அமைச்சர் டக்ளஸுக்கு சபையில் கைலாகு கொடுத்து வரவேற்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் சபைக்கு வருகை தந்தபோது ஆளும் கட்சியினர் அவருக்கு கைலாகு கொடுத்து வரவேற்றனர். பாராளுமன்றத்திற்கு நேற்று முன்தினம் புதன்கிழமை நண்பகல் 12.10 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் வருகை தந்தார். அச்சமயம், குழுக்களின் பிரதித் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். சபைக்குள் நுழைந்த டக்ளஸ் தேவானந்தாவை ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ... Read More
தாலிக்குளம் பகுதியில் கிளேமோர் தாக்குதல்
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை முற்பகல் கிளேமோர் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் விஷேட அதிரடிப் படையினரும் சென்ற பஸ்ஸின் மீதே இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் பஸ் அந்தத் தாக்குதலிலிருந்து தப்பிவிட்டதாக படையினர் தெரிவித்தனர். வவுனியா - மன்னார் வீதியில் நேற்று முன்தினம் முற்பகல் 11.20 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல்களையும் மேற்கொண்டனர். இதேநேரம், ... Read More
ஸ்தம்பிதமடைந்திருந்த இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுக்கள் வெள்ளை மாளிகையில் மீண்டும் ஆரம்பம்
நீண்ட காலமாக ஸ்தம்பிதமடைந்துள்ள இஸ்ரேல் பாலஸ்தீன அமைதிப் பேச்சுக்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வெள்ளை மாளிகையில் மீண்டும் ஆரம்பித்துள்ளார். ஆனால்,புஷ் பதவி விலகுவதற்கு முன்னர் இந்த உடன்படிக்கையை அடைவதற்கான கால எல்லையை வரையறுப்பது கடினமானதென தெரிவிக்கப்படுகிறது. அன்னபொலிஸில் நடைபெற்ற மாநாட்டில் 2008 ஆம் ஆண்டுக்குள் அமைதி உடன்படிக்கையை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக இஸ்ரேலியப்பிரதமரும் பாலஸ்தீன ஜனாதிபதியும் உறுதியளித்த பின்னரே புஷ் இச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்துள்ளார். முன்னாள் ... Read More
மர்மப் பொதியால் நாவின்னவில் பதற்றம்
நுகேகொடையை அண்மித்த நாவின்ன சந்தி பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொதியொன்றினால் அப்பகுதியில் சற்று நேரம் பதற்றம் ஏற்பட்டது. நுகேகொடையில் குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதையடுத்தே சந்தேகத்திற்கிடமான இந்தப் பொதி அண்மையிலுள்ள பிரதேசத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, சந்தேகத்துக்கிடமான இந்தப் பொதி, குண்டை செயலிழக்கச் செய்யும் பிரிவினரைக் கொண்டு உடனடியாக சோதனை செய்யப்பட்டதுடன், அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இருக்கவில்லையென்றும் அது வெறும் ... Read More
தேசிய அரசாங்கம் அமைத்து ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவையில்லை. அமைச்சர் ஜெயராஜ்..!
தேசிய அரசாங்கம் அமைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படவில்லை. 2010 ஆம் ஆண்டிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: எதிர்வரும் 14 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை ... Read More
பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான அரசியல் கூட்டணிக்கு அனைத்து அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும் –TMVP பிரதித் தலைவரும், நிருவாகப் பொறுப்பாளருமான பிள்ளையான்!!
முன்னொரு போதுமில்லாத நெருக்கடிகளையும், இழப்புகளையும், தோல்விகளையும் தற்போது புலிப் பயங்கரவாதம் சந்தித்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கபூர்வமான, காத்திரமான பதிலடி இராணுவ நடவடிக்கைகள் தொடருமானால் இன்னும் சிறிது காலத்தில் இத்தீவு பயங்கரவாத அச்சுறுத்தலற்ற சுதந்திர தேசமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. இதுவே இத்தேசத்து மூவின மக்களினதும் எதிர்பார்ப்பும் அபிலாசையும் கூட. இத்தருணத்தில் தோல்வியின் விளிம்பில் நிற்கும் பயங்கரவாதத்திற்கு மறு பிரவேசம் அளிக்கும் எத்தவறையும் எக்கட்சியும் செய்யாமல் ... Read More
கௌரவமான சமாதானத்தை நாட்டின் சகல இன மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதிக்கு விளக்கம்..!
நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து, கௌரவமான சமாதானதைச் சகல இன மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஈரான் ஜனாதிபதி மஹ்மூட் அஹமட் நஜாத்திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதிகளினால் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஜனநாயக விரோத செயல்கள் என்பன தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார். சிறுவர்களை படையில் சேர்த்து கொள்ளுதல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் நடவடிக்கைகள் என்பன ... Read More
ஜப்பானின் விஷேட தூதுவர் அகாஸி அடுத்த வாரம் இலங்கை வருகிறார்
இலங்கைக்கான ஜப்பானிய விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஸி அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். யசூசி அகாஸி இலங்கைக்கு அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதை அரசதரப்பும் உறுதிப்படுத்தியது. 15 ஆவது தடவையாக இலங்கை வரும் யசூசி அகாஸி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை விஜயத்தின் போது அவர் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது. ... Read More
பிரான்ஸ் நகரில் தொடரும் கலவரங்களில் இதுவரை 120 இற்கும் அதிகமான பொலிஸார் காயம்
நிலைமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு பிரான்ஸின் நகரப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்களுடனான அவசர சந்திப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி ஏற்பாடு செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரின் காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதினால் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோபமடைந்த இளைஞர்கள் அங்கு கலவரங்களில் ஈடுபட்டு வருவதனால் இதுவரைக்கும் 120 இற்கும் அதிகமான பொலிஸார் காயமடைந்துள்ளனர். கலவரங்கள் சற்று தணிந்துள்ள ... Read More
புலிகளிற்கு உதவி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்தியாவில் 4 பேர் கைது..!
புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை இந்திய க்யூ பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தமிழக இராமநாதபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமா உலாவிக்கொண்டிருந்த இலங்கையர் ஒருவரை கைது செய்த க்யூ பிரிவு பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி கப்பல் மூலம் புலிகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 2300 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக க்யூ பொலிஸார் ... Read More
பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை, ஈரான் தலைவர்கள் கூட்டறிக்கை..!
உலக சமாதானத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள பயங்கரவாதத்தை ஈரான் இஸ்லாமிய குடியரசும் இலங்கையும் வன்மையாகக் கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. மூன்று நாள் உத்தியோகப+ர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக், அந்நாட்டு ஜனாதிபதி முஹம்மத் அஹ்மத் நஜாதி, ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். ஜனாதிபதியின் விஜயத்தை தொடர்ந்து இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையிலே இரு நாடுகளும் பயங்கரவாதத்தை ... Read More
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் இந்தியப் பிரதமர்
பிரிட்டனிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றதையொட்டிய அறுபதாவது ஆண்டு சுதந்திர தினம் அடுத்த பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையில் கொண்டாடப்படும்போது அந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். நாடாளுமன்றத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இத்தகவலைத் தெரிவித்தார். ஆனால், இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் என்ற விவகாரம் குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது எனக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுர வட்டாராங்கள் தெரிவித்தன. ... Read More
3 இளைஞர்கள் கடத்தப்பட்டனர் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு
மட்டக்களப்பு ஐயன்கேணி கொம்மாதுறை பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இனந்தெரியாதோரால் ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திச் செல்லப்பட்டதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கலடி பிரதேச செயலகப் பிரிவின் ஐயன்கேணி பகுதியைச் சேர்ந்த தேவராஜா சுரேஸ்கண்ணன் (30 வயது), எல்லைநகர் கிராமத்தைச் சேர்ந்த தவராஜா செந்தூரன் (16 வயது), உமாமில் வீதி கொம்மாதுறையைச் சேர்ந்த சண்முகராஜா சந்திரகாசன் (18 வயது) ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அவர்களது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை பொலிஸாரிடம் முறைப்பாடு ... Read More
