ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வி?
இலங்கைப் பணிப்பெண்ணான ரிசானாவுக்கு கருணை காட்ட உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மறுத்துவிட்டதால் அவரைக் காப்பாற்றும் இலங்கை வெளிநாட்டமைச்சின் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதிஅரேபியாவில் இலங்கைப் பணிப்பெண்ணை ரிசானாவின் கவனக் குறைவால் 4 மாதக் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு அரசு ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்தது. இலங்கை பணிப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீக்குமாறு இலங்கை அரசும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக ... Read More
யாழ் நகரில் அதிக விலைக்குப் பொருள்களை விற்ற 5 வர்த்தகர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம்
யாழ். நகரப் பகுதியில் அத்தியாவசிப் பொருள்களை அதிக விலைக்கு விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து வர்த்தகர்களுக்கு ஒவ்வொருவருக்கும் 10 அயிரம் ரூபா அப ராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு எச்ச ரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர். யாழ். செயலாக விலைகட்டுப்பாட்டு அதி காரிகள் நகரப்பகுதி வர்த்தக நிலையங்களில் நடத்திய திடீர் சோதனையின் போது ஐந்து வர்த்தகர்கள் சிக்கினர். அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு ஆகிய பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றதாக வும் விலைப் ... Read More
300 பஸ்கள் இந்தியாவில் இருந்து..
300 பஸ்கள் இந்தியாவில் இருந்து தருவித்து பஸ் சேவைகளை சீராக்க நடவடிக்கை இ.போ.ச. பஸ் சேவைகளை சீராக இயங்க வைத்து அதனால் பயணிகள் சிறந்த பயன்களைப் பெறுவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 600 சாரதிகளும் நடத்துநர்களும் தெரிவு செய்யப்பட்டு விசேட பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பல டிப்போக்களில் சாரதிகள், நடத்துநர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 200 புதிய பஸ் திருத்தும் தொழிலாளர்களும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். பஸ் சாரதிகள் ... Read More
கிழக்கிலங்கையிலிருந்து ஓடிய புலிகள் இனி அங்கு திரும்பிவர முடியாதாம்! பாதுகாப்புச் செயலர் கூறுகிறார்
கிழக்கிலிருந்து பாய்ந்தோடிய புலிகள் இனி அங்கு திரும்பி வர முடியாது. படையி னர் இதற்கான சகல ஏற் பாடுகளையும் மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்'' இவ்வாறு பாதுகாப்புச்செயலர் கோத்த பாய ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள் ளார். அண்மையில் தொப்பிகலப் பகுதிக்கு இராணுவத் தளபதி, அதிகாரிகள் சகிதம் விஜயம்செய்த அவர் கொழும்பு திரும்பிய பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்ட வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: தொப்பிகல விஜயத்தின்போது அங்கு ... Read More
புத்த மதத்தை பின்பற்றக் கிடைத்தமை அதிர்ஷ்டமென்கிறார் ரணில்
புத்த மதத்தை பின்பற்றக் கிடைத்தமை தான் செய்த அதிர்ஷ்டமென எதிர்க்கட்சித் தலைவரும், ஐ.தே. கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சமய நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது; எனது சமய தர்மத்தை விமர்சிப்பதற்கு புத்த பகவான் அனுமதியளித்துள்ளார். எமது அரசியல் கட்சிகளிலும் குறைபாடுகள் உள்ளன. புத்த பகவானை விமர்சனம் செய்த நிலையில் அவ்விமர்சனங்களையே அவர் அங்கீகரித்ததாக வரலாறுகள் ... Read More
குருநகர் பகுதியில் கிளைமோர் தாக்குதல்; சிறுவன் உட்பட மூவர் காயம்!
