ஈராக்கில்: 5 பிரிட்டிஷார் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்
ஈராக்கில் பாக்தாத் நகரில் 5 பிரிட்டிஷார்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்கள். கடத்தல்காரர்கள் ஈராக்கிய போலீஸ் சீருடையில் வந்தனர். அவர்கள் போலீஸ் வாகனங்களில் வந்து நிதி அமைச்சரக அலுவலகத்தை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் அந்த அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து ஒரு காண்டிராக்டர் அலுவலக நிர்வாகியையும், அவரது 4 பாதுகாவலர்களையும் துப்பாக்கிமுனையில் கடத்திச்சென்றனர். இதை இங்கிலாந்தின் வெளிநாட்டு இலாகா செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். இங்கிலாந்து நாட்டு தூதரக அதிகாரிகள் ஈராக் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ... Read More
களுகங்கையில் ஆணின் சடலம் மீட்பு
இரத்தினபுரி திமியாவ , மாரலிய பகுதியில் இரத்தினபுரி பொலிஸார் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமொன்றை மீட்டுள்ளனர். களுகங்கையில் மிதந்து வந்து ஓரமாக ஒதுங்கிய சடலமென கூறப்பட்டபோதிலும் வேறிடமொன்றில் கொலை செய்து இப்பகுதியில் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதென்று பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தற்போது இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை ... Read More
உல்லாச ஹோட்டலில் விஷமருந்திய ஜோடி
கண்டி பூவேலிகட என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல் ஒன்றின் அறையில் விஷமருந்திய இளம் ஜோடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கே.டி.கருணாரத்தன தெரிவித்தார். கந்தப்பளையைக் சேர்ந்த தமிழ் இளைஞரும், மாரவிலையை சேர்ந்த சிங்கள யுவதி ஒருவருமே இவ்வாறு விஷமருந்திய ஆபத்தான நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தங்கியிருந்த அறையில் இவர்களுக்கான உடைகளோ உடமைகளோ எதுவும் இருக்கவில்லை, இவ்வாறான நிலையில் ... Read More
“சீனாவில் புதிய வீடு இடிந்து வீழ்ந்ததில் 16 பேர் பலி
சீனாவின் வடக்குப் பகுதியில் புதிய வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் 16 பேர் பலியாகியுள்ளனர். புதிய வீட்டிற்கான கட்டட வேலைகள் பூர்த்தியானமையைக் கொண்டாடும் முகமாக இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வைபவத்திற்கு 50 பேர் அழைக்கப்பட்டதாகவும் 40 இற்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட அதேவேளை, 30 பேர் காயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
பொலிஸ் சீருடையில் வாகனம் கடத்தல்
பொலிஸாரின் சீருடையில் வந்த ஆயுதம் தரித்து வந்து உல்லாசப் பயணிகளின் வாகனத்தைக் கடத்திச் சென்ற மூன்று இளைஞர்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர். ஹபராதுவ-கொக்கல பகுதியில் உல்லாசப் பயணிகளை ஹோட்டலில் இறக்கிவிட்டு வரும்போது அதனை இடைவழியில் மறித்து இம்மூவரும் சாரதியைக் கட்டி வாகனத்தினுள் போட்டுக்கொண்டு அதனைக் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அங்கம் என்ற இடத்தில் சாரதியை வெளியே வீதியில் இறக்கிவிட்டு வாகனத்துடன் சென்றுள்ளனர். வீதியால் சென்றவர்கள் சாரதியை காப்பாற்றி பொலிஸாருக்கு விடயத்தை ... Read More
இராணுவத்திலிருந்து தப்பிவந்த 9 பேர் நொச்சியாகமவில் கைது
நொச்சியாகம பகுதியில் நேற்று முந்தினம் இரவு பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுந்தினமிரவு 7மணிமுதல் 11 மணிவரை நடத்தப்பட்ட தேடுதலில் சுமார் ஐம்பதிற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இராணுவத்திலிருந்து தப்பிவந்தவர்கள் என நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். இப்பகுதியில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் நீதிமன்றத்தில் ... Read More
சுவிசில் புலிகளுக்கான விளக்கமறியல் தொடர்கிறது..
