எமது விடியலை தேடிய பாதையெங்கும் விதை விதைத்த விருட்சங்களில் ஒன்று வீழ்ந்துவிட்டது! -EPDP
மரியாதை செலுத்துகின்றோம்!! "தோழர் கந்தசாமி சற்குணவதி!" 83 இன் ஆரம்ப நாட்கள்..... இந்த விருட்சத்தின் கீழ் நாங்கள் இளைப்பாறினோம். அச்சு வேலி சொந்த ஊர் கல்வயலில் குடும்ப விருட்சமாக இவர் விழைந்ததால் அன்று நாம் நின்றிருந்த ஆயுதப்போராட்டக்களத்திற்கு உரம் கொடுத்த இந்த குடும்ப விருட்சத்தை கல்வயல் அக்கா என்று அழைத்தோம்! இன்று நாம் செல்லும் ஐனநாயகவழிப்பயணத்தில் உரிமை கேட்டு ஒலி எழுப்பும் எங்கள் உதடுகள் இவரை அன்ரி என்று அழைத்தன. ... Read More
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முதல் பெண் விமானிகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் முதல் முறையாக 2 பெண்கள் விமானிகளாக பணிபுரிய இருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் சல்மா முகம்மது அல் பலோஷி, ஆயிஷா ஹாசன் அல் மன்சூரி ஆகும். இந்த 2 பெண் விமானிகளையும் எமிரேட்ஸ் நாட்டின் எடிஹாத் ஏர்லைன்ஸ் நிறுவனம் வேலைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது. இந்த விமான கம்பெனிக்கு சொந்தமான விமானங்களில் அவர்கள் விமானிகளாக பணியாற்ற இருக்கிறார்கள். இவர்கள் விமானி பயிற்சி பெற்றபோது அவர்களுடன் 10 ஆண்களும் ... Read More
முருங்கன் மோதலில் புலி உறுப்பினர் பலி சடலம் வைத்தியசாலையில் ஒப்படைப்பு
முருங்கன் இராணுவ முகாமிற்கு அருகில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் புலிகள் இயக்க உறுப்பினரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணியளவில் முருங்கன் இராணுவ முகாமில் அமைந்துள்ள பகுதிக்குள் ஊடுருவிய நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இராணுவத்தினரின் பதில் தாக்குதலில் விடுதலை புலி உறுப்பினர் ஒருவர் பலியானதாகவும் முருங்கன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவத்தையடுத்து படையினர் நடத்திய ... Read More
வன்னி, குடாநாட்டு முன்னரங்க காவல் நிலைகளில் தொடர்ந்து மோதல்
வடக்கில் வன்னியிலும் யாழ். குடாநாட்டிலும் முன்னரங்க காவல் நிலையங்களில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
வன்னியில் மன்னாரிலும் குடாநாட்டில் முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளிலும் ஞாயிற்றுக்கிழமை இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளன. மன்னாரில் அடம்பனுக்கு மேற்கே நரிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியொன்று படையினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆறு புலிகள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் படைத்தரப்புக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் திங்கட்கிழமை காலை விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் இரு பொதுமக்கள் படுகாயமடைந்ததுடன் சில வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன. புதுக்குடியிருப்பில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு விமானங்கள் நான்கிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசித் தாக்கியதில் சில வீடுகள் பலத்த சேதமடைந்ததுடன் இரு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தோட்டக் காணிகளில் பெருளமவு பயன்தரு மரங்களும் அழிந்துள்ளன.
