மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் கூட்டம்
சமாதானத்திற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமான அமைப்பின் கூட்டம் கடந்த சனிக்கிழமை அதன் தலைவர் வீ.என்.தங்கவேல் தலைமையில் கொழும்பு கன்னாரத்தெரு பரத கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதுடன் பிரதேச அமைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர். நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கும் சமாதானத்திற்கான திட்டங்களை முன்வைப்பதற்கும் இக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச அமைப்பாளர்கள் மாவட்ட அமைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோர்க்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் என்னவென்பது பற்றி இதன் ... Read More
பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வைக் காணும் நிலைப்பாட்டில் இந்தியா
இன நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை அரசியல் தீர்வை இலங்கை காணவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். அத்துடன் காணப்படும் இணக்கப்பாடானது சகல சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருக்கவேண்டும். என்றும் அவர் கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்கு சகல பிரிவினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டிய தேவை குறித்து இலங்கைத் தலைவர்களுக்கு உயர் அரசியல் மட்டத்தினு}டாக இந்தியா தெரிவிப்பதாகவும் கலாம் தெரிவித்துள்ளார். ... Read More
மீனவத் துறைமுக நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக கைவிடுமாறு கோரிக்கை
அம்பலாங்கொடையில் தொல்பொருட்கள் அதிகளவில் கிடைக்கப் பெற்றதையடுத்து மீனவத் துறைமுக நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துமாறு தொல்பொருள் அகழ்வாராச்சி திணைக்கழம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதியில் மீனவத் துறைமுகமொன்றை நிர்மாணிப்பதற்காக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்போது அதிகளவிலான தொல்பொருட்கள் கிடைக்கப்பட்டது. இதனையடுத்தே இந்த வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது. பித்தளை போன்ற சில உலோகத் தட்டுக்கள் கிடைத்துள்ளன. இது குறித்து ஆய்வுகளை நடத்துவதற்கு தொல்பொருள் ஆராச்சி திணைக்கள அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அங்கு சென்றதையடுத்தே இந்த வேண்டுகோள் ... Read More
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 14 பேர் பலி
நேபாள நாட்டில் சிட்வான் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்ற பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் விழுந்தது. 130 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து ஒரு ஆற்றில் விழுந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் 14 பேர் பலியானார்கள். 31 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். பஸ்சின் டிரைவர் இமான்சிங் ராஜ், பீகாரை சேர்ந்தவர் ஆவார்.
... Read More
ஹெலிகொப்டர் மீதான புலிகளின் தாக்குதலில்…
அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஒப்லேக், இத்தாலி தூதுவர் பியோ மரியானோ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் பயணம் செய்த ஹெலிகொப்டர் மீது இன்று காலை புலிப்பயங்கரவாதிகள் மோட்டர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இத்தாலித் தூதுவர் பியோ மரியானோ காயமடைந்துள்ளார். அத்துடன், பொதுமக்கள் பலரும், விசேட அதிரடிப்படையினர் மூவரும் பொலிஸ் உத்தியோகத்தர் நால்வரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் விமானப்டை அதிகாரிகள் இருவரும் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் ... Read More
புலிகளின் தாக்குதலில் இலங்கைக்கான அமெரிக்க து}துவர் காயம்!
