புதுவருடத்திலிருந்து 17 வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளது
நாட்டிலுள்ள 17 ஆதார வைத்தியசாலைகளும் புதுவருடத்திலிருந்து சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளாக செயற்படுமென்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய புத்தளம், குளியாப்பிட்டிய, தம்புள்ள, மன்னார், மஹியங்கனை, கந்தளாய், பருத்தித்துறை வடக்கு, தெல்லிப்பளை தியத்தலாவஈ கல்முனை வடக்கு, ஹொரன, அவிசாவிலை, வகுபிட்டிவெல, பாணந்துறை பலப்பிட்டிய எம்பிலிப்பிட்டிய ஹோமாகம் ஆகிய ஆதார வைத்தியசாலைகளும் தரமுயர்த்தப்படும் இதற்கென 650 கோடி ருபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதேவேளை மாளிகாவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய வைத்தியசாலைகளும் ... Read More
ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி தமது யோசனைகளை அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு சமர்ப்பிக்கவுள்ளது இனப்பிரச்சினை தீர்வு சம்;பந்தமான . அனைத்துக்கட்சி மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவிருக்கிறது.. இதன்போது தமது கட்சி டோக்கியோ மற்றும் ஒஸ்லோ பிரகடனங்களின் அடிப்படையில் யோசனைகளை முன்வைக்குமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க தெரிவித்திருக்கிறார் எனினும் இந்த யோசனைகளில் அடங்கியுள்ள விடயங்கள் சம்பந்தமாக அவர் ... Read More
மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதியதில் 21 பேர் பலி
அமெரிக்கா அருகே உள்ள மெக்சிகோ நாட்டில் குவாடிட்லன் நகரில் ஒரு பஸ் மீது சரக்கு ரெயில் ஒன்று மோதியது. இதில் 21 பேர் பலியானார்கள். 10 பேர் காயம்அடைந்தனர். காலை 9 மணிக்கு இந்த விபத்து நடந்தது. தண்டவாளத்தை கடக்க பஸ் டிரைவர் முயன்றபோதுதான் இந்த விபத்து நடந்தது. இது தொடர்பாக என்ஜின் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
... Read More
புளொட் அமைப்பின் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம்
புளொட் உறுப்பினர்களான கணபதிப்பிள்ளை பாக்கியராஜா (ராஜ்மாமா) இராசரத்தினம் ராசேந்திரன் (கரிகாலன்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தி புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையினையை மின்னஞசல் மூலம் எமக்கு அனுப்பியுள்ளதை நாம் எமது வாசகர்களுக்காக இங்கு பிரசுரித்துள்ளோம்…. தமிழின விடியலிற்காகவும் இன்னல்பட்டுள்ள எமதினத்தின் உரிமைகளிற்காக குரல்கொடுத்து வந்ததுடன், எமது தேசத்தில் அமைதி ஏற்பட்டு எமது மக்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்ற கரிசனையுடன் செயற்பட்டுவந்த எமது தோழர்கள் இருவரை அரச படைகளினர் ... Read More
குச்சவெளியில் சுனாமி நினைவுத் து}பி
சுனாமி அனர்த்தம் எற்பட்டு இரண்டு வருட நிறைவை முன்னிட்டு குச்சவெளி செம்பிறை புனர்வாழ்வு நிறுவனம் (ஆர்.சி.ஆர்.ஓ.) அனுசரணையுடன் பிரதேச செயலக வளாகத்தில் சுனாமி நினைவுத்து}பி அடிக்கல் நாட்டு வைபவம் செவ்வாயன்று காலை இடம்பெற்றது. இவ்வைபவத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்தவர்களுக்காக 2நிமிட மௌன அஞ்சலிக்குப் பின் நினைவுத்து}பி அடிக்கல் நாட்டு வைபவத்தை குச்சவெளி பிரதேச செயலாளர் வி.செல்வநாயகம், உதவிப்பிரதேச செயலாளர் திரு.தயாளன் பிரதேச சபைத் தலைவர் ஆ.தௌபீக் ஆர்.சி.ஆர். ஓ நிறுவனத்தலைவர் ... Read More
வாகரைப் பகுதி மீது தொடர்ந்து ஷெல் தாக்குதல்
மட்டக்களப்பு வாகரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை கடும் ஷெல் தாக்குதலும் விமானத் தாக்குதலும் நடைபெற்றுள்ளன. கடந்த சில தினங்களாக வாகரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளை நோக்கி தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல் நடைபெற்று வருகையில் புதன்கிழமை இரவும் நேற்றுக் காலையும் இந்த ஷெல் தாக்குதல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டது வாகரை மருத்துவமனையை அண்டியே இந்த ஷெல் தாக்கதல் நடைபெற்றதால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். ஷெல் தாக்குதலுடன் பல்குழல் ... Read More
கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர்
கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களுக்கான செயலர்கள் நியமனம் பெற்றுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரும் வடக்குமாகாண பதில் ஆளுநருமான மொஹான் விஜேவிக்ரம இந் நியமனங்களை வழங்கியுள்ளார். இதன்படி மாகாண பொதுசேவை ஆணைக்குழுவின் செயலராக பி.டி.பாலசிங்கம் நியமனம் பெற்றுள்ளார். சுகாதாரம், சுதேச மருத்துவ, உள்ளுராட்சி பொது நிர்வாக செயலராக எல்.எஸ்.சி. சிறிவர்த்தன நியமனம் பெற்றுள்ளார். புனரமைப்பு, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் காணியமைச்சின் செயலராக வீ.எஸ். சுவாமிநாதன் நியமனம் பெற்றுள்ளதுடன், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் ... Read More
அரச சமாத செயலகம் கண்டனம்
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு பிராந்திய அலுவலகங்கள் செயல் இழந்துள்ளமை குறித்து அரச சமாதான செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அம்பாறை, திருகோணமலை. மட்டக்களப்பு ஆகிய பிராந்திய அலுவலகங்களில் கடமை புரியும் வெளி நாட்டு கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் வெளியேறி கொழும்பு வந்துள்ளனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் வெளிநாட்டவர்கள் மட்டுமே அசம்பாவிதங்கள் நடைபெறும் இடங்களுக்கு விசாரணை ... Read More
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பு
கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத்தை விடுதலை செய்யும்படி கோரி பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகத்தின் வெளிப்புற சுவர்களில் இது தொடர்பான சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் தமது விடுதிகளை விட்டும் வெளியேறியுள்ளமையினால் பல்கலைக்கழகமும் மூடப்பட்டுள்ளது. அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாந்தை ... Read More
மருத்துவமனை காவலாளி மாயம்
பம்மைமடு ஆயுள்வேத மருத்துவமனை காவலாளியொருவர் காணாமல் போயிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை காவல் கடமைக்கு சென்ற குடும்பஸ்தரதான இவர் காணாமல் போன விடயம் மர்மமகவே உள்ளது பிற்பகல் 4 மணிக்கும் 5 மணிக்குமிடையில் இவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
உடலம் அடையாளம் காணப்பட்டது
வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாசாலைக்கு முன்பாக கிடந்து நேற்று முன்தினம் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட இளைஞனின் உடலம் தொழில்நுட்ப கல்லு}ரியில் பயிற்சி பெறும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறந்தவர் மன்னார் முருங்கனைச் சேர்ந்த வஸ்தியாம்பிள்ளை செந்து}ரன் என தெரிவிக்கப்படுகிறது. மரண விசாரணையினை அடுத்து உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ... Read More
காவல்துறை பொறுப்பதிகாரி மீது சூடு
வவுனியா, சூடுவெந்தபுலவு காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி மீது நேற்று நண்பகல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. புலிகளின் பிஸ்டல்குழு நடத்திய இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பொறுப்பதிகாரி அத்துல ஜயசிங்க (வயது-45) ஆபத்தான நிலையில் அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அலுவல்கள் நிமித்தம் நெலுக்குளம் சென்றபோது கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு அருகில் வைத்து பிஸ்டல் குழுவினரால் சுடப்பட்டார். இவரோடு உந்துருளியில் சென்ற மற்றெரரு காவல்துறை உத்தியோகத்தர் எவ்வித காயமுமின்றி தப்பியுள்ளார். ... Read More
தொப்பிக்கலை பஞ்சுமரத்தடி வன்னிப்புலிகளின் பிரதான இராணுவத்தளம் தாக்கியழிப்பு!!
தொப்பிக்கலை பஞ்சுமரத்தடி வன்னிப்புலிகளின் பிரதான இராணுவத்தளம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் முற்றாகத் தாக்கியழிப்பு!! 35 வன்னிப்புலிகள் பலி! பெருந்தொகையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன!! இன்று அதிகாலை 01.30 மணியளவில் மட்டக்களப்பு நகரத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தொப்பிக்கலை பஞ்சுமரத்தடி வன்னிப்புலிகளின் இராணுவத்தளம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவித் தாக்கும், கொமாண்டோப் படையணிகளினால் முற்றாக நிர்மூலம் செய்யப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 35 வன்னிப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான ஆயுதங்களும் ... Read More
சடலங்களின் தேசம்….
