இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது போர் விமானங்கள் குண்டு வீச்சு
இலங்கையில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் மீது போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இலங்கை தலைநகர் கொழும்பில் `கண்ணிவெடி கண்காணிப்பு அறிக்கை-2006' வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலங்கைக்கான இங்கிலாந்து தூதர் டோமினிக் சில்காட் பேசியதாவது:- ராணுவ நடவடிக்கையால் எந்த நாட்டிலும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் உடனடியாக மோதலை கைவிட்டு சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும். இரு தரப்பினரும் உண்மையான முறையில் ... Read More
பாகிஸ்தான் அதிபரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாராப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த மனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியும். இந்த அறிவிப்பு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் அலுவலங்கள் முன்பாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதம் இடம்பெற்று கொண்டிருந்தது. அதிபரின் வேட்புமனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான வக்கீல்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது ... Read More
மன்னாரில் பாதிரியாரின் உடல் அடக்கம்
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கல்விளான் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட அருட்திரு நிக்கலஸ்பிள்ளை பாக்கியரஞ்சித் அவர்களின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை மன்னாரில் நடைபெற்றது. இவரது இறுதி ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், மதகுருமார்களும், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச தனியார்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். ... Read More
மாலத்தீவு குண்டுவெடிப்பில் பலர் காயம்
மாலத்தீவின் தலைவர் மாலேவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பனிரெண்டு பேர் காயமடைந்துள்ளனர். மாலேயின் மத்தியப் பகுதியிலுள்ள சல்டன் பூங்காவில் பிரதான வாயிலுக்கு உள்ளே இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது என அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். சனிக்கிழமை மதியம் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாகவும், இந்த குண்டு வெடிப்பு நடைபெறும் போது அந்த இடத்துக்கு அருகில் 12 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும். அவர்கள் அனைவரும் இதில் ... Read More
விபத்தில் மகன் இறந்தமை உண்மை என்கிறார் சூசை
ஒட்டிசுட்டான் பகுதியில் 1999 ஆம் ஆண்டு படைகள் வந்து நின்ற போது எல்லோரிடமும் ஓர் அச்சம் இருந்தது. ஆனால் அந்த நிலைமையை தலைகீழாக எங்கள் தலைவர் மாற்றியமைத்தார். எங்களுடைய பலத்தின் மூலம் தான் எங்கள் இனத்தை தலைநிமிரச் செய்ய முடியும் என்று கடற் புலிகளின் தளபதி கேணல் சூசை தெரிவித்தார். கடலில் விபத்தினை நான் சந்தித்தேன் அந்த விபத்தில் எனது மகன் இறந்தமை உண்மை. அத்துடன் போராளி ஒருவர் பலியானதுடன் ... Read More
யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விடுதலைப்புலிகளே சரணடைகின்றனர்
யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதுகாப்பு தேடி சரணடைந்து இருப்பவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களென இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கடந்த சில வாரங்களுக்குள் 42 விடுதலைப் புலி உறுப்பினர்கள் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரிகேடியர் நாணயக்கார மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார். விடுதலைப் புலி உறுப்பினர்களே ... Read More
மகனை கடத்த முயன்றபோது தடுத்த தாய் சுட்டுக்கொலை
திருகோணமலை அன்புவழிபுரத்தில் வியாழக்கிழமை இரவு வீடொன்றினுள் புகுந்த ஆயுதபாணிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளந்தாயொருவர் கொல்லப்பட்டதுடன், அவரது கணவனும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். இவர்களது வீட்டினுள் புகுந்த ஆயுத பாணிகள் அங்கிருந்த, திருகோணமலை விபுலானந்தா மகா வித்தியாலய க.பொ.த. (சாதாரணதர) மாணவனை துப்பாக்கிமுனையில் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். இவ்வேளையில், அந்த மாணவனின் தாயும் தந்தையும் மகனைக் காப்பாற்ற முற்படவே ஆயுதபாணிகள், மூவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இந்தக் ... Read More