இன்று காலை மட்டக்களப்பில் இடம்பெற்ற வெளிநாட்டு ராஜதந்திரிகள், அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான புலிகளின் மோட்டார் தாக்குதலின்போது இலங்கைக்கான அமெரிக்க து}துவர் உயிர் தப்பியுள்ளதாக அமெரிக்க து}துவராவலயத்தின் பேச்சாளர் ரெனி வைற் தெரிவித்துள்ளார். ஆயினும், அமெரிக்க து}துவர் சிறு காயங்களுக்குள்ளானதாக செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அனர்த்த நிவாரண முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமெரிக்க து}துவர் ரொபர் ஓ பிளக், இத்தாலியத் து}துவர் உட்பட ... Read More
இராக் குண்டு வெடிப்புகள்
இராக்கியத் தலைநகர் பாக்தாத்தில் பல குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இதில் மிக மோசமானது கல்லூரி வாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல். அதில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர் மாணவர்கள். தலைநகரத்தின் கிழக்குப் புறத்தில் உள்ள இந்தக் கல்லூரி மஃஹ்தி ராணுவம் எனப்படுகின்ற ஷியா முஸ்லிம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒன்று. அதனால் இந்தத் தாக்குதல் ஏறக்குறை நிச்சயமாக ஒரு மத வெறித் தாக்குதல் ... Read More
அணுத்திட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம் என்கிறது இரான்
தன்னுடைய அணுத் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லையென்று இரான் தெளிவாக ஐ.நாவுக்குத் தெரிவித்துள்ளது. இரானியத் தலைநகர் தெஃஹ்ரானில் பேசிய இரானிய அதிபர் மஃஹ்மூத் அகமெதிநஜாத் அவர்கள் - இரானின் அணுத் திட்டம் தடுப்பு பிரேக்கோ, அல்லது பின் செல்லும் ரிவர்ஸ் கியரோ இல்லாத ரயில் போன்றது என்றார். அவரது துணை வெளியுறவுத் துறை அமைச்சர்களில் ஒருவர், போர் உட்பட எதைச் சந்திக்கவும் தாங்கள் தயாராகியுள்ளதாகத் தெரிவித்தார். யுரெனியச் செறிவூட்டல் வேலையை நிறுத்த ... Read More
புலிகளின் 3 தளங்கள் அழிப்பு
இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் 3 தளங்களை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அழித்தனர். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திரிகோணமலை மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் உள்ள புலிகளின் இடங்களை அழிப்பதற்காக 3 நாள் பணியை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை தொடங்கினர். இதில், ராணுவத்தினர் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புலிகளின் தளங்களைத் தேடுவதிலும், அவற்றை அழிப்பதிலும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் ... Read More
ஆறுமுகத்தான் குடியிருப்பில் கொள்ளை
மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள ஆறு வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த புதன்கிழமை இரவு 10.45மணிக்குப் பின்னர் ஆயுதங்களுடன் சென்ற குழுவொன்று இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீடுகளிலிருந்த நகைகள், பணம் என்பவற்றினை இவர்கள் கொள்ளையிட்டுள்ளதுடன் சில பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் ஆயுதமுனையில் கழற்றிக்கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேற்படி ஆறு குடும்பங்களையும் சேர்ந்தவர்கள் ஏறாவூர் காவல்நிலையத்தில் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர். இதன் பிரகாரம் ... Read More
பேராறு பிரதேசத்திலிருந்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள்
திருகோணமலை கந்தளாய் பேராறு பிரதேசத்திலிருந்து நேற்று முன்தினம் வெடிபொருட்கள் சிலவற்றையும், உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நான்கு கிளேமோர் குண்டுகள், மிதிவெடிகள் பத்து, டெட்னேட்டர்கள் ஐம்பது, 81மில்லிமீற்றர் ரக மோட்டார் ஒன்று, 12.7மில்லிமீற்றர் ஆயுதமொன்று, கனரக ஆயுதம் ஒன்று, உந்துருளிகள் இரண்டு, 500லீற்றர் அடங்கிய தண்ணீர் பக்கெட்டுக்கள், உழவு இயந்திரம் என்பனவே கைப்பற்றப்பட்டவைகளாகும். இதற்கு முன்னர் கடந்த 16ம் திகதியும் இப்பிரதேசத்திலிருந்து பெருமளவு ... Read More
மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம்
நீதியமைச்சர் டிலான் பெரேராவும் சட்டமா அதிபர் கே.சி.கமலசபேசனும் தமது குறைகளை கேட்டறிவதற்கு சிறைச்சாலைக்கு வரவேண்டும். என்று புதிய மகசின் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் 21பேர் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளை நேற்று மலைய மக்கள் ... Read More
இனப்பிரச்சினைக்கு சுதந்திரக் கட்சியாலும், ஜனாதிபதியாலும் தீர்வைக்காண முடியாது
இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதற்கான சர்வகட்சி ஆலோசனைக்குழுவிடம் யோசனைகளை சமர்ப்பிக்காத சுதந்திரக்கட்சியினாலோ அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினாலோ பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாதென ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென்ற நோக்கோடு சர்வகட்சி ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு சகல கட்சிகளின் யோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. எனினும் இந்தக் குழுவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கின்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியினால் இன்னமும் யோசனைகள் ... Read More
வெள்ளைக் கொடிகளுடன் வவுனியா வந்தடைந்த 26 சிவிலியன்கள் விடுதலை
இராணுவக் கட்டுப்பாடற்ற வவுனியா வடக்குப் பகுதியிலிருந்து பாலமோட்டை காட்டுப்பகுதி வழியா வெள்ளைக் கொடியுடன் வவுனியா இராணுவ முன்னணி காவலரண் பகுதியை வந்தடைந்த 26 தமிழ்ப் பொது மக்களும் நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9ஆண்கள் 8 பெண்கள் 9 சிறுவர்கள் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் பொலிஸாரினால் நீதவான் எம். இழஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வவுனியாவில் உள்ள உறவினர்கள், நன்பர்கள், அல்லது விரும்பிய இடத்தில் வசிப்பதற்கு ... Read More
மட்டக்களப்பில் இடநெருக்கடி காரணமாக அகதிகளுக்கான கூடாரம் அமைப்பதில் சிக்கல்
மட்டக்களப்பு மாவட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்தும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலான கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத்தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள், உள்ளுர் திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் ... Read More
யுத்த நிறுத்தத்திற்கு (“கானல்நீர்” பத்திரத்துக்கு) வயது ஐந்து….