குருநகர் கடற்கரை வீதியில் தொடர்மாடிக் குச் சமீப மாக, சென். றோக் தேவா லயம் முன் பாக, நேற் றுப் பிற்பகல் 3.45 மணி யளவில் கிளைமோர் ஒன்று வெடித் துள்ளது. இத்தாக்குதலில் சிறுவன் ஒருவன் உட்பட மூவர் காயமடைந்தனர். கட்டடத் திணைக்க ளத்தின் 'பிக் கப்' வாக னம் சேத முற் றது. வீதி ஓர மாக வைத்து வெடிக்க வைக்கப் பட்ட கிளைமோரில் சிக்கி, அருகில் உள்ள ... Read More
முகத்துவாரம் ரஜமல்வத்தையில் தமிழரின் வீட்டில் பட்டப்பகலில் 35 ஆயிரம் ரூபா கொள்ளை
கொழும்பு முகத்துவாரம் ரஜமல்வத்தை வீதியிலுள்ள தமிழர் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றில் 35 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீட்டுக்கு சென்ற மூவர், தங்களை இரகசிய பொலிஸார் என்று கூறிக் கொண்டு மேலிட உத்தரவின் பேரில் விசாரணை நடத்துவதற்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சிவிலுடையில் சென்ற மூவரில் ஒருவர் வீட்டுவாசலுக்கு வெளியே நிற்க ஏனைய இருவரும் உள்ளே சென்று வீட்டு உரிமையாளரையும் அவரது மனைவியையும் வேலைக்காரப் பெண்ணையும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். கனடாவிலுள்ள இவர்களது ... Read More
மதுரை சிறையிலுள்ள இலங்கை கைதிக்கு கமரா செல்போன் கொடுக்க முயன்ற அகதி
மதுரை மத்திய சிறையில் உள்ள இலங்கை கைதிக்கு பாக்கெட்டுக்குள் வைத்து `கமரா செல்போன்' கடத்த முயன்ற அகதியை பொலிஸார் தேடி வருகின்றனர். இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் பெர்னாண்டோ (27 வயது). இவர், இராமேஸ்வரம் முகாமில் அகதியாக இருந்தார். இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு `ஹெரோயின்' போதைப் பொருள் கடத்திய வழக்கில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27.04.2003 முதல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பெர்னாண்டோவின் சித்தப்பா மகன் சந்திரகுமார் ... Read More
வன்னிக்கான படை நடவடிக்கைக்கு தயார் நிலையில் பாதுகாப்புப் படை
கிழக்குப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பாதுகாப்புப் படையினர் அடுத்து வன்னிப் பிரதேசத்தை மீட்டெடுக்கும் படை நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளி யிட்டுள்ளது. முதற்கட்டமாக இராணுவத்தினர் மேற்குக் கடலோர மன்னாரிலிருந்து கிழக்குக் கடலோர கொக்கிளாய் வரையிலான கடலோரத்தைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து சிறிய குழுக்களாக முன்னேறிச் சென்று முல்லைத்தீவு உட்பட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் படையினர் ... Read More
பாரத்தின் புதிய ஐனாதிபதி பிரதீபா பட்டேல் அவர்களுக்கு..
பாரத்தின் புதிய ஐனாதிபதி பிரதீபா பட்டேல் அவர்களுக்கு ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதியுள்ள வாழ்த்துச்செய்தி! வணக்கம்!.... இந்தியா ஈழத்தமிழ் பேசும் மக்களின் அயலுலக நட்பு நாடு! இலங்கைத்தீவின் பிராந்திய உறவின் நேச நாடு! நேசமும் நட்பும் கொண்ட இந்தியாவின் புதிய ஐனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் உங்களை மனம் திறந்து வாழ்த்த விரும்பி ஈழ மக்கள் ஐனநாயக கட்சியினராகிய நாம் எழுதும் நேச ... Read More
களுத்துறையில் 68 வீடுகள் செஞ்சிலுவை சங்கத்தால் கையளிப்பு
ஸ்பானிய செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக லாகோஸ்வத்தையில் கடல்கோளால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில் 68 வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்துள்ளது. இவ்வீடமைப்புத் திட்டத்தில் நீர்இ வடிகால் அமைப்புஇ கழிவு நீர் அகற்றல் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன்இ மேலும் 39 வீடுகள் இங்கு பயனாளிகளுக்கு கையளிப்பதற்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மேற்படி வீடுகளை கையளிக்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் ... Read More
வன்னியில் வீட்டிற்கு ஒருவரை பிடிக்க புலிகள் தீவிர நடவடிக்கை
அரச படையினரின் தொடர்ச்சியான தீவிர இராணுவ நடவடிக்கைகளினால் புலிகள் இயக்கத்தினர் கிழக்குப் பிரதேசங்களிலுள்ள தமது முகாம்களிலிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், தற்போது வன்னி மற்றும் ஏனைய வடக்குப் பிரதேசங்களில் அவர்களுடைய யுத்த நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்காக புலிகள் இயக்கத்திற்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை அண்மைக்காலமாகப் புலிகள் இயக்கத் தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கேற்ப வன்னிப் பிரதேசங்களில் மூலை முடுக்கெல்லாம் சென்று இயக்கத்திற்காக ஆட்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் புலிகள் இறங்கியுள்ளனர். இதற்காக வன்னிப் பிரதேசமெங்கும் ... Read More
இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு இருபது வருடங்கள் நிறைவு