மா விலை அதிகரிப்பால் தோட்டத்தொழிலாளர் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அபாயம்
திடீரென அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையுயர்வால் பெருந்தோட்ட மக்கள் மாத்திரமன்றி இந்நாட்டு மக்கள் அனைவரும் அதல பாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் கோதுமை மாவிற்கான நிவாரணத்தை வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; வெள்ளிக்கிழமை முதல் கோதுமை மா ஒரே தடவையில் 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 51 ரூபாவிற்கு விற்கப்பட்ட கோதுமை ... Read More
புல்மோட்டை கடலில் நீண்ட நேரம் கடும் மோதல் 18 புலிகள் பலியானதாக கடற்படை தெரிவிப்பு
திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் மிக நீண்ட நேரம் கடும் கடற்சமர் நடைபெற்றுள்ளது. இந்தச் சமரில் கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டதுடன், 18 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ள அதேநேரம், கடற்படையினரின் இரு அதிவேகடோரா பீரங்கிப்படகுகள் அழிக்கப்பட்டதுடன் ஒரு டோரா படகு பலத்த சேதமாக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பமான இந்தக் கடற் சமர் நேற்று அதிகாலை ... Read More
உரிமை மீறல் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று உண்மையை ஐ.நா.அதிகாரிகள் அறிவது அவசியம்
கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து அரசாங்கம் விடுவித்துவிட்டதாக கூறுகின்ற போதிலும் அங்கு மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடனே வாழ்ந்து வருவதாக தெரிவித்த மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், இலங்கைக்கு வருகைதரும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் பூஸா தடுப்பு முகாம் உள்ளிட்ட மனித உரிமைகள் மீறப்படுகின்ற பிரதேசங்களுக்கு விஜயம்செய்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் யாழ்.குடாநாட்டில் தினந்தோறும் சராசரியாக இருவர் கொல்லப்பட்டு, இருவர் காணாமல் போகும் ... Read More
இரு நாள் மோதல்களில் 50 புலிகள் பலி
வடக்கே கிளாலி கடலேரிப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்காகக் கடந்த 24 ஆம் திகதி அதிகாலையில் கிளாலியில் படையினரின் முன்னரங்குகள் மீது புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல்களை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து கிளாலியில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான எல்லைப் பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் சம்பவதினம் காலையில் ஆரம்பித்தன. இந்த மோதல்களின்போது கிளாலியில் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்ட ... Read More
புலிகள் இயக்கத்திற்குள் கடும் உட்பூசல்
கடந்த ஒன்றரை வருட காலமாக அரசபடையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளில் புலிகள் இயக்கத்தினர் படுதோல்விகளை அடைந்து தப்பியோடியும் பின்வாங்கியும் உள்ள நிலையில் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களில் சுமார் 60% மான நிலப்பரப்பை புலிகள் இயக்கம் இழந்து விட்டது. அத்துடன், தோல்விகள் காரணமாகவும் மற்றும் இயக்கத்தின் செயற்பாடுகளிலுள்ள குழப்பநிலைமை காரணமாகவும் புலிகள் இயக்கத்தில் பெரும் உட்பூசல் எழுந்துள்ளது. இதனால், புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளிடையே கருத்து மோதல்கள் பரவலாக ... Read More
முகமாலை, பூநகரிப் பகுதிகள் மீது படைத்தளங்களிலிருந்து ஷெல் வீச்சு
தென்மராட்சியில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகளை நோக்கியும், பூநகரியை நோக்கியும் புதன்கிழமை முதல் மிகக் கடுமையான ஷெல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை காலை முதல் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள படைத் தளங்களிலிருந்தே முகமாலை மற்றும் பூநகரிப் பகுதியை நோக்கி இந்த அகோர ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் தென்மராட்சி மற்றும் பூநகரிப் பகுதிகள் அதிர்ந்துகொண்டிருந்தன. பூநகரியில் குடியிருப்புப் பகுதிகளிலேயே பெருமளவு ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. முகமாலை ... Read More
பருத்தித்துறையில் பிஸ்டல் குழு புலி ஒருவர் படையினரால் சுட்டுக்கொலை.