ஓமந்தையில் மோதல் சம்பவம்
புலிகளுக்கும் படைகளுக்கும் இடையிலான மோதல் சம்பவமொன்று வவுனியா, ஓமந்தை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை இடம் பெற்றிருக்கின்றது. ஓமந்தை முன்னரங்க நிலைகள் மீது புலிகள் தாக்குதலைத் தொடுக்க, அதற்கு படைகள் தொடுத்த பதிலடியில் 4 புலிகள் உயிரிழந்தனர். அவர்களின் பதுங்கு குழி ஒன்று நிர்மூலமாக்கப்பட்டது'' இப்படி பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. நேற்று முன்தினம் அதிகாலை 4.25 மணியளவில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் ... Read More
ஈரானின் அணுசக்தி உரிமையை அங்கீகரிக்கின்றது இலங்கை
அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஈரானின் பிரிக்கமுடியாத உரிமையை இலங்கை அங்கீகரிக்கின்றது என ஈரானுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனோச்சர் மொட்டகியுடன் தாம் நடத்திய சந்திப்பின்போதே இந்த ஆதரவை இலங்கை ஜனாதிபதி நெறிப்படுத்தினார் என இஸ்லாமிய குடியரசு செய்தி ஏஜென்ஸி ("இரானா') தெரிவித்தது. ஈரானின் சமாதான அணுத் திட்டத்தின் தற்போதைய நிலைவரம், சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸியின் செயலூக்கம் நிறைந்த ஒத்துழைப்பு மற்றும் ... Read More
அம்புலுவாவை மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து மாணவி பலி; மாணவன் படுகாயம்
கம்பளை அம்புலுவாவை மலையிலுள்ள உயிரியல் பூங்காவை பார்வையிடச் சென்ற கொழும்புப் பல்கலைக்கழக மாணவியொருவர் சுமார் 150 அடி உயரத்திலிருந்து கால்தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வெயாங்கொடை அளுத்வத்தையைச் சேர்ந்த வசந்தி சத்துராணி (வயது 21) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவருடன் வீழ்ந்து படுகாயமடைந்த மாணவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நண்பர்களுடன் அம்புலாவையை பார்வையிடச் சென்று, மலையுச்சியிலிருந்து இறங்கும்போது இம்மாணவி கால்தவறி விழுந்துள்ளதாக கம்பளைப் ... Read More
பிரபாகரனின் சலசலப்பிற்கெல்லாம் ஒரு போதும் நான் அஞ்சப் போவதில்லை -EPDP தோழர் டக்ளஸ்
சமூகசேவைகள் அமைச்சரும், ஈபிடிபி செயலாளர் நாயகமுமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதத்தின்போது ஆற்றிய உரை..! – 29.11.2007.
கௌரவ சபாநாயகர் அவர்களே... சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் என்ற வகையில் எனது மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் இங்கு நான் உரையாற்ற விரும்புகின்றேன். எனது அமைச்சு இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்ற, ஏனைய சமூகத்தில் அவதானத்தை முழுமையாகப் பெறாத நிலையில் வாழ்ந்து வருகின்ற ... Read More
துணுக்காயில் கிளைமோர் தாக்குதல் ஒன்பது மாணவர்கள் உட்பட 11 பேர் பலி
முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் ஐயன்கன் குளம் பகுதியில் நேற்று முன்தினம் முற்பகல் அம்புலன்ஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 9 மாணவர்கள் உட்படப் பதினொரு பேர் பரிதாபமாகப் பலியானார்கள். மற்றைய இரு மாணவர்கள் படுகாயமடைந்தனர். துணுக்காய், ஐயன்குளப் பாடசாலையின் முதலுதவி மாணவர்கள், முதலுதவிப் பயிற்சிக் கற்கைக்கு என ஆலங்குளம் மருத்துவமனைக்குச் சென்றவேளை நேற்று முன்தினம் முற்பகல் 11.30 மணி யளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது என ஒரு தகவல் ... Read More
பயணக் கட்டண அதிகரிப்பால் குடாநாட்டிலிருந்து வெளியிடம் செல்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி
யாழ்.குடாநாட்டிலிருந்து வெளியிடங்களுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்.குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் படையினர் மூடியது முதல் குடாநாட்டுக்கும் வெளியிடங்களுக்குமிடையே விமான மற்றும் கப்பல் போக்குவரத்துக்கள் மூலமே பயணிகள் பிரயாணங்ளை மேற்கொள்கின்றனர். தற்போது குடாநாட்டிலிருந்து கொழும்பு செல்ல ஒரு வழி விமானக் கட்டணமாக 10,000 ரூபாவும் இரு வழிக் கட்டணமாக 19,500 ரூபாவும் அறவிடப்படுகிறது. குடாநாட்டு மக்களால் இந்தளவு பெருந்தொகைப் பணத்தை ... Read More
புலிகளின் குரல்’ வானொலி நிலையம் மீது மிக மோசமான விமானத் தாக்குதல்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது வருடாந்த மாவீரர் தின உரையை நிகழ்த்துவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான "புலிகளின் குரல்' வானொலி நிலையம் மீது விமானப்படையினர் மிக மோசமான விமானக்குண்டுவீச்சை நடத்தியிருக்கின்றனர். கிளிநொச்சி"ஏ 9' சாலையில் இருக்கும் வானொலி நிலையம் மீதே விமானப்படையினர் மாலை 4.30 மணியளவில் விமானக்குண்டு வீச்சு நடத்தினர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. கிளிநொச்சி நகரிலிருந்து சுமார் மூன்றரைக் ... Read More