பல தசாப்தகால இலங்கை இனப்பிரச்சனைத் தீர்வு முயற்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையுடன் 20 வருடங்களைப் நிறைவு செய்கிறது. இதுவரை இலங்கை இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கும் அதேவேளை, பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும் செய்துகொண்ட இந்த ஒப்பந்தமும் கால நீரோட்டத்தில் அடிபட்டுப்போன ஒப்பந்தங்களில் ஒன்று என்றே பெரும்பாலும் கருதப்படுகிறது.பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ள இந்த ... Read More
2008 இற்குள் கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றிவிட நடவடிக்கை
கண்ணிவெடி அபாயத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் 2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் கண்ணிவெடிகளை முற்றாக அகற்றும் திட்டம் ஒன்றினை ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசநிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணி வெடிகளினால் அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமையளிக்கும் இத் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டமும் யுனிசெவ் நிறுவனமும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளன. மனிதருக்கெதிரான ... Read More
கடாபிக்கு மகிந்த விசேட செய்தி
*ஆசியானில் முதல் முறையாக இலங்கை
லிபிய நாட்டின் ஜனாதிபதி கடாபியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட செய்தியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். ஆசியான் பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்ள பிலிப்பைன்ஸ் செல்லும் வெளிவிவகார அமைச்சர் மாநாட்டை நிறைவுசெய்த பின்னர் லிபியா செல்லவுள்ளார். அங்கு அவர் அந்நாட்டின் அதிபர் முகம்மத் கடாபியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடும் அதேவேளை, ஜனாதிபதியின் விசேட செய்தியொன்றையும் ... Read More
அமைச்சர் டக்ளஸ் யாழ்ப்பாணத்தில் மீண்டும் பொதுமக்கள் பணிகளை தொடர்கின்றார்..!
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 28.07.2007 யாழ் நகருக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து யாழ் நகரில் தங்கி இருக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (30.07.2007) முதல் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார். அத்துடன் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள்;. தொண்டர் ஆசிரியர்கள், அரச நிர்வாகிகள், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள ஆசிரியர்கள், அரசதுறை ... Read More
பிரிட்டனில் 4 தடுப்பு முகாம்களில் சாகும்வரை உண்ணாவிரதம்
பிரிட்டனில் 4 தடுப்பு முகாம்களில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருபவர்களில் சிலரின் உடல் நிலை மிக வும் மோசமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தாகவும் தெரிவிக்கப்பட்டது. அகதி அந்தஸ்து கோரி சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு ஆயத்தமாக 61 பேர் நான்கு தடுப்பு முகாம் களில் வைக்கப்பட்டுள்ளனர். தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் எனக் கோரி ... Read More
ஐனநாயக வழிப்பயணத்தில் கால்பதித்து இருபது ஆண்டு -தோழர் டக்ளஸ்
ஐனநாயக வழிப்பயணத்தில் கால்பதித்து இருபது ஆண்டுகால நிறைவை ஒட்டி ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்திருக்கும் ஊடகங்களுக்கான செய்தி! தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை சுதந்திரத்தை நோக்கிய ஐனநாயக வழிப்பயணத்தில் ஈ.பி.டி.பி யினராகிய நாமும், ஏனைய ஐனநாயக அரசியல் கட்சிகளும் கால் பதித்து இருபது வருடங்கள் பூர்த்தியாகின்றன! 1987 யூலை 29 இல் எமது அயலுலக நட்பு நாடாகிய பாரதத்தின் இளைய தலைவரான ... Read More
கிழக்கில் 3 மாதத்தில் தேர்தல் நடத்த ரூ. 650 கோடி செலவில் எழுச்சித் திட்டம்
கிழக்கு மாகாணத்தில் இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல்களை நடத்தும் இலக்குடன், அதற்கு இசைவாக, "கிழக்கு எழுச்சி' என்ற புனரமைப்பு புனர்வாழ்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்த உள்ளது. "கிழக்கு எழுச்சி'த் திட்டத்துக்கு மொத்தம் 650 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் பழுதடைந்த மீன்பிடித் துறைமுகங்களில் ஒன்றின் புனர மைப்பு வேலைகளை நாளைமறுதினம் ஆரம்பிப்பதுடன் "கிழக்கு எழுச்சி' புனரமைப்புத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. கிழக்கில் போர் ... Read More
புறக்கோட்டையில் கைக்குண்டு மீட்பு
கொழும்புஇ புறக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கைக்குண்டொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மாலை 6.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு வெடிக்க வைப்பதற்கான ஹகிளிப்' கழற்றப்பட்ட பழையதொன்றெனவும் பொலிஸார் கூறினர். புறக்கோட்டைஇ ஓல்கொற் மாவத்தையிலுள்ள பிலிப் மேரி தேவாலயத்துக்கு முன்பாகவிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குண்டு குண்டை செயலிழக்கச் செய்யும் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More




