இடி மின்னல் தாக்கி, தந்தை மற்றும் மகள் மரணம்
இடிமின்னல் தாக்கியதால் தந்தையும், மகளும் ஸ்தலத்திலேயே மரணமான சம்பவமொன்று குருவிட்ட ஆனந்தபுரத்தில் இடம்பெற்றுள்ளது. எஸ். எம். கிரிணேஷ் (55) , சசந்த குமாரி (26) ஆகியோரே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். இறந்தவரின் மனைவி மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ... Read More
வேலணை: கடற்படையினரின் தாக்குதலில்….
கடற்படையினரின் தாக்குதலில் தீவக புலிப்பொறுப்பாளர் ஈழமாறன் உட்பட நான்கு புலிகள் மரணம். யாழ்ப்பாணம், வேலணை சிப்பனை முடிப்பிள்ளையார் கோவிலடியில் இருந்து புலிகள், கடற்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமையையடுத்து, கடற்படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலின் போது நான்கு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இருதரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலின் போது இடையில் சிக்கிய பிள்ளையார் கோவில் பூசகரும் கொல்லப்பட்டுள்ளார். முற்பகல் 11.00 மணியளவில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் வேலணையிலுள்ள சிப்பனைப் பிள்ளையார் கோவிலருகே ... Read More
வன்னியில் புலிகளின் பகுதியில் விமானப்படை பதில் தாக்குதல்
கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, அடையாளங் காணப்பட்ட புலிகளின் இலக்குகள் மீது நேற்றுக் காலை 5.30 மணியளவில் விமானத் தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் குரூப் கெப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். புலிகளின் விமானப்படையினர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எண்ணெய் தாங்கிகளை இலக்கு வைத்து 4 குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர் எனவும், இதில் கொலன்னாவையில் வீழ்ந்த 2 குண்டுகள் வெடித்த போதிலும் எந்தச் சேதமும் ... Read More
ரிபிசியினரே… வயிற்றுப்பிழைப்புக்காக ஊடகம் நடத்தலாம், தியாகங்களைக் கொச்சைப்படுத்த முயல்வது துரோகமாகும்
ஊடகம் என்பது ஒருவகையில் ஓர் தொழில் தான். ஆனால் நேர்மை, விசுவாசம், உண்மை என்பவை மேலான தகுதிகளாக கருதப்படுகிறது. இவற்றை நயவஞ்சகங்களால் என்றுமே சம்பாதிக்க முடியாது. அந்தவகையில் நயவஞ்சகத்துடன் செயல்படும் ஊடகங்களை மக்கள் இனம்காண நெடுங்காலங்கள் செல்லாது இன்று பெரும்பாலன தமிழ் ஊடகங்கள் தமக்கெனக் கொண்டிருக்க வேண்டிய தகமைகளை இழந்தவர்களாகவும், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மேற்கொள்ளும் இத்தொழிலை நிலை நிறுத்திக கொள்வதற்காக பலதரப்பட்ட நயவஞ்சகங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் ரெண்டு ... Read More
இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 3 முறை பூகம்பம்
இந்தோனேஷியாவில் நேற்று காலையில் வெவ்வேறு பகுதிகளில் 3 முறை பூகம்பம் ஏற்பட்டது. முதல் பூகம்பம் சுமத்ரா தீவில் கடலில் 33 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்டது. இதன் வீரியம் ரிக்டார் அளவில் 5.1 ஆகும். இதனால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. அதை அடுத்து சுமத்ராவின் மேற்கு பகுதியில் படாங்க் அருகே 4.3. ரிக்டார் அளவிலும், திமோர் தீவில் 4.7 ரிக்டார் அளவிலும் பூகம்பங்கள் ஏற்பட்டன. ... Read More
மூன்று கட்டங்களாக, இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்த முடிவு, அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மூன்று கட்டங்களாக மீள்குடியமர்தப்படவுள்ளனர். நேற்று நடைபெற்ற மீள் குடியேற்றம் தொடர்பான உயர் மட்ட மாநாட்டில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டங்கள் மூலம் சுமார் 75 ஆயிரம் பேர் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இதனை அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும், மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயும் உயர் ... Read More
பாஷையூரில் மீனவர் ஒருவர் சுட்டுக் கொலை
யாழ்ப்பாணம் பாஷையூர் இறங்குதுறை பகுதியில் வைத்து மீனவர் ஒருவர் விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்றுக்காலை 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 52 வயதுடைய இராசப்பு ஜோசப் என்ற மீனவரே புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்த இவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் ... Read More