சுவிஸில் மே 1ம்திகதி மேதின நிகழ்வுகளில் கலந்து கொண்ட புளொட் அமைப்பின் சுவிஸ் பொறுப்பாளர் ரஞ்சன், மற்றும் மூன்று புளொட் உறுப்பினர்கள் உட்பட அறுவர் மீது சுவிஸ் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி தாக்குதல் சம்பவம் சம்பந்தமாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புலிகளின் சுவிஸ்கிளை பொறுப்பாளரான குலம் என அழைக்கப்படும் செல்லையா குலசேகரசிங்கம் மற்றும் புலிகளின் முன்னணி அமைப்பான தமிழ் இளைஞர் அமைப்பின் (ரிவைஓ) சுவிஸ் பேர்ன் ... Read More
அளவெட்டியில் ஆயுதங்கள் கைப்பற்றல்
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் நேற்றிரவு 9.00மணியளவில் இராணுவத்தின் மேறகொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ரி 56 ரக ஆயுதங்கள் இரண்டு, மகசின்கள் ஏழு, அதற்கான தோட்டாக்கள் 365, கிரனைட் 01, மைக்ரோ ரக கைத்துப்பாக்கி 01, மகிசின் ஒன்று, பத்து ரவைகள், தொலை இயக்கிக் கருவி என்பன இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ... Read More
முல்லைத்தீவு வான் தாக்குதலில் புலிகளின் முகாம் நிர்மூலம்
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தெற்கில் புலிகளின் பாரிய முகாமொன்று இலங்கை விமானப்படையின் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்களின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்றுபகல் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ... Read More
ஊடகங்கள் உண்மையான நிலவரங்களை ஆராய்ந்து, செய்திகளை பிரசுரிக்க வேண்டும் –ரிஎம்விபி
ஊடகங்கள் உண்மையான நிலவரங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டு பொது எதிரியான பிரபா புலி பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் நோக்குடனும் நாட்டு மக்களின் நலன் கருதியும் செய்திகளை பிரசுரிக்கவேண்டும் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரிஎம்விபி) இன்று கிழக்கு மாகாணம் புலிப்பாசிசத்தின் கோரப்பிடிக்குள் இருந்து படிப்படியாக விடுபட்டு ஓர் நிம்மதி பெருமூச்சுடன் தனது எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்துவைத்துக்கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் எமது பிரதேசத்தை கல்வியிலும், பொருளாதாரத்திலும் வளமடையச்செய்து எமது மக்களுக்கு ஓர் ... Read More
கடற்படைத்தாக்குதலில் புலிகளின் கிழக்கு புலனாய்வுத்தலைவர் பாரதி உயிரிழப்பு
கடந்த 27 ஆம் திகதி திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் இலுப்புக்குளம் பகுதியில் வைத்து புலிகள் இயக்கக் குழுவினர் மீது கடற்படையினர் மேற்கொண்ட தீவிரத்தாக்குதலில் புலிகள் அமைப்பின் புலனாய்வுப்பிரிவின் தலைவர்களில் பிரபலமானவரும், திருகோணமலை மாவட்ட புலிகள் இயக்கப் புலனாய்வுத் தலைவருமாகிய பாரதி உட்பட மூன்று உறுப்பினர்கள் ஸ்தலத்திலே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் போது மேற்படி கொல்லப்பட்ட புலிகள் இயக்கத்தினரிடமிருந்த 2 நவீன மைக்ரோ கைத்துப்பாக்கிகளையும் ... Read More
சீனப்பெண்களைப் பணிக்கமர்த்த மலேசியப் பெண்கள் எதிர்ப்பு
வீட்டு வேலைகளுக்கு சீனப்பெண்களை பணியக்கமர்த்தும் திட்டத்திற்கு மலேசிய மகளிர் அமைப்புக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ~சீனப் பெண்கள் தங்களது சாகசப் பேச்சுக்களினாலும் நடத்தைகளினாலும் மலேசிய ஆண்களை மயக்கி, கவர்ந்து பணங்களைச் சூறையாடக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், குடும்ப உறவுகளில் குழப்பம் ஏற்படுவதுடன் விவாகரத்துவரை சென்றுவிடக் கூடிய அபாயம் கூட ஏற்பட வாய்ப்பிரிப்பதாகவும் அம்மகளிர் அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. இது குறித்து மலேசிய சீன சங்கத்தின் மகளின் பிரிவுத் ... Read More
ஊர்காவற்படை வீரருக்கு வலைவீச்சு.
கொஹ{வளை பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவரின் துப்பாக்கியைத் திருடி விற்பனை செய்த குற்றத்திற்காக ஊர்காவல்படை வீரர் ஒருவர் பொலிஸாரினால் மிகவும் உன்னிப்பாகத் தேடப்பட்டு வருகிறார். தெஹிவளையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலொன்றிடமிருந்து கைப்பற்றப்பட்ட 3.8 மில்லிமீற்றர் துப்பாக்கி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, இந்த விடயம் தெரியவந்துள்ளது. கொஹ{வளையில் பொலிஸில் கடமையாற்றும் ஊர்காவற்படை வீரர் ஒருவரே தமக்கு இந்தத் துப்பாக்கியை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் ... Read More
புலிகளின் ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்படுவர்.(?)
