மீன்லொறியில் ஜெலிக்நைற் குச்சிகள் கல்பிட்டி சோதனை நிலையத்தில் கண்டுபிடிப்பு
கல்பிட்டியிலிருந்து மன்னாருக்கு புதன்கிழமை அதிகாலை எடுத்துச் செல்லப்படவிருந்த 380 ஜெலிக்நைற் குச்சிகளை கல்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கல்பிட்டி மாம்புரி வீதிச் சோதனை நிலையத்திலேயே மீன் லொறியொன்றை சோதனையிட்ட பொலிஸார் அதற்குள்ளிருந்து இந்த வெடிமருந்துக் குச்சிகளை கைப்பற்றியுள்ளனர். வாகனத்தினுள்ளிருந்த மேலதிக இரு ரயர்களுக்கிடையிலும் வாகன உட்புறப் பகுதி யிலும் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே கண்டுபிடிக்கப்பட்டதாக கல்பிட்டி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி லக்ஷ்மன் லங்வலராச்சி தெரிவித்தார். இது தொடர்பாக, அந்த வாகனத்தில் வந்த ... Read More
சென்னை, பெங்களூர் வழியாக விமானம் மூலம் இலங்கைக்கு ஹெரோயின் கடத்தல்
சென்னை, பெங்களூர் வழியாக இலங்கைக்கு அதிக அளவில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் கடந்த நான்கு மாதங்களில் பல்வேறு இடங்களில் 21 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 9 ஆம் திகதி அன்று உதியான் எக்ஸ் பிரஸ் ரயிலில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போதைப்பொருள் தடுப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் கூறியதாவது; இலங்கையில் அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. வெளியில் இருந்து வரும் போதைப்பொருள் ... Read More
வர்த்தக நிலைய மின் உபகரணங்கள் காவத்தையில் இனம் தெரியாதோரால் சேதம்
காவத்தை நகரத்திலுள்ள சுமார் 15 வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த மின்மானிகள் மற்றும் பெறுமதி வாய்ந்த மின் உபகரணங்களையும் இனந்தெரியாத சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக வர்த்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து காவத்தை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சில வர்த்தக நிலையங்களின் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது ... Read More
அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்
ஆயுத மோதல்களில் ஈடுபடுத்துவதற்காக சிறுவர்களை கடத்துவது மற்றும் படைகளில் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளரின் ஆலோசனையுடனேயே அமைச்சரால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபை செயற்குழுக் கூட்டத்தில் ... Read More
கடலில் குளித்த இரு மாணவர்கள் பலி
கடலில் குளித்துக் கொண்டிருந்த மாணவர்களில் இருவர் கடல் அலையில் சிக்கியதால் காணாமல் போன சம்பவம் செவ்வாய்க்கிழமை பலப்பிட்டிய - அகுங்கல்ல கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பிட்டிகலை- நவதங்கட பகுதியைச் சேர்ந்த பத்து மாணவர்கள் போயா விடுமுறையை கழிப்பதற்காக இங்கு வந்து கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போன இரு மாணவர்களும் கரையில் இருந்து சற்றுத் தொலைவில் குளித்துக் கொண்டிருந்ததாகவும் சில நிமிடங்களில் அவர்களைக் காணவில்லை எனவும் ... Read More
வவுனியா மோதலில் 5 இராணுவம் காயம்
வவுனியா, கல்மடு பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் ஐந்து படையினர் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்கு தலையடுத்தே இந்த மோதல் வெடித்தது. இதன்போது படையினர் தரப்பில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலை நடத்தியவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் படை யினர் பெரும் தேடுதலை நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த படையினர் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ... Read More
ஐ.நா.வில் கொண்டு வரப்படவுள்ளதீர்மானத்தை தடுக்க ஜெனீவா செல்லும் இலங்கை தூதுக்குழு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதைத் தடுக்க அரசாங்கத்தின் குழு ஒன்று அடுத்த மாதம் ஜெனீவா செல்லவுள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஜெனீவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தற்போது போர்த்துக்கல் தலைமைப் பொறுப்பு வகிக்கின்றது. இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமைகள் சபையில் ... Read More
மன்னாரில் புலிகளின் பகுதிகளை நோக்கி அகோர ஷெல் வீச்சு
மன்னாரில் இராணுவ முகாம்களிலிருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி புதன்கிழமை மாலை முதல் பல மணிநேரம் அகோர ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென, மாந்தை மற்றும் தள்ளாடிக்கு இடைப்பட்ட இராணுவ நிலைகள் மீது புலிகள் திடீர் ஷெல் தாக்குதலை நடத்தினர். இதையடுத்து தள்ளாடி மற்றும் சவுத்பார் இராணுவ முகாம்களிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மாந்தை மேற்கு பகுதியை நோக்கி கடும் ஷெல் தாக்குதலை ... Read More
எல்.ரீ.ரீ.ஈ. தலைவர்களை விமர்சித்த அதன் 8 உறுப்பினர்கள் சுட்டுக்கொலை!
