நேபாளத்தின் முன்னாள் அமைச்சர்கள் மூவர் கைது
நேபாளத்தின் தென் பகுதியிலுள்ள சமதளப் பிரதேசங்களில், அண்மைக் காலத்தில் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு முந்தைய மன்னராட்சியில் அமைச்சர்களாக இருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அங்கு மன்னர் கியானேந்திராவின் ஆட்சி அகற்றப்பட்டது. மன்னராட்சியில் பதவி வகித்த பல அமைச்சர்களைக் கண்காணித்து வருவதாக நேபாள அரசின் அதிகாரிகள் காட்மாண்டுவில் தெரிவித்துள்ளனர். தெற்கு நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து விவாதிக்க, தற்போது அரசில் அங்கம் வகிக்கும் ... Read More
விஸ்வமடு படகில் குண்டுவெடித்து மலரவன் உட்பட பத்து புலிகள் உயிரிழப்பு
முல்லைத்தீவு விஸ்வமடு பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கடற்புலிகளின் பதில் பொறுப்பாளரான லெப்டினன்ட் கேணல் மலரவன் ( நவரத்தினராசா சுரேஷ்குமார், யாழ்ப்பாணம்) உட்பட பத்து புலிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான சின்னப்பா தவராசா, துரைச்சாமி தவராசா, செல்லத்துரை பிரமான நடனம், தம்பிராசா அருணோதயன், சபாரத்தினம் ரஜிந்தன், விசுவமடுவைச் சேர்ந்த மகேந்திரன் ரஜீவன், கிளிநொச்சியைச் சேர்ந்த யோகரத்தினம் நிசாந்தன், செபமாலை நரேஸ்காந்தன், சிவஞானம் விஜிதரன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். படகொன்றில் ... Read More
ஐ.நா.சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை
சமாதான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் பேச்சுவார்த்தைகள் மூலம் வடக்கு கிழக்கில் இடம்பெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் விசேட அவதானத்தை செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்தை கோருகிறதென ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி பிரட்றிக் லியோன்ஸ் தெரிவித்துள்ளார். ... Read More
சுனாமிப் புனரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை முன்னேற்றம்
சுனாமி புனரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு காலி நகரே சான்று. கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் பெரும் பாதிப்புக்குள்ளான காலிநகர் இன்று புனரமைப்பு மூலம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இக்கட்டான சவால்களை எதிர்கொள்ளும் வேளையில் இந்த உதவி வழங்கும் மாநாடு நடைபெறுகிறது. பல காரணங்களால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் புனரமைப்பு வேலைகள் காலதாமதம் அடைந்துள்ளது. இது குறித்தும் இம்மாநாட்டில் ஆராய்வோம். கடந்த வருடம் இலங்கைக்கு பெரும் பாதகமான ... Read More
ஆயுதக் குழுத் தலைவரைக் கொண்றதாக இராக்கிய இராணுவம் அறிவிப்பு
இராக்கிய இராணுவத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கடுமையான மோதலில் ஈடுபட்ட ஆயுதக் குழுவின் தலைவர் கொல்லப்பட்டதாக இராக்கிய அரசாங்கம் தெரிவிக்கிறது. இந்தச் சண்டையில் முந்நூறு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும், ஆறு இராக்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இறந்து போனதாகவும் பாக்தாத்திற்கு தெற்கே உள்ள நஜாஃப் நகர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆயுதக் குழுவினர் யார் என்பதை அறிவதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இராக்கிய அரசாங்கம் தெரிவிக்கின்றது. சண்டை நடைபெறுகையில் ஆயுதக் குழுவினைச் சேர்ந்தவர்கள் ... Read More
கிழக்குப் பல்கலைக் கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின
இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பதவி வகித்த கலாநிதி என்.ரவீந்திரநாத் அவர்கள் கொழும்பில் வைத்து காணாமல் போன சம்பவத்தையடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலமை காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக தடைப்பட்டிருந்த பல்கலைக்கழக விரிவுரைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. விரிவுரைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதையடுத்து பல்கலைக்கழகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக பதில் துணை வேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் அவர்கள் கூறுகின்றார்.
