வன்னிப்புலிகளின் மற்றுமொரு சிறைச்சாலை தொப்பிக்கலயில் கண்டுபிடிப்பு
கிழக்கு மாகாணத்திலுள்ள தொப்பிகலைப் பிரதேசத்தை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடரிலேயே இந்த முகாம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. தங்களுடைய பயங்கரவாதச் செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ள பொதுமக்களைச் சிறைப்பிடித்து சித்திரவதை செய்யும் ஓர் இடமாக புலிப்பயங்கரவாதிகள் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம் எனப் பாதுகாப்புப் படையினர் நம்புகின்றனர். இந்த சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகள் வெளியில் வருவதற்குத் தேவைப்படதாக வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட சாலை போன்று அமைந்துள்ள இச்சிறைக்கூடத்தில் கைதிகள் விலங்கிடப்பட்டு ... Read More
மன்னார் மாட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அமைச்சர் டக்ளஸ் நிதி ஒதுக்கீடு..!
மன்னார் மாவட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முதற்கட்டமாக 73 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட இளையதம்பி ஹரிச்சந்திரா நேற்றுக் காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சில் சந்தித்து, மன்னார் மாவட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யவேண்டியதின் அவசியம் குறித்து விபரமாக எடுத்துரைத்தமைக்கிணங்கவே, அமைச்சரினால் முதற்கட்டமாக 73 இலட்சம் ... Read More
ஐவரி கோஸ்ட் பிரதமர் சென்ற விமானம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது
ஐவரி கோஸ்ட்டின் பிரதமரை ஏற்றி சென்ற விமானம், கிளர்ச்சியாளர்களின் வலுவாக இருக்கின்ற போக்கே பிரதேசத்தில் தரையிறங்கிய போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் பிரதமர் சோரோ தப்பிவிட்டார். ஐ.நா அமைதிக் காக்கும் படையினரின் பாதுகாப்பில் இருக்கும் விமான நிலையக் கட்டிடத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது போல தென்படுகிறது. தங்களுடைய தலைவரான சோரோ, தங்களுடைய பரம எதிரியான அதிபர் லாரண்ட் கிபாகோவின் கீழ் பிரதமராக பணிபுரிவது முன்னாள் ... Read More
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்க தங்கக் குண்டுச் சிகிச்சை
புற்றுநோய்க் கட்டிகளை அழிப்பதற்கு தங்கம் முலாமிடப்பட்ட நுண்ணிய குண்டுகள் பயன்படுத்தப்பட்டு சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும். அச்சோதனை வெற்றி யடைந்துள்ளதாகவும் விரைவில் இச்சிகிச்சை முறை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்த அறுவைச் சிகிச்சைகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தக் குழாய்களிலுள்ள அடைப்புக்களை நீக்க ஆஞ்சியோ பிளாஸ்டிக் முறையில் சிகிச்சை நடத்தப்படுவது போல புற்று நோயையும் தங்கம் முலாமிடப்பட்ட குண்டுகள் ... Read More
இலண்டனின் மத்தியப் பகுதியில் கார் குண்டு செயலிழப்பு
இலண்டனின் மத்தியப் பகுதியில் ஒரு பாரிய கார் குண்டை செயலிழக்க செய்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்தக் குண்டு வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். லண்டனில் கூட்டம் அதிகமாக இருந்த இரவு நேர விடுதி ஒன்றின் அருகில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அறுபது லிட்டர் பெட்ரோல், ஏராளமான கேஸ் சிலிண்டர்கள், ஆணிகள், வெடிக்க வைப்பதற்கு பயன்படும் கருவி ஆகியவை இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ... Read More
அமெரிக்கா இந்தியா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுமா?
அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான அணுசக்தி உடன்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்பட்டு விடும்,'' அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டோலிசா ரைஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து கூறுகையில், "இன்னும் ஒன்றிரண்டு பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது' என்று நேற்று தெரிவித்தார். அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் 32வது ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், பங்கேற்று கண்டோலிசா ரைஸ் பேசியதாவது: இரு நாடுகளுக்கு இடையே உறவு ... Read More
இலங்கையிலிருந்து படகில் அகதியாக வந்த 9 பேர் மாயம் *போராளிகளா?: போலீசார் விசாரணை
இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு அகதியாக வந்தவர்களில் ஒன்பது பேர் தலைமறைவாகினர்.இவர்கள் போராளிகளாக என கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கை வவுனியாவிலிருந்து சுகந்தினி(40), அவரது மகன் விஜிதரன் (19) இருவரும் அகதியாக படகு மூலம் ராமேஸ்வரம் சேரன்கோட்டை கடல் பகுதியில் வந்திறங்கினர். அங்கிருந்து மண்டபம்போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். அவர்களை போலீசார் விசாரித்ததில்,"வவுனியா பகுதியில் தற்போது சண்டை வலுத்து வருவதால் இங்கு அகதியாக வந்து விட்டோம். ராமேஸ்வரம் கடல் ... Read More
பெரியகுளம் நகராட்சி புல் பண்ணையில் தீவிரவாதிகளின் ஆயுத புதையல் சிக்கியது
பெரியகுளம் நகராட்சி புல் பண்ணையில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுத புதையல் சிக்கியது. பெரியகுளம் முருகமலை வனப்பகுதிக்கு அருகே நகராட்சிக்கு சொந்தமான 16 ஏக்கர் புல் பண்ணையில் நேற்று மணி என்பவர் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் போது, புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி முனை தெரிந்தது. இது குறித்து, இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேனி எஸ்.பி., சுதாகர் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ... Read More
ரிஎம்விபியினர் வன்னிப்புலிகள் மீது அதிரடித் தாக்குதல்
களமுனைத்தளபதி மங்களன் மாஸ்டர் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினர் பிரபா குழுவினர் மீது மேற்கொண்ட தொடர்ச்சியான அதிரடித்தாக்குதலில் பிரபா குழுவினருக்கு பலத்த பின்னடைவு!! பல பிரபாகுழு புலிகள் தப்பி ஓட்டம்! வாகனேரி, புலிபாய்ந்தகல் போன்ற பல பிரதேசங்கள் மீட்பு!! கிழக்கில் மட்டக்களப்பு பிரதேசத்தில் வாகனேரி,புலிபாய்ந்தகல், பொண்டுகல்சேனை, பிரம்படித்தீவு, முறுக்கன்தீவு, முறுத்தானை ஆகிய இடங்களில் நிலைகொண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவினர் பிரபா குழுவினர் ... Read More
இரவு நேரத்து ஊரடங்கைத் தளர்த்துமாறு வேண்டுகோள்
யாழ்ப்பாணத்தில் இரவு நேரத்து ஊரடங்கைத் தளர்த்துமாறு அரசாங்க அதிபர் வேண்டுகோள்- யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மாள் கோவில் மகோற்சவம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக் கோவில்களின் உற்சவம் என்பவற்றை கருத்திற் கொண்டு யாழ்ப்பாணத்தில் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ் இராணுவத்தினரை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இரவு ஊரடங்கு இரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இரவுநேரப் பூஜை வழிபாடுகள் பாதிக்கப்படுதாகவும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். ... Read More
மாவிலாறு மேற்கில் 11 புலிகள் பலி!
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவிலாறு மேற்குப் பிரதேசத்தில் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகள் மீது படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதல் காரணமாக 11 புலிகள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. தொப்பிகலயில் படையினரின் கடும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் தப்பியோடும் புலிகள் மாவிலாறு பிரதேசத்தில் மறைந்திருந்தபோது படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதையடுத்தே இம்மோதல் ஏற்பட்டுள்ளது. பதில் தாக்குதலையடுத்து ரி 56 ரக துப்பாக்கிகள், 3 கைக்குண்டுகள் மற்றும் ஒரு தொடர்பாடல் கருவி என்பவற்றை படையினர் ... Read More
விடுதலைப்புலிகளின் பிரித்தானியப் பொறுப்பாளர்களின் சிறை தொடர்கிறது..
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இரண்டு லண்டன்வாழ் அருணாச்சலம் கிருசாந்தக்குமார் மற்றும் கோல்டான் லாம்பர்ட் ஆகியோர், பயங்கரவாதத்தடை சட்டத்தின் கீழ் இன்று லண்டன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டனர். இதில் சாந்தன் ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கோல்டன் லாம்பர்ட்டுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை தரப்பட்டும், அவர் பிணைத்தொகையை இதுவரை கட்டாததால், அவரும், நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றவட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கு ஆகஸ்டு 9ம் தேதி கிரவுன் ( மேல்) ... Read More
நெடுங்கேணியில் புலிகளின் முகாம்கள் வான் தாக்குதலில் அழிவு!
எல்.ரீ.ரீ.ஈ. யினரின் இரண்டு படை முகாம்களை விமானப் படையினரின் ஜெற் விமானங்கள் தாக்கியழித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியிலுள்ள இந்த இரண்டு முகாம்களும் குறித்த தாக்குதல்களின்போது முற்று முழுதாக அழிக்கப்பட்டுள்ளன. காலை 6.15 மணியளவில் தாம் வெற்றிகரமாக இந்த தாக்குதல்களை நடத்தியதாக விமாமோட்டிகள் உறுதி செய்துள்ளதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. ... Read More
புலிகளால் கடத்தப்பட்ட சிறுமி வல்லுறவூக்குள்ளான நிலையில் வீடு சேர்ந்தார்!