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் தலைவர்களை விமர்சித்த அதன் 8 உறுப்பினர்கள் பொட்டு அம்மானின் ஆதரவாளர்களினால் பொது மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக சுட்டுக்கொல்லப்பட்டதாக சிவிலியன்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எல்.ரீ.ரீ.ஈ. யினருக்காக வரி அறவிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அதன் 8 உறுப்பினர்கள் வரிப்பணத்தை தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தினார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின்பேரில் பெரும் தொகையான மக்கள் மத்தியில் விளையாட்டு மைதானம் ... Read More
ரிஸானாவின் விடுதலையை வலியுறுத்தி 1 இலட்சம் கையெழுத்துடன் மகஜர்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்துகளைக் கொண்ட மகஜர் புதன்கிழமை சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை மாதாவின் புதல்விகள் அமைப்பு நாடுபூராவும் சேகரித்த இக்கையொப்பங்கள் மூலமாக சவுதி அரேபியா ரிஸானாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்படுமென அமைப்பினர் நம்பிக்கை வெளியிட்டனர். கொழும்பு மாநகர முன்றிலிலிருந்து பேரணியாக சென்றவர்களே சவுதி தூதுவர் ... Read More
60000 இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் புலிகளால் பலவந்தப் பயிற்சி!
வன்னியில் சுமார் 60,000 இளைஞர்களும், சிறுவர்களும் புலிகளால் பலவந்தமாகப் பயிற்சிக்குப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாக, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரச கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தவர்களில் 7, 8 வீதமானவர்களே பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை வீட்டிற்கொருவர் என்ற விகிதத்தில் பலவந்தமாக சிறார்கள் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள காரணத்தினாலேயே பெரும்பாலான மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றமுடியாத ... Read More
உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் சுகாதார அமைச்சு முன் ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் வைத்தியர்கள் வடக்கு, கிழக்கில் கட்டாயமாக பணியாற்ற வேண்டுமென மேற்கொள்ளப்படும் முயற்சியை கண்டித்து சுகாதார அமைச்சின் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உள்ளகப் பயிற்சி வைத்தியர்களினால் நடத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்திலிருந்து வெளியேறியவர்களும் கலந்துகொண்டனர். திறமையடிப்படையில் நியமனம் வழங்காது யாழ். வைத்தியசாலைகளில் பணியாற்ற வலியுறுத்தினால் தாம் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து டாக்டர் நாகேந்திரன் மாதவன் கருத்துக் கூறுகையில், யாழ். குடாநாட்டு ... Read More
கொழும்பில் நடைபெற இருக்கும் சர்வதேச பயங்கரவாத தடுப்பு மாநாடு
எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் சர்வதேசப் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட வல்லுநர்களும் பங்கெடுத்துள்ளனர். இவர்கள் ஷ்ரீலங்காவில் செயற்படும் பயங்கரவாதிகளாகிய புலிகள் இயக்கத்தினர், மற்றும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களாகிய அல்-ஹைடா, ஜெமா, இஸ்லாமியா ஹமாஸ் ஆகியவற்றின் பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் ... Read More
கைதாகிய எல்.ரீ.ரீ.ஈ. படையணியைச் சேர்ந்த 8சிறுவர்கள் மீது மேலதிக விசாரணை!