எதிர்வரும் காலங்களில் சுவிஸ் தலைநகர் Genevaவில் புலிகளால் ஓர் நாடகம் (கேலிக்கூத்து) அரங்கேற இருக்கின்றது. தமிழ் அகதிகளை கச்சிதமாக வரவழைக்கும் புலிகள் அவர்களது கைளிலே பொல்லுகளை கொடுத்து தங்கள் தங்கள் மண்டைகளிலே அடித்து கொள்ள சொல்லப் போகிறார்கள். எவ்வாறாயின் மக்கள் புலிகளின் நடைமுறை அரசை அங்கீகரித்துள்ளார்கள் என்றும் புலிகளின் பிரதேசத்தில் தமிழ் மக்கள் வாழமுடியும் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்பதை மக்களின் வாய்களாலேயே சொல்ல வைக்கப் போகிறார்கள். அதாவது ... Read More
இராக் குண்டுவெடிப்பில் 20 பேர் பலி
இராக்கின் தலைநகர் பாக்தாதின் மையப் பகுதியில் இடம்பெற்ற வாகனக் குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பாக்தாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜன நெருக்கடி மிக்க வணிகப்பகுதியான சினாக்கில் இடம்பெற்ற இந்தத்தாக்குதலில் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சுபி இஸ்லாம் பிரிவின் ஸ்தாபகரின் சமாதி இருக்கின்ற முக்கிய சுனி மசூதி ஒன்றும் இந்த வெடிப்பில் சேதமடைந்துள்ளது. ... Read More
வவுனியா விசேட பள்ளியின் மாணவர்கள் சாதனை
இலங்கையின் யுத்தம் அனர்த்தங்கள் மற்றும் இயற்கை வழிகள் ஆகியவற்றின் மூலம் உள மற்றும் உடல் பாதிப்புகளுக்கு உள்ளான மாணவர்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்று வவுனியாவில் நடந்து வருகிறது. சீட் எனப்படும் சமூக, பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்கள் என்ற தன்னார்வ அமைப்பினால் இந்த பள்ளிக்கூடம் நடத்தப்படுகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் அகில இலங்கை மட்டத்திலான, இந்த வகையிலான மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பெரும் சாதனைகளை ஏற்படுத்தியுள்ளனர். ... Read More
திருகோணமலையில் மூன்று புலிகள் பலி
இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரை அடுத்துள்ள இலுப்பைக்குளம் பகுதியில், படையினர் மேற்கொண்ட தாக்குதலில், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மூவர் பலியானதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பலியானவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பாரதி என்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியாவர்களிடமிருந்து பிஸ்டல் ஒன்றினையும், தொலைநோக்கு கருவி மற்றும் கைத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
கண்டியில் கொள்ளைச் சம்பவம் அதிகரிப்பு
கண்டி பொலிஸ் நிலையத்திலும் அதன் சுற்றுப்புற பொலிஸ் பிரதேசங்களிலும் கடந்த சில வாரங்களாக வீடுடைப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் வட்டார அறிக்கைகள் மூலம் தெரியவருகின்றது. குறிப்பாக கண்டி, பேராதனை, கம்பளை, கட்டுகஸ் தோட்டை, கடுகண்ணாவ போன்ற பொலிஸ் பிரதேசங்களிலேயே இக்குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதேவேளை, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கம்பளை உணம்புவ என்ற கிராமத்திலுள்ள வீடொன்றிற்கு பொலிஸார் எனக்கூறிக்கொண்டு ஆயுதங்களுடன் உட்புகுந்த கோஷ்டி ... Read More
போலீஸ் வாகனம் புலிகள் தகர்ப்பு
கொழும்புவில் சிறப்பு அதிரடிப்படை போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் பலியாயினர்; 71 பேர் படுகாயமடைந்தனர்.கொழும்புவில் இருந்து 15 கி.மீ., தொலைவில் ரத்மலானா என்ற இடத்தில் மாலை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை போலீசாரின் வாகனம் ஒன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில், ஆறு பேர் பலியாயினர்; 71 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்று இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், புலிகள் இதுவரை எதுவும் ... Read More
வெள்ளவத்தை உணவு விடுதியொன்றில் தீ
கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள உணவு விடுதியொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த உணவு விடுதியில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து, விடுதியின் பின்புறம் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதென வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மருதானை தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த பொலிஸார், உணவு விடுதியில் களஞ்சியசாலை முற்றாகத் எரிந்து நாசமாகி விட்டதாகவும் பொருட்சேதங்கள் ... Read More

.gif)