கினியா நாட்டில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி
ஆப்பிரிக்காவில் உள்ள நாடு கினியா. இந்த நாட்டில் உள்ள கடலில் மீன்பிடி படகில் 120 பயணிகள் சென்றனர். படகு கவிழ்ந்தது. இதில் 60 பேர் தண்ணீரில் மூழ்கி செத்தனர். 36 பேர் தப்பிப்பிழைத்தனர். அவர்கள் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். மீதி 24 பேர் கதி என்னஆனது என்பது தெரியவில்லை. ... Read More
ரிபிசி வழக்கு…
ரிபிசி வழக்கு: நோர்வே சேது மற்றும் அனுசிறிகுமார் குற்றவாளியெனத் தீர்ப்பு கடந்த வருடம் ய10ன் மாதம் 8ம் திகதி ரிபிசி கலையகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாக பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் லண்டன் அரோ மாவட்ட நீதிமன்றத்தினால் மூவர் கொண்ட நீதிபதிகளால் குற்றவாளிகளென தெரிவிக்கப்பட்டுள்ளனர். ர்pபிசி கலையகம் மீது வன்முறைகளை மேற்கொண்டார்களென ரிபிசி நிர்வாகம் செய்த முறைப்பாட்டினை அடுத்து பொலிசாரால் ... Read More
ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள்
ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பாPட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையைப் பெறவதற்காக விண்ணப்பித்து முன்கூட்டியே அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உயர்தரப் பாPட்சைக்குத் தோற்றுபவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தவதற்காக தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
... Read More
சிறைச்சாலைக் கைதிகளுக்குத் தொழில் வாய்ப்பு
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு தேவையான உணவை அவர்களைக் கொண்டே உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், சிறைக்கைதிகளுக்கு தேவையான அரிசியை அவர்கள் மூலமே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் வஜிர விஜேகுணவர்த்தன தெரிவித்தார். சிறைக் கைதிகளை கொண்டு விவசாயம் செய்வதற்கு பதுளையில், ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கையில் மொத்தம் 26 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர் எனவும் இவர்களின் உணவுக்காக சோறு வழங்குதற்காக ... Read More
பாPட்சைக்கான விண்ணப்ப முடிவு இன்று
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொது தராதர உயர்தரப் பாPட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பாPட்சை என்பவற்றுக்கான விண்ணப்ப முடிவு திகதி இன்றாகும் இந்த இரண்டு பாPட்சைகளுக்குமான விண்ணப்பங்களை இதுவரை அனுப்பிவைக்காத பாPட்சாதிகள் உடனடியாக விண்ணப்பங்களை பாPட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க அனுப்பிவைக்ககுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கல்விப் பொது தராதர உயர்தரப் பாPட்சை ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த ... Read More
மோப்ப நாய்களின் உதவியுடன் சிறைச்சாலை நடவடிக்கைகள்
சிறைச்சாலைகளில் பணியாற்றுவதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மோப்ப நாய்களின் உதவியுடன் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் வஜிர விஜேகுணவர்த்தன தெரிவித்தார். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதை, இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தும்; எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையென அவர் கூறினார். இதனால், சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்படும் பொருட்களை சோதனைக்குட்படுத்துவதற்கு மோப்பநாய்களை இணைத்துக் கொள்ளப் போவதாக அவர் கூறினார். மோப்ப நாய்களின் உதவியுடன் சிறைச்சாலைக்குள் ... Read More
இலங்கை கடற்படை அதிரடி தாக்குதல்:விடுதலைப் புலிகளின் 3 படகுகள் மூழ்கடிப்பு – 15 பேர் சாவு
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் 15 புலிகள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து சென்ற போது விடுதலைப் புலிகளின் 10 படகுகள் நடமாட்டத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து நடந்த தாக்குதலில் புலிகளின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த மோதலில் 15 புலிகள் கொல்லப்பட்டனர். எஞ்சிய படகுகள் தப்பிச்சென்றன என்று கடற்படை அதிகாரி ... Read More
கிண்ணியா ஆஸ்பத்திரி திறப்பு விழா