சுமார் 75 வீதமான மாணவர்கள் இன்று விரிவுரைகளுக்குச் சமூகமளித்ததாகவும், தூர இடங்களில் ... Read More
இஸ்ரேல் அரசில் முஸ்லிம் மந்திரி
இஸ்ரேல் நாட்டின் மந்திரி சபையில் அரபு முஸ்லிம் ஒருவரை இடம் பெறச்செய்வது என்று அந்த நாட்டு அரசு தீர்மானித்து உள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஒருவரை தவிர அனைத்து மந்திரிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தொழிற்கட்சியை சேர்ந்த கெலாப் மஜாத்லேக் என்ற முஸ்லிம், இலாக Ö இல்லாத மந்திரியாக இடம்பெறுகிறார். ... Read More
குண்டுவெடிப்பு: 10 பாக். போலீஸார் பலி
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தியில் நடந்த குண்டுவெடிப்பில் 10 போலீஸார் பலியானார்கள். பெஷாவர் மசூதியில் நடந்த இந்த பயங்கர குண்டு வெடிப்புச் சம்பவம் தீவிரவாதிகளின் சதிச் செயல் என போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 10 போலீஸார் பலியானார்கள். 12க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து பெஷாவரில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீஸாருக்கு உதவ ராணுவ வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.
... Read More
ஆளும் கட்சியில் இணைந்த 18 எம்.பி.க்களுக்கும் மந்திரி பதவி- அதிபர் ராஜபக்சே அதிரடி நடவடிக்கை
இலங்கையில் முக்கிய எதிர்க்கட்சி உடைந்து, 18 எம்.பி.க்கள் ஆளும் கட்சியில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து மந்திரிசபையை அதிரடியாக மாற்றியமைத்த அதிபர் ராஜபக்சே, கட்சி தாவி வந்த 18 எம்.பி.க்களுக்கும் மந்திரி பதவி வழங்கினார். இலங்கையில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கி வருகிறது. ... Read More
உயிலங்குளத்தில் தாக்குதல்
உயிலங்குளத்தில் தாக்குதல் சிவிலியன், இராணுவ வீரர், பொலிஸ் அதிகாரி பலி. வவுனியா-மன்னார் வீதி உயிலங்குளத்தில் புலிகள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில், சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும், இராணுவ வீரர் ஒருவரும், பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றுக்காலை வெள்ளிக்கிழமை 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு பொதுமகன் ... Read More
பயங்கரவாதத்திலிருந்து நாடு மீட்சியடைய ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்
புலிகள் கிழக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள் இதனை முன்னிட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களும் பெருமை கொள்ள வேண்டும் ஆனால் சில அரசியல் கட்சிகளுக்கும் தாங்கள் புத்திஜீவிகள் எனக்கூறிக் கொள்ளும் சிலருக்கும் சமாதானவாதிகளுக்கும் புலிகளின் பின்னடைவு சற்று கவலையை கொடுத்திருக்கலாம் இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து நாடு மீட்சியடைய ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். நான்காம் கட்ட ஈழப்போரில் புலிகள் பல தோல்விகளை சந்தித்து விட்டனர். ஆனால் புலிகளின் பேச்சாளர் இது தற்காலிக பின்னடைவு ... Read More
நேர்முகத்திற்கு சமுகமளிக்க அழைப்பு
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக, உயர் பாதுகாப்பு வலங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ், அரசாங்க அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற விரும்புவர்கள், மாவட்டச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் ஆகியோருடனான நேர்முகமொன்றிற்கு சமுகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நேர்முகத்தின்போது தங்களின் ஆளடையாளம், காணிக்குரிய உரித்தாவனம் மற்றும் ஏனைய தொடர்புடைய விபரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும் உயர்பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த கிராம ... Read More
இன்று மொறட்டவையில் 18 பேர் கைது
கொழும்பு மாவட்டத்திலுள்ள மொறட்டுவ பிரதேசத்தின் சொய்சாபுற தொடர்மாடியில் இன்று விடியற்காலை கல்கிசை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றில் 18பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏழு ஆண்களும் 11பெண்களும் அடங்குவதாக தெரியவருகிறது. சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஏழு ஆண்களில் ஆறு பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைதானவர்கள் தங்களது அடையாளங்களை உறுதிப்படுத்த தவறியதன் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக கல்கிசை காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் இரகசிய ... Read More