கிழக்கில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையொன்றின்போது கைது செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. படையணியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் மற்றும் 4 சிறுமிகளும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சங்கமன்கந்த பன்சல்கல என்ற இடத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் நேற்று நடத்திய தேடுதலின்போது தப்பியோடிய எல்.ரீ.ரீ.ஈ. குழுவொன்றின் மீது தாக்குதல் ... Read More
கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்த மாகாண முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்
கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்களுக்கு வலியுறுத்தியிருக்கும் அதேசமயம், அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மாகாண சபைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நிவர்த்தி செய்து பலன்கள் நாட்டு மக்களுக்குக் கிட்டச் செய்வதை விரைவு படுத்துமாறும் கேட்டிருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியபோதே மேற்கண்ட வேண்டுகோளை விடுத்திருக்கின்றார். கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு ஆளுநர்களும் முதலமைச்சர்களும் ... Read More
கண்காணிப்புக் குழுத் தலைவர் வன்னியில் புலிகளுடன் சந்திப்பு
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜொகான் சோல்பேர்க் நேற்று புதன் கிழமை வன்னியில் விடுதலைப்புலிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். வன்னியைக் கைப்பற்ற விரைவில் படை நடவடிக்கையை ஆரம்பிக்கப் போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை சூளுரைத்த நிலையிலேயே நேற்றைய இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வவுனியா வரை விமானப் படை ஹெலிகொப்டரில் சென்ற மேஜர் ஜெனரல் சோல்பேர்க் அங்கிருந்து தரைவழியாலேயே கிளிநொச்சி சென்றார். ... Read More
5 இளைஞர்கள் படுகொலையுடன் தொடர்புபட்ட முக்கிய சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக்கொலை
பாணந்துறை திக்பெத்த கொலு கொட்டுவாவத்தை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களென கருதப்படும் சந்தேக நபர்களில் ஒருவர் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், மேலுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாணந்துறை திக்பெத்த கொலுகொட்டுவாவத்தையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் 5 இளைஞர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலைகளானது அப் பிரதேசத்திலுள்ள இரு பாதாள உலக கோஷ்டியினருக்கிடையில் நீண்ட ... Read More
தனியார் சம்பளத்தை அதிகரிக்க வலியுறுத்தி இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்
தனியார் துறையினரின் சம்பளத்தையும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவையும் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரசாங்கத்திடம் வலியுறுத்தல் விடுத்து இன்று வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன. பல்வேறு தனியார்துறை தொழிற்சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள் பிரதான தொழில் நிறுவனங்கள் முன் இடம்பெறவுள்ளதுடன், கொழும்பிலும் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்; ... Read More
ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
சிரேஷ்ட ஊடகவியலாளரும், "த சண்டே ரைம்ஸ்' பத்திரிகையின் பாதுகாப்புத்துறைச் ஆய்வாளரும், பிரதி ஆசிரியருமான இக்பால் அத்தாஸின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
நுகேகொட விஜேராமவில் உள்ள அவரது வீட்டுக்கு முன் பாகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மேல்மாகாணசபை உறுப்பினர்கள் சிலரின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். "இக்பால் அத்தாஸ் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் பாதகர்' என்ற சுலோக அட்டைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர். நாட்டின் பாதுகாப்புத்துறைச் செய்தியாளரான இவருக்கு கடந்த ... Read More
யாழ். வாசிகள் மூவர் மன்னாரில் கைது
கரவெட்டி மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் நேற்றுக் காலை மன்னார் பள்ளிமுனைப் பகுதி யூடாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியை வந்தடைந்திருக்கின்றனர்.சட்டவிரோதமான முறையில் வந்தனர்எனக்கூறப்படும் இந்த மூன்றுபேரும் விசாரணையின் பின்னர் இன்று வவுனியாவிலுள்ள இவர்களது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக் கப்படவிருப்பதாக மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
... Read More