வடமராட்சி பொலிகண்டியில் பிரபாகரன்புலி பிஸ்டல் குழு ஆள் ஒருவர் நேற்று முற்பகல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பொலிகண்டியில் தமது வழமையான வீதிப்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் மீது முற்பகல் 11.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு புலி ஆட்கள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். உடனடியாக செயற்பட்ட படையினர் பதில் தாக்குதல் நடாத்தியபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த புலி ஆள் சுட்டுக்கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ... Read More
புலிகளின் கடற் தளம் தகர்ப்பு
இலங்கையின் முல்லைத் தீவு பகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் கடற்படை தளத்தை தகர்த்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இன்று காலை 8.10 மணிக்கு புதுக்குடியிருப்புக்கு வட மேற்கில் உள்ள தேவிபுரம் என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கடற்படை தளத்தின் மீது இலங்கை விமானப்படையின் மிக் 27 ரக விமானமும், கேபிர் ரக விமானமும் குண்டு மழை பொழிந்தன. இதில் அந்த கடற்படைத் தளம் தகர்க்கப்பட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை ... Read More
ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கூறுகிறார்
இராணுவ நடவடிக்கை மற்றும் ஆயுதக் கொள்வனவுகள் தொடர்பான செய்திகளுக்கு தடைவிதிக்க தணிக்கை சபையை ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாதெனவும் அவசர காலச் சட்டமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் இருக்கும் நிலையில் தணிக்கை சபை அவசியமே இல்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் லக்ஷ்மன் ... Read More
யாழில் கிளைமோர்த் தாக்குதல் நடாத்திய புலிப்பயங்கரவாதி கைது
யாழ். சுன்னாகத்திலும் சித்தன்கேணியிலும் கிளைமோர்த்தாக்குதலை நடாத்திய புலி ஆள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், சுன்னாகம் சந்தைப் பகுதியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேரில் கண்ட சாட்சிகளினதும், மற்றும் காயப்பட்டவர்களினது சாட்சிகளின் அடிப்படையிலும் 24 மணிநேர தேடுதலில் ஈடுபட்ட படையினர், இணுவில் பகுதியில் இன்று காலை தாக்குதல் நடாத்திய புலி ஆளைக்கைது செய்துள்ளனர். புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து, அச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ... Read More
மன்னாரில் பலியான மதகுருவின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதலில் கொல்லப்பட்ட வண பிதா. நீக்கிலாஸ்பிள்ளை பாக்கியரஞ்சித்துக்கு மன்னாரில் நேற்று மாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாந்தை மேற்கில் இடம்பெற்ற கடும் ஷெல் தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜே.ஆர்.எவ்.அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளரான வண.நீ.பாக்கிய ரஞ்சித் என்பவரே வெள்ளாங்குளம் கல்விலான் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் ... Read More
திருகோணமலை கடற்பரப்பில் கடுமையான மோதல்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டைக் கடற்பரப்பில், இலங்கைக் கடற்படையினருக்கும், விடுதலைப்புலிகளின் அமைப்பின், கடற்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் மோதல் ஒன்றில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 18 பேர்வரை கொல்லப்பட்டதாகவும் கடற்புலிகளின் 3 படகுகளை கடற்படையினர் நிர்மூலம் செய்ததாகவும், இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை கடற்படையின் சார்பில் பேசவல்ல கொமாண்டர் டி.கே.பி. தஸாநாயக்க அவர்கள் கூறுகையில், முல்லைத்தீவின் நாயாறு பகுதியில் இருந்து திருகோணமலை மாவட்டத்தின் பேராறு மற்றும் ... Read More
நியூயோர்க்கில் ஜனாதிபதியை சந்தித்தார் எரிக்சொல்ஹெய்ம்
நியூயோர்க்கில் இடம் பெற்று வரும் ஐ.நா.பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு இலங்கையின் சமாதான அனுசரணையாளரான நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி விவகார அமைச்சர் எரிக்சொல்ஹெய்முடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். நோர்வேயின் விசேட தூதுவர் ஹன்சன் பௌரும் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளார். கடந்த புதன்கிழமை இச்சந்திப்பு இடம்பெற்றதை கொழும்பிலுள்ள நோர்வே தூதரக வட்டாரங்கள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தின. இதேவேளை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான ... Read More