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் நடத்தப்பட்ட ஒரு தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், நாட்டின் உள்துறை அமைச்சர் அவ்தாப் கான் ஷெர்பாவ் அவர்களும் காயமடைந்தார். அவரது உடல்நிலை குறித்த விபரங்கள் தெளிவாகவில்லை. ஷார்சடா என்னும் நகரில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஷெர்பாவ் அவர்கள் தனது உரையை முடித்துக்கொண்ட நேரம், தற்கொலையாளி தனது குண்டை வெடிக்கச் ... Read More
EPRLF வெளியிட்டுள்ள தீர்வு திட்டம் தொடர்பாக ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினரின் விமர்சனம்
இலங்கையினுடைய தேசிய இன பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்று வருகின்ற சர்வகட்சி மாநாட்டின் கவனத்திற்கென பல அரசியல் கட்சிகள் தமது யோசனைகளை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். எனப்படுகின்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அண்மையில் தமது யோசனைகளை தெரிவித்துள்ளது. எழுத்து மூலம் வெளியாகியுள்ள இந்த யோசனைகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருதல் சம்பந்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயதானங்கள் கிழக்கிலங்கை வாழ் சமூகங்களிடையே பலத்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சி ... Read More
மட்டக்களப்பில் அகதிகள் மீள் குடியேற்றத்துக்கு திகதி நிர்ணயம்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள 32 ஆயிரம் குடும்பங்களையும் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதிக்கும் ஜூலை 31 ஆம் திகதிக்கும் இடையில் மீளக் குடியமர்த்த இன்று நடைபெற்ற உயர்மட்ட மாநாடொன்றில் முடிவு செய்ப்பட்டுளள்து. மட்டக்களப்பு 23 வது படைப் பிரிவுத் தலைமையகத்தில் நடை பெற்ற இந்த மகாநாட்டில் அமைச்சர்கள், மாகாண ஆளுனர், சிவில் மற்றும் படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ... Read More
சுவிஸில் புளொட் அமைப்பின் மேதின ஊர்வலம்…
சுவிஸில் உள்ள இடதுசாரி அமைப்புக்கள் மற்றும் முற்போக்கு முன்னணி அமைப்புக்களுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சர்வதேச ஒன்றியத்தின் சார்பாக மேதின ஊர்வலம் சுவிஸ் சூரிச் மாநிலத்தின் பிரதான புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மே முதலாம்திகதி செவ்வாய்க்கிழமை காலை ஒன்பது மணிக்கு சுவிஸ் சூரிச் மாநிலத்தின் பிரதான புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள 'சென்றல்" எனுமிடத்தில் இருந்து ஆரம்பமாகும் மேதின ஊர்வலம் 'கெல்வெத்தியா பிளாட்ஸ்" ... Read More
கிழக்கிலிருந்து புலிகள் வன்னிக்கு தப்பிச் செல்வதாக தெரிவிப்பு
கிழக்கில் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக படையினர் தொடுத்துள்ள தீவிர தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் கிழக்கின் பிரபல புலிகள் இயக்கத் தலைவர்கள் தமது படையணிகளுடன் வன்னிப் பகுதி நோக்கித் தப்பியோடிக் கொண்டிருப்பதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறு பின்வாங்கிக் கொண்டிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இயக்கத்தைவிட்டு விலகிக் கொண்டிருப்பதாகவும் இந்த நிலையில் தொப்பிகல பிரதேசத்தில் சிக்கியிருக்கும் கிழக்குப் புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு வன்னிக்குத் தப்பியோடுவதைத் தவிர, வேறு ... Read More
கொழும்பில் பெரும் பாதுகாப்புத் தேடுதல்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் விடுதலைப்புலிகளைத் தேடும் பெரும் தேடுதல் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளில் ஆயிரக்கணக்கான மக்களும் மற்றும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. 16 பேர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு விமானத் தாக்குதல் குறித்த ஒரு அச்சம் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சிறிது நேரம் இலங்கை பாதுகாப்பு அமைச்சு மூடச் செய்த இரு தினங்களுக்குப் பிறகு இந்த ... Read More
ஈஎன்டிஎல்எப்பின் நோக்கம் தான் என்ன??