... Read More
(புளொட்) கழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் புலிகளால் சுட்டுக்கொலை
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட அங்கத்தவர்கள் இரண்டு பேர் நேற்றிரவு வவுனியாவில் வைத்து புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தின் பிரதேசமான ஆசிகுளத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிதம்பரப்பிள்ளை செல்வராஜா (வயது-50) மற்றும் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தை வசிப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான ரஞ்சன் என்றழைக்கப்படும் இருதயம் வேதராசா (வயது-40) ஆகிய இரண்டு பேருமே அவர்களது இல்லத்துக்குள் பிரவேசித்த புலிகள் துப்பாக்கிப் ... Read More
தப்பியோட முயன்ற 2 கைதிகள் சுட்டுக் கொலை
நீதிமன்றத்திலிருந்து தப்பியோட முயற்சித்த இரு சிறைக் கைதிகள் மீது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர்களிருவரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இருவர் மீதும் கொலை மற்றும் கொள்ளை தொடர்பிலான குற்றச் சாட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஆயுதங்களை பறித்துச் செல்ல முற்பட்ட வேளை, சுட்டுக்கொல்லப்பட்டதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த ... Read More
களனி ஆற்றுக்குள் வாகனம் பாய்ந்து 7 பேர் மரணம்; நால்வர் படுகாயம்
எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்கிந்தையிலுள்ள களனி கங்கை ஆற்றினுள் வானொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்தும் மேலும் இருவர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு- அட்டன் வீதியில் எட்டியாந்தோட்டை நகரிலிருந்து ஆறாவது மைல்கல் பகுதியிலேயே திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியாவிலிருந்து உறவினரொருவரை வெளிநாடு அனுப்புவதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றுவிட்டு திரும்பிவரும் ... Read More
குவைத் நாட்டில் கத்தியால் குத்தி இந்தியப்பெண் பலி
குவைத் நாட்டில் வசிப்பவர் இந்தியப்பெண். தலீம் என்ற அந்த பெண் ஒரு மளிகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வந்த 2ஆண்கள், அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த தலீம் சிறிது நேரத்தில் பலியானார். போலீசார் கொலையாளிகளை தேடிவருகிறார்கள். ... Read More
ஈபிடிபி முக்கியஸ்தர் அன்ரி காலமானார்..!
ஈபிடிபியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் மாதர் அணி அமைப்பாளருமான திருமதி கந்தசாமி சற்குணவதி அவர்கள் காலமானார். ஈழத்தமிழ் பேசும் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் நீண்ட கால பங்குபற்றலை வெளிப்படுத்திய கந்தசாமி சற்குணவதி அவர்கள் முன்னைய ஈ.பி.ஆர்.எல.எப் காலகட்டத்தில் கல்வயல் அக்கா எனவும் ஈபிடிபியின் ஸ்தாபன நாள் முதற்கொண்டு இற்றைவரை அன்ரி எனவும் கட்சியின் அனைத்து அங்கத்தவர்களினாலும் மதிப்புடன் அழைக்கப்பட்டு வந்தவராவார். தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஆரம்பத்தில் ஆயுதவழி போராட்டத்தில் ... Read More
தப்பிய கைதி பிடிபட்டார்
கைக்குண்டு ஒன்றை தம் வசம் வைத்திருந்த ஒருவரை வாதுவை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். வாதுவை தல்பிட்டிய தெற்கு கஹாதுடுவலவை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதான நபரே கைது செய்யப்பட்டவராவார். இவர் களுத்துறை சிறையில் இருந்து பாணந்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் தப்பிய கைதியென பின்னர் தெரியவந்ததாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
... Read More
சர்வதேச நிறுவன வாகனம் மூலமே புலிகள் அநுராதபுரத்துக்கு ஆயுதம் கொண்டு வந்தனர்
அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது புலிகள் இயக்கத்தினர் தீவிரதாக்குதல்களை மேற்கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு அனுராதபுரம் விமானப்படைத்தளத்தை தாக்குதவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான வெடிகுண்டுப் பொருட்களையும் ஆயுதங்களையும் தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டுகள் பொருத்தப்பட்ட கவச உடைகளையும் மற்றும் உபகரணங்களையும் புலிகள் இயக்கத் தாக்குதல் அணியினர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குரிய வாகனம் மூலமே விமானப்படை முகாமை அண்டியுள்ள பிரதேசத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பதாகத் ... Read More
தேர்தலில் 21 பேர் போட்டியிட்டும் ஓமன் நாட்டில் ஒரு பெண் கூட வெற்றி பெறவில்லை