கிண்ணியா ஆஸ்பத்திரி திறப்பு விழா- ஆழிப்பேரலையினால் முற்றாகப் பாதிக்கப்பட்டு இத்தாலி அரசாங்கத்தினால் மீள நிர்மாணிக்கப்பட்ட கிண்ணியா மாவட்ட வைத்தியசாலை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இத்திறப்பு விழா வைபவத்தில் இத்தாலி நாட்டின் இலங்கை;ககான து}துவர் டாக்டர் பியோதிமரியானி, இத்தாலிய பிரதிநிதி வேட்டல் லாசோ, கூட்டுறவுத்துறை அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
... Read More
தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞர் சடலங்கள் ஒப்படைப்பு
மட்டு-செங்கல்லடி கொம்மாதுறை இராணுவ முகாம் மீது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட நான்கு இளைஞர்களினதும் உடலங்களை நேற்று முந்தினம் மாலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுந்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இத்தாக்குதலில் மட்டக்களப்பு புதூரைச் சேர்ந்த வே. தவபாலன் (வயது-25), கல்லடியைச் சேர்ந்த செ. பாஸ்கரன் (வயது-28), கொம்மாதுறையைச் சேர்ந்த ச. விக்னேஸ்வரன் (வயது-25), அதே இடத்தைச் சேர்ந்த வினோதராஜன் (வயது-13) ஆகியோரின் சடலங்களே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ... Read More
இந்திய இராணுவ முன்னாள் தளபதி
இலங்கையில் விமானப்படைத்தளம் மீது முதல்முதலில் விமானத் தாக்குதல் நடத்தியுள்ள புலிகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்று இந்திய இராணுவ முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் வி.மாலிக் தெரிவித்துள்ளார். புலிகளிடம் விமானப்படை இருப்பது என்பது ஆபத்தான முன்னேற்றமாகும் இந்தியாவுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் அவர்களைக் கண்காணிப்பது அவசியம். போராளிகள் விமானத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தும் ஆற்றல் தங்களுக்கு உள்ளது என்பதை அவர்கள் அவ்வப்போது காட்டி ... Read More
தமிழ் இளைஞர் கொழும்பில் கைது
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று அதிகாலையில் மட்டக்குளி கிம்புலாகல எலயில் வைத்து வெள்ளைவான் ஒன்றில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மாடசாமி தேவலிங்கம் என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவராவார். நேற்று முந்தினம் விடுதலையான இவர் கிம்புலா எலயிலுள்ள அவரது வீட்டில் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், அதிகாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்த சில நபர்கள் மோதரைப் ... Read More
கடன்சுமை காரணமாக விவசாயியொருவர் தற்கொலை
குடும்ப வருமானமின்மை காரணமாகவும், கடன்சுமை காரணமாகவும் இளம் விவசாயி ஒருவர் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான சம்பவமொன்று பொலனறுவையில் நேற்றுமுந்தினம் இடம்பெற்றுள்ளது. மஹகன்னலவில் வசித்த 28 வயதான கொஸ்கொல்லே செனவிரத்ன என்ற ஒருவயதுக் குழந்தையின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமது விளைச்சலுக்கு உரிய விலை கிடைக்காததால் கடன் சுமையை போக்க முடியாமலுள்ளதாக சம்பவ தினம் இரவு தூங்குவதற்கு ஆயத்தமான போது மனைவியிடம் கூறிய அவர், மறுநாள் காலையில் ... Read More
வர்த்தகர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தி 10 இலட்சம் கொள்ளை
கட்டுகஸ்தோட்டை நகரில் வர்த்தகரொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அவரிடமிருந்த 10 இலட்சம் ரூபாப் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். நேற்றுமுந்தினம் பிற்பகல் 12.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலகை விற்பனையாளரான இந்த வர்த்தகர் கட்டுகஸ்தோட்டையிலுள்ள வங்கியொன்றில் தனது அலுவல்களை முடித்துக் கொண்டு கடைக்கருகில் வந்த வேளையிலேயே மோட்டார் சைக்கிளி;ல் காத்திருந்த இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன்போது, வர்த்தகர் கீழே விழுந்த போது அவரிமிருந்த ... Read More
கொக்கட்டிச்சோலைப் பகுதியை கைப்பற்றிய இலங்கை இராணுவம்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கொக்கட்டிச்சோலை பிரதேசம் நேற்று-செவ்வாய்கிழமை மாலை முதல் தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. விடுதலைப் புலிகளின் பிரதேச செயலகமும் தற்போது தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளினால் விட்டுச் செல்லப்பட்ட கிளேமோர் குண்டுகள் உட்பட பல ஆயுதங்களை தாம் கைப்பற்றியுள்ளதாகவும் இராணுவத் தரப்பு கூறுகிறது. இது குறித்து ... Read More
அங்கவீனர்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!!
