இந்திய எதிர்கட்சித் தலைவருடன் ஜனாதிபதி, அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய லோக்சபாவின் எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடந்த சனிக்கிழமை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ராஜபக்ஷ அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குகொண்டு வருவதோடு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகின்றார். அந்த வகையிலேயே அத்வானியுடனான இன்றைய சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. நேற்று கொங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை ஜனாதிபதி சந்தித்த போது இலங்கை- இந்திய உறவுகள் உட்பட ... Read More
அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவிப்பு
தனித்தாயக கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பயங்கரவாத பெயரில் ஈடுபடுவது புலிகளின் நோக்கமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்தையோ கொள்கைகளையோ புலிகள் கொண்டிருக்கவில்லையென அரச பாதுகாப்புத் தொடர்பான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வாகரை பிரதேச மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்க முனைந்த பல தருணங்களில் புலிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இது பற்றி போர்நிறுத்த கண்காணிப்புக் ... Read More
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை வேண்டுகோள்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை புலிகளின் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. புலிகளின் செயல்கள் காரணமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்களது உரிமைகள் முழுமையாக மீறப்படுகின்றன. சிறுவர்களின் உரிமைகளும் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதித் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். ஆயுத நெருக்கடிகளும் சிறுவர்களும் என்ற தொனிப் பொருளில் நேற்று பாதுகாப்புச் சபையில் இடம்பெற்ற விசேட விவாதத்தில் கலந்து கொண்டு ... Read More
புலிகளின் போக்கு குறித்து அமெரிக்கா கடுமையான கண்டனம்
புலிகள் சுதந்திர அரசாங்கத்தை கோரி வருவது தொடர்பிலும் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறுவது தொடர்பிலும் அமெரிக்கா தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க திணைக்கள பேச்சாளர் சி. மேக்கோமிக் கருத்து தெரிவிக்கையில் புலிகளின் வன்முறைகளையும் யுத்தத்தையும் கண்டிப்பதாக கூறியுள்ளார். புலிகளின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளும்; முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்வதைவிட வேறு எதையும் சாதிக்கப்போவதில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.. அரசாங்கமும் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மதித்து சமாதானத்திற்காக மீண்டும் ... Read More
முஸ்லிம் தரப்புகளுடன் பேச வேண்டிய அவசியம் குறித்து ரவூப் ஹக்கீம் கூறுகிறார்
வட,கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், புலிகளும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் தரப்புகளுடன் பேச வேண்டிய அவசியமும், அவசரமும் இன்று ஏற்பட்டிருப்பதாக வலியுறுத்தியிருக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்கை அரசாங்கம் சொல்லும் வரை இதற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார் வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதாலோ, பிரிக்கப்படுவதாலோ இனநெருக்கடிக்கு தீர்வு ஏற்படப்போவதில்லை எனவும் சமாதான முயற்சிகள் ... Read More
பிரபாகரனுடன் நேரடியாகப் பேசத் தயார் !
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனுடன் எந்தத் தரகரும் இன்றி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த தான் தயார் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று புது டில்லியில் வைத்து என்.டி.ரீ.வீ. க்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது: இலங்கைத் தமிழ் மக்களில் ஒரு சிறு குழுவுக்காக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து பிரபாகரன் ... Read More
பிரபாகரனுக்கு டெலிவிஷன் கொடுக்கவில்லை -நார்வே தூதர் மறுப்பு
நார்வே நாட்டின் சமாதான தூதர் எரிக் சோல்கைம், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு 6 அடி உயர டெலிவிஷன் பெட்டியை வழங்கியதாக, விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார். ஆலிவுட் படங்கள் பார்ப்பதில் விருப்பமுள்ள பிரபாகரன், ஆலிவுட் படங்கள் பார்ப்பதற்காக எரிக் சோல்கைம் டெலிவிஷன் வழங்கியதாக கருணா கூறியிருந்தார். மேலும் எரிக் சோல்கைம் விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்ததாகவும் கருணா கூறியிருந்தார். இதற்கு நார்வே ... Read More