வேர்க்கடலை விற்கும் வயோதிப மாது சுட்டுக்கொலை. வீதியில் ஐஸ்பழம் விற்பவர் சுட்டுக் கொலை. ஊரில் மீன் விற்பவர் சுட்டுக் கொலை. மனைவியும் சகோதரரும் நடுவீதியில் அவல ஒலம்.... ஆம். இவை இன்றைய யாழ்ப்பாணத்தின் அன்றாடக் காட்சிகள். யுத்தமுனையில் சரமாரியான எதிர்பாராத தோல்வியைத் தழுவியதின் புலிகளின் எதிர்வினை வீரம் இப்போது இந்த அப்பாவிகள் மீது காட்டப்படுகிறது. புலிகள் எத்தகைய ஈவிரக்கமில்லாத மனோவியாதிக்காரர்கள் என்பதை இந்த படுகொலைகள் மௌனமாகப் பறைசாற்றி நிற்கின்றன.
யாழப்பாண ... Read More
சோமாலியா நாட்டின் தலைநகரை அரசாங்கம் கைப்பற்றியது
ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு ராணுவத்துக்கும் இடையே சண்டைநடந்து வருகிறது. தலைநகர் மொகடிஷு வை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி இருந்தனர். அவர்களிடம் இருந்து தலைநகரை மீட்பதற்காக சோமாலியா ராணுவமும் எத்தியோப்பிய ராணுவமும் சேர்ந்து அந்த நகரை நோக்கி முன்னேறின. இதை அறிந்ததும் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அங்கு இருந்து பின்வாங்கினார்கள். ராணுவம் தலைநகரை கைப்பற்றியது. இதை அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் முகமது ஜமா பருக் அறிவித்தார்.
... Read More
புத்தளத்தில் கடத்தப்பட்ட புளொட் முக்கியஸ்தர்கள் இருவரும் படுகொலை!! புளொட் சர்வதேச பொறுப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்..
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மத்தியகுழு உறுப்பினரும், சிரேஷ்ட உறுப்பினரும், புளொட் அமைப்பின் கிழக்;கு மாகாண பொறுப்பாளருமான ராஜ்மாமா என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராஜா மற்றும் அவரது உதவியாளரான புளொட்டின் சிரேஷ்ட உறுப்பினரான கரிகாலன் என்றழைக்கப்படும் ராசரட்ணம் ராஜேந்திரன் என்பவரும் நேற்று முன்தினம் இரவு 8.30மணியளவில் புத்தளம் நகரில் வைத்து ஆயுததாரிகளால் கடத்திச்செல்லப்பட்டமை தெரிந்ததே. புளொட் முக்கியஸ்தரின் வீட்டிற்கு வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் தம்மை காவல்துறையினர் என்று தெரிவித்து தமது ... Read More
36 மணி நேரத்துக்குள் சதாம் உசேனுக்கு தூக்கு: அமெரிக்க அதிகாரி தகவல்
ஈராக்கில் அதிபர் பதவியில் இருந்து விரட்டப்பட்ட சதாம் உசேன் மீது இஸ்லாமியர்களை கொன்று குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசேஷ கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 30 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. சதாம்உசேனின் அப்பீல் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் எந்த நேரத்திலும் தூக்கிலிடப் படலாம் என்று உலக முழுக்க எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் அமெரிக்க ... Read More
அறிவிப்புக்கள் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்படுவதில்லை
பெருமளவு தமிழ் பேசும் மக்கள் வந்து செல்லும் குருநாகல் தொடரூந்து மையத்தில் அறிவிப்புக்கள் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்படுவதில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மலையகம், மற்றும் கதிர்காமமென பல இடங்களுக்கு பயணிப்பதற்காக தமிழ் பேசுவோர் அதிகமாக குருநாகல் தொடர்ரூந்து மையத்திற்கு வந்து செல்கின்றார்கள் இந்த நிலையில் பலர் தமிழ் மொழியில் அறிவித்தல்கள் இல்லாமை காரணரமாக தொடரூந்துகளை தவிறவிட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
... Read More
சர்வதேச நீதியாளரான சங்கத்தின் உதவித் தலைவர் தெரிவிப்பு
இலங்கையில் தமிழர்களும் சட்டத்தரகளாவதற்கு உரித்துடையவர்கள் எனவே அவர்களுக்கென புறம்பான வெட்டுப்புள்ளிமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச நீதியாளர் சங்கத்தின் உதவித் தலைவரான சட்டத்தரணி டெஸ்மன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சட்டக்கல்லு}ரியில் தமிழ் மொழி மூலக்கற்கைக்காக இருவர் மாத்திரமே தெரிவானதையடுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே டெஸ்மன் பெர்னாண்டோ இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்;. ... Read More
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா
பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளை சமாதான முயற்சிகளும் தொடாந்தும் முன்னெடுக்கப்படும் என்று சமாதானப் பேச்சுவார்த்தைக்கான அரசாங்க குழுவின் பேச்சாளர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று முன்தினம் தெரிவித்தார் யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே நிரந்தரத்தீர்வு காண முடியும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சுனாமி அனர்த்தம் காரணமாக அழிவுற்ற பலப்பிட்டி ஆதார மருத்துவமனையில் திடீர் ... Read More