ஓமன் நாட்டில் மன்னர் ஆட்சி நடந்து வருகிறது. 1970-ம் ஆண்டு முதல் சுல்தான் காபூஸ் பின் சேத் ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு ஆலோசனை கூறுவதற்காக ஷுரா கவுன்சில் எனப்படும் ஆலோசனை குழு உள்ளது. 84 பேர் கொண்ட இந்த ஷுரா கவுன்சிலுக்கு தேர்தல் நடந்தது. இதில் 21 பெண்கள் போட்டியிட்டனர். அவர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கடந்த முறை 2003-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 2 பெண்கள் ... Read More
மரணவீட்டில் கைக்குண்டு வீச்சு சிறுவன் உட்பட 8 பேர் படுகாயம்
மரண வீடொன்றில் ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து குறித்த மரண வீட்டிற்கு கைக்குண்டு எறியப்பட்டதால் 2 வயது சிறுவன் உட்பட எட்டுப்பேர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். காயமடைந்தவர்கள் கலேவெல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஆபத்தான நிலையிலிருந்த மூவர் பின்னர் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் கலேவெல பொலிஸ் பிரிவிலுள்ள, அளுத்கம - மனன்வத்த என்ற இடத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இக்கைக்குண்டை மரண ... Read More
விமானப்படைத்தள தாக்குதலை தொடர்ந்து அநுராதபுரத்தில் சோதனைகள் அதிகரிப்பு
அநுராதபுரம் விமானப்படைத்தளத் தாக்குதலை அடுத்து அநுராதபுர நகரிலும் நகரைச் சூழவுள்ள இடங்களிலும் திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. பெரும்பான்மையின மக்கள் முழுமையாக வசித்து வரும் விமான நிலையத்தினை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் பேரில் ஏற்கெனவே எட்டுப்பேர் கைது செய்யப்பட்டு விசாரனை நடாத்தப்பட்டு வருகின்றது. இது தவிர விமான நிலையப் பகுதிக்குச் சென்று வருகின்ற அல்லது விமானப்படையில் சேவையாற்றுகின்ற சிலரும் இத்தாக்குதலுக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்ற அதேவேளை ... Read More
பேராதனை பல்கலைக்கழக சம்பவங்கள் மூவர் கொண்ட குழு இன்று முதல் விசாரணை
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காண்பதற்கு நியமிக்கப்பட்ட மூன்று பேராசிரியர்கள் கொண்ட குழு திங்கட்கிழமை முதல் அதன் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான புதிய விடுதிக்கு சேர் ஐவர் ஜென்னிங்ஸின் பெயரை வைப்பதில் நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. மாணவர்கள் தமது முன்னாள் மாணவத் தலைவர் ஒருவரின் பெயரையே ... Read More
மன்னார், யாழ். பகுதிகளில் படையினருடன் ஏற்பட்ட மோதல்களில் 3 புலிகள் உயிரிழப்பு
மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் படையினருடன் இடம்பெற்ற மோதல்களில் 3 புலிகள் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் 27 ஆம் திகதி படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது 2 ஆம் லெப்.ஆரமுதன் என்று அழைக்கப்படும் வலைப்பாடு, பொன்னாவெளி, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த எமிலியான் யேசு அருள்ராஜ். மன்னார், திருக்கேதீச்சரம் பகுதியில் 27 ஆம் திகதி படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது 2 ஆம் லெப்.அபர்ணா அல்லது அணிநகை என்று ... Read More
ஈச்சிலம்பற்றில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்
ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை "லீட்ஸ்" தன்னார்வ அமைப்பு, லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட `டியர்பண்ட்' என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பின் நிதி உதவியுடன் வழங்கி வருகின்றது. 330 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளை வழங்கும் திட்டத்தை லீட்ஸ் தன்னார்வ அமைப்பு தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. முதற்கட்டமாக ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் பிரிவில் இலங்கைத் துறைமுகத்துவாரம் கிராமத்தில் ... Read More
அமைதிக்காக பாடுபடுவதே அவசியத்தேவை: மன்னார் ஆயர் தெரிவிப்பு
இலங்கை ஒரு சிறிய நாடு. பல இனத்தவர்கள் வாழுகின்ற இந்த நாட்டில் சகல இனத்தவர்களும் தமது அடையாளத்தோடும் சம உரிமையோடும் மகிழ்வுடனும் வாழ வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண. இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார். மாத்தளை புனித மரியன்னை தேவாலயத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பு பேராயர் அதிவண. ஒஸ்வல்ட் கோமிஸ் ஆண்டகை தலைமையில் திருப்பலி ... Read More
குடாநாட்டில் கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்ட வழங்கிய நிதி திரும்பிச் செல்லும் நிலை
யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கிய நிதி உதவி மூலம் எதுவித நடவடிக்கைகளுக்கு இதுவரை எடுக்கப்படாததால் அந்த நிதி திரும்பிச் செல்லும் அபாயம் உள்ளது என யாழ். மாவட்ட 306 பி லயன்ஸ் கழக ஆளுநர் எஸ். இராகவன் தெரிவித்தார். யாழ். பல்நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புவைபவத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசும் ... Read More