எல்.ரீ.ரீ.ஈ. யினரால் ஆயுதப் பயிற்சிக்காக வன்னியில் கடத்திச் செல்லப்பட்ட 17 வயதுடைய தமிழினி என்னும் சிறுமி, புலிகளால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவரது வீடு வந்து சேர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயுதப் பயிற்சிக்காக ஒரு மாதத்திற்கு முன்னர் வன்னியிலிருந்து பலாத்காரமாக பிடித்துச் செல்லப்பட்ட தமிழினி சுந்தர வடிவேல் எனும் குறித்த சிறுமி, பத்து நாட்களுக்கு முன்னர் தனது வீடு திரும்பியுள்ளார். கடும் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட நிலையிலேயே இவர் ... Read More
பொறியில் சிக்கிய புலிகள்
அரசுக்கு கயிறு கொடுக்க வெளிக்கிட்டு அதே கயிற்றினை விழுங்கிய புலிகள்.கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் மீது புலிகள் விமானத் தாக்குதல் என்ற பரபரப்புச் செய்திகள் வந்து கொண்டிருக்க உண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தான தகவல்கள் நம்பகரமான பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.உண்மையில் கட்டுநாயக்கா பகுதியில் புலிகளின் விமானத்தாக்குதலே நடைபெறவில்லை இதுதான் முழு உண்மை. தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தொடர் தோல்விகளை மறைக்க ஒரு மாபெரும் தாக்குதல் ஒன்றினை நடாத்தவேண்டிய நெருக்கடியான ... Read More
தென்பகுதியின் பிரதான கொள்ளைக் கும்பல் கைது
நாட்டின் தென்பகுதியில் இயங்கி வந்ததாகக் கருதப்படும் பிரதான கொள்ளைக் கும்பல் ஒன்றை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏழு பேரைக் கொண்ட இந்தக் கும்பல் பல இலட்சம் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர். மாத்தறை. திக்வெல்ல உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வர்த்தகர்களிடம் கொள்ளையடித்தும் வந்த இவர்களிடம் இருந்து கைக்குண்டுகள் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற நான்கு பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்களுக்குத் தொடர்பிருப்பதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து ... Read More
காஷ்மீர்: தேடுதல் வேட்டையில் 44 கிலோ வெடிபொருள்கள் சிக்கின
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 44 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ராணுவத்தினரும் போலீஸரும் இணைந்து செவ்வாய்க்கிழமை இரவு தோடா மாவட்டத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த வெடிமருந்து குவியல்கள் சிக்கியதாக மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனோகர் சிங் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: இந்த தேடுதல் வேட்டையில் 40 கிலோ வெடிமருந்து, 3 ஏ.கே. ... Read More
செவனகலவில் மர்ம நபர்கள்
செவனகல சீனித் தொழிற்சாலைக்கு அருகில் கறுப்பு உடையணிந்த மர்ம நபர்கள் இரவில் நடமாடிவருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதுடன். கடும் பதற்றமடைந்த நிலையிலும் காணப்படுகின்றனர். இத் தொழிற்சாலையின் நடவடிக்கைகள் பல்வேறு பிரச்சினைகளின் பின்னர் மீண்டும் தற்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவில் நடமாடும் இம்மர்ம நபர்கள் சீனித்தொழிற்சாலைக்கு ஏதேனும் பங்கம் விளைவிக்கவே இவ்வாறு வித்தியாசமான கோலங்களில் நடமாடுகின்றனர் என்ற ஐயமும் அங்கு நிலவி வருகின்றது. இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் ... Read More
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் இலங்கை அரசு திட்டம்
புலிகளின் கடைசி படை முகாம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, கிழக்கு மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. கிழக்கு மட்டகளப்பில் உள்ள அக்கரைப்பட்டு நகரில் புதிய மருத்துவ அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழாவின் போது, இலங்கை அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகரும், அவரது இளைய சகோதரருமான பாசில் ராஜபக்சே இதை தெரிவித்தார். "இலங்கையின் கிழக்கு மாகாணம் புலிகளிடம் இருந்து முழுமையாக மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கிழக்கு மட்டகளப்பு ... Read More
படையினரின் காவலரண் மீது புலிகள் தாக்குதல் 2 இராணுவத்தினர், ஊர்காவல் படைவீரர் பலி
நால்வர் காயம், செட்டிகுளத்தில் சம்பவம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை அதிகாலை இராணுவ காவலரணொன்றின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இரு இராணுவச் சிப்பாய்களும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர். செட்டிகுளம் அவரந்தலுவ பகுதியிலுள்ள காவலரண் மீதே நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அப் பகுதியிலுள்ள காவலரணை அழிக்கும் நோக்கிலேயே புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் படையினர் தரப்பில் ... Read More