கடந்தகால போராட்ட கறைபடிந்த வரலாறுகளும் சோரம் போதலும் (பகுதி-7) ஈஎன்டிஎல்எப்பின் நோக்கம் தான் என்ன??
பிரச்சினை என்னவென்றால் வன்னியிலே புலி இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்பு தமிழ் மக்கள் ஒருபோதும் ஒரு தமிழ்க்கட்சியை உருவாக்கவிடப் போவதில்லை. முழுஇலங்கை தழுவிய தேசியக் கட்சியே உருவாகும். தமிழ் மக்கள் இனவாத யூஎன்பியையோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியையோ மன்னிக்கப் போவதில்லை. இனவாதம் தவிர்ந்த ஒரு கட்சி தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவது தவிர்க்க முடியாதது. ... Read More
உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா
மேற்கிந்திய தீவுகளின் பார்படோசில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் நான்காவது உலகக் கோப்பை வெற்றி. மேலும் இந்த வெற்றியுடன் மூன்று முறை தொடர்ந்து உலகக் கோப்பையை வென்ற அணி என்ற புதிய சாதனையையும் ஆஸ்திரேலியா புரிந்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் தாமதமாக ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்டத்தின் ஒவர் எண்ணிக்கை தலா ... Read More
தமிழக மீனவர்களின் கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், தமிழக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகளே காரணம் என்று தமிழக காவல்துறையின் தலைவர் டி. முகர்ஜி அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கடந்த 11 ஆம் திகதி இந்தியக் கடற்பரப்பில் பிடிக்கப்பட்ட இலங்கைப் படகு ஒன்றில் வந்தவர்கள் ... Read More
ஆசிரியர் நியமனங்களில் பெரும்பாளானோர் புறக்கணிப்பு
பெருந்தோட்ட பாடசாலை ஆசிரியர் நியமனங்களில் பெரும்பாளானோர் பறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் தொழிற்சங்க அழுத்தங்கள் மற்றும் கைய10ட்டல் விடயங்களும் இடம்பெற்றிருப்பதாக ஊவா மாகாண சபையின் மலையக மக்கள் முன்னணி; உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்திருக்கின்றார் இதுகுறித்து தாம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊவா மாகாண ஆசிரியர் நியமன பெயர் பட்டியலில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலர் பொய்யான முகவரிகளோடு உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் 14 பேரின் பெயர்கள் பட்டியலலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன போன்ற தகவல்களின் ... Read More
பிரதியமைச்சர் பி..ராதாகிருஷ்ணன்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் குறித்து தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக வாழ்க்கை தொழிநுட்ப பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாணம், தாண்டிக்குளம் மற்றும் இறக்குவானையைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் தமக்கான முழுமை அடையாளங்களை நிரூபித்த போதும் காவல்துறையினர் விடுதலை செய்யவில்லையென கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் தெரிவித்திருக்கினறார்கள் இதனையடுத்து தொடர்பு கொண்டமைக்கு அமைய தாண்டிக்குளத்தைச் சேர்ந்தவர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றாh.; ஏனையவர்கள் குறித்து விசாரணைகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். ... Read More
நிறுவனங்களால் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு அடிப்படை பாவனைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அடிப்படைப் பாவனை பொருட்களான மண்வெட்டி, கோடாரி, வாளி மற்றும் கத்தி போன்ற பொருட்கள் கரிட்டாஸ் மற்றும் எஹெட் தொண்டர் அமைப்பினால் மீளக் குடியேறியுள்ள 409 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ... Read More
பலவான பிரதேசத்தில் தனியார் பேரூந்து தீப்பற்றியது
கேகாலை கலகமுவ பலவான பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று தீப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத. பிற்பகல் 3.35 மணியளவில் இடம்பெற்ற இந்த தீவிபத்து காரணமாக பேரூந்தின் முன்பகுதியிலுள்ள இரண்டு சில்களும் முற்றாக எரிந்தள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தின் காரணமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
... Read More