விமான விபத்து: ஈரானில் 28 பேர் சாவு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திங்கள்கிழமை நடந்த விமான விபத்தில் 28 பேர் இறந்தனர். இறந்தவர்கள் அனைவரும் ஈரான் நாட்டில் மதிப்புமிக்க சிறப்பு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் என்று அந்நாட்டு தொலைக்காட்சி தெரிவித்தது. ஈரானின் அதிபர் மெஹமூத் அகமதிநிஜாத் ஆட்சியில், மிகுந்த செல்வாக்கு பெற்றிருப்பவர்கள் சிறப்பு பாதுகாப்புத் துறையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
... Read More
2004ல் கருணா பிரிந்த பின்தான் புலிகளிற்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகியிருந்தன – கலாநிதி திருச்சிற்றம்பலம்
மாவீரர் தினத்தை முன்னிட்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆற்றி உரை குறித்து கலாநிதி திருச்சிற்றம்பலம் தெரிவிக்கையில் ~இலங்கையின் எந்தப் பகுதியிலுமுள்ள தமிழ் மக்களின் நலன்களையும் கவனத்தில் எடுக்காத பொறுப்பற்ற பேச்சு இது. பிரபாகரன் ஒரு பேட்டைரவுடி. இந்தியா, அமெரிக்கா போன்ற பெரிய சண்டியர்களுடன் சவால்விடப் பாக்கிறார். அது தமிழ்மக்களுக்கு பெரிய அழிவைத் தான் கொண்டு வரும்.~ நாம் நேர்மையுடனும், நெஞ்சுறுதியுடனும் சமாதானத்திற்கு முயற்சித்ததாக பச்சைப் பொய் சொல்கிறார். போரைவிட சமாதானத்தின் ... Read More
சர்வகட்சி மாநாடு இவ்வார இறுதியில் கூடும்
சர்வகட்சி மாநாடு இவ்வாரத்திற்குள் மீண்டும் கூடவிருப்பதாக குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் மூலமே தீர்வுகாண முடியுமென இதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் அங்கம் வகிக்காமையினால் தீர்மானம் குறித்து அவர்களுடன் மட்டும் கலந்துரையாடவில்லையெனவும் இறுதி அறிக்கை தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடப்படுமெனவும் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். ... Read More
திருமலை தபாலகம் ஊடாக யாழ்ப்பாண குடாவுக்கு தபால் பொதிகள்
திருகோணமலை தபால் நிலையத்தின் ஊடாக, யாழ்ப்பாண குடா நாட்டிற்கான தபால் பொதிகளை அனுப்பும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒருவர் ஐந்து கிலோவுக்கு உட்பட்ட தபால் பொதிகளை மட்டும் அனுப்ப முடியும். அதேவேளை, உடைந்து போகக் கூடிய பொருட்கள் தபால்பொதியின் உள்ளடக்கப்பட்டிருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தபால் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
... Read More
சந்தேக நபர்கள் இருவர் கைது
உலக உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட உணவுப் பொருட்களின் ஒரு தொகுதியினை தனியார் வர்த்தக நிலையமொன்றில் விற்பனை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புளக்கோபிட்டிய வர்த்தக நிலையமொன்றில் இந்த உணவுப் பொருட்களை சந்தேச நபர்கள் பாரவ10ர்தியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்த வேளையிலேயே காவல்துறையினர் இவர்களை கைது செய்துள்ளனர். காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகள்; மூலம் இந்த பாரவ10ர்தியில் மீன்டின், கோதுமைமா மற்றும் அரிசி ஆகியனவற்றை ... Read More
டிசம்பர் 15க்கு முன்னர் வழங்கி முடிக்கப்பட வேண்டும்
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கடற்பாதுகாப்பு எல்லையான 200 மிற்றருக்கப்பால் பாhதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க வழங்கப்பட்டுவரும் மானிய கொடுப்பணவுகள் அணைத்தும் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்கப்பட வேண்டுமென்று திறைசேரியின் செயலாளர் வி.பி.ஜெயசுந்தர சகல பிரதேச செயலாளருக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளாh. சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பிரதேச செயலாளர்களுக்கு இது தொடர்பாக ... Read More
ஈரோஸ் உள்ளிட்ட இயக்கத்தினரையும் மாவீரர்களாக அறிவித்தார் பிரபாகரன்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக உயிரிழந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன், ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) உள்ளிட்ட இயக்கங்களைச் சேர்ந்த சிலரையும் மாவீரர்களாக புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அறிவித்துள்ளார். இத் தகவலை தமிழ்நெட் இணையதளம் தெரிவித்துள்ளது. 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி இலங்கை ராணுவத்துடன் நடந்த சண்டையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் சங்கர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து நவம்பர் 27-ம் ... Read More