ஐக்கிய நாடுகள் சபையுடன் அங்கவீனர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்காவுக்;கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது: அங்கவீனர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை இலங்கையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காகவே அமைச்சர் தலைமையிலான து}துக்குழுவினர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்படவுள்ளது. ... Read More
ஜா-எல பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைது
இளைஞர் ஒருவர் தடியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்கள் இருவரை ஜா-எல பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜா-எல பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இந்த இளைஞர்; கடந்த பெப்ரவரி மாதம் கண்மூடித்;தனமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது கொலை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்டிருக்கும் இவ்விரு இளைஞர்களும் குறித்த நபரொருவருடன் மது போதையில் ... Read More
21 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு
மடுல்கல பிரதேசத்திலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 21 நவீன ரக தோட்டாக்களை பன்வில பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பன்வில பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குறிப்பிட்ட வீட்டின் முற்றத்தை சோதனை செய்த போதே அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த 21 தோட்டாக்கள் அடங்கிய பெட்டியை கண்டுபிடித்தனர். மேற்படி வீட்டில் முன்னர் பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் வசித்து வந்ததாகவும் இவ்வீடு அண்மைக் காலமாக மூடப்பட்டிருந்ததாகவும் ... Read More
17 பாடசாலைகள் தொடர்ந்தும் ப0ட்டு
17 பாடசாலைகள் தொடர்ந்தும் ப10ட்டு- மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியிலிருந்து வெளியேறிய அகதிகள் தங்கியுள்ளமையால் ஆரையம்பதி, களுவசாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுகளில் 17 அரசாங்க பாடசாலைகள் தொடர்ந்தும் இரு வாரங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதே செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 16602 குடும்பங்களைச் சேர்ந்த 63294 பேர் ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுகளில் தங்கியுள்ளனர். இவர்களில் ... Read More
புலிகளுக்கு எதிராக பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகள் தொடரும்
ஜனாதிபதி- மென்ரக விமானங்களை பயன்படுத்தி புலிகள் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கையை தோற்கடிப்பதற்கு அரசாங்க இராணுவத் தரப்பினரிடம் தெளிவான சக்திமிக்க திட்டமொன்று இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் புலிகளுக்கு எதிராக பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் கூறினார். நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புத் தொடர்பில் ... Read More
ஈராக்கில் கார் குண்டு தாக்கி 17 பேர் பலி
ஈராக்கில் ரமாடி என்ற நகரில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு வெளியே கார்குண்டு வெடித்தது.இதில் 17பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பலியானவர்களில் பலர் ஈராக்கிய போலீசார் ஆவார்கள். இந்த தாக்குதல் நடந்த இடம் சன்னி அரேபியர்கள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும். ... Read More

