கூட்டாக ... Read More
இலங்கையில் கடும் சண்டை 25 விடுதலைப்புலிகள் பலி 2 மூத்த தலைவர்களும் கொல்லப்பட்டனர்
இலங்கையின் வடக்கு பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை தீவிரமாகி உள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் நடந்த சண்டைகளில் 25 விடுதலைப்புலிகளும், 2 ராணுவத்தினரும் பலியானார்கள். வடமேற்கு மன்னாரில் பரப்பகந்தல் என்ற இடத்தில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியதில், 20 விடுதலைப்புலிகள் உயிரிழந்தனர். இவர்களில் அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களான ஆதவன் மாஸ்டர், சுசிலனும் அடங்குவர். மேலும் பல தலைவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ... Read More
பெனாஸிர் கொலைக்கு டக்ளஸ் கண்டனம்
உலகிலிருந்து பயங்கரவாதப் பிசாசை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்.'' இவ்வாறு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவியுமான பெனாஸிர் பூட்டோவும் மேலும் பல மக்களும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டமையைச் சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் ... Read More
சிப்பாயின் சடலம் கையளிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளால் முகமாலைப் பகுதியில் மீட்கப்பட்ட படைச் சிப்பாயின் சடலம் நேற்று செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு ஊடாக படையினரிடம் கையளிக்கப்பட்டது எனத்தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் வைத்து சடலத்தை செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதனை ஓமந்தைக்கு எடுத்துச்சென்று படையினரிடம் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ். கிளாலி முன்னரங்க நிலையில் கொல்லப்பட்ட தமது உறுப்பினர் ஒருவரது சடலம் விடுதலைப் புலிகளால் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று ... Read More
திஸ்ஸமஹராமவில் கைதானவர்களின் உறவினர் ஆணைக்குழுவில் முறைப்பாடு
திஸ்ஸமஹராம ரன்மினித்தென்னவில் அண்மையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சிங்களவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப் பாடு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரன்மினித்தென்னவுக்குள் புகுந்து புலிகள் மேற்கொண்ட கொலைகளை தமது உறவினர்களின் மீது பழிபோடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும், இதனால் தாம் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என அந்த முறைப்பாட்டில் அவர்கள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் குடும்பஸ்தர்கள் ... Read More
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்த உழைத்தவர் பெனாஸிர் பூட்டோவுக்கு ரணில் அனுதாபம்
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்தும் ஆபத்து மிகுந்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்தவர் பெனாஸிர் பூட்டோ என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் குறிப்பிட்டுள்ளார். பெனாஸிர் பூட்டோவின் படுகொலையைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் எமது நெருங்கிய நண்பருமான பெனாஸிர் பூட்டோ கொல்லப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியுமடைந்தேன். பாகிஸ்தானில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி சுதந்திரமான தேர்தல் நடைபெறச் ... Read More
இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்பதை எதிர்த்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகம் அறிவிப்பு
இலங்கை, சுதந்திர தின விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதை எதிர்த்து சென்னையில் நாளை மறுதினம் 31ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெள்ளிக்கிழமை இதனை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். அவர்மேலும் கூறியவை வருமாறு: 2008 பெப்ரவரி 4ஆம் திகதி யன்று வரவிருக்கும் இலங்கைத் தீவின் சுதந்திரதின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய நாட்டின் பிரதமர் ... Read More
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் இருவர் படுகாயம்; துணைக்குழு மீது குற்றச்சாட்டு
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது பிறிதொரு கைதிகள் குழு நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர்.தமிழ் அரசியல் கைதிகளை வெள்ளிக்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு வழக்கம்போல கோவிலுக்கு வழிபாட்டுக்குச் செல்வதற்காக சிறைக்கூடங்களில் இருந்து திறந்துவிட்டபோது பிறிதொரு கட்டடத்தொகுதியிலுள்ள சிறைக்கூடங்களில் இருந்து திறந்துவிடப்பட்ட 17 பேரடங்கிய கைதிகள் குழு ஒன்றே இத் தாக்குதலை மேற்கொண்டிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் 15 பேர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது சிறைச்சாலைக்குள் இருக்கும் ... Read More
வடக்கில் ஆங்காங்கே மோதல்கள்
யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. காலையில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது வலிந்து தாக்குதலைத் தொடுத்தனர் என்றும் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டபோது இராணுவத்தினர் பழைய நிலைகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தாம் மேற்கொண்ட இத்தாக்குதலில் 4 விடுதலைப்புலிகள் உயிரிழந்துள்ளனர் எனப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, மணலாறு வடக்கு ... Read More
ரூபவாஹினிக்குள் புகுந்து அடாவடித்தனம் புரிந்த அனைவரையும் கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு ஒருவரை மட்டும் கைதுசெய்த பொலிஸாருக்கு நீதிவான் செமடோஸ்!
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் புகுந்து அடாவடித்தனம் புரிந்த அனைவரையும் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்துவதுடன் அது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கும்படி கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தின் நீதிவான் மக்கீம் மொகமட் பொலிஸாருக்கு கடுந்தொனியில் உத்தரவிட்டிருக்கின்றார். மேற்படி சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டப் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையைப் பரிசீலித்த கொழும்பு மாவட்ட பிரதம நீதிவான், இந்தச் சம்பவத்தை முழுநாடும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், ஆக ஒரேயொரு சந்தேக நபரை மாத்திரம் ... Read More
பயங்கரவாதத்தின் கொடூரம் மீண்டும் ஏற்படுத்திய கொடுமை பெனாஸிர் கொலைக்கு இலங்கை அரசு கண்டனம்
பயங்கரவாதத்திற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் படுகொலை உணர்த்தியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பெனாஸிரின் படுகொலை தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: பெனாஸிர் ஜனநாயகத்துக்காகப் போராடிய தலைவர். அவர்மீது மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலை இலங்கை அரசு மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாதத்தின் அழுக்கு நிறைந்த தலை மீண்டும் தலைதூக்கியுள்ளதுடன் ... Read More
ஒற்றையாட்சியை இந்தியா ஏற்காது! முக்கூட்டு அணியினரிடம் புதுடில்லி உறுதிமொழி
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு முன்வைக்கப்படுவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்று இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்திருக்கின்றார். அத்தகைய தீர்வை இலங்கை அரசு முன்வைக்காது என்று தாங்கள் உறுதியாக நம்புகின்றனர் எனவும் நாராயணன் கூறியிருக்கின்றார். புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி, புளொட் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்.சிறிதரன் (சுகு) ஆகியோரடங்கிய முக்கூட்டு அணியிடமே இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் இந்தத் தகவல்களை வெளியிட்டிருக்கின்றார் என்று தெரியவருகின்றது. இலங்கையின் தமிழ்ப் ... Read More