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு
சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட வேண்டுமானால் ஜனாதிபதிக்கும் எனக்கும் உங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தாருங்கள் கடந்த காலங்களில் சமாதான முயற்சிகளுக்கு பல்வேறுபட்ட முன்னேடுப்புக்கள் எடுக்கப்பட்ட போதிலும் தென் பகுதி அரசியல் சக்திகள் அதனை முன்னெடுக்க விடாமல் தடுத்தன. நாட்டைக் காட்டிக் கொடுக்கப் போவதாகவும், இலங்கையை துண்டாடப் போவதாகவும் சிங்கள் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைத் தெரிவித்து சிங்கள மக்களை சமாதான முயற்சிகளுக்கு எதிராகத் து}ண்டிவிட்டனர். என ஐ.தே.க. தலைவரும் எதிர்க்கட்சித் ... Read More
வெள்ளவத்தையில் நேற்று இருவர் கைது
வெள்ளவத்தை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமது ஆள்அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் இருவரையும் கைது செய்ததாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளர். வெள்ளவத்தை மாதங்காவத்தை பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ... Read More
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்
யாழ்ப்பாண குடாநாட்டுக்கு எதிர்வரும் சில தினங்களுக்குள் மண்ணெண்ணை 600 மெற்றிக் தொன் அனுப்பிவைக்கப்படும் என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. மேலும் டீசல் 1400 மெற்றிக் தொன்னும் யாழ்ப்பாண குடாநாட்டுக்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் அஜந்த டிமெல் தெரிவிததுள்ளாhர். கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி மண்ணெண்ணை மற்றும் டீசல் ஆகியவற்றை யாழ்ப்பாண குடாநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோல் மற்றும் டீசல் தேவையான அளவு யாழ்ப்பாண, குடாநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ... Read More
ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவிப்பு
ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவிப்பு- ஆட்கள் காணாமல் போதல், கடத்தப்படுதல், கொலை செய்யப்படுதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 286 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து 150 முறைப்பாடுகளும் கிழக்கு மாகாணத்திலிருந்து 80 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் பந்துல குலதுங்க தெரிவித்துள்ளார். கேகாலை, மாத்தறை , நுவரெலியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலிருந்து எவ்வித முறைப்பாடேனும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவில்லை. முறைப்பாடுகள் கிமைக்கப்பெற்ற மாவட்டங்களிலேயே அது குறித்து விசாரணைகள் ... Read More
பிரபாகரனின் ஏமாற்றும் முறையே மாவீரர் தின உரை -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல
பிரபாகரனின் ஏமாற்றும் முறை மற்றும் பயங்கரவாதத் தன்மைகளையே அவரின் உரைகளும் செயற்பாடுகளும் எடுத்துக்காட்டுகின்றன! கடந்த வருட மாவீரர் தின உரையின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யதார்த்தமானதொரு தலைவர் என பிரபாகரன் கூறினார். பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு வருடம் அவகாசம் கொடுப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அடுத்த இரண்டாவது வாரத்திலேயே தனது தாக்குதல்களை பிரபாகரன் அதிகப்படுத்தினார். பிரபாகரனின் ஏமாற்றும், பயங்கரவாதத் தன்மைகளையே இவை எடுத்துக்காட்டுகின்றன என்று பாதுகாப்புதுறைப் பேச்சாளரும் அமைச்சருமான ... Read More
வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற புலிகளின் படகு நிர்மூலம் !
சிலாபம் உடப்புக் கரையோரப் பகுதியில் பாரியளவில் வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற எல்.ரீ.ரீ.ஈ. யினரின் 45 அடி நீளமான இழுவைப் படகொன்றை கடற்படையினர் முற்றாக அழித்துள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான தகவல் மையம் அறிவித்துள்ளது. நேற்றுக்காலை 10.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல் இடம்பெற்ற சமயம் 6 கடற்புலிகள் இப்படகில் இருந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். நேற்றுக் கொண்டாடப்படுகின்ற பிரபாகரனின் பிறந்த தினத்தையொட்டி பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக இந்தப் ... Read More