யுத்த நிறுத்தத்திற்கு ("கானல்நீர்" பத்திரத்துக்கு) வயது ஐந்து, இனித் தொடர்வது.. புலிகளுக்கு அழிவா?... இல்லை, இலங்கைப் படையினருக்கு... இழிவா? ஜனாதிபதியின் கதைகளுக்கெல்லாம் "ஆமா" போட்டுக் கொண்டு நல்ல பிள்ளையாட்டம் தலையாட்டிக் கொண்டிருக்கும் தமிழரசியல் தலைவர்களைத் தவிர தமிழ் மக்களுக்காக, தமிழர் உரிமைக்காக என்றெல்லாம் குரலெழுப்பும் அரசியல் தலைவர்களைத் தட்டுவதே ஜனாதிபதியின் திட்டமுமாகும். தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கூட்டமைப்புத் தலைவர்களுள் ஒருவரான ரவிராஐ, புளொட்டின் கிழக்குத் தளபதி ராஐ;மாமா ... Read More
ஜனாதிபதி நேரடிக் கலந்துரையாடல்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொதுமக்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் தொலைக்காட்சி நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்றிரவு 9.30க்கு தேசிய ரூபவாகினி உள்ளிட்ட ஏனைய தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளிலும் ஒளி, ஒலிபரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி நிகழ்ச்சியில், பொதுமக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க முடியும். அதற்கான பதில்களை ஜனாதிபதி நேரடியாக வழங்குவார். பொதுமக்கள் தமது பிரச்சினைகளை கீழ்கண்ட முறைகளில் சமர்ப்பிக்க முடியும். பெக்ஸ் 0112 333717, 0112 4244480. மின்னஞ்சல் directmedia@presidentsoffice.lk ... Read More
இரண்டு இளைஞர்கள் கைது
கிரனைட் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது- கிரனைட் தயாரிப்பில் ஈடுபட்டதாக கருதப்படும் இரண்டு தமிழ் இளைஞர்கள் கிரனைட்டுக்களுடன் பதுளைக் காவல்துறையினரால் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளையைச் சேர்ந்த தெல்பத்தை தோட்டத்தில் ஒருவரும், மலங்காமை தோட்டத்தில் ஒருவருமாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தகவல் ஒன்றையடுத்து பதுளைக் காவல்துறையினர் தெல்பத்தை தோட்டத்தை சுற்றிவளைத்ததில் தோட்டக் குடியிருப்பு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரு கிரனைட்டுகளுடன் இரண்டு தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்துள்ளனர். ... Read More
இலங்கை போக்குவரத்து சபையின் புறக்கணிப்பால் ஹற்றன் மாணவர்கள் சிரமம்
ஹற்றனிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் சேவையில் ஈடுபட்டு வரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதால் அவர்கள் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹற்றன் பிரதேச மாணவர்கள் பெரும்பாலும் பருவச்சீட்டுக்கள் (சீசன் கார்ட்) மூலமே பயணிக்கின்றனர். இதனைக் கருத்திற் கொண்டே இ.போ.ச பஸ்களில் மாணவர்கள் ஏற்றப்படுவதில்லை. இதுகுறித்து அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் மற்றும் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் பலன் கிடைக்க வில்லையென மாணவர்களின் பெற்றோர்கள் ... Read More
கடந்த 15 மாதங்களில் 4000 க்கும் அதிகமானோர் பலி
'இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4000 க்கும் அதிகமானோர் பலி'- கண்காணிப்புக் குழுவினர் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி 5 வருடங்கள் முடிந்துள்ள நிலையில், அங்கு கடந்த பதினைந்து மாதங்களில் மட்டும் 4000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. அதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் 1300 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
... Read More

.gif)