தோப்பூர் பிரதேசத்திற்கு புதிய பிரதேச செயலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது
திருகோணமலை மூதூர் தோப்பூர் பிரதேசத்திற்கு புதிய பிரதேச செயலகமொன்று நேற்று திறந்து வைக்கப்பட்டதினூடாக 30வருடங்களாக எதிர்நோக்கி வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் நஜீப் எம் மஜீத் தெரிவித்துள்ளார். 11 கிராமவேகர்கள் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 30ஆயிரம் தமிம் முஸ்லிம் மக்களுக்கு இந்த செயலகம் உதவியாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர். ... Read More
5புலிச் சந்தேக நபர்கள் பற்றி இந்திய காவல்துறையினர் விசாரணை
சென்னை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து புலிச் சந்தேக நபர்கள் பற்றி இந்திய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். குண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் போல்பியாரின் உலோக மூலப் பொருட்களை விநியோகிக்கும் வலைப்பின்னலுடன் சந்தேக நபர்களுக்கு நிலவும் தொடர்புகளின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் நாடு காவல்துறை அறிவித்துள்ளது. தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தேடுதலில் இரண்டு தொன் போல்வியாரின் மூலப் பொருட்களை ரக்வண்டியில் ஒரு சிலர் ஏற்றிக் ... Read More
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேபாள பிரதமரை இன்று சந்திக்கிறார்
நேபாள விஜயத்தை மேற்கொண்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்க இன்று அந்நாட்டுப் பிரதமர் கிரியாத் பிரசாத் கொரியாலவை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் நேபாள அரசாங்கம் எவ்வாறு சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு மாவோ இயக்கத்துடன் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டது என்பது பற்றி ஆராயப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் நேபாள செய்யதியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு நேபாளம் சென்றிருக்கிறார். ... Read More
சர்வதேச ஜூரர்கள் சங்கம் வேண்டுகோள்
சர்வதேச ஜூரர்கள் சங்கம் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வேண்டு;கோள் விடுத்துள்ளது. இந்தச் சட்டத்தின் காரணமாக அதிகமானவர்கள் காணாமல் போவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பலவந்தமாக காணாமல் போவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் பிரகடனத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டுமென சர்வதேச ஜூரர்கள் சங்கம் வேணடுகோள் விடுத்துள்ளது.
... Read More
கொழும்பில் நேற்று தேசிய பிக்கு முன்னணி ஊர்வலம்
புலிகளை தடைசெய்யக் கோரியும், சமாதான உடன்படிக்கையை ரத்துச் செய்யுமாறும் கோரியும், தேசிய பிக்கு முன்னணி நேற்று கொழும்பில் அமைதி ஊர்வலம் ஒன்றை நடத்தியது. புறக்கோட்டை போதி ராஜ அரச மரத்தடி விகாரையிலிருந்து ஊர்வலம் ஆரம்பமானது. மேற்படி கோரிக்கைகளுடன் சமாதான ஏற்பாட்டாளர்களாகவுள்ள நோர்வே பிரதிநிதிகளையும் நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக ஊர்வலத்தில் சென்ற பிக்கு முன்னணியின் தலைவர் தம்பலஹிமி நாயக்க தேரோ, செயலாளர் ... Read More
மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையம் மீது துப்பாக்கிச் சூடு
காத்தான்குடியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது புதிய காத்தான்குடி 2ம் குறிச்சி ஏத்தக்கல் வீதியைச் சேர்ந்த அபுல் ஹஸன் என்பவருக்கு சொந்தமான ஜஸ் கிறீம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தின்மீதே சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் கடையின் முன் பகுதியுட்பட கடையின் தளபாடங்கள் அனைத்தும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி ... Read More
கல்குடா பாடசாலைகளில் சேர்ப்பு
வாகரை மற்றும் மூது}ர் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3125 மாணவர்கள் கல்குடா கல்வி வலயப் பாடசாலைகளில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளதாக கல்குடா வலய பீரதிக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி தெரிவித்தார். இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மேலும் பல மாணவர்கள் தொடர்ந்தும் பாடசாலைகளில் அனுமதிக்கப்படடிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நலன்புரி நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள ஒன்பது பாடசாலைகளில் இடம்பெயர்ந்த மாணவர்குளுக்கான தனியான விசேட மாலை நேர வகுப்புக்கள் நடாத்தப்பட்டு ... Read More



